RSS

ஹெல்மெட்டின் (தலைக்கவசம்)அணிவதின் மறுபக்கம் .

29 May

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் சொல்கின்றது.  ஹெல்மெட் அணிவதால் இருசக்கர வாகன ஓட்டுனருக்கு பாதுகாப்பு. இதன் காரணமாகவே இந்த சட்டம் .காரில் நான்கு சக்கரத்தில் பிரயாணம் செய்பவர்களுக்கு பெல்ட் அணியும் சட்டம் எப்பொழுது வரும். நான்கு சக்கரத்தில் பிரயாணம் செல்வோர் விபத்துகளில் தலையில் அடிபட்டு மடிவோர் அதிகம்.
சட்டம் வந்தபின்பு சட்டம் தெரியாது என்று யாரும் சொல்லமுடியாது இவ்விதம் சட்டம் சொல்கின்றது. சட்டம்  தெரிந்து கொள்வது நமது கடமை
ஒரு சட்டம் கொண்டுவருவதால் இந்த சட்டம் மக்களுக்கு மிகவும் தேவையா என்ற சிந்தனை தேவை . இந்த சட்டத்தினால் நன்மை அடைவோர் யார் ? ஓட்டுனர்களும் மற்றும் அவரோடு பிரயாணம் செல்வோர்களும் ஆனால் இதனை நம் நாட்டில் அவர்கள் பின்பற்றுவார்களா அல்லது முறையாக செயல் படுத்த முடியுமா என்பதனையும் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு சட்டம் கொண்டுவந்து அதனை சரியாக பயன்படுத்தாதவர்கள் அதிகமானால் சட்டத்திற்கு மதிப்பு கொடுக்கும் பண்பு குறைத்துவிடும் .சட்டத்திற்கு மதிப்பு கொடுக்காத நிலைக்கு தள்ளும் சட்டம் ஏன் ! ஹெல்மெட் அணிவது ஆஸ்திரேலியாவில் 1991 ல் கட்டாயமாக்கப் பட்டாலும் பல நாடுகளில் இம்முறை சட்டமாக்கப் படவில்லை.
இந்த குறிபிட்ட சட்டத்தினால் போலீஸ் அதிகாரியிடமிருந்து   லஞ்சம் கொடுத்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வழி வகுத்து விடும். அதிகாரி காணும்பொழுது ஹெல்மெட் அணிவது மற்ற நேரங்களில் கழட்டிவிடுவது என்பதுதான் நடந்து வரும் நிகழ்வு. வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்ட்மெடினை பல காரணங்களால் கழட்டியும் மாட்டியும் வருபதால் விபத்து உண்டாகின்றது .ஒரு கையில் செல்போன் வைத்து பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவதும் பார்க்கின்றோம். .இதற்கும்  சட்டம் வரும். சட்டம் அதிகமாகும் அதே நிலையில் அதனை மீருவோரும் அதிகமாவர்.
பெண்கள் வண்டி பின்னால் ஹெல்மெட் அணிந்து வர விரும்ப மாட்டார்கள் .தொடர்ந்து ஹெல்மெட் அணிவதால் பல தொல்லைகளும் வியாதிகளும் வர வாய்ப்புண்டு.

“ஹெல்மெட் அணியும்பொழுது அதனுடைய கீழ் ஓரப் பகுதி இந்த நாளங்களை அழுத்திப் பிடிக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். சாதாரணமாக சக்தி நாளங்கள் அழுத்தப்படக் கூடாது. அவ்வாறு அழுத்தப்படுமானால் அதனுடைய விளைவுகளாக நோய்கள் தோன்றும். இந்த நோய்கள் படிப்படியாக வலிகளாக கழுத்திலும், பிடரிகளிலும் ஏற்படும். முழங்கை வலி, தோள்பட்டை வலி, மணிகட்டு வலிகள் இன்னும் விரல் மூட்டுகளில் வலிகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கும்”.மேலும் இங்கு இதனை க்ளிக் செய்து படியுங்கள்

நமது நாட்டில் அனைத்து சாலைகளும் மோசமாகவே இருக்கிறது. முதலில் சாலைகளை சரி செய்யட்டும் .பின்பு இந்த சட்டத்தினை அமல் படுத்துவது பற்றி சிந்திப்போம். அதுவரை அவரவர் உயிர்களை அவர்கள் பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட் அணிந்து கொள்ளட்டும். விழுப்புணர்வு உண்டாக்கி இருச்சர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதனை தாங்களே விரும்பி அணிய வழி வகுப்பது சிறந்தது.

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: