RSS

Monthly Archives: September 2010

செக்ஸ் ஊக்க மாத்திரை ‘வயகரா’ பாதி பேருக்கு பயனளிப்பதில்லை

உடலுறுவுக்கு ஊக்கம் அளிக்கும் மிக பிரபலமான மாத்திரையான ‘வயகரா’ அதை உட்கொள்ளும் பாதி பேருக்கு பயனளிப்பதில்லை என்று லண்டனில் பிரிட்டிஷ் சொஸைட்டி ஆப் செக்ஸ்வுல் மெடிசைனின் முன்னாள் தலைவரும், பிரிமின்கம் உள்ள குட் ஹோப் என்ற மருத்துவமனையின் யுரோலோஜிஸ்ட் நிபுணருமான டாக்டர் ஜியோப்ஃபிரே தெரிவித்துள்ளார்.

உடலுறவில் நாட்டம் இருந்தும் ஆண்குறியில் விறைப்பு தன்மை குறைந்தவர்கள் உட்கொள்ளும் மாத்திரை வயகரா. இந்த மாத்திரை பல பெயர்களில் வந்தாலும் ‘வயகரா’ என்ற மூல வேதியியல் கொள்கை பெயரில் அறியப்படுகிறது. இது ஆணுறுப்பில் உள்ள  நொதியம் (enzyme) என்னும் புரதப் பொருளில் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டி ஆண் உறுப்பை விரைக்க செய்வதால் உலகம் முழுவதிலும் விரைப்பு தன்மை குறைந்த ஆண்களால் பயன்படுத்தப்படுகிறது. வருடத்திற்கு பல மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகும் இந்த மாத்திரை பாதி பேருக்கு வேலை செய்வதில்லை. வெறும் ‘வயாகரா’வினால் மட்டும் அவர்களுது விரைப்பு தன்மை யை அதிகரிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

ஒரளவுக்கு ஏற்கனவே உடலுறவுக்கு தேவையான ஹார்மோன்கள் இருப்பவர்களுக்கு தான் இது வேலை செய்வதாக கூரியுள்ள அவர் இதை பயன்படுத்துவதற்கு பதிலாக இரத்த பரிசோதனை செய்து ‘டெஸ்டோஸ்டிரோன்’ (testosterone) என்னும் ஹார்மோன் எண்ணிக்கை பொருத்து தகுந்த மாத்திரை மற்றும் அரைத்திண்மக் கரைசல் போன்ற விலை குறைந்த வழிமுறைகளையே பின்பற்றலாம் என்று கூறியுள்ளார்.

ஆகவே செக்ஸ் குறைபாடு உள்ள அனைவரும் ‘வயகரா’ மாத்திரை உட்கொண்டால் பூரன உடலுறவு கொள்ளலாம் என்ற நம்பிக்கை கொள்வது தவறு என்று அவர் டெய்லி மெயில் என்ற ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.

Source : http://www.inneram.com/2010092910904/half-of-the-men-who-take-viagara-are-not-getting-benefit

Advertisements
 

தாய் எனும் வைரம் –2

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்.

சென்ற பதிவில் இமாம் மாலிக்(ரஹி) அவர்களின் தாயைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாயைப் பற்றியும், அவரின் விடா முயற்சியும், அல்லாஹ் மீதிருந்த அசையா நம்பிக்கையும். மாஷா அல்லாஹ், இமாம்களைப் பற்றி படிப்பதற்கு முன் அவர்களின் தாயைப் பற்றி தெரிந்து கொள்வது இன்னும் அதிகமான பிரமிப்பை உருவாக்குகின்றது. அவர்களின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது இன்றைய சூழலில் பிள்ளை பெறுவதையும் வளர்ப்பதையும் பாரமாக நினைக்கும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்றாஹீம் அல் புகாரி(ரஹி) அவர்கள் இஸ்மாயீல் என்பவருக்கு மகனாக கி.பி 810இல் (மேற்கு துர்கிஸ்தானில் உள்ள) புகாரா என்னும் ஊரில் ஜும்’ஆ தொழுகைக்கு பின் பிறந்தார்கள் என்றறியப்படுகின்றது. இவர் பிறக்கும்போதே கண் பார்வையில்லாதவராக பிறந்தவர். என்ன? ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். உண்மை அதுவே. தந்தையை சிறு பிராயத்திலேயே பறி கொடுத்த இமாமவர்கள் பிறவிக் குருடனாகவும் இருந்தார்கள்.

அந்த காலத்தில் எல்லாம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் விதவையானாலோ அல்லது தலாக்காகி விட்டாலோ சிறிது நாட்களிலேயே மறுமண வரன்க‌ள் அவர்களை நோக்கி குவியும். இங்கே நான் குறிப்பிடுவது மேல்வர்க்க பெண்களையோ அல்லது செல்வச்சீமாட்டிகளையோ அல்ல. மாறாக அல்லாஹ்வின் பாதையில் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்கள்.

அந்த கால கட்டத்தில் தன் கணவனை இழந்திருந்த இமாம் புகாரி(ரஹி) அவர்களின் தாய்க்கும் அந்த வாய்ப்புகள் வராமல் இல்லை. மாறாக அவர் வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். தன் மனதின் ஆசைகளையும் உடல் தேவைகளையும் கட்டுப்படுத்தி தன் குழந்தைகளை சீரும் சிறப்புமாய் இஸ்லாத்தின் மடியில் வளர்ப்பதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தகைய தாய்க்கு தன் மகன் குருடாய் இருப்பது எவ்வளவு மன வேதனையளித்திருக்கும்? து’ஆ செய்ய ஆரம்பித்தார். ஒன்றல்ல, இரண்டல்ல…யாரிடமும் கேட்டல்ல…கண்கள் இரண்டிலிருந்தும் ஆறுகள் பாய்கின்றனவோ என எண்ணுமளவிற்கு இறைவனிடம் இறைஞ்சுவதில் சிறிதும் குறைவின்றி எல்லா நேரமும் அதே நோக்கத்தில் து’ஆவும் தொழுகையுமாக இருந்தார். அல்லாஹ்வின் கருணைக்கரம் அவரை நோக்கியும் நீண்டது. அவரின் கனவில் ஓர் நாள் நபி இப்றாஹீம்(அலைஹ்) அவர்கள் வந்தனர். வந்தவர்கள் அந்த தாய்க்கு ஆறுதல் கூறி, அவர்களின் து’ஆ இறைவனிடத்தில் ஏற்கப்பட்டதை கூறி அதன் பலனாய் இமாமவர்கள் பார்வை கிடைக்கப் பெற்றதையும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ் தூக்கத்திலிருந்து விழித்த தாய் அந்த கனவில் வந்த செய்தியை உண்மையென கண்டார்கள். இமாமவர்களின் கண்களில் பார்வை அருளப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அதன்பின் அந்த தாய் தன் மகனை எவ்வாறு வளர்த்தார் என்பது இமாமவர்க்ளின் வாழ்வின் மூலமும், அவரின் ஒப்பற்ற புத்தகங்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க :தாய் எனும் வைரம் –2

Source : http://homeschoolingintamil.blogspot.com/2010/09/2.html#comment-form

 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் சாலை மறியல் போராட்டம் : ராமதாஸ்

அக்டோபர் மாதத்திற்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிடாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே செவ்வாய்க் கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமைதாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- Read the rest of this entry »

 

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

தமிழில்: Mufti

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)

அழகிய வரவேற்பு

 • வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
 • மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.
 • வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்

 • நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
 • உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
 • தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
 • மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்

 • மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
 • நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 • நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.

விளையாட்டும் கவன ஈர்ப்பும்

 • நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
 • ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
 • இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
 • இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ

 • வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
 • கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை

 • குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.
 • அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
 • மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
 • மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
 • ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

பிறரைக் காணச் செல்லும்பொழுது

 • மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).
 • அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
 • அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது

 • மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
 • உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
 • நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
 • குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.
 • நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
 • முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
 • திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
 • எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
 • பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம். Read the rest of this entry »
 

மோன லிசா பல வேடங்களில்

Source : http://shgawy007.blogspot.com/2010/09/mona-lisa.html

 

3 லட்சம் சிகரெட் – 100 வது பிறந்தநாள்

இதுவரை 2,92,000 சிகரெட் ஊதித் தள்ளியும் உயிரோடு இருக்கும் இங்கிலாந்தைச் சார்ந்த தாத்தா ஒருவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு நாளைக்கு ஒருமுறை விஸ்கி குடிக்கும் பழக்கமும் உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்தர் லாங்க்ரன் என்ற இவர் (Arthur Langran) இரண்டாம் உலக போரின் போது சிப்பாயாக பணிபுரிந்த போதும் கிரானைட் வெடிவிபத்திலும் ஒருமுறை உயிர் தப்பியுள்ளார்.இரு ஆண்களுக்கு தந்தையான இவர் தனது இருபதாவது வயதில் சிகரெட்டை ஊதி தள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். தினமும் 10 சிகரெட் ஊதி தள்ளுவது இவரது பழக்கம், மேலும் உறங்குவதற்கு முன் ஒரு ‘ரவுண்ட்’  ஸ்காட்ச் விஸ்கியையும் இறக்கி விட்டுதான் படுப்பாராம்.
சிகரெட் தாத்தாவின் சீக்ரெட் “யாரும் செய்ய கூடாது என்று சொல்லும் செயலை செய்வது தான் நான் ”என்று இங்கிலாந்திலுள்ள சன் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
 

