RSS

பிரியங்கா – தூயமகள் -Rafeeq

10363424_10152825810941575_4648764893329206040_oபிரியங்கா – தூயமகள்.

பிரியங்கா! – யார் இவர்?
.
சிலநாள்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பேச்சாளரின் பேச்சின் மூலம் தான் எனக்கும் இந்தப் பிரியங்கா தெரியவந்தார்.

சரி, கல்யாணக்கோலத்தில் இருக்கிறாரே? ஆம் திருமணத்திற்கு அடுத்த நாளே கணவன் வீட்டிலிருந்து பிறந்தவீட்டிற்குத் திரும்பிய பிரியங்காவை இரண்டு மாதங்கள் கழித்து அழைத்து வந்தபோது ஊரே திரண்டு உற்சாகமாய் வரவேற்றபோது எடுத்த படமாம் இது.

கோபித்துக்கொண்டு போனவரை ஊர்கூடி அழைத்ததா? அப்படி என்ன செய்துவிட்டார் என்று வியப்பாய் இருக்கிறதல்லவா?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா, தனது 19ம் வயதில் (2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி) உத்திரப்பிரதேசத்தின் கொரக்பூர் மாவட்டத்தில் உள்ள விஷ்னுப்பூர் குர்து கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜித் என்பவரை மணக்கிறார். Read the rest of this entry »

 

நட்பின் நுட்பம்..!! -நிஷா மன்சூர்

10357128_557438541066734_9034125655278754932_n

திணற வைக்கிறது உங்கள்
அன்பின் கிடுக்கிப்பிடி,
மிரள வைக்கிறது உங்கள்
குரலின் உரிமைத்தொனி,
துவள வைக்கிறது உங்கள்
மெளனத்தின் ஊமைவெறி.

கொஞ்சம் சந்தேகத்துடனேயே
எதனையும் அணுகும்
எளிய வணிகனுக்கும்
இலகுவாக எதனையும் நம்பிவிடும்
இளகிய கவிஞனுக்கும்
இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நட்பின் நுட்பம்..!!

nisha-APRILFOOLS

நிஷா மன்சூர்

 

Tags:

Useful powerpoint Slides & Attachments- மிகவும் உபயோகமான பவர் பாயிண்ட்&அட்டாச்மெண்ட்ஸ்

Originally posted on SEASONSALI:

WordArtPicsimages

View original 296 more words

 
Leave a comment

Posted by on November 19, 2014 in 1

 

செல்வமும் கல்வியும் by ராஜா வாவுபிள்ளை

செல்வம்….!

எப்படியும் தேடலாம்
என்றால் அது
எப்படியும் வந்தவழியே போய்விடும்

நல்வழியில் தேடியிருந்தால்
நன்மை பயக்கும்
நாளும் பொழுதும் வளரும்
வளம் சேர்க்கும்

வீண்விரையம் செய்தால்
வறுமையை கூட்டிவரும்
திரும்பி வராமலே போய்விடும்

இருப்பதை இல்லாதாரோடு
பகிர்ந்தால்
மென்மேலும் தேடிவரும்
குறைவில்லா வளம் தரும்

இறைவன் காட்டிய வழியில்
செலவு செய்தால்
செல்லும்வரை கூடவரும்
சொந்தம் கொண்டாடும்

செல்வத்தின் சிறப்பு
எப்படி சேர்த்தாய் என்பதில் இல்லை
எப்படி செலவு செய்தாய் என்பதில்
இருக்கிறது
Read the rest of this entry »

 

Tags: ,

மலையுச்சிப் பூவின் தியானம்

51513 beginnings of Green fieldsகைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை

அந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்
ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்
தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்
Read the rest of this entry »

 

யோசிக்கத் தெரிந்தவனும் யோசிக்கவே தெரியாதவனும்

-தாஜ்

யோசி. தெரிந்தவன்:
மேலப்பட்டு டவுனுக்கு
இப்ப எப்படி போகலாம்?

யோசி. தெரியாதவன்:
… ஏன் தம்பி, வெளிநாடு போயிட்டு வந்தா…
பக்கத்து டவுனு வழியும் கூடவா
மறந்து போயிடும்?

யோசி. தெரிந்தவன்:
அப்படி இல்ல. கீழப்பட்டு
ஆத்துப் பாலம் கட்டி திறந்தாச்சுல?
அந்த வழியா போகலாம்ல?

யோசி. தெரியாதவன்:
மேலப்பட்டு டவுனுக்கு இங்க பஸ் ஏறி
அந்த டவுன்ல போய் இறங்கத்தான்
எனக்குத் தெரிஞ்சு சுழுவான வழி.

யோசி. தெரிந்தவன்:
என்னங்க இப்படி சொல்றீங்க?

யோசி. தெரியாதவன்:
பின்னே எப்படி சொல்றது!?
அப்படித்தானே…
இங்கே எல்லோரும்
பஸ்செ புடிச்சு போறாங்க வராங்க!
Read the rest of this entry »

 

வனப்பையும் உடல் வலுவையும் பிள்ளைகளுக்குப் பங்கு வைத்துக் கொடுத்த பெருமிதத்தில்

10698702_730811763664222_8335463203986563747_nவனப்பையும் உடல்
வலுவையும்
பிள்ளைகளுக்குப்
பங்கு வைத்துக் கொடுத்த
பெருமிதத்தில்
சுருக்கங்களை
முகத்தில் வரைந்து கொண்டு
முறுவலித்துக் கொண்டிருக்கிறார்கள்
வீடுகள் தோறும்
மூதாட்டிகள் !

எப்போதுமே
பிள்ளைகளை
வெறுக்கத் தெரியாத
பாசத் தாய்களுக்கு
பிள்ளைகளின்
பாராமுகம் கூட
அழகாகவே தெரிகிறது !
Read the rest of this entry »

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 27 other followers