RSS

Monthly Archives: October 2010

3G – தொழில்நுட்பம் – புதுசுரபி

“ஊருக்கு போனவன் சங்கதி சாமிக்குத்தான் தெரியும்” என்றிருந்த காலகட்டத்தில், அதையும் தாண்டி சிந்தித்த கிரகம்பெல். “மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள், நீங்கள் தேவைப்படுகிறீர்கள்” என்று தொலைவில் உள்ள தம் உதவியாளரை அழைத்தார் கம்பி வழியாக! ஆம் தொலைபேசியை கண்டுபிடித்ததாக அறியப்படும் அலெக்சாண்டர் கிரகாம் பெல் தம் உதவியாளர் வாட்சனுடன் பேசத்துவங்கிய அந்த முதல் வார்த்தையுடன் தொடங்கியது தொலைபேசித்  தொழில்நுட்பம். இன்று உலக மக்கள் தொகையில் 67 % க்கும் மேற்பட்டோரை ஏறத்தாழ 460 கோடி மக்களை இணைத்துக்கொண்டே இருக்கிறது.

ஏறக்குறைய 135 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பிகள் வழியாக வெறுமனே குரலை மட்டும் அனுப்புவதற்காக உருவாக்கிய தொழில்நுட்பம்தான் இன்று எத்தனை மாற்றங்கள் கண்டுள்ளது!

கம்பிவழி, கம்பியில்லாமல் என்று தொலைத்தொடர்பு, சாட்டிலைட் தொடர்பு என்றும் வெகு தூர அழைப்பு என்பது மிகச் சாதரணமாகி இப்போது உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிக் கிடக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த பரிணாம வளர்ச்சியே இன்று நம் முன்னே பேசப்படும் 3G சேவையாகும். சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளில் உபயோகத்திற்கு வந்துவிட்டாலும் நம் நாட்டில் வழக்கம் போலவே கூச்சல்,குழப்பம், அவைஒத்திவைப்பு என நம் சடங்கு சம்பிரதாயங்களையும் தாண்டி சந்தைக்கு வந்திருக்கிறது.

சிவப்புக் கம்பளம் விரிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது இந்த தொழில்நுட்பத்தில்???? பார்க்கலாம்.

‘என்னை விட  என் பிள்ளை புத்திசாலி, என பிள்ளையை விட பேரப்பிள்ளை மிக புத்திசாலி’ என்று நாம் நம் தலைமுறைகளைப் போற்றிக்கொள்வது போலவே தொழில்நுட்பமும் தனது தலைமுறையினை பற்றி பெருமிதம் கொள்கிறது. 3G யும் அப்படித்தான். G என்ற ஆங்கிலச்சொல் Generation என்ற வார்த்தையின் முதல்எழுத்தேயாகும். அதாவது தொலைத்தொடர்பு – தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மூன்றாம் தலைமுறையினை எட்டியுள்ளதை இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. Read the rest of this entry »

Advertisements
 

Tags: , , , ,

அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப்டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள்.
அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள்,ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறுமி, தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம்? என்று கேட்டது,
அந்தப் முஸ்லிம் சிறுமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
அந்த சிறுமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகள் சேகரித்து களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:
1) அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகள்:
அமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் பண உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 தவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.
தற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நியுயார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ் புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன.
2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:
முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர்.இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள்.மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுப்பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:
1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.
2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது.
3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.
4) எந்த முஸ்லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.
5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.
6) எந்த முஸ்லிமும் தன் மனைவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.
7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.
8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது. மேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன் இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்ளார்.
எலிஜா முகம்மது 1965ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார்.அந்த அமைப்பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது. Read the rest of this entry »
 

Tags: , , , , , , , ,

“சினிமாவுக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமில்லை”

திரையுலகுக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமேயில்லை என்று பாடலாசிரியர் வாலி குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா “சினிமாவும் நானும்” என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் திரைப்பட பாடலாசிரியர் வாலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திரைத்துறையைப் பற்றியும், திரைத்துறையில் இருப்பவர்கள் பற்றியும்  வெளிப்படையான சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on October 29, 2010 in Uncategorized

 

Tags: , , , , ,

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் மாறனின் பங்கு 31%ஆக உயர்வு!

குறைந்த செலவு விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் சன் தொலைக்காட்சி குழுமங்களின் நிறுவனர் கலாநிதி மாறனின் பங்கு 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 19.37 மில்லியன் பங்குகளை அதாவது அந்நிறுவனத்தின் 4.78 சதவீத பங்குகளை கலாநிதி மாறன் வாங்கியுள்ளதாக மும்பை பங்குச் சந்தை நிறுவனத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதன் கிழமையன்று தகவல் தந்தது.

அக்டோபர் 26ஆம் தேதியன்று இந்த பங்கு வர்த்தகம் பங்குச் சந்தைக்கு வெளியில் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் கலாநிதி மாறனின் பங்கு 30.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அமெரிக்க நிறுவனங்களான வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங் சர்வீசஸ் ஆகியவற்றின் பங்குகளை கலாநிதி மாறனும் அவரது KAL ஏர்வேஸ் என்ற நிறுவனமும் வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தானது குறிப்பிடத் தக்கது.

Source:http://www.inneram.com/2010102711491/kalanithi-maran-raises-stake-in-spicejet-to-31-pc

 

நாம் பிடித்த புலிவால்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
பிறக்க ஓர் இடம்!
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?
வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
எம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!
ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!
 

புனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.J.M.ரிஸ்வான் மதனி

அஷ்ஷைக்: எம்.எம். எம். ரிஸ்வான் மதனி

புனித கஃபா ஆலயம் பற்றியும், அதனோடு தொடர்பான அடையாளச் சின்னங்கள் பற்றியும் இங்கு நோக்கவிருக்கின்றோம்.

கஃபாவின் அமைவிடம்: சவூதி மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஃபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். இது பற்றி அறிஞர் ஜாகிர் நாயக் என்பவரும் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கஃபாவின் மறுபெயர்கள்:
இது மனிதர்கள் அல்லாஹ்வைத் தூயமையாக வணங்கி, வழிபட பூமியில் நிறுவப்பட்ட முதலாவது ஆலயமாகும். இதன் சிறப்பைப் பிரதிபலிப்பதற்காக அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

– அல்லாஹ்வின் வீடு, (நபிமொழிகள்),

– அல்பைத்துல் அதீக், (அல்ஹஜ்:29, 33), பழமையான வீடு, புராதன வீடு.

– அல்பைத், (அல்பகரா: 125, 127, 158), (ஆலுஇம்ரான்:97), (அல்அன்ஃபால்:35, அல்ஹஜ்:26), (குரைஷ்:3). குறிப்பாக அந்த இல்லம்.

– அல்பைத்துல் ஹராம் (அல்மாயிதா, 97) சங்கையான இல்லம்.

– அல்மஸ்ஜிதுல் ஹராம், (அல்பகரா: 144,149,150, 196), அல்மாயிதா:2, அல்அன்ஃபால்: 34, அத்தௌபா:7, 19,28), (அல்இஸ்ரா:1, 7), அல்ஹஜ்: 25, அல்ஃபத்ஹ்:25, 27).

– அல்கஃபா,(அல்மாயிதா: 95, 97). நாட்சதுரமானது

– குறிப்பு: கஃபதுல்லாஹ் என்ற சொல் நாம் பாவித்தாலும் அதை எந்த கலைக்களஞ்சியத்திலும் காணமுடியவில்லை.

கஃபா என்பதன் பொருள்:
சதுரவடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உண்டு. கஃபா சதுரவடிவம் கொண்ட அமைப்பில் இருப்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கின்றது.

கஃபாவைக் கட்டியவர்:
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். கட்டுமாணிப்பணிக்கு துணையாக அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். அன்னை ஹாஜர் (ரழி) அவர்கள் தனது மகனோடு தன்னந்தனியே கஃபா பள்ளத்தாக்கில் வசித்து வந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது இறக்கையினால் நிலத்தில் அடித்தார்கள். உடனே ஜம்ஜம் நீரூற்று உருவானது. அந்த நேரத்தில் ஹாஜர் அம்மாவிடம்: ‘இதோ இந்த இடத்தில் அல்லாஹ்வின் வீடு உள்ளது. அதை இந்தச் சிறுவனும், அவனது தந்தையுமாக கட்டுவார்கள்’ என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறியதாக புகாரியில் இடம் பெறும் செய்தியைப் பார்க்கின்றோம்.

அந்த முன்னறிவிப்பு இஸ்மாயீல் (அலை) அவர்கள் இளம்பருவத்தை அடைந்த போது நடந்தேறியது. அவர்களை அவர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்து ‘ மகனே அல்லாஹ் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான், அதற்கு நீ துணை நிற்பாயா? எனக் கேட்டார்கள், அதற்கு அவர்கள் ஆம். (நிச்சயமாக) என்றார். உடனே அவர்கள், குறித்த அந்த இடத்தை சுட்டிக்காட்டி, அல்லாஹ் இந்த இடத்தில் அவனது வீட்டை அமைக்கும்படி கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். வெள்ளப் பெருக்கு காரணமாக அதன் வலது, மற்றும் இடது பக்கங்கள் தேய்ந்து, தூர்ந்து குட்டிச்சுவர் போல் அது காட்சி தந்தது. அந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் ஆலயத்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனி உதவியுடன் கட்டி முடித்துப் பிரார்த்தனையும் செய்தார்கள். (புகாரி).

இந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் வீடு உள்ளது என்று வானவர் கூறியதையும், பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூறியதையும் பார்த்தால் அந்த இடத்தில் அல்லாஹ்வின் ஆலயம் அடையாளப்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது என்பதை அறியலாம். ஆனால் அது வணங்கப்பட்டதற்கான எந்த ஆதாரம் நாம் தேடிப்பார்த்தவரை கிடைக்கவில்லை, அதைக்கட்டி முடித்த பின்பே வணக்கவழிபாடுகள் தொடங்கின என்பதை குர்ஆன் வசனங்கள் மூலமும், நபிமொழிகள் மூலம் அறியலாம். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).

Read the rest of this entry »

 

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா

 

 

 

 

 

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா · இந்தியாவில்

 
Leave a comment

Posted by on October 24, 2010 in video