RSS

Monthly Archives: March 2011

நன்றாக உங்களைப் பார்த்துக் கொள்கின்றோம்!

இலவசமாக தேர்தல் அறிக்கை

இதே போல்  கூட்டங்கள் போட்டு  கூவி உங்களுக்கு வோட்டு போட சொன்னீர்கள் .வோட்டு போட்டோம் . வெற்றி அடைந்து நன்றி சொல்ல வந்தீர்கள். பின்பு இத்தனை காலம் உங்களை காண மிகவும் ஆர்வமாக இருந்தோம் .இருங்கள் நன்றாக உங்களைப்  பார்த்துக் கொள்கின்றோம் . மறுபடியும் உங்களைப்  பார்க்க ஐந்து ஆண்டுகள் ஆகலாம் . Read the rest of this entry »

Advertisements
 

Tags: ,

யாரும் கூட்டணிக்கு அழைக்காததால் ல.தி.மு.கவும் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு

1தமிழக அரசியலில் அதிரடி அரசியல்வாதிகளைப்போல் காமெடி அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை. ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சாமிக்கு அடுத்தபடியாக அரசியலில் கிச்சுகிச்சு மூட்டும் இன்னொருவர் விஜய டி.ராஜேந்தர்.

பிரபல கட்சிகளுக்கு முன்னரே கட்சி ஆலோசனைக்கூட்டத்தை ? நடத்தி தேர்தலுக்குத் தயாரானவர் விஜய டி.ராஜேந்தர். சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தனது அடுத்த படம் எப்படி இருக்கும், அதன் கதை என்னவென்றெல்லாம் ஆலோசித்தவர்.

இவர் நடத்தும் கட்சியில் இவரைத்தவிர மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எல்லாம் யாரென்றே இதுவரை பலருக்கும் தெரியாமல் மர்மமாகவே உள்ளது. எனினும் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் கூட்டணிக்கும் அழைக்கவில்லை. ஆறுதலுக்காக ஒரேயொரு சீட்டாவது தருவோம் என்றுகூட சொல்லாததால் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளார். Read the rest of this entry »

 

Tags: , ,

உங்கள் ஓட்டை இனாமாக போடுங்கள்!

உங்கள் ஓட்டை இனாமாக போடுங்கள் !

நாம் போடும் ஒட்டு இனாமாக இருக்க வேண்டும். இனாம் வாங்கியதாக இருககக் கூடாது.

நிலையான ஆட்சிக்கு வழி வகுக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் …

வெற்றி அடைந்த பின் அவர் இனாம் வாங்கி  யாருக்காவது ஒட்டு போடுபவராக அவர் இருககக் கூடாது.

இனாம் வாங்கி கட்சி மாறக்  கூடியவராக இருககக் கூடாது.
அடுத்தவர் பணத்தினை பிடுங்கி இனாம் கொடுபவராக இருககக் கூடாது.
வேண்டியவர் வேண்டாதவர் என பாகுபடுத்தி தனது கட்சியினை சார்ந்தவருக்கும் மற்றும் தனக்கு அதிகம் வோட்டு கிடைத்த தொகுதிக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து  இனாம் கொடுக்க
விரும்புபவராக இருககக் கூடாது. Read the rest of this entry »

 

Tags: , ,

கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், லேப்டாப் இலவசம்: தி.மு.க. இலவசங்களை விழுங்கும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் இன்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். திமுக தேர்தல் அறிக்கையை விழுங்கிடும் அளவில் தனது வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகளை அடுக்கியிருக்கிறார், ஜெயலலிதா!
அதன் முக்கிய அம்சங்கள்…

  • தமிழக மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாகவே வழங்கப்படும்.
  • அரசு பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் இலவச லேப் – டாப்!.
  • அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப். கலை – அறிவியல் பொறியியல் என அனைத்து மாணவர்க்கும் இது பொருந்தும். Read the rest of this entry »
 

Tags:

யாரும் தடுக்காதீர்கள் – கவிஞர் இரா .இரவி

கொள்ளையடித்தப் பணம்
கொடுத்துவிட்டுப் போகட்டும்
மலையளவு அடித்தக் கொள்ளையில்
மடுவளவுதான் தருகிறார்கள்
நெற்றி வியர்வைத் தன்னை
நிலத்தில் சிந்தி சம்பாதிதத்தன்று
குடிமக்களிடமிருந்து அடித்தப் பணம்
குடிமக்களுக்கேப் போகட்டும்
தேர்தல் நிதி என்று நியமனங்களில்
திரட்டியப் பணம் செலவாகட்டும்
தேர்தல் செலவிற்கு என்று இடமாற்றங்களில்
திரட்டியப் பணம் செலவாகட்டும் Read the rest of this entry »

 

Tags: , , ,

தே.மு.தி.க. போட்டியிடும் 41 தொகுதிகள் வெளியீடு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேமுதிக தொகுதிகள் விவரம்:
Read the rest of this entry »

 

Tags: , , ,

டிக்கெட் கொடுங்க!

உங்கள் வோட்டு யாருக்கு! பார்த்து போடுங்கள் . வோட்டு  போடாமல் இருந்திடாதீங்க. .நீங்கள் வோட்டு போடாமல் இருந்தால் அது மற்றவர் கையில் போக வாய்ப்பும் உண்டு . கடந்த  காலங்களில் நீங்கள் அடைந்த அனுபவம் உங்கள் வோட்டு வழியே பதில் சொல்லட்டும். வோட்டின்  வழியே அமையும் உங்கள் நாட்டின் நலம் உங்கள் கையில் உள்ளது.

என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

 

Tags: