RSS

Monthly Archives: June 2011

சைபர் க்ரைம் – ஒரு பார்வை

எழுதியவர் : அப்துல்  பாஸித்.

இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.


இணைய குற்றங்கள் (Cyber Crimes):

1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத  மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள். Read the rest of this entry »

Advertisements
 

Tags:

சமைக்க தெரியாதே என்ற கவலை வேண்டாம்! மனைவியுடன் போட்டி போடலாம்!

உண்பது வாழ்வதற்கு . வீட்டில் இருக்கும் பொழுது நமக்கு வகை வகையாய் சமைத்து கொடுக்க வீட்டில் மகளிர் அந்த வேலையில் ஈடுபடுவதால் நமது வேலை சாபிடுவது மட்டும்தான் . வீட்டை விட்டு பொருள் நாடி வெளிநாடு சென்ற பிறகு உணவு விடுதியில்  சாப்பிட முற்பட்டால் திரட்டிய பணமும் போய் உடலும் பாதித்துவிடும் . நாமே சமைத்து சாப்பிடும் பொழுது மன மகிழ்வும் உடல் நலமும் கிட்டுவதோடு பணமும் சேமிக்க முடியும் .

மனைவியுடன் “உணவில் உப்பில்லை அல்லது இவ்வளவு காரமா ,உனக்கு உன் அம்மா சமைக்க கற்றுக் கொடுக்க வில்லையா! ” இப்படி ஏக தாளமாக இளக்காரமாக பேசினோம். அதற்கு அவள் “ஏன் நீங்கள் சமையுங்களேன்” என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை . நாமும் ” நான் சமைக்கிறேன் பார் ” என்று சொல்ல மனமும், தைரியமும் இல்லை . அப்படி நாம் சமைத்து கொடுப்பதுதான் அவளுக்கு கொடுக்கும் பெரிய தண்டனையாக அமைந்துவிடும் என்பது மனைவிக்கு தெரிந்திருப்பதால் அவள் “ஏன் நீங்கள் சமையுங்களேன்” என்று ஒரு நாள் கூடசொல்ல மாட்டாள்

சமைக்கத்  தெரியாதே என்ற கவலை வேண்டாம் . இதோ சில வீடியா உங்களுக்கு.   சமைத்து மகிழ்வோடு உணவு அருந்தி வாழுங்கள் .

Read the rest of this entry »

 

Tags: ,

(பணம் + அதிகபணம் )2 = சொத்து2 + வியாதி2 – (நிம்மதியான வாழ்க்கை)6

கடல்கடந்து, கண்டம் கடந்து, கண்டெய்னரில் தன் உயிரேயே பணயம் வைத்து பணத்திற்காக, தன்னை சார்ந்து இருப்பவர்களின் நலனுக்காக செல்லும் சகோதரர்களுக்கு இதனை படித்து தப்பாக நினைக்கவேண்டாம், இது ஒரு சிந்தனை கட்டுரை அன்றி யாரையும் புண்படுத்துவதற்க்காக அல்ல, சமீபத்தில் வியாபார விசயமாக லண்டன் சென்றிருந்தபோது சந்தித்த ஒருவருரின் கதையை கேட்டபிறகு இந்த கட்டுரை எழுத விழைந்தேன்

பணம்
பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும்,பணம் பாதாளம்வரை பாயும், பணமில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற வார்த்தைகள் மூலம் பணம் பணம் என்று நாம் மனமும்,மைண்ட்டும் செட்டாகி அது எங்கு கிடைத்தாலும் ஓட,ஆட வைக்கிறது.பணம் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் மாயப்பொருள்தான் அதில் டவுட் இல்லை,ஆனாலும் அதிகப்படியான “பணம்” நம்மை குஷிப்படுத்துமா அல்லது நம் மகிழ்ச்சியை குதறுமா என்பதுதான் என் கேள்வி….அலசிபார்ப்போமே..இந்த கட்டுரைக்கு 100% தகுதி படைத்தவன் நானும் அல்ல என்பதை நினைவுபடுத்துகின்றேன் Read the rest of this entry »
 

Tags:

திருக்குறள் இசைத்தமிழ் – இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம்

திருக்குறள் இசைத்தமிழ் – இசைக்குறுவட்டுகள் – இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.

 

Tags:

தமிழா தமிழா சொல் கவிஞர் இரா .இரவி

 

தமிழா தமிழா சொல் தினமும் நீ
தரணியில் பேசுவது தமிழா சொல்

உலகின் முதல் மொழி தமிழ் உணர்
உலக மொழிகளின் தாய் தமிழ்

ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை
உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை

நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும்
நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை

அழகு தமிழில் அம்மா இருக்கையில்
ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை

அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில்
ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை

தமிழோடு பிற மொழி கலந்துப் பேசுவது பிழை
தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு

ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து
ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை

தமிழன்தான் தமிழ் பேசும்போது
தமிங்கிலம் பேசி உளறுகின்றான்

இரு கரம் குவித்து வணக்கம் சொல்
ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்துஇணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Source : http://eraeravi.wordpress.com

தமிழா தமிழா சொல் கவிஞர் இரா .இரவி

 

Tags: ,

உறவினர்க்கு உதவுதலின் சிறப்பு.

எழுதியவர் ஜாஃபர் அலி

582.அன்ஸார்களில் அபூ தல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ‘இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!’ எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.

புஹாரி: 1461 அனஸ் (ரலி) Read the rest of this entry »
 

Tags: ,

ஆட்சி மாறியதால் காட்சியும் மாறியது!

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கண்தானம், ரத்த தானம், முதியோர், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து தனது பிறந்த நாளை கொண்டாடுமாறு ரசிகர்களுக்கும், மக்கள் இயக்கத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அவரது ரசிகர்கள், ரத்ததானம், கண்தானம் செய்தனர்.

சென்ற ஆண்டு வரை திமுக வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த விஜய் பிறந்தநாள் விழா சுவரொட்டிகளில் திமுக மாவட்டச் செயலாளர் படமும், முன்னாள் அமைச்சர் படமும் இடம்பெற்றிருக்கும். இதற்கு காரணம் விஜய் மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் திமுக மாநகர இளைஞர் அணியின் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய விஜய் பிறந்தநாள்விழா சுவரொட்டிகளில் மேற்கூறிய அனைத்து அம்சங்களும் மிஸ்ஸிங்… மக்கள் இயக்கம் நிர்வாகிகள் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், “ஆட்சி மாறியது; காட்சியும் மாறியுள்ளது” என்றார்.

Source : http://www.inneram.com

 

Tags: