RSS

உறவுகள் உங்கள் உள்ளத்தில்…

07 Jul

உறவுகள் உடைய பல காரணங்கள்  உள்ளன. ஆனால் அது மலர பல  வழிகளும்  உள்ளன.

நாளாகும் – நட்பையும் உறவையும் வளர்க்க;

நிமிடம் போதும் நறுக்க.

எந்த உறவையும்   வலுப்படுத்த பல  அடிப்படை கொள்கைகள்  உள்ளன.  இது விட்டுக்கொடுத்தல், நல்ல தகவல்களை சொல்வது, கேட்க விருப்பம் கொள்வது , சமரசம் செய்துக் கொள்ள நாடுவது,  மற்றும் பரஸ்பர மரியாதையான கருத்துகளை  முறையாக உள்வாங்கிக் கொள்வது ஆகியவற்றில் அடங்கும். மற்றும் இது நம்பிக்கை என்னும் ஒரு நெருக்கமான பிணைப்புத் தொகுப்பாகவும் அடித்தளமாகவும்  உள்ளது.
கவனச்சிதறல்கள் உங்கள் கவனத்தை உறவின் பாலத்திலிருந்து பிரித்து விடாதவாறு பார்த்துக் கொள்வதுடன் நெருக்கமான பிணைப்புத்  தொகுப்பாக அது இருக்க நாட வேண்டும்.

இரண்டு மனிதர்கள் நல்லதொரு உறவை ஏற்படுத்திக் கொள்ள கால நேரம் அவசியம். ஒருவர் நம்மிடம் தன் கருத்தினைப் பரிமாற வருகிறார் எனில் அவருக்கு உரிய நேரம் ஒதுக்கி அவர் சொல்வதை முழு கவனத்துடன் செவி கொடுத்து கேட்டிட  வேண்டும்.  

நீங்கள் ஒரு நபர் மீது நேரத்தை செலவிடும்  போது, அவர்கள் மீது  உங்கள் முழு கவனம் சிதைய விடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகின்றது . கவனச்சிதறல்கள் உங்கள் கவனத்தை பிரித்து விடாமல் இருக்கவும் வேண்டும்   . உங்கள்  உறவினை  தரமான நேரத்தில்   செலவிடவில்லை  என்றால், மற்ற நபரின்  மதிப்பு பட்டுவிடும்.  நேரம் மற்றும் நம்பிக்கை ஒரு நெருக்கமான பிணைப்பு தொகுப்பாக உள்ளது.

“நான் நினைக்கிறேன் … (முதலியன, அதிருப்தி, கோபமாக).” என்ற தன்னை முன்னிறுத்தி நினைப்பதனை தவிர்த்து
“நாம் என்ன செய்யலாம் … ”  “இதனைப் பற்றி உங்கள் கருத்தினை அறிய விரும்புகின்றேன் ..” இவ்விதமான இணைந்து செயல் படும் கருத்து உடன்பாடுகள் உறவினை வலுப்படுத்தி வெற்றியினைத்தரும்  ஆற்றலுடையது.
தவறாக புரிந்து கொள்வதனை  தவிர்க்க வேண்டும். உதவி செய்வதும்  அடிப்படை தகவல்களை  தொடர்ந்து  ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளும்  எளிய சூத்திரத்தை கையாண்டால் குறிப்பாக மோதல் ஏற்படுவதனை தவிர்க்கலாம்.

உங்கள் உணர்வுகளை மற்றவர்  பிரச்சினையாக  மாற்றி அது    அவர் மனதிற்கும் ஒரு வேதனை தரக் கூடியதாக அமைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.   உங்கள் தேவை மற்ற  வேறு நபரின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியாதாக  ஒரு தீர்வும்  இருந்து நம்மைச்  சார்ந்தவருக்கு  முன்னுரிமையும்  கொடுத்து  ஒரு பரிந்துரைக்கும் தன்மையாகவும் இருக்குமானால் அது சிறப்பாக இருக்கும் .

நீங்கள்  நேர்மறை உணர்வுகளை கூட பகிர்ந்து கொள்ள முடியும்.  “நீங்கள் என்னை நாடி  உதவி கேட்டு வரும்போது மகிழ்வடைகின்றேன் , மற்றும் நீங்கள் எந்த காலத்திலும்  என்னை உதவி நாடி வந்தால்  உண்மையிலேயே நான் அதை விரும்புகிறேன்.” என்பது இருவருக்கும் மனதில் ஆழமான உறவு ஏற்பட வழி வகுக்கும்

கேட்பதும் நல்ல தகவல் பரிமாற்றமும் ,  உண்மையானதாக இருக்க வேண்டும்.அது  வெறும் வார்த்தைகளாகவும் ஜோடனைகளாகவும் இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மகிழ்வான செய்திகளை தெரிவிப்பது கேட்பவரது மனதிற்கு மகிழ்வினை தந்து அவர் மன வலிமையினை உறுதிப் படுத்தக் கூடும். சோகமான வருத்தம் தரக்   கூடிய நிகழ்வுகளை நினைவுப் படுத்திக் கொண்டே இருப்பதனால் கேட்பவர் உள்ளம் சோர்வடைந்து உழைக்கும் நாட்டம் அவருக்கு குறைந்து விடும்.
நீங்கள் ஒரு காலமும் “இவர்கள் மதிக்க மாட்டார்கள்” “ஒரு ஆரோக்கியமான உறவு இயலாது “என்ற முடிவுக்கு வர வேண்டாம் . மனிதனை நேசிப்பது ஒரு உயர்ந்த செயல். நம்மிடம் இருக்கும் குறை நமக்கு தெரியாது ஆனால் பிறர் குறை நமக்குத் தெரியும். குறை இல்லாத மனிதனில்லை. குறைகளை , கவலைகளை சொல்லித் தீர்ப்பதால் உங்கள் மன பாரம் குறையலாம் ஆனால் அது அடுத்தவருக்கு தேவையற்ற ஒரு செய்தி என்பதனை நின்னைவில் நிறுத்தங்கள். ஒரு சிலர் அதனை விளம்பரப் படுத்தி நமக்கு மிகவும் வேதனைகளை உண்டாக்கிவிடுவார்கள்
இந்த வழிமுறைகளை தொடர்ந்து நீங்கள் செயல்பட்டால் வெற்றிகரமாக வாழ வழி வகுக்கும்

Advertisements
 

Tags: , , ,

2 responses to “உறவுகள் உங்கள் உள்ளத்தில்…

 1. ***வாஞ்ஜுர்***

  July 8, 2011 at 2:45 am

  உறவுகள் விலகாமல் உடையாமல் வளமடைந்து தரித்து நிலைத்திட மந்திரமேதுமில்லை.

  நம்முடைய செயல்பாடுகளிலேயே அதை சாதிக்கலாம் என்பதை இப்பதிவில் அழகாக எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது.

  வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

   
 2. rajakamal

  July 10, 2011 at 10:19 am

  superb. everone has to follow – thanks mr Ali.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: