RSS

என் தங்கத்துக்குத் தாலாட்டு

24 Nov

சிப்பிக்குள் முத்து படத்தில் வரும் லாலி லாலி லாலிலாலோ பாடலுக்கான மெட்டுக்கும் பொருந்தும் 🙂

பொன்மாலை வேளையில்
தவழ்கின்ற வெண்ணிலா
கண்ணான கண்மணி
உன்போலத் தவழுமா

பனிதூவும் காலையில்
பூக்கின்ற பூக்களும்
கனிவான உன்னெழில்
முகம் போல பூக்குமா

ஆரீராரீ.. ஆரீராரோ

முற்றாத மாலையில்
முகம்வீசும் தென்றலும்
நான்பெற்ற கண்மணி
உன் போல வீசுமா

வற்றாத கங்கையில்
செழித்தோடும் வெள்ளமும்
ஒப்பில்லாக் கண்மணி
உன்போல ஓடுமா

ஆரீராரீ.. ஆரீராரோ

கிளிபேசும் பேச்சிலும்
குயில்பாடும் பாட்டிலும்
தளிரான கண்மணி
உன் பாஷை கேட்குமா

மயில்தோகை விரிப்பிலும்
மான்தேக வனப்பிலும்
ஒயிலான கண்மணி
உன் வண்ணம் விளங்குமா

ஆரீராரீ.. ஆரீராரோ

உலகங்கள் யாவுமே
என் சொந்தம் ஆயினும்
உயிரான உயிரென்றும்
நீதானே கண்மணி

உயிர் நீங்கும் வேளையும்
உறங்காத கண்களில்
ஒளிவீசும் தங்கமே
உனைத்தானே தேடுவேன்

ஆரீராரீ.. ஆரீராரோ

அன்பே அன்பே என் சொந்தமே
கண்ணே கண்ணே கண் தூங்குவாய்
ஆரீராரீ.. ஆரீராரோ

மானே தேனே தேனோடையே
பூவே பொன்னே பூ முத்தமே
ஆரீராரீ.. ஆரீராரோ

உயிரே உயிரே உயிர்த் தேடலே
உயிரில் ஊறும் கவி வெள்ளமே
ஆரீராரீ.. ஆரீராரோ

தொகுப்பு:

Thanks to            http://anbudanbuhari.blogspot.com

Laali Laali (Sippikkul Muthu)

Advertisements
 

One response to “என் தங்கத்துக்குத் தாலாட்டு

  1. திண்டுக்கல் தனபாலன்

    June 7, 2013 at 6:00 am

    வரிகள் அழகு அருமை… வாழ்த்துக்கள் ஐயா…

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: