RSS

Monthly Archives: March 2010

பணம் படுத்தும் பாடு!

ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்தரத்தை பெருக்குவதற்காக என்னென்னவோ குறுக்கு வழிகளையெல்லாம் கையாளுகின்றான். தான் மட்டுமே இந்த உலகில் வாழவேண்டுமென்ற அற்ப ஆசைதான் அதற்கு காரணம்.

பிற மனிதரும் தம் போன்ற சக மனிதர்தானே, அவனுக்கும் நமக்கு இருப்பது போலவே குழந்தைகள் உள்ளனவேசக மனிதர்தானே, அவனுக்கும் நமக்கு இருப்பது போலவே குழந்தைகள் உள்ளனவே…நம் குழந்தைக்கு, மனைவிக்கு, பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நம் மனது எப்படியெல்லாம் பதைக்கின்றது, துடிக்கின்றது, நம் மனம் எவ்வளவு வேதனை அடைகின்றது என்ற எண்ணம் தன் மனதில் கொஞ்சமேனும் இருந்திருந்தால் அதைப்பற்றி சிந்தித்து இருந்தால் அவன் பொய் சொல்லி பணம் சம்பாதிக்க மாட்டான்அவன் பொய் சொல்லி பணம் சம்பாதிக்க மாட்டான். தடுக்கப்பட்ட வழிகளையும் அவன் தேட மாட்டான்.

ஆனால், இன்று நாம் பார்க்கின்றோம் அவன், “தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்” என்பதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்கின்றான். தன்னுடன் வேலை செய்யக்கூடிய சக தொழிலாளியை தன் மேலாளரிடம், இவன் வேலை செய்வது சரியில்லை என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி தான் மட்டுமே நல்லவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு வயிறு பிழைக்கக்கூடியவர்களைப் பார்க்கின்றோம்ம், இவன் வேலை செய்வது சரியில்லை என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி தான் மட்டுமே நல்லவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு வயிறு பிழைக்கக்கூடியவர்களைப் பார்க்கின்றோம்.

உழைக்கக்கூடிய மனிதனின் வேர்வை காயும் முன் அவனுடைய ஊதியத்தை கொடுத்து விடு என இஸ்லாம் கூறுவது ஒருபுறம் இருக்க அல்லும் பகலும், வெய்யிலிலும் மழையிலும் குளிரிலும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஏழை தொழிலாளர்களின் சம்பளத்தையும் கூட சில நிறுவனங்கள் மூன்று மாதம் கழித்துத்தான் சம்பளம் தருவோம். மூன்று மாத சம்பளம் எங்கள் கையிருப்பில் இருக்கும். நீங்கள் வேலையைவிட்டு நீங்கும் சமயத்தில் அப்பணத்தை  திருப்பி தந்து விடுவோம் என்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தை பேங்கிலே தன் பெயரில் இட்டுவிட்டு (எ:கா 50 பேருடைய மூன்று மாத சம்பளத்தை வங்கியில் இட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும்) வரும் வட்டிப்பணத்தை வாங்கி சாப்படுகிறார்கள்.

பொருள்களிலே வயிற்றுக்கு மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருள்களை கலந்து விற்று வாழக்கூடியவர்களைப் பார்க்கின்றோம். ஒரு புறம் இப்படி ஒரு கூட்டம் இந்த பூமியே எங்களுக்குத்தான் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. Read the rest of this entry »

Advertisements
 
1 Comment

Posted by on March 31, 2010 in 1

 

Tags:

பெரியார் பார்வையில் இஸ்லாம் (அ) ஏகத்துவம்

(’இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு – பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்).

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு “மோட்ச லோகம்’ கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, “கடவுளோடு கலந்து விட்டார்கள்’ என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை “சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!
நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன். Read the rest of this entry »

 

என்ன உலகம் இது,…

by ம.பிரகாஷ்.எம்.ஏ.,எம்.ஃபில்., தமிழ் ஆய்வாளன்

தாய்க்கு பின் – தாரம்
தாரத்துக்கு பின்,…
தாய் பாரமா ?!,… என்ன வினோதமான உலகம் …

நன்றி :http://thanimaiyilidhayam.blogspot.com/

 

சந்தோஷ மனைவி

many-faces.jpg
மனைவி …
படு சந்தோஷம் !

கூரை
சொந்தமாயிருந்து;

கொஞ்சுவதற்கு
மழலையும் இருந்து;

கழுத்திலே நகை;
கையிலே பணம்;

கைப்பிடிக்குள்
கணவன் இருந்தால் ..?

மனைவி .. ..
படு சந்தோஷம் !!!

கையூமின் கவிதைகள்

நன்றி :http://abdulqaiyum.wordpress.com

அப்துல் கையூம்

 

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?

இடுகையிட்டவர். முனைவர்.இரா.குணசீலன்

smail

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன..

பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்?
உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்?

பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது.
தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்…

ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..?

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று,

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது.

(தலைவியை இயல்பாக ஓரிடத்தல் தலைவன் பார்தலுக்கு இயற்கைப் புணர்ச்சி என்று பெயர்.)

“சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் – எம் அணங்கியோளே“

(குறுந்தொகை- 119- சத்திநாதனார்.)
Read the rest of this entry »

 

Tags: , , , ,

தயக்கம், வெட்கம், கூச்சம், பயம் – இனிமேல் இல்லை !

நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.

பள்ளிக்கூடங்களில் புதிதாய் நுழையும் மழலைகள் ஆசிரியர்களிடமும்,பள்ளியிலுள்ள சக மாணவர்களிடமும் பேசக் கூட பல வேளைகளில் பெரும் கூச்சப்படுவார்கள். அதுவும் மேடைகளில் ஏறி பேசவேண்டுமெனில் அவ்வளவு தான்! வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் தான் அனேகம்.

வேலை விஷயங்களில் இந்தக் கூச்சம் பலரை வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்த கூச்சத்தின் பிள்ளைகள் தொடர் தோல்விகளையே சந்திக்கின்றனர்.

இந்த கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என புலம்பும் இத்தகைய மக்களை வியக்க வைக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதாவது கூச்சமடையாமல் தைரியத்துடன் செயல்பட வேண்டிய ஊக்கத்தைத் தரும் மருந்தை அறிவியலார் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை ஸ்பிரே போல தயாரித்து நேர்முகத் தேர்வு போன்ற இடங்களுக்குச் செல்லும் முன் முகர்ந்து கொண்டால் மனதுக்கு ஊக்கம் கிடைக்குமாம். அல்லது மாத்திரை வடிவில் இதைத் தயாரித்து உட்கொள்ளச் செய்தால் தயக்கமெல்லாம் தயங்காமல் ஓடி விடுமாம். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on March 31, 2010 in 1

 

Tags: , , ,

இல்லறம்

அன்புடன் புகாரி

ஆண் பெண் இருவரும் மல்யுத்த வீரர்களாய் நின்றால் வாழ்க்கை குத்துப்பட்டே செத்துப்போகும். வீரத்தால் சாதிப்பது எதுவும் நிலைக்காது. அன்பால் சாதிப்பது மட்டுமே என்றென்றும் தொடரும்.

ஆண் பெண்ணைச் சார்ந்து இருத்தலும் பெண் ஆணைச் சார்ந்து இருத்தலுமே இல்லறம். சார்ந்திருப்பதே காதல். சார்ந்திருத்தலே தாய் பிள்ளை பாசம். சார்ந்திருத்தலே உலக உறவுகளின் ஆணிவேர். சார்ந்திருப்பது அடிமைத்தனமல்ல தூய்மையான அன்பு.

தன் வலிமையையெல்லாம் மீறி நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன் என்று சொல்லுமிடத்து எத்தனை உயர்வான காதல் எழுந்து நர்த்தனம் ஆடுகிறது.

தொட்டதற்கெல்லாம் நீ உயர்வா நான் உயர்வா என்று வீரம் பேசினால் வாழ்க்கை வாடி வதங்கி செத்து சுண்ணாம்பாகிவிடும்

http://anbudanbuhari.blogspot.com

 
Leave a comment

Posted by on March 31, 2010 in 1