RSS

ஊருக்குப் பெருமை

12 Dec

நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீது

அ.மா. சாமி-
முனைவர்  அ. ஆயயூப்.

1933ஆம் ஆண்டு அக்டோபர் 9ந் தேதி (ஹிஜிரி 1352 ஜமாதுல் ஆஹிர் பிறை 18) நீடூரில் சயீது பிறந்தார்.  அன்று திங்கட்கிழமை திங்கள் – செவ்வாயக்கு இடைப்பட்ட நள்ளிரவு 2 மணிக்கு குவாகுவா குரல் கேட்டது.
தான் பிறந்த நீடூரை சயீது மறக்கவேயில்லை.  தனது பெயருடன் சேர்த்துக்கொண்டு, ஊருக்குப் பெருமை தேடிக் கொடுத்தார்.
“சீர்காழி கோவிந்தராசன் சீர்காழியில் வசிக்கவில்லை.  மதுரை மணி அய்யர் மதுரையில் வாழவில்லை.  நாகூர் அனிபா மட்டுமே நாகூரில் இருக்கிறார்” என்று சயீது சொல்லுவார்.  இவரும் பிறந்தது முதல் கடைசி காலம் வரை நீடூpலேயே வசித்தார்.

பெருமை மிக்கப் பெற்றோர்
இவருடைய தந்தை அல்ஹாஜ் சி.அ. அப்துல்காதர் தாயார் அல்ஹஜா உம்மு சல்மா பீவி.
பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு “முகம்மது சயீது” என்று பெயர் சூட்டினார்கள்.  தந்தையின் பெயரையும் சேர்த்து “அப்துல் காதர் முகம்மது சயீது” என்ற பெயர்தான்” அ.மு.சயீது” என்று வழங்கியது.

புகழ் நிறைந்த தந்தை

தந்தை அப்துல் காதர் மயிலாடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருந்தார்.  நல்ல வியாபாரம்.  திருமணச் சீர் செய்கிறவர்கள் பட்டியலைக் கொண்டு வந்து கடையில் கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்.  பாத்திரங்கள் மாட்டு வண்டியில் போய்த் திருமண வீட்டில் இறங்கிவிடும்.  அவ்வளவு நம்பிக்கை.

ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்தார். “அவர் கடை வீதியில் வரும் போது மற்றக் கடைக்காரர்கள் எழுந்து நின்று கைகூப்புவார்கள்” என்று, நீடூர் பெரியார் அப்துல் மஜீது தெரிவித்தார்.  அவ்வளவு மதிப்பு, மரியாதை!

ஊரில் என்ன பிரச்சினை என்றாலும், இவரிடம் வந்து முறையிடுவார்கள்.  இவர் விசாரித்துத் தீர்ப்புக் கூறுவார்.  இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.  அவ்வளவு நியமயமாக இருக்கும்.  நடுநிலை தவறாத ஒரு நீதிபதிகயாக ஊரில் அவர் விளங்கினார்.

மணிக்கூண்டு
மயிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றுமு; அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது.  இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது.  அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.
அது என்ன டுனீசிய வெற்றி? ஆப்துல் மஜீது அவர்களிடம் கேட்டேன். “உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது.  போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார் என்று அவர் தெரிவித்;தார். (வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).

ரெயில் நிலையம்

நீடூர் மக்கள் ரெயில் ஏற 3 கி.மீ. தொலைவிலுள்ள மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்குப் போக Nவுண்டியிருந்தது இறங்குகிறவர்களும் அங்கு இறங்கித்தான் நீடூருக்கு வரவேண்டும்.
நீடூர் மக்களின் வசதிக்காக நீடூரில் ஒரு ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்துல் காதர் அரசுக்கு மனு அனுப்பினார்.  நீடூரில் ரெயில் நிலையம் கட்ட ரெயில்வேயிடம் நிலமில்லை என்று பதில் வந்தது.  உடனே, “எனது நிலத்தைத் தருகிறேன்” என்று அப்துல் காதர் அரசுக்கு எழுதினார்.  அரசு அதை ஏற்றுக் கொண்டது.
ரெயில் பாதையை ஒட்டியிருந்த தனது நிலத்தை அப்துல் காதர் அரசுக்கு இனமாகக் கொடுத்தார்.  அந்த இடத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டது.  அங்கு ரெயில்கள் நின்று சென்றன. நீடூரிலேயே ரெயில் ஏற, இறங்க மக்களுக்கு வசதி கிடைத்தது.

வீடு கட்ட நிலம்

நீடூர் பெயருக்கு ஏற்ப நீண்டு விரிந்து கொண்டே போயிற்று.  புதிய வீடுகள் கட்ட நிலமில்லை.  அப்துல் காதர் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீட்டு மனைகள் போட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்தார்.
நீடூரை அடுத்த திருவாளப்புதூரில் வீடு இல்லாமல் மரத்தடிகளில் பல குடும்பத்தினர் வசித்தார்கள்.  அப்துல் காதர் மாவட்டக் கழகம் (ஜில்லா போர்டு) மூலமாக அவர்களுக்கு 24 வீடுகள் கட்டிக்கொடுத்தார்.  அப்போது அவர் மாவட்டக்கழக உறுப்பினராக இருந்தார்.
தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினராக இருமுறை அப்துல் காதர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இது காட்டுகிறது.

பள்ளிவாசல்
கொள்ளிடத்தை அடுத்து துளசேந்திரபுரத்தில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசிக்கிறார்கள்.  அவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி அப்துல் காதரிடம் முறையிட்டார்கள்.  அவர் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததுடன், அவர்கள் தொழுகை நடத்த ஒரு பள்ளி வாசலும் கட்டிக் கொடுத்தார்.  அவர்களின் பிள்ளைகள்  படிக்க ஒரு ‘மதரசா’வும் (அரபிப் பள்ளிக்கூடம்) நிறுவினார்.
மயிலாடுதுறைக் கடை வீதியில் ஏராளமான முஸ்லிம்கள் கடை வைத்திருந்தார்கள்.  அவர்கள் தொழுவதற்கு அருகில் ஒரு பள்ளிவாசல் இல்லை.  அப்துல் காதர் கடை வீதியை அடுத்து ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தார்.

அரபிக் கல்லூரி
நீடூரில் உள்ள அரபிப் பள்ளிக் கூடத்தின் நிர்வாகத் தலைவராகவும் அப்துல் காதர் இருந்தார்.  அப்போது 5 அறைகள் புதிதாகக் கட்டிக் கொடுத்து, அதைக் கல்லூரியகாவும் ஆக்கினார்.  1948இல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவையும் சிறப்பாக நடத்தினார்.  1953இல் நடத்த பட்டமளிப்பு விழாவுக்கு அவர் தலைமை தாங்கவும் செய்தார்.
நீடூரில் பெண்களுக்கான தொடக்கப் பள்ளி ஒன்றையும், மாணவர்களுக்கு உயர் தொடக்கப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.
நீடூரில் இஸ்லாமிய நூல் நிலையம் (அஞ்சுமன்) ஒன்றையும் அமைத்தார்.
அது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
“நீங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து நற்செலவு செய்யுங்கள்” என்று திருக்குரான் சொல்லுகிறது.  குரான் வழியில் வாழ்ந்த அப்துல் காதர் தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஊர்ப்பணிகள் செய்தார்.  அதன் காரணமாக வாழும் போதே வரலாற்றில் இடம் பெற்றார்.  ஏம்.ஆர்.எம். அப்துல் ரகீமின் அரிய படைப்பான “இஸ்லாமியக் கலைக்களஞ்சிய”த்தில் அப்துல் காதரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அவரது வாழ்வும் பணியும் சொல்லப்பட்டுள்ளன.

உடன் பிறப்புகள்

ஊருக்கு உபகாரியாக வாழ்ந்த அப்துல் காதர் என்ற சிப்பியில் பிறந்த முத்து தான், நம்முடைய சயீது.
அப்துல் காதர் தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழ்ந்தைகள் பிறந்தார்கள் 7 ஆண்கள், 2 பெண்கள்.
சயீதின் உடன் பிறப்புகள் : ஹாஜி சபீர் அகமது, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது அலிஜின்னா.  இரு சகோதரர்கள் அப்துல் அமீது, ஜக்கரியா இளம் வயதில் இறந்து விட்டார்கள்.  சபீர் அகமது அப்துல் லத்தீப் ஆகியோரும் இப்போது இல்லை.
உடன் பிறந்த சகோதரிகள் சகமத் உன்னிசா, பாத்திமாஜின்னா.
“சிந்தனைக் களஞ்சியம்” என்ற தனது முதல் நூலை, தந்தை அப்துல் ஹாஜியார், தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் சயீது சமர்ப்பணம் செய்தார்.
“எனது பிறப்புக்குக் காரணமான என் பெற்றோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்ற, மாவீரன் அலெக்சாண்டரின் வாக்கு சயீதுக்கு மிகவும் பிடிக்கும்.
“தாய் தந்தையருக்கு நன்றி செய்யுங்கள்” என்று திருக்குரான் கூறுகிறது.
நீடூரில் தான் வசித்த வீட்டுக்கு “சல்மா இல்லம்” என்று பெயர் சூட்டியும், தன் 2வது மகளுக்கு சல்மா என்று பெயர் வைத்தும் தாய்க்கு நன்றி செலுத்தினார், சயீது தந்தைக்கும் நன்றி செலுத்தினார்.

Posted by : nidurali

முகம்மது அலி ஜின்னா

——————————————————————————————–

Hajee.S.E.Abdul Kader Sahib

S.E.A.Shabeer ahmed

Advertisements
 

3 responses to “ஊருக்குப் பெருமை

 1. naseerali

  December 13, 2009 at 6:50 am

  assalamu alliakum…var
  i read this article really nice we can remember all

   
 2. Trichy Syed

  September 9, 2011 at 12:07 pm

  Nalla Pathiwu!

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: