தனது கனவுப்படமான மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் பேசியுள்ளார்.
இத்தனை நாள் தாமதத்திற்குப் பிராயசித்தமாக தனது ஆருயிர் நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த்தையும் அதில் பிரதான பாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை இதழொன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை கமல் அளித்துள்ளார்
மருத நாயகம் யூசுப்கான் என்பவர் மதுரையை ஆண்ட குறுநில மன்னர். அவருடைய வரலாற்றை படமாக எடுக்க கடந்த 15 வருடங்களுக்கு முன்பே கமலஹாசன் முயன்றார். பிரிட்டிஷ் அரசியே வந்து தொடங்கிவைத்த அப்படம் எடுக்கும் திட்டம் பின்னர் பொருளாதாரம் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கே படத்துக்கான முதலீடாக 50 கோடி ரூபாய்கள் தேவை என்று கமலஹாசன் கூறியிருந்தார்.
மீண்டும் தொடங்கப்பட உள்ள இப்படத்தில் “மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். . இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது.
ரஜினி கமலை சேர்த்து நடிக்க வைத்தால் சரிவருமா? என்று எல்லோரும் யோசித்துக்கொண்டேயிருக்கிறார்கள். சிலகாலமாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் ஆரம்ப காலங்களில் நாங்கள் இருவரும் பத்துப் படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்திருக்கிறோம்.” என்ற கமல் “ரஜினி கமல் இணைந்து நடிப்பு” என்ற பூனைக்கு தானே மணி கட்ட முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எப்படியும் கமல்தான் மருதநாயகம் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பார். அப்படியானால் ரஜினிக்கு அதைவிட முக்கியத்துவம் குறைவான வேடமாகத் தானிருக்கும். அதை ரஜினி ஏற்றுக்கொள்வாரா? நட்புக்காக ரஜினி ஏற்றுச் சம்மதித்தாலும் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா ? என்பது இங்கே வினாக்குறியே.
Source : http://www.inneram.com/news/cinema-news/marutanayakamagainkamal-rajini-3114.html


கூகிள் நிறுவனம் அதிக பயனீட்டாளர்களைப் பெற்று இணைய உலகில் கொடி கட்டி பறக்கிறது. யூடூப்(youtube), ஓர்குட்(orkut) போன்ற வலைதளங்கள் அவற்றில் சில. கூகிள் நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு இஸ்ரேலிய யூத தொழில் நுட்ப வலைதளங்களை வாங்கி தன்னுள் பெற்றுள்ளது. மேலும் தற்போது இஸ்ரேலில் உள்ளதன து அலுவலகத்தில் ‘Incubator’ (அடை காக்கும் கருவூலம்) என்ற பெயரின் கீழ் புதிய 20 இணைய மதிப்பு கூட்டிகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துபாய் : துபாயிலிருந்து வெளிவரும் பிரபல வணிக இதழ் வளைகுடாவின் செல்வாக்கான மனிதர்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்
செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மிக்கி ஜக்தியானியைப் பின்னுக்கு தள்ளி விட்டு செல்வாக்கான இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள கேரளாவைச் சார்ந்த யூசுப் அலி இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர்.
லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான மிக்கி ஜக்தியானி தான் வளைகுடாவின் பணக்கார இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சார்ந்த மிக்கி ஜக்தியானி 1973ல் முதல் ஸ்டோரை பஹ்ரைனில் தொடங்கினார். இன்றோ, துபாயை தலைமையிடமாக கொண்டு சிறுவர் பேஷன், காஸ்மெட்டிக்ஸ் என்றும் நியூ லுக், மேக்ஸ், செண்டர் பாயிண்ட், பேபி ஷாப், ஹோம் செண்டர் என்று பல பிராண்டுகளுடனும் பரந்து விரிந்து உள்ளது இவரின் வர்த்தக சாம்ராஜ்யம்.
கேரளாவை சார்ந்த சன்னி வர்கீஸால் 1980ல் ஒற்றை பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட Our Own High School இன்று உலகின் மிக பெரிய கல்வி குழுமங்களில் ஒன்றாக திகழ்கிறது. 11 நாடுகளில் 100 பள்ளிகளில் சுமார் 1 இலட்சம் மாணவர்கள் கிண்டர் கார்டனில் இருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.
கடந்த மே 2010ல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியகிழக்கின் தலைமை நிர்வாகியாக சங்கரை ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கி நியமித்தது. மத்தியகிழக்கின் அவ்வங்கியின் மிகப்பெரும் பொறுப்பில் உள்ள சங்கர் இவ்வங்கியில் 2001 ல் சேர்வதற்கு முன் பேங்க் ஆப் அமெரிக்காவில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழகத்தைச் சார்ந்த சங்கர் புகழ் பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூரில் எம்.பி.ஏவும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் இளநிலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.







