RSS

Monthly Archives: July 2010

கட்டிப்பிடி வைத்தியம்’. அட கட்டிபிடி கட்டிபிடிடா. ‘

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?

கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!

அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது.
கணவன்&மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.

அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்&மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது ‘இச்‘ மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு ‘பவர்’ இருக்குமாம்.

இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!

எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு ‘ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர்.

அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். Read the rest of this entry »

Advertisements
 

ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் மாநிலக் கட்சிகளின் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, தேர்தல் கமிஷனர்கள் எஸ்.ஒய்.குரேஷி, வி.எஸ்.சம்பத் ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில், ம.தி.மு.க., அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆகும். அதற்கு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) ஆணையின்படி, `பம்பரம்’ சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்தல் சின்னங்கள் ஆணையின் 6ஏ மற்றும் 6சி விதிகளின் படியே, ஒரு கட்சியின் அங்கீகாரம் நீடிப்பது முடிவு செய்யப்படுகிறது.

கடைசியாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடைசியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெறுவதுடன், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபை தேர்தலில், மொத்த தொகுதிகளில் 3 சதவீத தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். Read the rest of this entry »

 

கவிதை : புரியவில்லையே அம்மா

சேவியர்

அம்மா..
வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மொழிபெயர்த்து
அமுதூட்டுவாய்.
தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய்.

பாவாடைப் பருவத்தில்
என் இடுப்பில்
புடவை கட்டிவிட்டு
உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய்
சொல்லிச் சிரித்துக் கொண்டாய்.
ஏனோ எனக்குப் புரியவில்லை.

அறிவுக்குள் காரணங்கள் விளங்காத
ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில்
பயந்து அழுது நடுங்கிச் சிவந்தபோது,
பூப்பெய்தினேன் என்றுசொல்லிப்
பூரித்தாய்.
எனக்கென்னவோ பாதிதான் புரிந்தது. Read the rest of this entry »

 

பழகு மொழி – 17

பழகு மொழி

“ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்” எனப் பாடம் 2.3இல் படித்தோம். அவை:

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனப்படும். ஒரு பகுபதத்தின் தொடக்க உறுப்பாக, பகுக்கமுடியாத பகாப்பதப் ‘பகுதி’யும் அதன் இறுதி உறுப்பாக ‘விகுதி’யும் அமைந்திருக்கும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையில், இடமிருந்து வலமாக ‘சாரியை’, ‘இடைநிலை’, ‘சந்தி’ ஆகிய உறுப்புகள் இடம்பெறும். விகாரம் எனும் தனித்த ஓர் உறுப்பு இல்லையென்றாலும் சந்தியும் இடைநிலையும் புணரும்போது ஏற்படும் எழுத்தின்/ஒலியின் மாற்றம் விகாரம் எனப்படும். புணரியல் விதிப்படி பகுதிச் சொல்லானது, சிலபோது விகாரம் ஏற்று மாறுதல் அடையும். Read the rest of this entry »

 

வணங்காமுடி பதில்கள் (25-07-2010)

அயல் நாட்டுப் பத்திரிகைகளில் தமிழகத்தின் தொழில்துறை சாதனை வந்திருந்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சனை இன்னமும் கேவலமாக இருக்கிறதே? ஒரு அரசாங்கத்திற்கு சாதனை என்பதன் அளவுகோல் தான் என்ன? – நூருத்தீன்
வெளிச்சம்போட்டு விளம்பரப்படுத்தப்படத்தக்கத் திட்டங்களும் செயல்களும் மட்டுமே அரசியல்வாதிகளுக்குத் தம் அரசின் சாதனையாகும் . அவற்றைக்கூறியே மீண்டும் வாக்குகள் சேகரிக்க முடியும்.

வாக்களிக்கச் செல்ல விரும்பாத மேல்தட்டு மற்றும் உயர்நடுத்தர வகுப்பு மக்கள் வசிக்கும் நகரங்கள் பெருவளர்ச்சி பெற்று மேம்பாலங்களாகவும் பறக்கும் ரயில்களாகவும் புதுக்கருக்கு மாறாத பேருந்துகள் ஓடும் பளபள சாலைகளாகவும் பட்டப்பகல்போல் இரவு ஒளிர விளக்குகள் எரியும் தூயவெண்மணல் கடற்கரைகளாகவும் சாதனைப் பட்டியலில் இடம்பெறும்போது, வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள் விடுதலை பெற்று 63 ஆண்டுகளாகியும் தம் அடிப்படைத் தேவைகளான பாதுக்காகப்பட்ட குடிநீர், சாலைப் போக்குவரத்து வசதி, மின்சாரம்.உணவுப்பொருள் பங்கீடு, சுகாதாரம், ஆரம்பக் கல்வி போன்றவற்றைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலையிலேயே இந்தியா உள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தடையின்றிக் கொடுப்பதே உண்மையான ஒரு மக்கள் அரசின் சாதனையாகும்.


தமிழகத்திலும் தற்போது அற்ப காரணங்களுக்காக குடும்ப வன்முறைகள், விவாகரத்து அதிகரித்து உள்ளது குறித்து வணங்காமுடியாரின் கருத்து ? – மல்லிகை

“தமிழகத்திலும்” என்று வினவியிருப்பதில் இருந்து இந்தியாவில் பொதுவாக இவை நிகழ்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். தமிழ்நாடு விதிவிலக்கன்று. பொருளாதாரத்தைப் பெருக்குவது மட்டுமே வாழ்வின் வெற்றி என்று மக்கள் கருதும் வாழ்க்கைச்சூழல் வளர்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் ஆசைகள் பெருகப்பெருகத் தேவைகள் பெருகுகின்றன. அடிப்படைத் தேவைகளுக்கும் மேல் ஆடம்பரத்தேவைகள் பெருகும்போது அவற்றுக்கானப் பொருளாதாரம் தேவைப்படுகிறது. அதைப் பெருக்க ஓடும் ஓட்டத்தில் காதல், கனிவு, பாசம், மனிதநேயம் எல்லாம் காலின்கீழ் போடப்பட்டு மிதிக்கப்படுகின்றன. குடும்பத்தில் இருவரும் வருவாய் ஈட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பெண் பொருளாதார விடுதலை பெறும்போது கணவனின் கட்டுப்பாட்டை வெறுக்கும் நிலை ஏற்படுகிறது.

“வினையே ஆடவர்க்குயிரே இல்லுறை மகளிர்க் காடவர் உயிரே” என்பது மறந்து போகிறது. இதனால் நீங்கள் வினவியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இதைக்களைய, ஆசைகளையும் தேவைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் பார்த்து வியக்க ஆடம்பரமாக வாழ நினைக்காமல் அடுத்தவர் பார்த்து வியக்க அன்போடும் ஒற்றுமையோடும் வாழ நினைக்கவேண்டும். Read the rest of this entry »

 

Tags: , , , , , , , ,

சூடு நம் ஆரோக்கியத்தோடு ஆட்டம் போடுகிறது!

சூடு நம் ஆரோக்கியத்தோடு ஆட்டம் போடுகிறது!

ஸ்ஸ்ss எப்பாaa என்னாaa சூடு… கடுப்பா வருது…. இன்னைக்கி சூடும் ரொம்ப ஜாஸ்தி…  Oh my GOD its too hot.
இப்படி அலுவலகத்திலும் தங்குமிடத்திலும் முனுமுனுப்பது அன்றாடம் நம் காதில் கேட்கிறது.
வளைகுடா வேலையினுடே வெப்பம் / சூடு / அனல் எப்படி நம் ஆரோக்கியத்தோடு ஆட்டம் போடுகிறது !
பெரும்பாலனவர்கள் சவுகரியமாக உணர்வது காற்றின் அழுத்தம் 20˚Cலிருந்து 27˚Cக்குள் இருக்கும் வரைதான் அதே நேரத்தில் 35% முதல் 60% வரை காற்றழுத்தம் அல்லது வெப்பம் உயர்வதை உணரும்போது நாம் அசவுகரியத்தில் நெளிகிறோம், நம் உடலின் தனித்தனி அலுவல்களை செய்துவந்த செயலகங்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து கொண்டு முரண்டு பிடிக்க ஆரம்பிக்கும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டும் கொள்ளும் இங்கே தான் நம் உடம்பில் என்னன்னவோ தில்லு முல்லுகள் நடக்கிறது. Read the rest of this entry »
 

இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006 ஆண்டில் 7618 பேரும், 2007 ஆண்டில் 8093 பேரும், 2008 ஆண்டில் 8172 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும், இவ்வாறான சாவுகளை அச்சட்டங்கள் மூலம் தவிர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

http://www.inneram.com/201007289598/dowry-women-rajya-sabha-ajay-magan