RSS

Monthly Archives: August 2011

கீற்றில் உங்களது படைப்பை நீங்களே வலையேற்றலாம்

கீற்று இணையதளத்தில் உங்களது படைப்புகளை நீங்களே வலையேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீற்றில் உங்களைப் பற்றிய விவரங்களை பின்வரும் பக்கத்தில் (http://www.keetru.com/index.php?option=com_user&view=register) பதிவு செய்ய வேண்டும்.

கீற்றில் படைப்பாளியாக பதிவது..

‘பெயர்’ என்ற கட்டத்தில் எந்தப் பெயரில் உங்களது படைப்புகள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்தப் பெயரை தமிழில் இடவும்.

‘பயனர் பெயர்’, ‘கடவுச்சொல்’ என்ற இரு கட்டங்களில் Username, Password விபரங்களை உள்ளீடு செய்யவும். இவற்றின் மூலம்தான் நீங்கள் கீற்று கணக்கிற்குள் புக முடியும்.

‘Country code’ என்ற கட்டத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டின் ISD code-யும், ‘தொடர்பு எண்’ என்ற கட்டத்தில் உங்களது கைப்பேசி எண்ணையும் அளிக்கவும். (இந்த எண்கள் கீற்று குழுவினரால் சரிபார்க்கப்படும்.)

இதர கட்டங்களிலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்யவும்.

பக்கத்தின் இறுதியில் தெரியும் நான்கு இலக்க எண்களை, கடைசியாக இருக்கும் கட்டத்தில் இடவும். (நான்கு இலக்க எண்கள் சரியாகத் தெரியவில்லையென்றால், ‘Letters not clear? Click to renew captcha’ என்பதை சொடுக்கவும்.)

‘பதிவு செய்க’ என்பதை பொத்தானை அழுத்தினால், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் வரும். அதில் இருக்கும் இணைப்பை சொடுக்கினால், உங்களது பதிதல் நிறைவு பெறும். கீற்றில் பதிவாகியுள்ள உங்களைப் பற்றிய‌ தகவல்கள் யாரிடமும் பகிரப்படாது என்று உறுதி கூறுகிறோம்.

கீற்றில் பதிந்துள்ளவர்களுக்கு மட்டுமே படைப்புகளை சமர்பிக்கவோ, பின்னூட்டங்களை இடவோ அனுமதி கிடைக்கும். Read the rest of this entry »

 

Tags: ,

‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு…!! அமெரிக்காவின் பேரழிவு….!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!!

V V IMPORTANT ECHONOMIC ARTICLE

o அடி மேல் அடி

 

o அமெரிக்கா பொருளாதார எத்தர்கள்

o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?

o அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் சைக்கிள் ஏமாற்று

o அமெரிக்க-சீன ‘பரஸ்பர ஒட்டுண்ணி’ உறவு

o சதாம் ஹுசைன் கொடுத்த முதலடியும் அமெரிக்காவின் பதிலடியும்

 

o கடங்கார அமெரிக்கவும் ஈட்டிக்கார சீனாவும்

o ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் விளாசிய விளாசல்

o அரசியல் பிழைத்தாருக்கு பொருளாதாரமே கூற்றாகும்!!!

o அமெரிக்க-ஐரோப்பிய பின்னடைவும் அயோக்கிய தலைவர்களும்!!

o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் அதனால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும்.

o தற்காக்கும் இந்திய தந்திரங்கள்

o எப்படி சரியும் இந்திய சந்தை?

o இந்தியாவில் சரியக்கூடிய முக்கிய துறைகள்

o என்ன செய்தால் பித்தம் தெளியும்?

 

‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு…!! அமெரிக்காவின் பேரழிவு….!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!! 

 

நியூயார்க் நகரம்: உலகின் ‘வட்டி’ அடிப்படையிலான ‘ஒட்டுண்ணி சந்தை பொருளாதாரத்தை’ (நன்றி: திரு. விளாதிமிர் புடின், பிரதமர், ரஷியா) தூக்கி நிறுத்தும் அமெரிக்காவின் பொருளாதார தலைநகரம்.

 

பத்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் பெற்ற அதிர்ச்சியை விட அதிக அதிர்ச்சியை சமீபத்திய ‘பங்கு சந்தை’ வீழ்ச்சியில் பெற்று உறைந்து போயுள்ளது.

கொடூர கனத்துடன் வட்டி பொருளாதாரம் செய்யும் சவாரியின் அழுத்தம் தாளாது உலகின் தொழில் மற்றும் வியாபார குதிரைகளான பங்கு சந்தைகள் உட்காரத் தொடங்கியுள்ள நிலையில், உலகெங்கும் ‘வட்டி அழிகிறது’. Read the rest of this entry »

 

Tags:

ஜன் லோக்பால் மசோதா

அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைதாம் உண்மையில் புரட்சிகரமானதெனக் கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ‘ஜன் லோக்பால் மசோதா’ பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்தக் கேள்விக்குக் கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சரியென அவர்கள் ‘டிக்’ செய்திருப்பார்கள்
(அ) வந்தே மாதரம்!
(ஆ) பாரத அன்னைக்கு ஜே!
(இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா!
(ஈ) இந்தியாவுக்கு ஜே!
முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது).

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது “சாகும் வரை உண்ணாவிரதத்தை” சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் “அன்னா அணி” என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்புச் சட்ட வரைவுக் கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக இருந்தது.
Read the rest of this entry »

 

Tags: ,

பாலைவனத் தொழிலாளியின் வேலை கூறும் பாடம்

1)
சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி
அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு
துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம்
வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?
2)
இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே
கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார்
விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி
தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?
3)
பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க
பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய்
காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு
ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்
4)
இளமைக் கருக்க இரத்தம் சுருங்க
வளமைப் பெருக்க வடிக்கு முழைப்பை
களவாய்ச் செலவு; கடும்விலை ஏற்றம்
உளமே வெடிக்க உறிஞ்சிக் குடிக்கும்
ஓலை = காசோலை (cheque)
களவாய்ச் செலவு = களவாகுதற்போல் வீண் செலவு
யாப்பிலக்கணம்:
பாடல் 1 & 2 = இயற்றரவு கொச்சகக் கலிப்பா
பாடல் 3 & 4 = வெண்டளையால் வந்த கலிவிருத்தம்
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

Source : http://www.kalaamkathir.blogspot.com/

 

Tags: ,

ராகுல் முன்னிலையில் காங். இணைந்தார் சிரஞ்சீவி

 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். இருமாதங்களுக்கு முன் தனது கட்சியான  பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து அறிக்கை வெளியிட்டார்.

ஹைதராபாத்தில் நடந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, முழு மனதுடன் சிரஞ்சீவியைக் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வரவேற்பதாகவும், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்க்ச் சிரஞ்சீவி முழு அளவில் பணியாற்றுவார் என நம்புவதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, “காங்கிரஸ் கட்சியில் சேர்வது, தனக்கு கெளரவமான விஷயம்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியால் பிளவுபட்டு இருக்கும் ஆந்திர காங்கிரஸில், சிரஞ்சீவியின் வருகை, புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : http://www.inneram.com/

 

Tags:

சரவணா ஸ்டோர்ஸில் கோடிக் கணக்கில் தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் பறிமுதல்!

தியாகராய நகர் மற்றும் புரசை வாக்கத்தில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில்  வியாழக் கிழமைக் காலை முதல் 500 க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் கோடிக் கணக்கிலான மதிப்புடைய கணக்கில் வராத தங்கக் கட்டிகள், பணம் மற்றும் ஆவணங்கள் வருமானவரித் துறையினர் கைப் பற்றியுள்ளனர். இருப்பினும் கைப் பற்றப் பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் தங்கக் கட்டிகளின் மதிப்பை தெரிவிக்க வருமானவரித் துறையினர் மறுத்து விட்டனர்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்கள் தாக்கல் செய்த கடந்த 6 வருட வருமானவரி கணக்கை வருமானவரி துறையினர் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  சரவணா ஸ்டோர்ஸில் நடைபெற்ற சோதனை காரணமாக இரு நாட்கள் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மூடப் பட்டு வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப் பட வில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் மேல் தளத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்ததும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

Source : http://www.inneram.com

 

Tags: ,

புதிய சட்டமன்றத்தை மருத்தவமனையாக மாற்றுவதில் எனக்கு அதிருப்தி இல்லை: கருணாநிதி

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தை மருத்துமனையாக மாற்றுவதில் எனக்கு அதிருப்தி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் தி.மு.க. இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில், சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:

புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்கள். நான் கூட என்ன செய்யப்போகிறார்களோ என்று நினைத்தேன். அதற்கு பதில் கிடைத்தது. மக்களுக்கு பயன்படுவதற்காக மருத்துவமனையாக ஆக்கப்போகிறார்கள்.

