RSS

Monthly Archives: May 2010

வாங்க மச்சான்


மச்சான்! என் உள்ளத்தில் பொங்கும் ஆசை

அத்தனையும் உள்ளடக்கிக் கூறுகின்றேன்

தித்திக்கும் ஒரு செய்தி! நீங்கள் தந்த

தெவிட்டாத இன்பத்தின் விளைவே! ஆமாம்;

முத்துக்கும் ஒளியில்லை என்னு மாறு

மொய் விழிகள்! சிறிய நெற்றி! இன்ப வெள்ளம்!

ஒத்திருக்கும் உங்கள் உரு, ஆமாம் மச்சான்! Read the rest of this entry »

Advertisements
 

ராஜ்யசபா தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவைக்கு காலியாக உள்ள இடங்களுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி அறிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி, ச. தங்கவேலு, கே.பி. ராமலிங்கம் ஆகியோர் திமுகவின் சார்பில் போட்டியிடுவார்கள்.

மாநிலங்களவைக்கு காலியாக உள்ள இடங்களில் தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். இதில் 4 உறுப்பினர்கள் திமுகவுக்கு கிடைக்கும். ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துவிட்டால் மீதம் உள்ள 3 இடங்களில் ஒன்றை பாமகவுக்குத் தரக்கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் பாமகவுக்கு மாநிலங்களவை பதவி என்று திமுக உயர்நிலைக் குழு முடிவு செய்ததை அடுத்து, மாநிலங்களவைக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்யசபா தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Source :http://www.inneram.com/201005318628/dmk-candidates-for-rs-announced

 

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

by கிளியனூர் இஸ்மத்


இன்றைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
புகையிலை என்றதும் நம் சிந்தைக்கு வருவது சிகரெட்.

இது பலருடைய வாழ்க்கையை புகைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
ஆண்களைப்போல சில பெண்களும் இன்று புகைப்பதை ஒரு மாடனாக கருதுகிறார்கள்.
ஸ்டைலுக்காக புகைக்கப்படும் பழக்கம் நாளடைவில் வழுவாகி புகைக்காமல் இருக்கமுடியாத சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
தற்போது ஐடி துறை கால் சென்டர்களில் பணிப்புரியும் இளம் பெண்களிடம் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் வேலையின் பழுவாலும் பசியை மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கும் புகைக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

சில காலங்களுக்கு முன் விமானத்தில் புகைப்பதற்கு அனுமதியளித்திருந்தார்கள் இன்று விமான நிலையத்தில் கூட புகைப்பதற்கு அனுமதி இல்லை.சில விமான நிலையங்களில் தனி அறையை புகைப்பதற்கு ஒதுக்கியிருந்தாலும் அங்கு சென்று புகைப்பதைவிட ஒரு இரண்டுநிமிடம் நின்று வந்தால்போதும் சிகரெட் குடித்த உணர்வோடு வந்துவிடலாம் அந்தளவு புகைமூட்டமாக இருக்கும்.

முன்னையவிட தற்போது அதிகமான விழிப்புணர்வு புகையிலையின் கெடுதலைப்பற்றி வந்திருக்கிறது பல நாடுகள் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தோனேஷியாவில் இந்த தடை அமுலில் இருந்தாலும் அதிகமானோர் பொது இடங்களில் புகைக்கிறார்கள்.

இதெல்லாம் மற்றவர்களின் ஆய்வு என்னைப்பற்றிய ஆய்வை நான் சொல்லவேண்டும் ஆரம்பத்தில் நான் புகைக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல புகை என்னை புகைக்க ஆரம்பித்தது.

புகைக்கும் பழக்கம் எங்கு தொடங்கியது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் நட்பு என்று சொல்வேன்.ஆம் நண்பர்களுடன் ஜாலியாய் தினம் ஒரு சிகரெட் என்று துவங்கிய பழக்கம் அது வளர்ந்து தினம் ஒரு பாக்கெட் (20) என்ற கணக்கில் சில நேரங்களில் சந்தோசமான துக்ககரமான நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே புகைத்து என்நேரமும் என் உடலைப்போல் ஆன்மாவைப்போல் என் கூடவே இருந்து இடது பேண்ட் பாக்கெட்டை ஆக்கிரமிப்பு செய்து தனி இடத்தை என்னிடம் பெற்றிருந்தது.

திருமணத்திற்கு பின் எனது மனைவி என்னிடம் சிகரெட்டை விடும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போதெல்லாம் என் மனைவிக்கு கோபம் உண்டாக்குவதற்காக நீ எனக்கு இரண்டாவது மனைவி என்பேன் எப்படி என்றால் உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னிருந்தே நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் அதனால் முதல் மனைவி சிகரெட் என்பேன். Read the rest of this entry »

 

அறிய புகைப்படங்கள்

இந்திய விடுதலை – . சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்கும் நேரு

முகம்மது அலி (நீடூர்அலி )திரு .முரசொலி செல்வம் , மான்புமிகு துரைமுருகன் அவர்கள்.

 

சிறந்தவர் யார்?

மதீனா நகரின் அழகிய பள்ளிவாசல் அது. ஒரு மனிதர் எப்பொழுது  பார்த்தாலும் பள்ளிவாசலிலேயே தங்கியிருந் தார். தொடர்ந்து தொழுது கொண்டும், குர்ஆனை ஓதிக் கொண்டும், இறை தியானங்களில் ஈடுபட்டும் வழிபாடுகளில்  திளைத்திருந்தார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வரும்போதெல்லாம் அந்த  மனிதரைப் பார்ப்பார்.  சில நாட்கள் அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த நபிகளார், அவரைக் குறித்து தோழர்களிடம் விசாரித்தார். “யார்  இந்த மனிதர்? எப்பொழுது பார்த்தாலும் பள்ளி வாசலிலேயே தங்கியிருக்கிறாரே?” என்று கேட்டார்.  அதற்குத் தோழர்கள்,“இறைத்தூதர் அவர்களே, இவர்  சிறந்த இறைநேசர். மார்க்கத்தின் மீது ஆழ்ந்த பற்றும் பிடிப்பும்  கொண்டவர். இரவும் பகலும் பள்ளிவாசலிலேயே தங்கி இறை வணக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்” என்றனர். உடனே அண்ணலார் கேட்டார்: Read the rest of this entry »

 

தனது முக்கியமான செயல்பாடுகளை பார்க்லேஸ் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு மாற்றியது

பிரிட்டனில் புதிய கன்சர்வேடிவ் அரசு பதவியேற்ற கையோடு, வங்கித் துறை கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பை தீவிரமாக்கியுள்ளது. இதனால் பிரிட்டனின் பிரபலமான பார்க்லேஸ்( Barclays) வங்கி, தனது செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக, பிரிட்டனின் நார்த்தாம்ப்டன் நகர அலுவலகத்திலிருந்து 140 முக்கியப் பணிகளை இந்தியாவுக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது பார்க்லேஸ். இதுகுறித்து பார்க்லேஸ் வங்கியின் CEO ஜான் வார்லி கூறுகையில், “பிரிட்டனில், குறிப்பாக லண்டனில் அதிகரிக்கும் வரி விதிப்புகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.இத்தகைய வரிவிதிப்புகள் லண்டனை கடும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்தியா எங்களுக்கு வசதியான நாடாக உள்ளது.ஏற்கெனவே இந்தியர்களுக்கு சேவையைத் தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் NRI பிரிவைக் கூடத் துவக்கியுள்ளோம். இந்தியாவில் எமது நடவடிக்கையை அதிகரிக்கக் காரணம் சிக்கனம்தான் என்றாலும், இந்தியாவையே இனி சர்வதேச சேவை மையமாக்க மாற்ற விரும்புகிறோம்”, என்றார். _

Source : http://www.inneram.com/201005298597/2010-05-29-11-25-18

 

தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க 46 லட்சம் பேர் தகுதி

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ந்த புதிதாக 46 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நடைபெற்ற வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த 26ம் தேதி, வீடியோ கான்பரன்சிங் மூலம், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், களசரிபார்ப்புப் பணியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த சரிபார்ப்பு நடவடிக்கையின் மூலமாக, வாக்காளர் பட்டியலில் 46 லட்சத்து 7 ஆயிரம் பெயர்கள் சேர்க்கப்பட தகுதியுள்ளனவாக கண்டறியப்பட்டன. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில், 40 லட்சத்து 8 ஆயிரம் பேர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி மனு (படிவம்-6) அளித்துள்ளார்கள்.

மீதமுள்ள சுமார் 6 லட்சம் பேர் மனுக்களை தரவில்லை. அந்த 6 லட்சம் பேரிடமிருந்து, ஆதார ஆவணம் (ரேஷன் கார்டு போன்ற) மற்றும் புகைப்படம் போன்றவற்றுடன் படிவம்-6 மனுக்களையும் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் ஜுன் 5ம் தேதிக்குள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 2 ஆயிரம் பேரின் விவரங்களில் சில திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளதும் கண்டறியப்பட்டது. அவர்களில், உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி, 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் மனு (படிவம்-8) செய்துள்ளார்கள். இதிலும், விடுபட்டவர்களிடமிருந்து உரிய படிவங்களை அதிகாரிகள் பெறவேண்டும்.

சமீபத்தில், பெங்களூரி்ல் தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. அதில், வரும் ஜுலை மாதத்தில், நாடு முழுவதிலும் 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அதற்கு முந்தைய (களசரிபார்ப்புப் பணி போன்ற) பணிகளில் எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது’ என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.

அதன் அடிப்படையிலேயே கடந்த 26ம்ந் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்று கூறியுள்ளார் நரேஷ் குப்தா.

http://www.inneram.com/201005288573/46