RSS

Monthly Archives: April 2010

குறுந்தகவல் நகைச்சுவைகள் 3

மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி!

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல்
தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்ல” என்கிறார். இதைத்தான் நாம் “வெட்டி ஸீன்”
போடுவது என்கிறோம்….

5) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..
நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….

6) மூன்று மொக்கைகள்: a) நைட்’ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்’ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage’லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage ‘ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது?….

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்…

10) நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்’ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?….. Read the rest of this entry »

Advertisements
 

கூகிள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு ரஞ்சிதா நோட்டீஸ்!

சாமியார் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா தொடர்பான படுக்கையறைக் காட்சிகள் வெளியாகி சுமார் 2 மாதங்கள் ஆகும் நிலையில், யூடியூப் மற்றும் கூகிள் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று ரஞ்சிதா கூறியுள்ளார்.

சாமியார் நித்யானந்தாவுடன் தாம் இருப்பது போன்ற காட்சிகளை மே 2ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்குள் யூடியூப் மற்றும் கூகிள் வீடியோஸ் ஆகியவற்றிலிருந்து நீக்கிட வேண்டும் என்றும் இல்லை என்றால் இந்நிறுவனங்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் இந்தியத் தொலைத் தொடர்புச் சட்டம், 2000 ஆகியவற்றின் வழக்கு தொடரப்படும் என்றும் ரஞ்சிதா கூறியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த பிரபல வழக்கு நிறுவனமான பிஎம் லா சேம்பர்ஸ் நிறுவனம் மூலம் ரஞ்சிதா வியாழக் கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவை கூறப்பட்டுள்ளன.

ஊடகங்கள் தங்கள் வி்ற்பனைக்காகவும் வருமானத்துக்காகவும் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றன என்று குற்றம் சாட்டியதுடன் இச்செயல் ஊடகத்தை குற்றப் பின்னணி உடையதாக மாற்றும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

Source : https://seasonsnidur.wordpress.com/wp-admin/post-new.php

 

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி

ஆலயங்களினால் தான் இன்று மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான். இந்தியா முழுவதும் இராமருக்கு 7000 கோயில்கள் இருந்தபோதும். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார். எனவே அங்குதான் ஆலயம் கட்டுவோம் என்று பாபர் மசூதியை இடித்ததன் விளைவாக நாடெங்கும் கலவரம் வெடித்தது. 1000-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மடிந்தன. கோத்ரா ரயில் படுகொலை இப்படி தொடரும் வன்முறை.

பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்-களை குண்டு வைத்துக் கொன்றனர். இந்தியா-வில் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் வன்முறையை தூண்டி விடுகின்றன. ஒவ்வொரு பிள்ளையார், சதுர்த்தியின் போதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று பொறுமையும் சகிப்புத் தன்மையையும் போதித்த கிறித்துவ ஆலயங்-களை உடைப்பது, சிதைப்பது என்ற நிலை இன்று தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. வட மாநிலங்களில் கிறித்துவர்களை அடிப்-பது, விரட்டுவது, எரிப்பது என வன்முறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஆலயங்களில் இருப்பவன், இலலாதவன் என்று வேறுபடுத்தும் விதமாக பணம் கட்டுபவர்களுக்கு அருகில் சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு தூரத்தில் தர்ம தரிசனம் என வேறுபாடு. அது மட்டுமல்ல; பிறப்பால் பிராமணராக இருந்தால் மட்டும் கருவறை-யில் அனுமதி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய போதும், பயிற்சிகள் தந்த போதும் இன்னும் நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் நூலகத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரும் சமம். யாரும் எங்கும் செல்லலாம்.

ஆலயங்களுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பல்வேறு சோதனை-கள் செய்துதான் உள்ளே அனுப்புகின்றனர். காரணம் என்ன? இந்த நிலை ஏன் வந்தது? மதம், மனித மனங்களை நெறிப்படுத்து-வதற்குப் பதிலாக ஏன் இப்படி வெறிப்-படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கின்றது.

நூலகம் என்பது அறிவுத் திருக்கோயில், இங்கு வந்தவர்கள் IAS, IPS என்று உயர்-கின்றார்கள். மதுரை மாவட்ட மய்ய நூலகத்-தில் 2 இலட்சம் நூல்கள் இருக்கின்றன. அப்படி என்றால் 2 இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள். நூலகம் என்பது பெரிய சொத்து, மனிதனை, மனி-தனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும் திறன் வளர்க்கும்.

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால் தான் இன்று இனவெறியோடு தமிழர்களை அழிக்கும் சிங்களத்-தினர், அன்று தமிழர்களின் இலக்-கியக் களஞ்சியமான மாபெரும் யாழ் நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள். Read the rest of this entry »

 

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா

Anna

பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.

சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.

இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.

பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.

இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.

தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.

இருளும் ஒளியும்

இங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், நல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்.

இஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்.

இரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். “அது தவறு” என்பதை எடுத்துரைத்தார்கள்.

மூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான். இங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, “இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை?” என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் – முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா? என்று! ஆனால் இப்பொழுது கேட்பதில்லை.

எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல – 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது.

“நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது?” என்று அவர்கள் கேட்டார்கள்.

அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: “இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு ‘ஜமாஅத்’ என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய ‘ஜமாஅத்’திலே நான் இல்லை”.

நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. என்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, ‘ஜமாஅத்’திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.

எனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை.

யார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.

இந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ – அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.

தென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.

வடநாட்டிலே இந்து – முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.

நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார். மிகுந்த நெருக்கடியான – ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.

அதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்! ஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை. நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்!

இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.

சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?

நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.
ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை. அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் “360 உருவங்களும் ஆண்டவனல்ல” என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.

பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு!

வேண்டாம் அற்புதங்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.

யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.

அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் – இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் – அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.

அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!

அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் – அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் – என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!

எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.

அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!

இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.

சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.

இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை – கருப்பொருள் – கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.

சொல்லும் செயலும்!

மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.

யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.

இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.

அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.

இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.

மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.

கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.

நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.

சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

சமத்துவ மார்க்கம்

இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.

இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.

நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’ என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.

மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.

மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை. அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும். அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான். அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ‘ அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!’ என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் ‘ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்’ என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்’ – கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?

ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.

மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் ‘மகான்’ என்று சொல்லுகின்றோம்.

ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும். Read the rest of this entry »

 

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. “டூ யு நோ யுனொ?

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. “டூ யு நோ யுனொ?

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது.

அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். “டூ யு நோ யுனொ ?

சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

ஐ நோ யுனொ.

யு நோ யுனொ.

ஐ நோ யு நோ யுனொ

பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ!

கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.
அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?
I know UNO(United Nations Organisation).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO.

அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.

“because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :

‘No sentence ends with because, because, because is a conjunction’

SOURCE : http://ilayangudikural.blogspot.com/2009/09/blog-post_23.html

 

கல்லூரியில் கற்கும் காலம் பொற்காலம்

கல்லூரி என்பது ஒரு சுதந்திரமான வேடந்தாங்கல் போன்றதாகும் அங்கு கற்கும் மாணவ மாணவிகள் பறவைகள் போலாவார்கள். பல்வேறு இடங்களில் இருந்து ஒன்று கூடும் அந்த பறவைகள் எந்த ஒரு கவலையின்றி சந்தோஷமாக வாழ்கின்றனர். அது போல தான் மாணவ மாணவிகள்.

எங்கும் காணமுடியாத ஓர் உறவு ஒற்றுமையை இங்கே காணமுடியும். மாணவ, மாணவிகளின் ஒற்றுமையில் தான் பலவித அற்புதங்களை காண முடியும். ஒரு மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள ஒற்றுமையை இவர்கள் மூலம் பார்க்கலாம். மாணவர்களின் சக்திக்கு முன்னால் இவ்வுலக சக்திகள் யாவும் எடுபடாது.

‘இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் ‘இவ்வாறு சிறந்த தகுதியுள்ள மாணவ மாணவியர்கள் தன்னுடைய இளமை பருவ காலத்தை வீணாக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

இறைவன் தன் திருமறையில்,

‘காலத்தின் மீது சத்தியமான மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்’ (103:1,2)

காலத்தைப் பற்றி இவ்வுலகில் பல வர்ணிப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு ‘காலம் பொன் போன்றது’ என்று வர்ணிக்கிறான். ஆனால் பொன்னை விட மிக மதிப்புள்ளது காலம், ஏனெனில் இவ்வுலகில் உள்ள உயர்ந்த பொருட்களை மனிதன் வசப்படுத்தி க் கொள்கிறான். ஆனால் தன் வாழ்நாளில் கடந்து சென்ற ஒரு நிமிட காலத்தை அவன் திரும்ப பெறவே முடியாது. இவ்வாறு சிறப்பு மிக்க காலத்தில் மனிதனுக்கு  குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என்று மூன்று நிலைகளை ஏற்படுத்தியுள்ளான். இதில் இளமைக்காலத்தை இறைவன் பொற்காலமாக ஆக்கித் தந்துள்ளான், ஏனெனில் இக்கால கட்டத்தில் தான் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பாகவும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வேகத்தையும், அறிவையும் பெற்று இருக்கிறார்கள்.

மாணவ, மாணவியர்களில் சிலர் நாகரீகம் என்ற பெயரில் கலாச்சாரச் சீரழிவில் சிக்கி நாசமடைந்து கொண்டிருக்கின்றனர். மற்றொரு சாரார் ஏதோ படிக்க வந்தோம் படித்தோம் என்று எவ்வித குறிக்கோள்களும் இல்லாமல் சோம்பேறித்தனமாய் இருக்கின்றார்கள். இவ்வாறு நாம் எந்த நோக்கத்திற்காக வாழ்கின்றோம். எதை நோக்கிச் செல்கின்றோம் என்று புரியாமல் இளமையான தன் பொற்காலங்களை வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவு தான் மேதைகளாக இருந்தாலும் இஸ்லாத்தினுடைய கோட்பாடுகளை அவர்கள் அறியவில்லையென்றால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.

உலகின் சிறந்த மனிதரான நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ‘ஆதமுடைய மகன் இரண்டு விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறான். 1)ஆரோக்கியம் 2) அவனுடைய வாழ்நாள் என்றார்கள்.’ (ஆதாரம்-புஹாரி)

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழி தான் பெரும்பாலும் இன்று இஸ்லாமிய சமுதாய மாணவ, மாணவிகளிடம் பிரபலமாக உள்ளது. ஆனால் அதை விட நம் தூதர் முகம்மது (ஸல்) அவர்களும், இறைவனும் மனிதர்கள் தன் நிலைகளை எண்ணி சிந்திக்கம் விதமாக அழகாக கூறி விழிப்படையச் செய்கிறார்கள் என்பதனை இன்று எத்தனை மாணவ,மாணவிகள் அறிவார்கள்?

கல்லூரி கற்கும் பொற்காலங்களில் சிலர் சிகரெட், கஞ்சா, மது போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணமோ பொழுது போக்கிற்காகவும், தன் நண்பர்கள் முன் நான் மட்டும் உபயோகிக்காமலிருந்தால் தனக்கு கேவலம் என்றும், மனக்கவலைகளை மறக்க என்றும் பல்வேறு அற்பமான காரணங்களை முன் வைக்கின்றனர்.

புகையிலை ஒழிப்பு நாள் என்று அக்டோபர் 11-வது நாளில் மட்டும் எதிர்ப்பை இளைய சமுதாயம் தெரிவித்துவிட்டு நம் கடமை முடிந்தது என்று உள்ளனர். போதைகளின் விளைவை பெரும்பாலானோர் அறியவில்லை.

இந்த புகைப்பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதனை உபயோகிக்கும் மனிதனின் வாழ்க்கையை இப்பழக்கம் ஒவ்வொரு முறையும் 15 நிமிடம் குறைத்து விடுகிறது. இதனை தொடச்சியாக பிடிக்கும் மனிதன் தன் வாழ்நாளில் 7 ஆண்டுகளை இயற்க்கையாக இறப்பதற்கு முன் இழந்து விடுகிறான். 2020 – ம் ஆண்டில் மிகப்பெரிய ஆள்கொல்லி நோயாக மாறிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளார்கள். உலகம் முழுவதும் 35 லட்சம் பேர் இப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணிக்கின்றனர். இந்த நச்சுப்புகையை அருகிலிருந்து சுவாசிப்பவருக்கு ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பிற நோயால் பாதிப்படைகின்றனர். வளர்ந்துவிட்ட நாடாகிய அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரம் சிறுவர்கள் இப்பழக்கத்திற்கும் இந்தியாவில் 2 கோடி சிறுவர்கள் இப்பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர்.

