RSS

சபாநாயகருக்குப் பொருத்தமானவர் ஜெயக்குமார்: விஜயகாந்த்

27 May
தமிழக சட்டமன்ற சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள டி. ஜெயக்குமார் சபாநாயகர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். டி.ஜெயக்குமார் சபாநாயகர் பொறுப்பை ஏற்றவுடன் அவரை வாழத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

எந்தவித போட்டியும் இல்லாமல் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்தே சபாநாயகர் பதவிக்கு தாங்கள் பொருத்தமானவர் என்பது தெளிவாகி விட்டது. சபாநாயகர் பட்டப்படிப்பும், சட்டமும் படித்தவர். ஆளும் கட்சியில் அமைச்சராகவும், எதிர்க்கட்சி வரிசையிலும் பணியாற்றி உள்ளார். எனவே ஆளும் கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கட்சியான எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். தங்களுக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பை வழங்கும்.

மக்களுடைய மிகப் பெரிய ஆதரவுடன் 3ஆவது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாய கருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Source : http://www.inneram.com

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: