RSS

Monthly Archives: June 2010

வணங்காமுடி பதில்கள் (29-06-2010)

நித்தியானந்தா ஜாமீனில் வெளியே வந்து விட்டார். வங்கி கணக்கு முடக்கம் ரத்து செய்யப் பட்டு விட்டது. இவரும் இனி எளிதாக வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டு விடுவார் தானே? – வேதா ராமன்
அப்படிச் சட்டென விரைந்து முடிவுக்கு வரமுடியாது.

வழக்கின் வடிவமைப்பு, அது பதியப்பட்ட சட்டப்பிரிவுகள், நித்திக்கு எதிரான ஆவணங்கள், சான்றுகள், அரசு வழக்கறிஞர்களின் வாதங்கள், எதிரணியின் மறுப்புரை,வழக்கை இரு பக்கமும் இழுத்தடித்தல், நீதிபதி தெளிவடைதல் போன்ற பல கூறுகள் உள்ளதால் உடனடியாக நாம் எவ்வித விடையும் அளிக்க முடியாது.


மோடி கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பிய நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை விட்டு வெளிவர மறுப்பது ஏன்? மக்கள் ஏமாளிகள் என்பதாலா? – அப்துல் கரீம்

மோடி தம் கைக்காசையோ கட்சி நிதியையோ வழங்கவில்லை; அப்பணம் குஜராத் மக்களின் வரிப்பணம். அதை நிதிஷ்குமார் திருப்பி அனுப்பியது பக்குவமற்ற செயல்.

அதுபோல் மோடியும் பீஹார் மக்களின் துயருக்கு உதவியதைத் தாம் அளித்த கொடைபோல விளம்பரம் செய்தது அதைவிடப் பக்குவமற்ற செயல்.

அதற்காக பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியே வருவது என்பது இரு கட்சிகளுக்குமே தற்கொலை முயற்சியாகும்.


எம்.ஜி.ஆரை விட சிவாஜி சிறந்த நடிகராக இருந்தும் ”நடிக்கத் தெரிந்த ” அரசியலில் பிரகாசிக்க முடியவில்லையே. ஏன்? – ராஜேந்திரன்

சிவாஜி கணேசனைத் திரைப்படத்தில் நடிகராக ஏற்றுக் கொண்ட மக்கள் அரசியலில் ஏற்றுக்கொள்ளவில்லை. சிவாஜி “நடிகர் திலகம்”; ஆனால் எம்ஜியார் “மக்கள் திலகம்”. இதனால்தான் எம்ஜியார் தமிழ்நாட்டை ஆள முடிந்தது. சிவாஜியால் ஒரு கட்சியைக் கூட முழுதாக நடத்த முடியவில்லை. Read the rest of this entry »
Advertisements
 

செயற்கை உயிர், அறிவியல் தொழிற்நுட்பத்தில் ஒரு மைல்கல்

அமேரிக்காவை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் இணைந்து செயற்கையாக தயாரிக்கப்பட்ட மரபணுவைக்கொண்டு (DNA) முதன்முதலில் ஒரு உயிரியை உண்டாக்கி இயங்கவைத்திருக்கிறார்கள்.  கணினி மென்பொருளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட மரபணுவை வேதிப்பொருட்களின் உதவியுடன் ஆய்வகத்தில் தயாரித்து, ‘மைக்கோபிலாசுமா மைக்கோய்டீசு‘ என்ற பாக்டீரியாவை முழுமையாக இயங்கவும், உயிர்வாழவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவைத்து வெற்றியடைந்துள்ளனர். இதுவரை, சிறு சிறு ஜீன்களை பாக்டீரியாக்களில் செலுத்தி தேவையான புரதங்களை தயாரித்துக்கொண்டிருந்தோம். இப்போது, முழுமையாக ஒரு பாக்டீரியாவை செயற்கையான முறையில் உயிர் வாழ மற்றும் இனப்பெருக்கம் செய்யத் தேவையான ஜீன்களை வரிசைப்படுத்தி அதை தயாரித்து அதற்கேற்றார்போல இயங்கவும் வைத்திருக்கிறோம்.  இதன்மூலம், எரிபொருள், மருந்துகள், கழிவுகளை அகற்றும் பணிகள், காற்றை சுத்தப்படுத்துதல், கரியமிலவாயுவை அகற்றுதல்  போன்ற பல வேலைகளை செய்யும் செயற்கை உயிரிகளை நம்மால் உருவாக்க முடியும்.
இந்த சாதனையின் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இரண்டுபக்கமும் கூர்மையான கத்தியைப்போன்று அபாயகரமானதும் கூட. இதை ஆயுதங்களாகவும், அழிவு வேலைகள் செய்யக்கூடிய உயிரினங்களாகவும் பயன்படுத்த முடியும். அப்படி ஏதேனும் நடந்தால் அது மனித இனத்தின் அழிவின் ஆரம்பமாக முடிந்துவிடும். மனித இனத்தின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்வரை இந்த வெற்றி மதிப்புடையதாய் இடுக்கும்.
‘சயின்ஸ்’ (Science) என்ற உலகப்புகழ்பெற்ற ஒரு ஆய்விதழில் இந்த பணியை பதிவுசெய்துள்ளனர் (http://www.sciencemag.org/cgi/content/abstract/science.1190719) இதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள். அறிவியலின் அலவுகோள்களை மாற்றியமைத்த இந்த மனிதர்களுக்கு எம் மானசீக வணக்கங்கள்.

இடுகையிட்டது விடுதலை

http://ennacchamayal.blogspot.com/2010/05/blog-post.html

 

மிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு

ழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.

இஸ்லாம் அண்டை அயலவருடன் அழகிய முறையில் நடப்பதை ஈமானின் அங்கமாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமியப் பற்றுள்ள, இஸ்லாமிய ரூபத்தில் வாழக் கூடிய பலரும் அயலவருடன் பகைமையை வளர்த்துக் கொண்டு வழக்கு-வம்பு என வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகக் கோட்பாட்டுக்கு இது முரணான நடைமுறையாகும். எனவே, அயலவருடன் நாம் பழகும் போது தவிர்க்க வேண்டிய சில அம்சங்களைச் சுருக்கமாக முன்வைக்க விரும்புகின்றோம்.

பொறாமை கொள்வது:
தனது அண்டை அயலவர் நலமுடன் வாழ்வதை விரும்ப வேண்டிய முஸ்லிம், அவர்கள் மீது பொறாமை கொண்டு வாழ்வதைப் பார்க்கின்றோம். அயலவர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவது, அவர்களுக்குத் தொழில் கிடைப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, அயலவரின் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் பொறாமைக் கண் கொண்டு நோக்கும் நிலை நீடிக்கின்றது.

ஈமானும், பொறாமையும் ஒரு உள்ளத்தில் ஒன்றாக இருக்க முடியாது. சிலர் எல்லை மீறி அயலவருக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கூட கெடுக்க முற்படுவர். மற்றும் சிலர் கோல்ச் சொல்லித் திருமணங்களையும், கொடுக்கல்-வாங்கல்களையும் தடுத்து விடுவர். பொறாமை கொள்வதும், அதன் அடிப்படையில் செயற்படுவதும் ஹறாமாகும். எனவே பொறாமையைத் தவிர்த்தல் வேண்டும். அதிலும் குறிப்பாக அயலவர் மீது பொறாமை கொள்வது கடுமையான ஹறாமாகும்.

அயலவர் இரகசியங்களை அம்பலப்படுத்துவது:
“வீட்டுக்கு வீடு வாசல் படி” என்பர். எல்லா வீட்டிலும் குறைகளும், குழப்பங்களும் இருக்கவே செய்யும். அவரவர் குறைகளை அவரவர் மறைத்து வாழவே ஆசைப்படுகின்றனர்.

