நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?
உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!
மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.
இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.
தயாரா நீங்கள்?
1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்
முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், “வயதான பின்னர் செய்வேன்” என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்-நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, “இனிமேல் எந்த ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்” என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். “தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்” என்பதும் “தொழாதவன் காஃபிராகி விட்டான்” என்பதும் “முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை” என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.
2. கனவை நனவாக்குங்கள்
நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!
3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!
நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: “பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்” என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.
4. உலகைப் பாருங்கள்
நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும். Read the rest of this entry »
Category Archives: 1
வெற்றிக்குப் பத்து வழிகள்!
முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?

இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும் இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.
இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புவான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான்.
இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் சிலர்.
தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்துவிடுகிறார்கள்.
அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.
ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.
பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று அறிவில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.
அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.
பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.
இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.
நிச்சயமாக இஸ்லாம் மதம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. ஆடை கட்டுப்பாடையே அது வலியுறுத்துகிறது. சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். என்றால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.
Read the rest of this entry »
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி
இன்றைய ஒளிர்வாய்
நேற்றுகளில் சிக்காத
நெய்வாச நம்பிக்கைச் சுடர்கள்
விழித்தளத்தில்
இமைக்கரைகளைப்
பெயர்த்தோடும்
வற்றாத வண்ண வண்ணக்
கனவு நதிகள்
நித்தம் நித்தம் கையணைவில்
நீண்டு வளரும்
புத்தம் புதுச் சந்தோசங்கள்
முதன்மைபெற்று முடிவற்று
உயிர்தொட்டுத் தழுவட்டும்
புத்தாண்டுப் புலர்வினிலே
——————————————-
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
சீசன்ஸ்நீடூர்
SEASONSNIDUR
தாய் சேய் நலம் – டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,
எங்களது மருத்துவமனையின்
டைரக்டர்
திருமதி.டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ; அவர்கள் சென்னை
வளர்வேளச்சேரி என்ற பத்திரிக்கையில் (மார்ச் 2010 ) தாய்சேய் நலம் , மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல் எழுதிய கட்டுரை.
http://www.mudukulathur.com/medicaldetails.asp?id=260
படிப்பதற்கு, பயணத்திற்கு,வீடு கட்ட,திருமணத்திற்கு
என எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம்.ஆனால் கர்ப்பம்
தரிப்பதற்கு திட்டமிட்டு செய்கிறோமா?. நூற்றுக்கு 98 சதவீதம் மக்கள் திட்டமிடாமல்தான் கர்ப்பம் தரிக்கின்றனர்.
திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது என்றால் என்ன ?
எதற்கெல்லாம் திட்டமிட வேண்டும்
முதலில் வயது;
21 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வது நல்லது. 18 வயதில் கல்யாணம்
செய்து கொண்டால் கூட ஒரு சில வருடங்கள் தள்ளிப்போடுவது
நல்லது.அதே போல் 35 வயதிற்குள் குழந்தைகளை பெற்று
முடிப்பது நல்லது.
சிறிய வயதில் கர்ப்பம் தரித்தால், தாயே இன்னும்
முழு வளர்ச்சி அடைந்திருக்க மாட்டார். போதிய மனப்பக்குவம் இருக்காது.
இரண்டாவதாக யோசிக்க வேண்டிய விஷயம், எடை .
எடை 18 வயதிற்கு மேல்,உயரத்திற்கு ஏற்றவாறு
இருக்க வேண்டும்.வயது ஏற ஏற எடை ஏறக்கூடாது.
உயரத்திற்கு ஏற்ற எடையை எவ்வாறு கணிப்பது
இதனை BMI என்ற அலகு மூலம் கணிக்கவ
BMI = BODY MASS INDEX.
எடை = கிலோகிராமில்
உயரம் =மீட்டரில்
BMI = 20 -23 சரியான எடை
BMI = 19 க்கு கீழ் குறைவான எடை நோஞ்சான்
BMI = 24 – 30 சற்று அதிக எடை
BMI = 31 க்கு மேல் குண்டு.
கர்ப்பம் தரிக்கும் போது BMI 20 – 23 இருப்பது நல்லது.
BMI 19 க்கு கீழ் இருந்தால் சற்று நன்றாக சாப்பிட்டு
உடம்பைத் தேற்றிய பிறகு கர்ப்பம் ஆவது நல்லது.
அதிக எடை , குண்டாக இருப்பவர்கள்,
உணவுக் கட்டுப்பாடு,உடற்பயிற்சி செய்து எடையை
குறைத்துக்கொள்வது நல்லது.
நிறைய பேர் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது உடற்பயிற்சி செய்யக்கூடாது
என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். கட்டாயம்
உடற்பயிற்சி செய்யலாம் .செய்வது நல்லது.
பணம் படுத்தும் பாடு!
ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்தரத்தை பெருக்குவதற்காக என்னென்னவோ குறுக்கு வழிகளையெல்லாம் கையாளுகின்றான். தான் மட்டுமே இந்த உலகில் வாழவேண்டுமென்ற அற்ப ஆசைதான் அதற்கு காரணம்.
பிற மனிதரும் தம் போன்ற சக மனிதர்தானே, அவனுக்கும் நமக்கு இருப்பது போலவே குழந்தைகள் உள்ளனவேசக மனிதர்தானே, அவனுக்கும் நமக்கு இருப்பது போலவே குழந்தைகள் உள்ளனவே…நம் குழந்தைக்கு, மனைவிக்கு, பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நம் மனது எப்படியெல்லாம் பதைக்கின்றது, துடிக்கின்றது, நம் மனம் எவ்வளவு வேதனை அடைகின்றது என்ற எண்ணம் தன் மனதில் கொஞ்சமேனும் இருந்திருந்தால் அதைப்பற்றி சிந்தித்து இருந்தால் அவன் பொய் சொல்லி பணம் சம்பாதிக்க மாட்டான்அவன் பொய் சொல்லி பணம் சம்பாதிக்க மாட்டான். தடுக்கப்பட்ட வழிகளையும் அவன் தேட மாட்டான்.
ஆனால், இன்று நாம் பார்க்கின்றோம் அவன், “தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்” என்பதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்கின்றான். தன்னுடன் வேலை செய்யக்கூடிய சக தொழிலாளியை தன் மேலாளரிடம், இவன் வேலை செய்வது சரியில்லை என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி தான் மட்டுமே நல்லவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு வயிறு பிழைக்கக்கூடியவர்களைப் பார்க்கின்றோம்ம், இவன் வேலை செய்வது சரியில்லை என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி தான் மட்டுமே நல்லவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு வயிறு பிழைக்கக்கூடியவர்களைப் பார்க்கின்றோம்.
உழைக்கக்கூடிய மனிதனின் வேர்வை காயும் முன் அவனுடைய ஊதியத்தை கொடுத்து விடு என இஸ்லாம் கூறுவது ஒருபுறம் இருக்க அல்லும் பகலும், வெய்யிலிலும் மழையிலும் குளிரிலும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஏழை தொழிலாளர்களின் சம்பளத்தையும் கூட சில நிறுவனங்கள் மூன்று மாதம் கழித்துத்தான் சம்பளம் தருவோம். மூன்று மாத சம்பளம் எங்கள் கையிருப்பில் இருக்கும். நீங்கள் வேலையைவிட்டு நீங்கும் சமயத்தில் அப்பணத்தை திருப்பி தந்து விடுவோம் என்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தை பேங்கிலே தன் பெயரில் இட்டுவிட்டு (எ:கா 50 பேருடைய மூன்று மாத சம்பளத்தை வங்கியில் இட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும்) வரும் வட்டிப்பணத்தை வாங்கி சாப்படுகிறார்கள்.
பொருள்களிலே வயிற்றுக்கு மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருள்களை கலந்து விற்று வாழக்கூடியவர்களைப் பார்க்கின்றோம். ஒரு புறம் இப்படி ஒரு கூட்டம் இந்த பூமியே எங்களுக்குத்தான் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. Read the rest of this entry »
தயக்கம், வெட்கம், கூச்சம், பயம் – இனிமேல் இல்லை !
நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.
பள்ளிக்கூடங்களில் புதிதாய் நுழையும் மழலைகள் ஆசிரியர்களிடமும்,பள்ளியிலுள்ள சக மாணவர்களிடமும் பேசக் கூட பல வேளைகளில் பெரும் கூச்சப்படுவார்கள். அதுவும் மேடைகளில் ஏறி பேசவேண்டுமெனில் அவ்வளவு தான்! வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் தான் அனேகம்.
வேலை விஷயங்களில் இந்தக் கூச்சம் பலரை வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்த கூச்சத்தின் பிள்ளைகள் தொடர் தோல்விகளையே சந்திக்கின்றனர்.
இந்த கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என புலம்பும் இத்தகைய மக்களை வியக்க வைக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
அதாவது கூச்சமடையாமல் தைரியத்துடன் செயல்பட வேண்டிய ஊக்கத்தைத் தரும் மருந்தை அறிவியலார் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை ஸ்பிரே போல தயாரித்து நேர்முகத் தேர்வு போன்ற இடங்களுக்குச் செல்லும் முன் முகர்ந்து கொண்டால் மனதுக்கு ஊக்கம் கிடைக்குமாம். அல்லது மாத்திரை வடிவில் இதைத் தயாரித்து உட்கொள்ளச் செய்தால் தயக்கமெல்லாம் தயங்காமல் ஓடி விடுமாம். Read the rest of this entry »
இல்லறம்
ஆண் பெண் இருவரும் மல்யுத்த வீரர்களாய் நின்றால் வாழ்க்கை குத்துப்பட்டே செத்துப்போகும். வீரத்தால் சாதிப்பது எதுவும் நிலைக்காது. அன்பால் சாதிப்பது மட்டுமே என்றென்றும் தொடரும்.
ஆண் பெண்ணைச் சார்ந்து இருத்தலும் பெண் ஆணைச் சார்ந்து இருத்தலுமே இல்லறம். சார்ந்திருப்பதே காதல். சார்ந்திருத்தலே தாய் பிள்ளை பாசம். சார்ந்திருத்தலே உலக உறவுகளின் ஆணிவேர். சார்ந்திருப்பது அடிமைத்தனமல்ல தூய்மையான அன்பு.
தன் வலிமையையெல்லாம் மீறி நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன் என்று சொல்லுமிடத்து எத்தனை உயர்வான காதல் எழுந்து நர்த்தனம் ஆடுகிறது.
தொட்டதற்கெல்லாம் நீ உயர்வா நான் உயர்வா என்று வீரம் பேசினால் வாழ்க்கை வாடி வதங்கி செத்து சுண்ணாம்பாகிவிடும்
http://anbudanbuhari.blogspot.com
இரும்புத் திரை
துல்கர்னைன் என்றொரு சக்தி வாய்ந்த மன்னர். கிழக்கும் மேற்குமாகப் பிரயாணம் செய்து வரும்போது இரு மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கிலுள்ள ஒரு நகரத்தை அடைகிறார். நிறைய மக்கள். அவர்களை இரு அக்கிரமக்காரக் கூட்டம் சர்வ அட்டூழியம் புரிந்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. அலங்கோலப்பட்டுக் கிடக்கும் அவர்களுக்கு இவரைப் பார்த்ததும் அநேக நம்பிக்கை. துல்கர்னைனிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
“இந்த அக்கிரமக் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். ஏதாவது ஒரு தடுப்பு ஏற்படுத்துங்கள். அதற்கு நாங்கள் எங்களாலான ஊதியம் அல்லது நன்கொடையை அளித்து விடுகிறோம்.”
“அதெல்லாம் வேண்டாம், எனக்குக் கூலி பரிகாரம் வழங்க அல்லாஹ் போதுமானவன். ஒத்தாசை மட்டும் புரியுங்கள்” என்கிறார்.
இரும்புத் துண்டுகள் அல்லது பாளங்கள் எடுத்து வரப்பட்டு இரு மலைகளுக்கிடையே அடுக்கடுக்காய் நிரப்பி அதன் மேல் உருக்கிய செம்பு ஊற்றி, பெரியதொரு இரும்புத்திரை ஏற்படுத்துகிறார். அந்த மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு ஏற்படுகிறது.
இந்த வரலாற்றை அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா அல்குர்ஆனின் 18ஆவது அத்தியாயமான சூரா கஹ்பின் 83-97 வசனங்களில் விவரிக்கிறான்.
* * * * *
இப்பொழுது வரலாறு தலைகீழாய் மாற்றம் கண்டுள்ளது. ஒரு இரும்புத்திரை கட்டப்பட்டல்ல; நடப்பட்டு வருகிறது. என்ன விசித்திரம் என்றால் அதனை நடுவது நவீன யாஜுஜ் மாஜுஜ் கூட்டம்.
கஸ்ஸா, எகிப்தின் வட எல்லையில் உள்ளது. இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் இங்கு யுத்தம் நடத்தி வருகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் யுத்தம் இல்லை. குண்டு, துப்பாக்கி, ஏவுகணை, மனித வெடிகுண்டு என, கைவரப்பெற்ற அத்தனை ஆயுதங்களுடன் ரத்தம் ரத்தமாய் இறைத்து. அதன் நியாயம் வெறும் சுதந்தரப் போர் மட்டுமல்ல; பட்டப்பகலில் வெட்டவெளிச்சத்தில் அபகரிக்கப்பட்ட தன் நிலம் என்பதையும் தாண்டியது. இஸ்லாத்தின் மூன்றாவது புனித ஸ்தலத்தை மீட்டெடுப்பதை உள்ளடக்கியது. சகோதர சகோதரிகள் சின்னாபின்னாமாகி அழிவதைத் தடுப்பது.
அவர்களுக்கு அஹிம்சை அல்ல மொழி. மாறாய் முள்ளை முள்ளால் எடுக்கும் பணி. ஹமாஸைப் பொருத்தவரை அது திருப்பணி.
சொந்த நாட்டில் ஓட ஓட விரட்டி நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு மீதமுள்ளவர்களை மேற்குக் கரை, கஸ்ஸா என்று இரண்டு ரொட்டித் துண்டுகளாக்கிவிட்டது வந்தேறிகள் கூட்டம். அதில் கஸ்ஸா தக்ணூண்டு அளவில் எகிப்தின் வடமேற்கு எல்லையோரம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கஸ்ஸாவிலுள்ள ஃபலஸ்தீனின் மிச்ச, சொச்ச மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமை, கௌரவம், உணவு, தண்ணீர், அடிப்படை சுகாதார வசதி என அனைத்தும் பகிரங்கமாய் மறுக்கப்பட்டு வருகின்றன. ரகசியமெல்லாம் அல்லாமல் நேரடியான ஒரே குறிக்கோள் – அந்த மக்களைத் தனிமைப்படுத்தி, குரல்வளையை நெறித்து, பட்டினிப் போட்டு, மூச்சுத் திணற அடிக்கும் ஒரே குறிக்கோள்.
கொஞ்ச நஞ்சம், உண்மையை உணரும் அமைப்புகளும், நடுநிலையாளர்களும் முன்னேறி வந்து ஒடுக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவி என்று ஏதோ கொஞ்சம் பரிமாற எடுத்து வரும்போது எதிரி இஸ்ரேலும் பங்காளி எகிப்தும் தடுத்து முட்டுக்கட்டை போட்டால் என்ன செய்வார்கள் அவர்கள்? ஓட்டை போட்டார்கள். நிலத்திற்கு அடியில்!
போட்டது கொஞ்சம் பெரிய ஓட்டை. சுரங்கப் பாதை. கஸ்ஸாவிற்கும் எகிப்திற்கும் மேலே உள்ள எல்லையை பூமிக்கு அடியில் கடக்கும் சுரங்கப்பாதை. வேறு என்ன செய்வார்கள்? அனைத்து ஆசிகளுடனும் வாழ்த்துகளுடனும் வான், நில, நீர் மார்க்கமாகப் பணம், ஆயுதம், லொட்டு, லொசுக்கு என அனைத்தும் அளித்தருள வல்லரசு நாடு ஏதும் அவர்களுக்கு நண்பனில்லை. ஐ.நா. எனும் அமைப்போ கோட்டு சூட்டு போட்ட சர்வர். எனவே தங்களின் அறப்போருக்கு அவர்களால் முடிந்த சாத்தியம் அது.
எகிப்து கண்டும் காணாமல்தான் இருந்தது. ஆனால் இஸ்ரேலுக்கு முடியவில்லை. அனைத்து இகலோக சக்திகளுடன் ராட்சசனாய் அமர்ந்திருக்கும் அவர்களுக்கு ஹமாஸிடம் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் தீபாவளிப் பட்டாசு துப்பாக்கி ரேஞ்சுக்குத்தான்.
ஆனாலும் முடியவில்லை. அதை வைத்துக் கொண்டே ஹமாஸ் அவர்களுக்குத் தண்ணி காண்பித்து வருவது மாபெரும் தலைவலியாய் இருந்து வருகிறது. ஏனெனில் அதனை ஏந்தியுள்ள நெஞ்சங்களில் கலிமாவின் சுவாசம் ஓடிக்கொண்டிருப்பது ஓர் அடிப்படைக் காரணமாய் இருக்கலாம். Read the rest of this entry »
இறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் !
“ஐயோ… என்னால் அப்பாவாக முடியாதே” என இனிமேல் ஆண்கள் யாருமே புலம்பத் தேவையில்லை என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சூப்பர் ஆராய்ச்சி முடிவு.
விந்தணுவும் முட்டையும் இணைந்து கரு உருவாவது தானே இயற்கையின் நியதி. ஒருவேளை நோயினாலோ, வேறு ஏதேனும் காரணத்தினாலோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் என்ன செய்வது ?
கவலையை விடுங்கள் உங்கள் உடலிலுள்ள ஒரு “ஸ்டெம் செல்” போதும் உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் அந்த ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகின் புருவத்தை உயர வைத்திருப்பவர் பேராசிரியர் கரிம் நயிர்னியா.
இன்றைய தேதியில் ஆறு தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. பழைய காலத்தைப் போல குழந்தையில்லையேல் பழியை பெண்ணின் தலையில் போட்டு விட்டு தப்பிக்கவும் நவீன யுகம் வளர்ச்சி இடம் தருவதில்லை. ஒரு சோதனை போதும் யாருக்குப் பிரச்சினை, என்ன பிரச்சினை போன்ற சர்வ சமாச்சாரங்களையும் புட்டுப் புட்டு வைக்க.
குளோபல் வார்மிங், ஆபீஸ் டென்ஷன், பீட்சா, பர்கர், சீஸ் என கொழுப்பு உணவுகள், நோ எக்சர்சைஸ், மன அழுத்தம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இதைச் சுற்றி. அதனால் இப்போதெல்லாம் ரேஷன் கடை வாசலில் நீளும் கூட்டத்தை விட அதிகமாய் கைனோகாலஜிஸ்ட் களின் வாசலில் கூட்டம் நீள்கிறது என்பது தான் நிஜம்.
உண்மையில், பிரச்சினை இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆண்களிடம் தான். ஜீவனில்லா விந்தணு, வீரியமில்லா விந்தணு, மூவ்மெண்ட் குறைவான விந்தணு, குறைவான எண்ணிக்கை இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் இந்த உயிரணுவைச்
சுற்றி. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகக் கூடும் இந்த ஆராய்ச்சி என்பதே இப்போதைக்கு மருத்துவ உலகின் நம்பிக்கை.
உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக எனும் அடைமொழியுடன், ஒரு ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்தெடுத்து, , அதை சோதனைக்கூடத்தில் ஸ்பெர்ம் ஆக வளரச் செய்திருக்கிறார் அவர். கருவிலிருந்து தான் செல்லை எடுக்க வேண்டுமென்றில்லை, ஆண்களின் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லைப் பிரித்து எடுத்து ஒரு ஸ்பெர்ம் செல்லை உருவாக்க முடியும் என நம்புகிறார் பேராசிரியர் கரிம் நயிர்னியா.
எளிதாய் சொன்னாலும் இதன் பின்னணியில் உள்ள உழைப்பு அசாத்தியமானது. ஸ்டெம் செல் ஒன்றை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி, அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகிறதாம். இந்த விந்தணுவை IVF முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயார். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை
சொல்லிவிடலாம். Read the rest of this entry »
தனிமகனார்
இடுகையிட்டவர். முனைவர்.இரா.குணசீலன்
தனிமை கொடுமையானது.
அதிலும் அன்புக்குரியவர்களை நீங்கி வாழ்தல் மிகமிகக் கொடுமையானது.
தனிமை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு மாதிரி உணரப்படும்.
சிலர் தனிமை வரம் என்பார்கள்
சிலர் தனிமை சாபம் என்பார்கள்
தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி ஒருத்தியின் தனிமைப் புலம்பல் நற்றிணைப்பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைவனின் பின்னே சென்ற தன்நெஞ்சம் மீண்டும் திரும்பி வரவில்லை..
உடலுக்கு உயிர் இங்கு காவலாக இருக்கிறது.
அந்த உயிரும் உடலில் தங்கும் அளவாவது உணவு உட்கொள்வதால் தான் தங்கியிருக்கிறது.எப்போது தன்னை விட்டு நீங்கும் என்பதும் தெரியாது..
இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தனிமகன் என்பதாகும்.
இது இவரின் இயற்பெயர் அல்ல..
இப்பாடலில் சிறந்த தொடரைக் கையாண்டதால் பெற்ற பெயர்.
தனிமகன் என்னும் பெயருக்கான காரணத்தைப் பாடல் வழி காண்போம்.
‘குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி Read the rest of this entry »














