RSS

Category Archives: பொதுஅறிவு(General Knowledge)

ஏன் அமெரிக்கா STEM பட்டதாரிகள் உருவாக்க தோற்கிறது -விளக்கப்படம்

வேகமாக  வளர்ந்து வரும் ஐக்கிய அமெரிக்க தொழிற்சாலைகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
ஏன் மாணவர்கள் ஸ்டெம் (STEM )பக்கம் திரும்பவிலை ? ஒருவேளை சிரமமா ? அல்லது  வேறு ஏதாவது?  அதன் காரணத்தினை  வெளிப்படுத்துவது இந்த அழகான   கையால் வரையப்பட்ட விளக்கப்படம்.  பாருங்கள்.

STEM Shortage
Created by: Online Engineering Degree

by mail from Tony Shin
 

 

Tags:

Page Maker கற்றுக்கொள்ள உதவும் மென்புத்தகம் தமிழில்


இந்த மென்புத்தகம் தமிழில் இருப்பதால் PageMaker கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து பேஜ் மேக்கர் மென்புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Page Maker மென்புத்தகம் டவுன்லோட் செய்ய

இங்கே கிளிக் செய்யவும்pagemaker7Thariq

    • அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக 

 

      pagemaker7Thariq.pdf

View   Download 15k View Download

Source  : http://vadakaraithariq.blogspot.com

 

Tags: ,

உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?

by Abdul Basith

மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் “தீம்பொருள்” என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

மால்வேர் எப்படி தாக்குகிறது?

மால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட நிரல்களை நமது ப்ளாக்கில் நிறுவுவதால் நம்முடைய ப்ளாக்கிற்கும் மால்வேர் வந்துவிடும். இதனால் சில சமயம் நம் ப்ளாக்கை பார்க்கும் அனைவரின் கணினியிலும் வந்துவிடும். சில சமயம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் சில மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் நமது ப்ளாக்கை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு redirect ஆகும். இது மாதிரியான மால்வேர்களுக்கு ஆட்வேர் (Adware) என்று பெயர். சமீபத்தில் ஒரு தமிழ் திரட்டியின் ஓட்டுபட்டையில் இந்த பிரச்சனை வந்தது. பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டது.

நமது ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா? 

இதனை கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள் ப்ளாக் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் தேடல் முடிவுகளில் உங்கள் ப்ளாக் பெயருக்கு கீழே “This site may harm your computer” என்று சொல்லும். Read the rest of this entry »

 

Tags: ,

திருக்குறள் இசைத்தமிழ் – இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம்

திருக்குறள் இசைத்தமிழ் – இசைக்குறுவட்டுகள் – இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.

 

Tags:

விரிவடையும் பேரண்டம்!

நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் எவ்வாறு தோன்றியது, இது எங்கே எப்படிப் போய் முடியும், இது எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது – என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானிகள் பலருக்கு மிக விருப்பமானதொரு துறையாகும்.

கடந்த 20 – ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை கூட விஞ்ஞானிகள் இப்பேரண்டத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்றால் – இப்பிரபஞ்சத்துக்குத் துவக்கம் என்று ஒன்று கிடையாது. இது தொடர்ந்து இப்படியே நிலை பெற்றிருக்கும். இதற்கு முடிவு என்று ஒன்றும் கிடையாது – என்பது தான். இதனையே Static Universe Model – என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது அசையா பிரபஞ்சக் கோட்பாடு என்று இதனைக் கூறலாம். Read the rest of this entry »

 

Tags: ,

கண்களை கவரும் அழகிய புகைபடங்கள் ! நாசாவிலிருந்து. …

நாசா (National Aeronautics and Space Administration – NASA) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும்.நாசாவிலிருந்து அனுப்பப் பட்ட படங்கள் அதிசியமிக்கவை .நாம் நேரில் விண்வெளி சென்று  பார்க்க முடியாமல் உள்ளதனால் படத்தினை பார்த்து மகிழ்வோம்.

Read the rest of this entry »

 

Tags: , ,

மார்பகப் புற்று நோய் ஆண்களுக்கும் வருமா?

 

ஊழலற்ற, குற்றமற்ற நாடு என்று உலகில் ஏதாவது எங்காவது உள்ளதா? – குமரன், சென்னை

UTOPIA வில் இருக்கலாம்.