எனது குறையோ, எனது குடும்பத்துக் குறையோ மக்கள் மன்றத்திற்கு வந்து விடக் கூடாது என்பதில் கரிசனையாக இருக்கும் நான், எனது அயலவரின் குறைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருவது பெரும் துரோகம் அல்லவா? எனவே, அயலவரின் இரகசியங்களைப் பேண வேண்டும். அவர்களது குடும்ப விவகாரங்களையோ, குழந்தைகளின் குறைகளையோ வெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

குறை தேடுதல்:
சிலர் எப்போதும் அண்டை வீட்டின் மீது ஒரு கண் வைத்திருப்பர். அங்கே என்ன நடக்கின்றது? என்ன பேசுகின்றார்கள்? என உளவு பார்ப்பர். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

“ஒட்டுக் கேட்காதீர்! உளவு பார்க்காதீர்!” என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். எனவே, பொதுவாகப் பிறர் குறை தேடும் குணம் தடுக்கப்பட்ட ஒரு இழிகுணமாகும். அதிலும் குறிப்பாக அயலவர்களின் குறைகளைத் தேடுவதைத் தவிர்க்க வேண்டும். Read the rest of this entry »

 

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?

தமிழகத்தில் ஊழல் மலிந்த அரசுத் துறைகளாக மின்சாரம், வருவாய் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் உள்ளன என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அரசுத்துறை என்றாலே ஊழல் கட்டாயம் இருக்கும் என்ற அவல நிலை இந்தியாவில் உள்ளது. தமிழக அரசுத் துறைகளில் எந்தத் துறையில் அதிகமாக ஊழல் நடைபெறுகிறது என்ற புள்ளி விவரஙகளை தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் மின்சாரம், வருவாய், போக்குவரத்து ஆகிய துறைகள் ஊழல் மலிந்த துறைகளாக உள்ளதாக அவ்வமைப்பின் ஆணையர் போலோநாத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மேற்கண்ட துறைகளில் உயர் மட்டத்தை விட கீழ் மட்டத்தில் ஊழல் தலை விரித்து ஆடுவதாகவும் போலோநாத் தெரிவித்திருக்கிறார்.

Spurce : http://www.inneram.com/201006299081/which-are-the-corruption-ministires-in-tamilnadu

 

மன்மோகன் பேச்சை உலகம் உற்று கவனிக்கிறது: ஒபாமா!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சை இந்தியா மட்டுமின்றி உலகமே உற்று கவனிக்கிறது என அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

ஜி 20 நாடுகளின் மாநாட்டின் போது மன்மோகன் சிங்கை சந்தித்த பின் செய்தியாளர்களின் கூட்டத்தில் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.

சிறந்த பொருளாதார மேதையான மன்மோகன் சிங்கின் இயல்புகளால் உலகத்திற்கே வழிகாட்டும் வண்ணம் அவர் தகுதி படைத்திருக்கிறார் என்றும் ஒபாமா புகழாரம் சூட்டியிருக்கிறார். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் வல்லரசு என்றும் ஒபாமா அப்போது தெரிவித்தார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பராக் ஒபாமா இந்திய வரத் திட்டமிட்டுள்ளார். இந்தியப் பயணத்தை தாம் பெரிதும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் ஒபாமா கூறினார்.

Source : http://www.inneram.com/201006289068/when-singh-speaks-people-listen-obama

கருத்துக்கள்

எழுதியவர்: mohamed ali jinnah, June 29, 2010

மன்மோகன்சிங்கை இந்தியா கவனிக்கிறது . மன்மோகன்சிங் இந்தியாவை கவனிக்கட்டும் .
 

எனக்கு மதம் பிடிக்கிறது

நவீன் ப்ரகாஷ்

மதமில்லா மதம்

மதம்
பிடிக்காத
மதம்
பிடிக்கும்
மதம்
இல்லாத
மதம்
இருக்கிறதா ?

அண்டம் கடவுள்

அண்டம் காக்கும்
கடவுளைப் பார்க்க
காத்திருக்கிறேன்
தரிசன
வரிசையில் Read the rest of this entry »
 

கணவன் – மனைவி – எதிர்பார்ப்புகள்

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?

குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவு, செலவை வரையறுப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

1. வருமானம்

2. ஒத்துழைப்பு

3. மனித நேயம்

4. பொழுதுபோக்கு

5. ரசனை

6. ஆரோக்கியம்

7. மனப்பக்குவம்

8. சேமிப்பு

9. கூட்டு முயற்சி

10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Read the rest of this entry »