இப்புகையில் உள்ள நிகோடின் போன்ற நச்சுபொருள் மனிதனின் இரத்தத்தில் கலந்து உடலுறுப்புகள் பாதிக்கப்படைகின்றன. விரைவிலேயே மலட்டுத் தன்மையை அடைகிறார்கள். இந்த சிகரெட் விற்பனையில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. 5 ஆயிரத்து 500 கோடி இதன் மூலம் சம்பாதிக்கிறது. ஆனால் புகைப்பதால் வரும் நோய்க்கு செலவிடும் தொகை 13 ஆயிரத்து 500 கோடியை மக்களிடமிருந்து வசூலிக்கிறது.

இவ்வாறு மனிதனின் உயிரை அவன் அறியாத விதத்தில் பறிக்கும் நஞ்சை, பலர் அமிர்தமாக எண்ணி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து, தன் முதுமைப்பருவத்தை நோயினால் கழிக்கின்றனர். அதில் இஸ்லாமிய இளைஞர்களும் இருப்பதை எண்ணினால் வேதனை தான் விஞ்சுகிறது.

அதிகம் அருந்தினால் போதை தரும் பானத்தைக் குறைவாக அருந்துவதும் ஹராம்- தடுக்கப்பட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) – ஆதாரம்: திர்மிதீ, அபூதாவூத்

அடுத்து மதுவை பார்ப்போம்.

மனிதர்கள் மதுவின் பக்கம் செல்வதை கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆழமாக நம்பியவர்கள் மதுபானம் பரிமாறப்படுகின்ற இடத்தில் அமர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள்.

இன்று மேலை நாடுகளிலும், நம் நாடுகளில் கூட 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் சில அலுவலக விழாக்களிலும் Party என்ற பெயரில் இசைகளுடன் பரிமாறக் கூடிய குளிர்பானங்களில் மதுவை கலந்து தருகின்றனர். இதனை அறியாத சிலர் அதை பருகிவிடுகிறார்கள். சிலர் அறிந்தே பருகி அதில் பல வரம்புகளை மீறிவிடுகின்றனர். இதனை நபி (ஸல்) அவர்கள்,

எனது சமூகத்தில் வேறு பெயர்களை வைத்து மது அருந்துவார்கள், அவர்களது முன்னிலையில் இசைகருவிகள் இசைக்கப்படும், பாடல்கள் பாடப்படும். இவர்களை அல்லாஹ் பூமிக்குள் செருகி விடுவான் என்றார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

நிச்சயமாக அல்லாஹ் மதுவைப் பிழிபவன், பிழியச் சொல்பவன், அருந்துபவன், ஊற்றிக் கொடுப்பவன், சுமப்பவன், சுமக்கச் சொல்பவன், விற்பவன், வாங்குபவன், அன்பளிப்புச் செய்பவன், அதன் வருமானத்தில் உண்பவன் என, மதுவுடன் தொடர்புடைய பத்து நபர்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்

சில இஸ்லாமிய இளைஞர்கள் கூட இதுபோன்ற Function–னில் கலந்து தன் நிலையை மறக்கின்றனர்.

சமீபத்தில் வார இதழ் ஒன்றில் உண்மை சம்பவமாக இடம்பெற்ற பகுதியில், ஒரு ஆண் மது அருந்திவிட்டு இரவில் வீட்டுக்கு சென்று தன் மனைவி என்று போதையில் தன் மகளிடம் சென்று தகாத முறையில் நடந்து கொண்டான். இவ்வாறு போதையானது மனிதனை மிருகத்தை விட கேவலமாக ஆக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இதனையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மதுபானம் பெரும்வாவங்களில் ஒன்றானது. மானக்கேடான காரியங்களின் முதன்மையானது. மதுபானம் அருந்தியவன் தொழுகையை விட்டு விடுவான். தனது தாய், தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி போன்ற உறவுகளுடன் பாலியல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டு விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்-தப்ராணி)

Read the rest of this entry »

 

மீனும் தூண்டிலும்

அல்லாஹ் எவருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவர் நேர் வழியை அடைந்தவர் ஆவார்.  யாரைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே. அல்குர்ஆன் 7:178

இப்புவியில் பலர் தோன்றியுள்ளனர். அவர்களில் மிகவும் பலமானவர்களும், கொடூரமானவர்களும் கூட இந்த மண்ணிற்குள்(மரணித்து) சென்று விட்டனர். மிகப்பெரிய சக்தியுள்ளவர்களாக கருதப்பட்ட அரசர்கள், ஃபிர்அவ்ன், ஹாமான், நம்ரூத் போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்கள், தம்மை இறைவன் என்று கூறியவர்கள் என அனைவரும் மரணித்து விட்டனர். அது மட்டுமல்ல தாங்கள் எப்போது மரணிக்கப் போகிறோம் என்பதையும் கூட அறியாதவர்களாக அவர்கள் அனைவரும் இருந்தனர்.

ஒருவர் தமது பிறந்த தேதி, (Date of Birth) பிறந்த இடம் (place of birth) போன்றவற்றை அறியலாம். ஆனால் இறக்கவிருக்கும் தேதி, இறக்கவிருக்கும் இடம் பற்றி (அல்லாஹ் ஒருவனைத் தவிர)யாரும் அறிய முடியாது. ஆனால், ஒருவன் மரணிக்கும் வரை அவனுக்கு நல்ல காரியங்கள் செய்யவும், தீய காரியங்களில் இருந்து மீளவும் (இறைவன் நாடினால்)பாவமன்னிப்பின் வாய்ப்பும் உள்ளது.

கடலில் இருக்கும் ஒரு சிறிய மீனுக்கு கடல்தான் உலகம்; அதைத் தாண்டி வேறு ஒரு உலகம் உண்டு என்பதை அறியாமலே வாழ்கின்றது. சில மீன்கள் கடலின் மேல் மட்டத்திற்கு வரும்பொழுது வெளியுலகத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றது. அவற்றில் சில, மீனவர்களின் தூண்டில்கள் மற்றும் வலைகளையும், அதன் ஆபத்தையும் காணவும், அறியவும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

ஒரு மீன் கடலுக்கு வெளியில் உள்ள உலகத்தைப் பற்றி அறிந்த நிலையில் அதைப்பற்றியும் அங்கிருந்து வரக்கூடிய ஆபத்துக்கள், மீனவர்கள், தூண்டிலிலுள்ள இரைகள், வலைகள், கொக்கிகள் பற்றியும் எச்சரிக்கையாக நெருங்காமல் இருக்கவேண்டும் என்று எடுத்துக் கூறினால், அதை சிறிய மீன் நம்ப மறுக்கிறது. ஒரு நாள் இந்த சிறிய மீன் கடலுள் ஏதோ ஒரு உணவு கொக்கியில் தொங்குவதை தனக்கு அருகில் காண்கிறது. இதைப்பற்றி பெரிய மீன் கூறியதும் நினைவுக்கு வருகிறது. ஆனால் மீனவர்கள் வெளியில் உள்ளார்கள் என்பதை ஏற்க மனம் ஒப்பாமல் அலட்சியப்படுத்தி அதை தமது வாயினால் கவ்வி இழுத்து உண்ண முயலுகிறது. அந்த உணவுடன் இருந்த கொக்கியில் அதன் வாய் சிக்கிவிடுகிறது அடுத்தகணம் அது அந்த கடலில்(உலகில்) இருந்து வெளியே இழுக்கப்படுகிறது. அப்போது வெளியுலகம் உள்ளதையும், மீனவர்களையும் காண்கின்றது. ஆனால் அதனுடைய இறுதி நேரம் அதுவென்பதால் இனி மீண்டும் கடலுக்கு திரும்ப வாய்ப்பில்லை.

மனிதர்களிலும் பலர் இது போன்றே இந்த உலகம் மட்டுமே உண்டு; இதை தவிர வேறு உலகமோ வேறு வாழ்க்கையோ இல்லையென்று கருதுகின்றனர்(அல்லது அவ்வாறு செயல்படுகின்றனர்). எப்படி இந்த சிறிய மீனைப் போல் பல மீன்கள், கடலுக்கு வெளியில் ஒரு உலகம் உள்ளதை பற்றி சிந்திப்பதோ, நம்புவதோ இல்லையோ, அதே போல் பல மனிதர்கள் இவ்வுலக வாழ்வுக்கு பிறகு மறு உலக வாழ்வு ஒன்று இருப்பதை நம்பி அதற்கேற்றவாறு எச்சரிக்கையுடன் வாழ்வதில்லை.
Read the rest of this entry »