மருத்துவமனையாக ஒரு வீட்டை, ஒரு கட்டிடத்தை ஆக்குவதில் தவறில்லை. நானே இதற்கு வழிக்காட்டியிருக்கிறேன். எனது கோபாலபுர இல்லத்தை எனக்கு பிறகு மருத்துவமனையாக மாற்ற எழுதி கொடுத்துள்ளேன்.

அதனால் புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதில் அதிருப்தி எதுவும் இல்லை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Source : http://www.inneram.com/

 

Tags:

கருவுருதலும் கருவின் வளர்ச்சியும்

கருவுருதலும் கருவின் வளர்ச்சியும்

o உருவான சிசு ஆணாக அல்லது பெண்ணாக மாற்றமடைதல்

o கருத்தரிக்கும் காலம்…

o விந்தணு உருவாக 74 நாட்கள் ஆகும்.

o கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறைகள்

o பெண்ணின் கரு முட்டை

o ஆணின் விந்தணுக்கள்

o கருவுறுதல் அல்லது சினைப்படுதல்

o பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?

o கர்ப்பத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான நியதிகள்.

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின் வளர்ச்சியுடன் இணைந்த புதிய சூழ்நிலைக்கு அப்பெண் தன்னைத் தானே ஆயத்தாமாக்கிக் கொள்வது தாய் சேய் இருவரின் உடல்நலனுக்கும் மிக இன்றியமையாததாகும்.

கருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம்.

உருவான சிசு ஆணாக அல்லது பெண்ணாக மாற்றமடைதல்:
கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.

கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.

பிறப்புறுப்புக்கள் (reproductive organs) நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது.

கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது.

கவனித்துக் கொள்க: இந்நிலையில் அனைத்து மனித உறுப்புகளும் உருவாக துவங்கியிருந்தாலும் அவைகள் முழுவளர்ச்சியைப் பெற்றுவிடவில்லை. உறுப்புகள் தொடாந்து வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதுவரை ‘embryo’ என்றழைக்கப்பட்ட மனிதக் கரு இப்போது ‘fetus’ என்றழைக்கப்படுகிறது. Read the rest of this entry »

 

Tags: ,

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம்; கலாம் ஆக முடியாது: விஜயகாந்த்

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம்; கலாம் ஆக முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நகர்ப்புறங்களில் வசதிகள் அதிகமுள்ள பள்ளிகளில் படித்த பிள்ளைகள் நாங்கள் 4ஆம் வகுப்பில் படித்ததுதான் தற்போது 8ஆம் வகுப்பு பாடத்தில் உள்ளது என்றும் இதில் புதிதாக என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம் என்றும் கேட்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கிராமப்புற மாணவர்களுக்கு 8ஆம் வகுப்பு பாடப்புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டதின்படி தேர்வு வைத்தால் நகர்ப்புற மாணவர்கள் எளிதில் தேர்வாகி மேல் படிப்புக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களால் அது முடியாது.

தற்போதுள்ள பாடத்திட்டத்தை படித்தால் கிளர்க்குகளை உருவாக்கலாம். ஆனால் அப்துல்கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது. உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டுமானால் முதலில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். Read the rest of this entry »

 

Tags:

100 மருத்துவக் குறிப்புகள்…..

100 மருத்துவக் குறிப்புகள்…..

•1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

•2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்…போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
•3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
•4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
•5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
•6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
•7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
•8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
•9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…

•10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

•11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
•12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
•13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு!

•14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

•15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
•16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
•17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
•18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
•19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
•20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
•21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
•22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
•23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
•24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
•25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
•26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
•27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
•28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
•29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
•30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
•31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து!

•32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

•33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
•34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
•35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
•36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
•37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
•38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
•39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
•40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
•41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
•42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
•43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
•44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
•45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
•46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
•47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
•48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன. Read the rest of this entry »
 

Tags:

 
Follow

Get every new post delivered to your Inbox.