RSS

Monthly Archives: November 2010

ஆடையும் தற்காப்பு ஆயுதம்

வீடே உலகம் என்று முடக்கப்பட்டுக் கிடந்த பெண்ணினம்  உலகமே வீடு என விசால அறிவோடு வெளிப்பட்டுள்ள இன்றைய காலத்திலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்தபடியே உள்ளன என்பது அவலகரமான உண்மையாகும்.

பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பெண்கள் முன்வந்துவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் மீதான வக்கிரத் தாக்குதல்கள் ஏன் குறையவில்லை என்பதை சமூகம் கவலையோடு சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.

அடுப்பங்கரையில் மட்டுமே அடைந்து கிடந்த பெண்கள் ஆட்சி மன்றங்களில் அடிபதித்திருக்கும் இக்காலத்திலும் பெண் முன்னேற்றம், பெண் விடுதலை ஆகியவை குறித்த சரியான வரையறைகள் பெறப்படாமலே உள்ளன.

ஆண்களை விடக் குறைவான அளவில் பெண்கள் உடை உடுத்துவதும், ஒழுக்கச் சீர்கேடுகளில் ஆண்களையும் விஞ்சி ஒருபடி மேலே நிற்பதும் தான் பெண் விடுதலையின் சின்னங்கள் என சில பெண்ணியவாதிகள் பேசுவதும், எழுதுவதும் பெண்ணினத்தை பாதிப்புகளின் படுகுழியில் தள்ளியுள்ளன என்றால் மிகையில்லை.

வீட்டு நிர்வாகப் பணிகளான சமையல், குழந்தை பராமரிப்பு, பெரியோரைப் பேணுதல் போன்ற பணிகளெல்லாம் பெண்ணடிமைத் தனத்தின் சின்னங்கள், வீட்டு வேலைகளை பெண்கள் செய்வதே இழிவு, வெளியிடங்களில் பணிபுரியச் செல்வதே பெண் விடுதலை என்று வெம்பி பழுத்த சில வேதாந்திகள் கூறி வருகின்றனர்.

வீட்டு வேலைகளைப் புறந்தள்ளி, வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதையே விடுதலைப் போராட்டமாய்க் கருதிய பெண்களின் நிலை, வெந்நீர்க் கொப்பறையில் இருந்து தப்பியதாக எண்ணி எண்ணைக் கொப்பறையில் விழுந்த நிலையாகி விட்டது. தவிர்க்க இயலாத சூழல்களில் குடும்பத்தைத் தாங்கி நிறுத்தும் பொறுப்பு பெண்ணின் மீது சுமத்தப்படும் போது வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை யாரும் குறை கூற முடியாது. Read the rest of this entry »

Advertisements
 
1 Comment

Posted by on November 29, 2010 in Uncategorized

 

Tags: , ,

தன்னம்பிக்கை

வானம் ஏகும் பறவைகட்கு
வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்கு
குரலின் மீதே நம்பிக்கை;
மானம் உள்ள மனிதனுக்குள்
மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;
ஆனதினால் சோம்பல் விலக்கினால்
ஆற்றல் பெறும் வாழ்க்கை…!!!!!
எப்படி புரண்டாய்? எப்படி தவழ்ந்தாய்?
எப்படி நின்றாய்? எப்படி நடந்தாய்?
அப்படித் தானே முயல்வாய்
அனைத்திலுமாய்; ஆயுள் முழுவதுமாய்
உந்து சக்தி நிரம்பியுள்ள
உன்னிடம் உண்டு திறமைதான்;
நொந்து காலத்தை வீணாக்கினால்
நொடியில் பாயும் வறுமைதான்!!!!!
ஒவ்வொரு நொடியும் உன்றன்
உழைப்பால் மட்டும் நிரப்பு;
அவ்வளவும் திரும்பி கிட்டும்
அளவற்ற செல்வத்தின் பரப்பு
காலம் வருமென்று வீணாகக்
காத்திருக்க வேண்டா கனவுடனே
ஞாலத்தில் உயர்ந்தோர் யாவரும்
நாளும் உழைத்தே வென்றனரே

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

 

கடவுள் பற்றிய மதங்களின் அடிப்படை மற்றும் நடுநிலை கொண்ட மனிதர்களின் நியாயமான புரிதல்கள்

இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கை என்ற பெயர் வைத்தாலும் சரி, கடவுள் என்ற பெயர் வைத்தாலும் சரி இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் வைத்த பெயர் அது அவர்களுடைய நம்பிக்கை.

இந்த பிரபஞ்சம் (Universe) இயங்கிகொண்டு இருக்கிறது என்பது மட்டுமே நாம் அறிந்தவை. இது எங்கிருந்து வந்தது, எந்த சக்தியை கொண்டு இயங்குகின்றது என்பன நாம் அறியப்படாத உண்மைகள். ஆற்றல் எங்கிருந்தாவது நமக்கு கிடைத்தால் மட்டும் தானே நம்மால் இயங்க முடியும்.

பெருவெடி கொள்கை (Big Bang theory) என்பது அனைத்து அறிவியலாளர்காலும் ஏற்றுகொள்ளகூடிய ஒரு கொள்கையாக உள்ளது. அறிவியலாளர்கள் இப்பிரபஞ்சம் உருவானதை பற்றி பெரு வெடி கொள்கை அடிப்படையில் கூறும் பொழுது இப்பிரபஞ்சம் எப்பொழுதும் இருந்தது அல்ல மாறாக அதற்கு ஆரம்பம் என்பது இருக்கிறது என்றும் ஒரு அணு வெடித்து அதன் மூலமே இந்த ஆற்றலும் ஒளியும் உருவானதாக குருப்பிடுகின்றனர். எது இந்த பிரபஞ்சத்தை அதன் இயக்கத்தை ஆரம்பிக்க தூண்டியது (Stimulate) என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இல்லை.

இந்த பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தும் வரைமுறை விதிகளுக்கு கட்டுப்பட்டும் இயங்குவது அறிவியலாலர்களிடையே ஒரு பெரிய வியப்பையே ஏற்படுத்துகிறது. ஒழுங்கு முறையை கடைபிடித்து நடக்கவேண்டிய தேவை என்ன என்பதை விளக்க தவறியவர்கலாகவே அறிவியலாளர்கள் உள்ளனர். அறிவியலாளர்களின் விளக்கங்களையும் எடுத்து கொண்டு தங்களுக்கு தேவையான மசாலாக்களையும் கலந்து ஒரு புதுமையான முறையில் விளக்கம் தருவதே நாத்திக கொள்கை. முழுமை இல்லாத அதனை கருத்தில் கொள்ளும் பொழுது பழங்காலங்களிருந்து சொல்ல பட்ட கடவுள் கொள்கைகள் எல்லாம் கற்பனை என்று சாதாரணமாக விட்டு செல்வது அறிவுடைமையாக இருக்காது. அனைத்தையும் மனதில் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமே கடவுள் கொள்கையில் உள்ள உண்மையை அறிய முடியும். Read the rest of this entry »

 

Tags: , , , , ,

பெண்ணே அழாதே பெண்ணே

பெண்ணே அழாதே பெண்ணே

அழப் பிறந்தவள்  அல்ல  நீ
ஆளப் பிறந்தவள்.நீ
பெண்ணாகப் பிறந்ததற்கு
கவலை கொள்ளாதே நீ
கர்வம் கொள் நீ
பெருமை கொள் நீ
அடிமை விலங்கை
அடித்து நொறுக்கு
அற்புதச் சிறகை
விரித்துப் பற.
கொட்டக்கொட்ட
குனிந்து போதும்
கொட்டும் கரம்
முறித்திடு நீ
இனி வெங்காயம்
நறுக்கும் போது கூட
அழவேண்டாம் .
இனி வெங்காயம்கூட
நறுக்க வேண்டாம் .
விழிகளில் கண்ணீர் நிறுத்து
இதழ்களில் புன்னகை ஏந்து

Source:http://eraeravi.wordpress.comபெண்ணே அழாதே பெண்ணே

 

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை                           எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.
பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,
மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.
பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.
1. இளமையில் கல்வி
இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.
2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்
நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.
3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள். Read the rest of this entry »
 

இல்லற வாழ்க்கை இனித்திட-சென்னை குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.

விவாகரத்துகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் விவாகரத்து கோரி தம்பதிகள் நாடி வரும் சென்னை குடும்ப நலகோர்ட்டில், இனிமையான இல்லறத்திற்கு என்று தலைப்பில் 10 அறிவுரகளை பெரிய போர்டில் எழுதி வைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள்:

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

– சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்- அனுசரித்துப் போகுதல்- மற்றவர்களை மதித்து நடத்தல்.

மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள

10வது அறிவுரை.

விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், ‘டைவர்ஸ்’ கேட்டு வரும் ஜோடிகள் ‘டைவர்ட்’ ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

நன்றி: http://thatstamil.oneindia.in/news/2010/10/25/chennai-family-court-advices-divorce.html

Source : http://arifmaricar.blogspot.com/2010/10/10.html

 

Tags:

திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!

2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்காக தி மு க வின் மத்திய தகவல் தொழிற்நுட்ப தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா பதவிவிலகிவிட்டாலும் இந்தப் பதவி விலகலுக்குப் பின்னிருக்கும் செய்திகள் சுவாரசியமானவை. இந்தப் பதவி விலகலுக்கு ஊடக அழுத்தங்களும்  ஒரு காரணமாக அமைந்தன எனில் மிகையாகாது. ஏறத்தாழ ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கோடிக்கும் மேல் அரசுக்கு நட்டமேற்படுத்திய குற்ற உணர்வாலோ, கொள்கைப் பிடிப்பாலோ அமைச்சர் பதவி விலகிவிடவில்லை என்பது ஒருபுறமிருக்க, மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கர்நாடக முன்னாள் முதல்வருமான  வீரப்பமொய்லி சொல்லியிருக்கும் கருத்தும் இதில் கவனிக்கத்தக்கது: இதே போன்று கணக்கு தணிக்கைத் துறை முன்னாள் அமைச்சரான பிரமோத் மஹாஜன் மீதும் குற்றம் சுமத்தியிருந்தது. அவரை யாரும் பதவி விலகக் கோரவில்லை” என்கிறார் வீரப்பமொய்லி. மேலும் அவர் சொன்னது, “கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கைகளுக்காக இதுவரை யாரும் பதவி விலகியதுமில்லை”

அப்படியானால் ராஜாவை மட்டும் பதவி விலகும்படி கோரிக்கைகள் அழுத்தமாக எழுந்தது ஏன்? ராஜா கழற்றிவிடப்பட்டது ஏன்? நட்டத்தொகை பெரிதாக இருந்ததுதான் காரணமா? என்றால் அது ஒரு காரணம் மட்டுமே. இந்தத் தொகையளவு முழுதுமாக கையூட்டாக மாறியிருக்கும் வாய்ப்புமில்லை.அதில் ஏதேனும் ஒரு சிறு விழுக்காடே கையூட்டப்பட்டிருக்கும் என்பது தெளிவு.

இங்குதான், ராசா பதவி விலகிய ஞாயிறு மாலையே சென்னையின் நட்சத்திர உணவகம் ஒன்றில் திமுக முக்கியப்புள்ளிகள் மகிழ்ந்து கொண்டாடி,சிறப்பித்த விருந்து ஒன்றின் பின்னணி மீது சந்தேக வர்ணம் பூசுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள். ராசா விலகியதால் நிகழ்த்தப்பட்ட கேளிக்கைவிருந்தா? அல்லது அது தனிவகை குடும்ப ஒன்றிப்பு விழாவா என்பதில் ஊடகத்தாரிடம் பூடகமாய் ஏதோ செய்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

ராசா பதவி விலகிய அன்றே டெல்லியில் ஊடகத்தாரின் கேள்விகளை எதிர்கொண்டு தடுப்பாட்டம் ஆடினார் ராசாத்திஅம்மாளின் புதல்வியான கனிமொழி.   ராசா, கனிமொழியின் தாயார் ராசாத்திஅம்மாளின் ஆதரவாலேயே பதவிபெற்றார் என்பது சிதம்பர ரகசியமில்லை. சென்னை ரகசியமே

அப்படியானால் அந்த சென்னை ஆடம்பர விருந்து?

Read the rest of this entry »