RSS

நாகூர் ரூமி புத்தகங்கள்

என் உயிர் நண்பர் நாகூர் ரூமி. நல்ல அறிஞர். ஒவ்வொரு விடயங்களையும் தீர ஆராய்ந்து அதற்காக இரவு பகல் பாராது உழைத்து நூல் எழுதி வெளியிடுகிறார். இதுவரை எத்தனை நூல்கள் எழுதியிருக்கிறார் என்ற கணக்கு அவருக்கு தெரியுமோ என்னவோ…!
இந்த புத்தகம் கூடுதலாக விற்பனையாகும் என்று நினைக்கிறேன்.

அப்துல் கையூம்

 
Leave a comment

Posted by on January 11, 2017 in 1

 

மண் வீடு !

திடீரென்று வந்த வேலையை
செய்து முடித்து
திரும்பி வரும்போது
மழை பிடித்துக் கொண்டது!
ஒருசில அடிகள்
வேகமாக ஓடி
ஒதுங்குவதற்குள்
உடையெல்லாம்
தொப்பல் !
முதலில்
மழையில் நனையாமல் ஒதுங்க
ஓடியவன்
இப்போது
மழையை விட்டு ஒதுங்க
மனமில்லாமல்
நனைந்துகொண்டே
நடக்க ஆரம்பித்தேன்! Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 7, 2017 in 1

 

‘இறுதி மணித்தியாலம்’

அன்பின் நண்பர்களுக்கு,
எனது இந்த வருடத்தின் முதல் புத்தகமாக, இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக ‘இறுதி மணித்தியாலம்’ எனும் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இந்த வாரம் வெளிவருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பிற்கு காத்திரமானதோர் முன்னுரையை மதிப்பிற்கும், நேசத்திற்குமுரிய எழுத்தாளர் கருணாகரன் எழுதியிருக்கிறார்.
இத் தொகுப்பை சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், ‘வம்சி’ பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
07.01.2017

 
Leave a comment

Posted by on January 7, 2017 in 1

 

கைத்தறி வேட்டி உடுத்தி வந்து …

நான் கல்லூரியில் சேரும்போதே வேட்டிகட்ட ஆரம்பித்து விட்டேன்.
அன்று …
நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக அறிஞர் அண்ணா பாடுபட்டார்.
கழகத் தலைவர்கள் கைத்தறி துணிகளை தோளில் சுமந்துகொண்டு
ஊர் ஊராகச் சென்று விற்றார்கள்.
அன்றைய திராவிட முன்னேற்றக் கழகம்
பாட்டாளிகள்
நெசவாளர்கள்
விவசாயிகளின் பட்டறையாகத் திகழ்ந்தது.
அவர்களின் துயரம் தீர்க்கும் சகோதரர்களாக திமுகவினர் இருந்தார்கள்.
அதிலும் குறிப்பாக கைத்தறி வேட்டி சேலை துவர்த்து தயாரிப்பவர்கள்
திமுகவை தங்கள் தாய் வீடாகவே நினைத்து வாழ்ந்தார்கள்.
” ஓடி வருகிறான் உதய சூரியன் …. ” என்று நாகூர் ஹனிபா அண்ணன் பாடும்
பாட்டில்கூட நேசவாளர்களைப் பற்றி குறிப்பிடுவார்.
67 ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே
கூலித் தொழிலார்கள் நெசவாளர்கள் தொழிலாளர்களின் ஓட்டுதான்.
அந்த அளவுக்கு நெசவாளர்களுக்காக நிஜமாகவே அக்கறையோடு
பாடுபட்ட ஒரு இயக்கம் திமுக.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் முழுவதும்
கைத்தறி கண்காட்சிகளை அரசாங்கம் நடத்தியது.
விற்பனையாகும் துணிகளுக்கு கணிசமான தள்ளுபடியையும் அரசாங்கம் வழங்கியது.
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற இந்த விழாக்களில்
சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு
கைத்தறி ஆடை விற்பனையை ஊக்குவித்தார்கள்.
இருவாரம் நடைபெறும் இந்த விழாக்கள் நகரின் மைய மைதானங்களில் நடைபெறும்.
தினமும் கலைநிகல்சிகள் களைகட்டும்.
நானெல்லாம் தினந்தோறும் கண்காட்சிக்கு சென்று விடுவதுண்டு.
ஈரோடு , வடசேரி , பள்ளியாடி , காஞ்சிபுரம் என்று தமிழகத்தின் பெரும்பாலான
ஊர்களிலிருந்து வந்து நெசவாளர்கள் ஸ்டால் வைத்திருப்பார்கள்.
பெரிய கரை போட்ட வேட்டிகளை விரும்பி வாங்கி மறுநாள் அதை
கல்லூரிக்கு உடுத்திக் கொண்டு போகும்போது மனசெல்லாம்
புதுமாப்பிள்ளைபோல் மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்ளும்.
காலேஜில் படிக்கும்போது ஆரம்பித்த வேட்டி கட்டும் பழக்கம் இன்றுவரை
தொடர்கிறது.
கல்லூரிக்கு ஒருநாள் கூட நான் பேன்ட் போட்டு சென்றதில்லை என்பது
ஆச்சரியமான உண்மை.
கைத்தறி பொருட்காட்சி வந்தாலே வீடுகளிலும் மகிழ்ச்சி கரைபுரண்டோடும்.
அப்போது அத்தனை பிரபலமில்லாத கைத்தறி சேலைகளை பெண்கள் விரும்பி அணிய
ஆரம்பித்தார்கள்.
அதுமட்டுமல்ல … Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 6, 2017 in 1

 

தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்! பெரியார் திடலில் அந்த முப்பது நிமிடங்கள்!!

 

கலி. பூங்குன்றன்

தி.மு.க. பொருளாளராக விருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றிய சூழ்நிலையில், இயக்கப் பணிகள், மக்கள் நலப் பணிகளில் அதன் தாக்கத்தால் பழுதுபட்டு விடக்கூடாது, தொய்வின்றித் தொடர் ஓட்டமாக நடைபெறவேண்டும் என்ற பொதுநோக்கில் தி.மு.க. பொருளாளராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் என்ற கூடுதல் பொறுப்பு அளித்து, கட்சித் தலைவருக்குரிய அத்தனை உரிமைகளையும் தந்து, இனமானப் பேராசிரியர் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் முன்மொழிய, முதன்மைச் செயலாளர் துரை.முருகன் அவர்கள் வழிமொழிய, தி.மு.க. பொதுக்குழு ஒருமனதாகத் தேர்வு செய்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. இது ஒரு திருப்பம் என்று தாய்க்கழகத்தின் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தம் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கதாகும்.
இதற்கு முன் கட்சியின் பொறுப்புகளைத் தாம் ஏற்றுக் கொண்டபோது மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாகவும், தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குரிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகக் குறிப்பிட்டது -புரிந்துகொள்ளத்தக்கதே!
இதனை தாம் ஒரு பதவியாகக் கொள்ளாமல், பொறுப்பாகவே கருதுகிறேன் என்று சொன்னது – அவரது முதிர்ச்சிக்கும், கடமை உணர்ச்சிக்குமான பிரகடனம் என்றே கருதப்படவேண்டும்.
பதவி என்றால் வாகனம் போகும் பாதைகளில் மலர் படுக்கைகள் Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 5, 2017 in 1

 

40 வது சென்னை புத்தக கண்காட்சி – டிப்ஸ்

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதங்களில் சென்னையில் களைகட்டும் புத்தக் திருவிழா தொடங்கி விட்டது…
ஒவ்வொரு வருடமும் நான் செல்வதுண்டு. அந்த அனுபவத்தின் அடிப்படையில் சில டிப்ஸ்கள்.
இது உங்களுக்கு உதவக்கூடும் நண்பர்களே…
1 . முதல் 2 நாட்களில் செல்லாதீங்கள் சரிவர எல்லாம் தயார் நிலையில் இருக்காது.
கடைசி 2 நாட்களிலும் செல்லாதீர்கள், பெரும்பாலான புத்தகங்கள் விற்று முடிந்து இருக்கும்.
2 . முடிந்த அளவு வார நாட்களில் செல்லுங்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும்.
3 . விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கும், வேலை நாட்களில் மதியம் 2 மணிக்கு துவங்கும், இரவு 9 மணிக்கு முடியும். முடிந்த அளவு வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு சரியாக 2 மணிக்கு அங்கே இருங்கள். சாயந்தரம் செல்லாதிர்கள், அனைத்து கடைகளையும் பார்க்க நேரம் கிடைக்காது.
4 . குறைந்த பட்சம் 2 முறையாவது செல்லுங்கள்.
5 . ஒரு முறை செல்பவர் என்றால், தயவு செய்து வெளியில் நடக்கும் கருத்தரங்கில் அமர்ந்து உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். நேராக கண்காட்சிக்குள் சென்று விடுங்கள்.
6 . சிறு குழந்தைகளை கூட்டிச் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் உங்கள் கவனம் கன்னாபின்னாவென்று சிதறும்.
7 . உள்ளே சென்றால் கண்காட்சி முடியும் வரை வெளியில் வராதீர்கள். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 5, 2017 in 1

