RSS

ஊடகம் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விட முடியும்: கருணாநிதி

08 Jul
ஊடகங்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும் என்றும் குற்றம் சாட்டிய திமுக தலைவர் கருணாநிதி, தயாநிதி மாறனுக்கு தி.மு.க. துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகல் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் `மீடியா’க்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதி விலக்கல்ல.

கேள்வி:-தயாநிதி மாறனுக்கு கட்சி துணையாக இருக்குமா?

பதில்:- இருக்கும்.

கேள்வி:- இதுவரை துணையாக இருந்தது போல தெரியவில்லையே?

பதில்:- இதுவரை அவருக்கு என்ன நடந்தது?

கேள்வி:- தயாநிதிமாறனுக்குப் பதில் வேறு யாராவது மத்திய அமைச்சர் ஆவார்களா?

பதில்:- தெரியாது.

கேள்வி:- மத்திய அரசிடம் இருந்தோ, காங்கிரஸ் தலைவியிடம் இருந்தோ, நேற்றிரவில் இருந்து யாராவது உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?

பதில்:- இல்லை.

கேள்வி:- இன்று பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறதே?

பதில்:- அது உங்கள் கற்பனை.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

http://www.inneram.com

Advertisements
 

Tags: ,

One response to “ஊடகம் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விட முடியும்: கருணாநிதி

  1. arumugam

    July 8, 2011 at 12:29 pm

    thayanithi rajinamavukku medioyave karanam
    athavathu sun tvkku 600 kodi kai mariyathu
    enave medioyave karanam

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: