
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்
APPENDIX – இந்த உடல் உறுப்பு குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு அறிந்திருக்கவே செய்வோம். இந்த பகுதியில் வரக்கூடிய வீக்கம் (Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம் உணர்ந்தோ/கேள்விப்பட்டோ இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த நவீன அறிவியல் தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை அகற்றினால் நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம் என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது.
சென்ற மாதம் “Scientific American” ஆய்விதழின் தளத்தில், அப்பென்டிக்ஸ் குறித்து வெளிவந்த ஒரு கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. “அப்பென்டிக்ஸ் உங்கள் உயிரை காப்பாற்றலாம் (Your Appendix Could Save Your Life)” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் என்றால், இந்த உடல் உறுப்பு நீண்ட காலமாகவே உபயோகமற்ற அல்லது மிக குறைவான பயன்பாட்டை கொண்ட உறுப்பு என்பதாக கருதப்பட்டு வந்தது.
உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.
இம்மாதிரியான நேரத்தில், இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்ததால் ஒருவிதமான ஈர்ப்பு இயல்பாகவே வந்துவிட்டது (இதுப்போன்ற மேலும் சில கட்டுரைகளை வேறு சில அறிவியல் தளங்களிலும் பார்த்திருக்கின்றேன்).
தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (Duke University Medical Center) சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (Beneficial bacteria) சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான் அது.
தொடர்ந்து படிக்க…http://www.ethirkkural.com/2012/02/appendix.html









எதிர்க்குரல்
February 7, 2012 at 12:12 pm
ஜசாக்கல்லாஹு க்ஹைரன் கதீரா