 

இப்படிக்கு கோதை நூல் பற்றி….

15871727_1320789754646512_7702425230784054603_n

அரங்கனும் அன்னவயற்புதுவை ஆண்டாள் நாச்சியாரும் தம்மிடையே எழுதிக்கொண்டதாகக் கருதப்பட்டு திருவில்லிபுத்தூர் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட “திருமுகங்களாகிய” கடிதங்களின் பின்புலத்தை மையமாகக்கொண்டு, “நான் ராஜாமகள்” , அவர்கள் எழுதிய அருமையான கடிதத்தொகுப்பு நூல்தான் “இப்படிக்கு கோதை”. திராவிடக் குடும்பத்தைச் சார்ந்த தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இருவரும் இந்த நூலின் நயம் பற்றி வரலாற்றுத் தரவுகளுடனும், திருவரங்க நிகழ்வுகளோடும், சிவனாண்டி, பிரமாண்டி, மாயாண்டி என்ற சிறுதெய்வ வழிபாட்டோடு தொடர்புபடுத்தி கோதையை வேடுவகுலத்துதித்த பெண்ணாகக் கருதி, “பெயர்த்தும் ஆண்டாளுக்கே பிச்சியாவோம்” என்று வாழ்த்துரைகளாக நிறைப்பதைக் காண்கையில் இதுநாள்வரை கோதை என்னும் பெயரை “கோதா தேவி” என்று மண்ணுக்குப் “பொருந்தாப்பெயர் வைக்கும்” உயர்குலத்துக்கே உரித்தானவள் என்று சமூகம் கட்டிவைத்திருக்கிற பொய்க்கோபுரம் உடைந்துபோய் “கோதை எளியோர் இல்லத்துப்பேதை” என்று எண்ணவைத்தது.
ஸ்ரீமுகங்கள் ஒவ்வொன்றிலும் நான் ராஜாமகள் தனக்கேயுரிய குறும்புத்தமிழில் அரங்கனாக மாறி ஆண்டாளை காதற்செல்லங்கொஞ்சுவதும், அவற்றையெல்லாம் ஆண்டாள் மாறி மறைமுகமாக ஏற்றுக்கொள்வதும், மறுமொழியாக ஏக்கங்கலந்து, ஊடலால் சினந்தாலும் சீரியருளாமல், அரங்கனை பேதை மொழியில் வஞ்சகரென்றும், பொருத்தமிலியென்றும் வசைபாடுவதும், தான் நூறு தடாக்களில் வெண்ணெயும், அக்காரவடிசிலும் படைப்பதாக மதுரை -மாலிருஞ்சோலை அழகருக்கு வேண்டிக்கொண்டதைப் பின்னாளில் இராமானுசர் நிறைவேற்றியதால் அவரை தன் அண்ணன் என்று பாசம் காட்டும்போதும், அரங்கன் வில்லிபுத்தூர் வருகின்ற சூழல் அருகில் இல்லையென்று அறியும்போதில் ஏதிலியாய் உள்ளம் நலிந்து, கையறுநிலையில், வருத்தம் மேலிடக் குமைந்துபோவதுமாக கோதையாகவே மாறிப்போய் நிற்கின்றார். இருவருக்குமிடையே நடக்கும் கடித உரையாடல்களில் பாசுரங்களைக் கையாளும் நூலாசிரியரின் பாங்கு, ஆழ்வார்களே நேரில் வந்து நின்று பாசுரங்கள் சொல்லி ஊடலைக் குறைத்துவிட்டோ அல்லது நீட்டிவிட்டோப் போவதுபோல உணர்கிறேன் நான். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on January 5, 2017 in 1