இவ்வுலகில் மனிதனின் சுயநலம் நீடிப்பதுவரை குற்றங்களும் ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.


தற்போது மனிதர்களில் அதிகமானோருக்கு வெகு விரைவாக பார்வைக் குறைவு ஏற்படுவதின் காரணம் என்ன? அலுவலகம் வீடு என எங்கும் தவிர்க்க (முடியும் ஆனாலும்) முடியாமல் கணினியில் சிக்கி கிடக்கும் நாம் இதை எப்படி நிவர்த்திப்பது? – அரசன்

“ஒரே கல்லிலே ரெண்டு மாங்கா” என்றபடி ஒரு வாய்ப்பில் இரு வினாக்கள் தொடுத்துள்ளீர்கள்.

உலகில் ஏறத்தாழ 14 கோடிப்பேர் பார்வைக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. பார்வைக்குறைவு ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின்A பற்றாக்குறையே! வைட்டமின் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலம் இதைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.வயதானவர்களுக்குக் கண்புரையாலும் பார்வைக் குறைவு ஏற்படலாம். நீரிழிவு , இரத்த அழுத்தம் போன்றவையும் கண் பார்வைக் குறைவுக்குக் காரணங்களாகலாம். தக்க கண் மருத்துவரை அணுகிக் கண்ணைப் பரிசோதித்துக் கண்ணடி அணிவதே சிறந்தது.

கணினியில் சிக்கிக் கிடப்பவர்கள், “தவிர்க்க முடியும்” என நீங்களே சொல்லி விட்டீர்கள். அளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சுதான். தொலைபேசியைத் தேவைக்கு மேல் பயன்படுத்துவது எவ்வளவு தவறோ அந்த அளவுக்குக் கணினியைத் தேவைக்கு மேல் பயன்படுத்துவதும் தவறுதான்.அலுவலகத்தில் வேலைக்குத் தேவையானதை மட்டும் செய்ய வேண்டும். வீட்டில் சொந்த வேலைகளான மடல் படித்தல், அனுப்புதல் மட்டும் செய்ய வேண்டும் என ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டால்தான் இதன் அசுரப்பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

மனக்கட்டுப்பாடே மருந்து.


சீமானை விடுவிக்கக் கோரி எந்தக் கட்சியும் போராட்டம் நடத்தவில்லையே..? -நிலவன்
அவர் தனிக்கட்சி (நாம்தமிழர்) நடத்துவதாலும் சீமான் பிறரிடம் அவ்வாறு கோராததாலும் பிற கட்சியினர் அவருக்காகப் போராட்டம் நடத்தவில்லை.

தற்போதைய ஸ்பெக்ட்ரம் பிரச்னை காரணமாக திமுகவின் ஆட்சி பறிபோகும் வாய்ப்பு உள்ளதா?- ராஜா, திருவல்லிக்கேணி

இல்லை. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியும் அப்படி வலுவான நிலையில் இல்லை. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வருவதால் அதற்குத் தேவையும் இல்லை.

காங்கிரஸ் கட்சி நினைத்தால் தி மு க அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்று அரசைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலை முன்னதாகக் கொண்டு வரலாம்.ஆனால் பீகார் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சியை அப்படி ஒரு கனவுக்குக்கூட அனுமதிக்காது.
Read the rest of this entry »

 

Tags: , , , , ,

3G – தொழில்நுட்பம் – புதுசுரபி

“ஊருக்கு போனவன் சங்கதி சாமிக்குத்தான் தெரியும்” என்றிருந்த காலகட்டத்தில், அதையும் தாண்டி சிந்தித்த கிரகம்பெல். “மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள், நீங்கள் தேவைப்படுகிறீர்கள்” என்று தொலைவில் உள்ள தம் உதவியாளரை அழைத்தார் கம்பி வழியாக! ஆம் தொலைபேசியை கண்டுபிடித்ததாக அறியப்படும் அலெக்சாண்டர் கிரகாம் பெல் தம் உதவியாளர் வாட்சனுடன் பேசத்துவங்கிய அந்த முதல் வார்த்தையுடன் தொடங்கியது தொலைபேசித்  தொழில்நுட்பம். இன்று உலக மக்கள் தொகையில் 67 % க்கும் மேற்பட்டோரை ஏறத்தாழ 460 கோடி மக்களை இணைத்துக்கொண்டே இருக்கிறது.

ஏறக்குறைய 135 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பிகள் வழியாக வெறுமனே குரலை மட்டும் அனுப்புவதற்காக உருவாக்கிய தொழில்நுட்பம்தான் இன்று எத்தனை மாற்றங்கள் கண்டுள்ளது!

கம்பிவழி, கம்பியில்லாமல் என்று தொலைத்தொடர்பு, சாட்டிலைட் தொடர்பு என்றும் வெகு தூர அழைப்பு என்பது மிகச் சாதரணமாகி இப்போது உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிக் கிடக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த பரிணாம வளர்ச்சியே இன்று நம் முன்னே பேசப்படும் 3G சேவையாகும். சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளில் உபயோகத்திற்கு வந்துவிட்டாலும் நம் நாட்டில் வழக்கம் போலவே கூச்சல்,குழப்பம், அவைஒத்திவைப்பு என நம் சடங்கு சம்பிரதாயங்களையும் தாண்டி சந்தைக்கு வந்திருக்கிறது.

சிவப்புக் கம்பளம் விரிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது இந்த தொழில்நுட்பத்தில்???? பார்க்கலாம்.

‘என்னை விட  என் பிள்ளை புத்திசாலி, என பிள்ளையை விட பேரப்பிள்ளை மிக புத்திசாலி’ என்று நாம் நம் தலைமுறைகளைப் போற்றிக்கொள்வது போலவே தொழில்நுட்பமும் தனது தலைமுறையினை பற்றி பெருமிதம் கொள்கிறது. 3G யும் அப்படித்தான். G என்ற ஆங்கிலச்சொல் Generation என்ற வார்த்தையின் முதல்எழுத்தேயாகும். அதாவது தொலைத்தொடர்பு – தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மூன்றாம் தலைமுறையினை எட்டியுள்ளதை இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. Read the rest of this entry »

 

Tags: , , , ,

வணங்காமுடி பதில்கள் (25-07-2010)

அயல் நாட்டுப் பத்திரிகைகளில் தமிழகத்தின் தொழில்துறை சாதனை வந்திருந்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சனை இன்னமும் கேவலமாக இருக்கிறதே? ஒரு அரசாங்கத்திற்கு சாதனை என்பதன் அளவுகோல் தான் என்ன? – நூருத்தீன்
வெளிச்சம்போட்டு விளம்பரப்படுத்தப்படத்தக்கத் திட்டங்களும் செயல்களும் மட்டுமே அரசியல்வாதிகளுக்குத் தம் அரசின் சாதனையாகும் . அவற்றைக்கூறியே மீண்டும் வாக்குகள் சேகரிக்க முடியும்.

வாக்களிக்கச் செல்ல விரும்பாத மேல்தட்டு மற்றும் உயர்நடுத்தர வகுப்பு மக்கள் வசிக்கும் நகரங்கள் பெருவளர்ச்சி பெற்று மேம்பாலங்களாகவும் பறக்கும் ரயில்களாகவும் புதுக்கருக்கு மாறாத பேருந்துகள் ஓடும் பளபள சாலைகளாகவும் பட்டப்பகல்போல் இரவு ஒளிர விளக்குகள் எரியும் தூயவெண்மணல் கடற்கரைகளாகவும் சாதனைப் பட்டியலில் இடம்பெறும்போது, வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள் விடுதலை பெற்று 63 ஆண்டுகளாகியும் தம் அடிப்படைத் தேவைகளான பாதுக்காகப்பட்ட குடிநீர், சாலைப் போக்குவரத்து வசதி, மின்சாரம்.உணவுப்பொருள் பங்கீடு, சுகாதாரம், ஆரம்பக் கல்வி போன்றவற்றைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலையிலேயே இந்தியா உள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தடையின்றிக் கொடுப்பதே உண்மையான ஒரு மக்கள் அரசின் சாதனையாகும்.


தமிழகத்திலும் தற்போது அற்ப காரணங்களுக்காக குடும்ப வன்முறைகள், விவாகரத்து அதிகரித்து உள்ளது குறித்து வணங்காமுடியாரின் கருத்து ? – மல்லிகை

“தமிழகத்திலும்” என்று வினவியிருப்பதில் இருந்து இந்தியாவில் பொதுவாக இவை நிகழ்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். தமிழ்நாடு விதிவிலக்கன்று. பொருளாதாரத்தைப் பெருக்குவது மட்டுமே வாழ்வின் வெற்றி என்று மக்கள் கருதும் வாழ்க்கைச்சூழல் வளர்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் ஆசைகள் பெருகப்பெருகத் தேவைகள் பெருகுகின்றன. அடிப்படைத் தேவைகளுக்கும் மேல் ஆடம்பரத்தேவைகள் பெருகும்போது அவற்றுக்கானப் பொருளாதாரம் தேவைப்படுகிறது. அதைப் பெருக்க ஓடும் ஓட்டத்தில் காதல், கனிவு, பாசம், மனிதநேயம் எல்லாம் காலின்கீழ் போடப்பட்டு மிதிக்கப்படுகின்றன. குடும்பத்தில் இருவரும் வருவாய் ஈட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பெண் பொருளாதார விடுதலை பெறும்போது கணவனின் கட்டுப்பாட்டை வெறுக்கும் நிலை ஏற்படுகிறது.

“வினையே ஆடவர்க்குயிரே இல்லுறை மகளிர்க் காடவர் உயிரே” என்பது மறந்து போகிறது. இதனால் நீங்கள் வினவியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இதைக்களைய, ஆசைகளையும் தேவைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் பார்த்து வியக்க ஆடம்பரமாக வாழ நினைக்காமல் அடுத்தவர் பார்த்து வியக்க அன்போடும் ஒற்றுமையோடும் வாழ நினைக்கவேண்டும். Read the rest of this entry »

 

Tags: , , , , , , , ,

செயற்கை உயிர், அறிவியல் தொழிற்நுட்பத்தில் ஒரு மைல்கல்

அமேரிக்காவை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் இணைந்து செயற்கையாக தயாரிக்கப்பட்ட மரபணுவைக்கொண்டு (DNA) முதன்முதலில் ஒரு உயிரியை உண்டாக்கி இயங்கவைத்திருக்கிறார்கள்.  கணினி மென்பொருளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட மரபணுவை வேதிப்பொருட்களின் உதவியுடன் ஆய்வகத்தில் தயாரித்து, ‘மைக்கோபிலாசுமா மைக்கோய்டீசு‘ என்ற பாக்டீரியாவை முழுமையாக இயங்கவும், உயிர்வாழவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவைத்து வெற்றியடைந்துள்ளனர். இதுவரை, சிறு சிறு ஜீன்களை பாக்டீரியாக்களில் செலுத்தி தேவையான புரதங்களை தயாரித்துக்கொண்டிருந்தோம். இப்போது, முழுமையாக ஒரு பாக்டீரியாவை செயற்கையான முறையில் உயிர் வாழ மற்றும் இனப்பெருக்கம் செய்யத் தேவையான ஜீன்களை வரிசைப்படுத்தி அதை தயாரித்து அதற்கேற்றார்போல இயங்கவும் வைத்திருக்கிறோம்.  இதன்மூலம், எரிபொருள், மருந்துகள், கழிவுகளை அகற்றும் பணிகள், காற்றை சுத்தப்படுத்துதல், கரியமிலவாயுவை அகற்றுதல்  போன்ற பல வேலைகளை செய்யும் செயற்கை உயிரிகளை நம்மால் உருவாக்க முடியும்.
இந்த சாதனையின் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இரண்டுபக்கமும் கூர்மையான கத்தியைப்போன்று அபாயகரமானதும் கூட. இதை ஆயுதங்களாகவும், அழிவு வேலைகள் செய்யக்கூடிய உயிரினங்களாகவும் பயன்படுத்த முடியும். அப்படி ஏதேனும் நடந்தால் அது மனித இனத்தின் அழிவின் ஆரம்பமாக முடிந்துவிடும். மனித இனத்தின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்வரை இந்த வெற்றி மதிப்புடையதாய் இடுக்கும்.
‘சயின்ஸ்’ (Science) என்ற உலகப்புகழ்பெற்ற ஒரு ஆய்விதழில் இந்த பணியை பதிவுசெய்துள்ளனர் (http://www.sciencemag.org/cgi/content/abstract/science.1190719) இதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள். அறிவியலின் அலவுகோள்களை மாற்றியமைத்த இந்த மனிதர்களுக்கு எம் மானசீக வணக்கங்கள்.

இடுகையிட்டது விடுதலை

http://ennacchamayal.blogspot.com/2010/05/blog-post.html

 
 
Follow

Get every new post delivered to your Inbox.