நீலத் திமிங்கிலம் (BLUE WHALE)

by Rajakamal நீலத் திமிங்கிலம் (BLUE WHALE)

இந்த பூமி கிரகத்தில் படைப்பினங்களிலேயே மிகப் பெரியது இந்த நீலத்திமிங்கிலம் டைனோசர்கள் என்படும் மிருகங்களைவிட இரண்டு மடங்கு பெரியது இந்த நீலத் திமிஙகிலங்கள்.

இதன் எளை 200 டன்கள், இது 25 ஆசிய யானைகளை விட கூடுதல் எடையாகும், இது 100 அடி நீளம், நீளவாக்கில் வளரக்கூடியது. இது இரண்டு பஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் வரும் நீளம் வரும். பாஸ்கட் பால் (BASKET BALL COURT) கோர்ட்டை விட நீளமானது.

இது ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவு 4 டன்கள் ஆகும் 64000 பர்கர்களுக்கு (BURGAR) சமம். இதன் இதயம் 450கிகி ஒரு மனிதன் அதன் இதய நரம்புகளுக்குள் ஊர்ந்து செல்ல முடியும்.

இது படைப்பினங்களிலேயே அதிக சத்தம் உண்டாக்கும் விலங்கு ஆகும், இதன் சத்தம் ஜெட் விமான இஞ்சின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும் (ஜெட் விமான இஞ்சின் சத்தம் 140 டெசிபல்) நீலத்திமிங்கிலம் எழுப்பும் சத்தம் 188 டெசிபல் ஆகும் இது தன் சக திமிங்கிலத்துடன் 1600 கிமீ தூரத்துடன் இருந்தாலும் தொடர்புக் கொள்ள முடியும்.
20 நிமிடங்களுக்கு ஒரு முறை தாவிக் குதிக்கிறது 100 மீட்டர் ஆழம் வரை சென்று வருகிறது, ஏறத்தாழ தன் வாழ்நாள் முழுவதும் கடலின் அடிமட்டத்திலேயே கழிக்கிறது.

கப்பல்கள் கடலில் மணிக்கு 10-15 கிமீ வேகத்தில் செல்கிறது, நீலத்திமிங்கிலங்கள் மணிக்கு 32 கிமீ வேகத்தில் செல்கிறது, ஆபத்து நேரங்களில் ஒரு நாளைக்கு 160 கிமீ துராத்திற்கு பயணம் செய்கிறது.

அது மேல் துளையின் மூலம் பிய்ச்சி அடிக்கும் தண்ணிர் இரண்டு மாடி கட்டிடம் உயரம் செல்லும்.

ஒரு வருட கர்பத்திற்கு பிறகு இது குட்டி ஈனுக்கிறது, அதன் எடை பிறந்த உடன் 2700 கிகி அது 8 மீட்டர் நீளம் இருக்கும், இது ஒரு நாளைக்கு 190 லிட்டர் பால் அருந்தும், 1 மணிக்கு 4.5 கிகி இதன் எடைக் கூடுகிறது, ஒரு நாளைக்கு கூடும் எடை 90 கிகி ஆகும்.

7 – 9 மாதங்களில் இது 15 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது, சில நிபுணர்களின் கருத்து கணிப்பு 1 வருடத்தில் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. இது பாலுறவுக்கு தயாராகும் வயது 5 – 10 ஆகும் இதன் கர்ப காலம் 1 வருடம் ஆகும். ஒரு ஆப்பிரிக்க யானையின் கர்ப காலம் 18 – 22 மாதங்களாகும்.
விலங்கினங்களிலேயே கர்பத்தில் அதிக வேகமாக வளரக்கூடியது இந்த நீலத்திமிங்கிலமாகும் 3 மாதங்களுக்கு பிறகு ஒரு நாளைக்கு 2.5 செ.மி நீளம் வளர்கிறது 7 மாதங்களில் தோரயமாக 3.5 மீட்டர் நீளம் வளர்ந்து விடுகிறது.

இது அட்லாண்டிக் கடலில் சுமார் 2000 மீன்கள் உண்டாகும் என்று கணக்கிடப்படுகிறது. இதை 1960 ஆண்டு Internation whaling commission இதை வேட்டையாடுவதை தடை செய்துள்ளது.

by Rajakamal

Source : http://rajakamal.blogspot.com/2010/09/blue-whale.html