RSS

Monthly Archives: August 2010

தாய்லாந்துக்கு வாங்க – Part 1 [#532]

தாய்லாந்து – கண்டிப்பாக அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம்.

நம்மூரில் தாய்லாந்து / பேங்காக் என்றாலே ஒரு விதமான இமேஜ் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல. அது ஒரு Buffet Lunch! எல்லாமே இருக்கும். நல்லாவும் இருக்கும்.

– பலான இடமா? இருக்கு!
– கோயில் குளமா? ரொம்பவே இருக்கு! நம்ம ஊர் தஞ்சை, மதுரை கோயில்களை விட பிரமாண்டமான புத்தர் கோயில்கள்.
– பிக்னிக் ஸ்பாட்டா? நிறைய இருக்கிறது.
– சாப்பாட்டுப் பிரியரா? அனைத்துமே கிடைக்கும்.
– இயற்கை விரும்பியா? சுத்தமான சுகாதாரமான கிராமங்கள் இருக்கு.

Read the rest of this entry »

Advertisements
 

ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) Surat Al-‘Ikhlāş (The Sincerity) – سورة الإخلاص

ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)  Surat Al-‘Ikhlāş (The Sincerity) – سورة الإخلاص

Surat Al-‘Ikhlāş (The Sincerity) – سورة الإخلاص

Enlarge Text
Shrink Text

بسم الله الرحمن الرحيم

Tamil NEW

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

Tamil NEW

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

Tamil NEW

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

Tamil NEW

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

Copyright © Quran.com. All rights reserved.

Source ; http://quran.com/112

 

கல்விக் களவாணிகள் : உரத்த சிந்தனை: சிராஜ் சுல்தானா

கல்விக் களவாணிகள் : உரத்த சிந்தனை: சிராஜ் சுல்தானா‏

“கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று பாடல் பாடிய பாரதி, இன்று இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.                                 அண்ணா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு, பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 41 பேரும், மருத்துவப் படிப்பிற்கு சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ், போலி என கண்டறியப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வில், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் தங்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்கின்றனர். இது வழக்கமான ஒன்று தான். யார், யார் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்கின்றனர் என்பது, கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், ஏஜன்டுகள் கைக்குச் செல்கிறது. அவர்கள் மாணவர்களை அணுகி, 10 ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்று, “கல்வித் துறையின் கம்ப்யூட்டரில் மதிப்பெண் மாற்றியமைக்கப்படும்’ என்ற உறுதிமொழியுடன், கடந்த 2000 ஆண்டு முதல், மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக வாரி வழங்கியுள்ளனர். இதில் பலர், பல லட்சம் சம்பாதித்தும், ஓய்வு பெற்றும், வேறு துறைக்கும் போய்விட்டனர். இந்த ஆண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய, 66 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், அவர்களின் முகவரி அறிந்த ஏஜன்டுகள், 10 அல்லது 5 சதவீத மாணவர்களையாவது அணுகி இருப்பர் என வைத்துக் கொண்டால் கூட, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ்களை இந்த ஆண்டு பெற்றிருப்பர். இதில், ஒரு சில மாணவர்களின் மதிப்பெண், கல்வித் துறையில் உள்ள கம்ப்யூட்டரில், சரியான தருணத்தில் திருத்தப்படாத காரணத்தால், இன்று சிலர் மட்டும் மாட்டிக் கொண்டனர். 2000ம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள், இன்று காலரை தூக்கிக் கொண்டு, பல உயர் பதவிகளில் அமர்ந்து, தங்களின், “கடமை’யை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில், பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், வசதியானவர் அல்லது ஓரளவு வருமானம் உள்ளவர்கள். ஏழை, எளிய கிராமப்புற மக்கள் இதில் சிக்கவில்லை என்பது, கவனிக்க வேண்டிய ஒன்று. Read the rest of this entry »
 

அறிவுப்போட்டி – 2 : விடைகளும் வெற்றியாளர்களும்

இஸ்லாம் அறிவுப்போட்டி
சனி, 28 ஆகஸ்டு 2010 01:00
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டி எண் குறித்த விவரங்களை இங்கு காணவும்.

http://www.satyamargam.com/islamic-quiz/

அறிவுப் போட்டி எண் 2(09-09-1431 / 19-08-2010) இல் கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:

ஃபஹதா, ஃபாத்திமா, ஃபாத்திமா ருக்சானா, ஃபாத்திமா ஜெஸ்மா, ஃபைஸல், ஃபைஸுர் ஹாதி, அ.ஹெ. அப்துல் மஜீத், அஃப்ரின் ஃபாத்திமா, அப்துர் ரஹ்மான், அப்துல் நஸீர், அப்துர் ரஹ்மான், அப்துல் பாசித், அப்துல் யாசின், அப்துல் ரஹீம், அப்துல் ஹமீது, அப்துல் ஹமீது.அ, அபுல் ஃபவுஸ், அபுல் இப்ராகிம், அபூ ஆதில், அபூபக்கர், அபூபக்கர் ஆரிஃப், அருள் முருகன், அலி இப்ராஹிம், அலிம் ஹுஸைன், அன்வர்தீன், அனீஸ், அஹ்மது முஸ்தஃபா, அஸ்ஹர், ஆயிஷத் ஜமீலா, ஆயிஷா, இக்பால் பாபு, இப்னு ஹுஸைன், இமாம் இர்ஃபானுல்லாஹ், இர்ஷாத், உம்மு ஹுதைஃபா, எஸ். நியாஸ், கலீல் அஹம்து, கனி, கார்த்திக், குலாம், சப்ரி, சாஜிதா நிஜாம், சியானா ஹஸன், சிராஜ் முஹம்மது, சுபேதா பேகம், செய்யது சாதிக், தஸ்லிம் பானு, தஸ்லிம் பானு, தாஹா முஹம்மத், திவான், நபீலா, நவ்ஃபல், நஸ்’ரீன் ஃபாத்திமா, நாவூர் உம்மா, நாஸ், நிரோஷா, நிஜாமுதீன், நிஸார் அஹம்து, நிஷாத், நிஹ்லா, நிஸ்ஃபா, நிஸ்ரி, நூர் ருகையா, நூறா, நூஹ் ரஹ்மான், பசலுல் ஹக், பஷீர், பஷீரா பேகம், பாபு, மனிதன், மிருஸா ஆதம்புள்ளை, மீரா, முபீனா அஸ்னார் லெப்பை, முனவ்வர், முஜீபுர் ரஹ்மான், முஹம்மது, முஹம்மது அன்ஸார், முஹம்மது அனஸ், முஹம்மது சுலைமான், முஹம்மது நவ்ஃபர், முஹம்மது நஜ்முதீன், முஹம்மது நஜ்முதீன், முஹம்மது நியாஸ், முஹம்மது யூசுஃப், முஹம்மது ரிம்ஸான், முஹம்மது லாஃபிர், முஹம்மது ஜுபைர், முஹம்மது ஸாலிம், முஹம்மது ஸாலிஹ், முஹைதீன், மெஹ்ராஜ் பேகம், யாசர், யாசர் அரஃபாத், ரம்ஸான், ரஷீத், ராஃபி, ராஜாராம், ரியாஸ், ரியாஸ் முஹம்மது, லறீனா அப்துல் ஹக், வஹாப், வஹீதா, ஜபருல்லா, ஜபருல்லாஹ் கான், ஜமீலா, ஜஹபர் சாதிக், ஜாஃபர், ஜியா சித்தாரா, ஜுனைதா, ஸாலிஹா, ஸினூபா அன்ஸார், ஸோஃப்யா பேகம், ஷஃப்னாஸ், ஷரஃபுதீன், ஷஹானா பர்வீன், ஷாஃபி, ஷாஜிதா, ஷாஹுல், ஷாஹுல் ஹமீது, ஷேக் உபைதுல்லாஹ், ஹபீப், ஹபீபுல்லாஹ், ஹபீஹ், ஹஸன், ஹஸன் அக்ரம், ஹாஜா மைதீன், ஹிஃப்லான், ஹுஸைன்

இவர்களுள் கீழ்க்காணும் 36 பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்துள்ளனர்:

1. அருள் முருகன்( aaro…..@gmail.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் )

2. கலீல் அஹமது( abka…@gmail.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் ) Read the rest of this entry »

 

அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை

வாசகர் பகுதி வாசகர் மடல்

ந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்ப்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ”ஹே ராம்” என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளைக் கொன்றொழித்த பயங்கரவாதத்தைச் செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தழைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்! Read the rest of this entry »

 

திருக்குறள் பற்றிய அழகிய ஃப்ளாஷ் பிரசண்டேசன்

திருக்குறள் பற்றிய அழகிய ஃப்ளாஷ் பிரசண்டேசனைக் காண கீழ் உள்ள சுட்டியை க்ளிக் செய்யவும்.

உண்மை – Truth

அறிவு – Wisdom

சுயக்கட்டுப்பாடு – Self Control

இறை வணக்கம் – In Praise Of God

நாவடக்கம் – Restrain The Tongue

நற்சொல் கேட்டல் – Listening To The Wise

Rose Flower

அக்னி சிறகுகள் – Wings of Fire

வாழ்த்துக்கள் – Greetings

sathakkathullaah

Source: http://www.sadaqathullah.com/tamil3.html

 

Tags: ,

கூகிளின் தொலை பேசும் வசதி!

இணையத் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகிள், தற்போது இணையமூலம் தொலைபேசும் சந்தையிலும் குதித்து விட்டது. தனது மின்மடல் வசதியான ஜிமெயிலின் உள்ளேயே இருந்து ஒரே சொடுக்கில் உலகின் எந்த மூலைக்கும் தொலைபேசும் வசதியை இன்று முதல் கூகிள் வழங்கி வருகிறது.

இவ்வாண்டு (2010) இறுதிவரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருக்கும் தொலைபேசி எண்களுக்கு இவ்வசதி மூலம் முற்றிலும் இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்தலாம் என்று கூகிள் கூறியுள்ளது. பிரிட்டன், பிரான்சு, ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற  நாடுகளுக்கு நிமிடத்திற்கு 2 செண்ட்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 95 காசுகள்) மட்டுமே கட்டணமாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இணையத் தொலைபேசும் வசதி வழங்கும் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்கைப் நிறுவனத்திற்கு கூகிளின் இந்த அறிவிப்பு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என நுட்ப நோக்கர்கள் கருதுகின்றனர்.

Source : http://www.inneram.com/2010082610294/google-offers-phone-calls-sevice-via-internet