RSS

திமுகவுக்கு ஜால்ரா அடிக்க என்னால் முடியாது: இளங்கோவன்

17 Jul
தூத்துக்குடி வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தபோது கூறியதாவது:

காமராஜர் தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியவர். இன்று இளைஞர்கள் சிறந்த கல்வி கற்று 50 ஆயிரம், 60 ஆயிரம் என சம்பளம் வாங்கும் நிலையில் உள்ளனர் என்றால் இதற்குக் காரணம் காமராஜர்தான்.

9 ஆண்டுகள் ஆட்சி செய்து 3 பிரதமர்களை உருவாக்கியவர். சிலர் காமராஜர் ஆட்சியைத் தருகிறேன் என்று கூறுகின்றனர். இதனை எப்படி காங்கிரஸ்காரர்கள் பொறுத்துக் கொள்ள முடியும். காங்கிரசை யாரும் அழிக்க முடியாது. பெரிய பாரம்பரியம் அதற்கு உண்டு. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அதிலிருப்பவர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு.

ஆனால் காங்கிரசிலிருந்து வெளியே சென்றால் எங்கும் மரியாதை கிடைக்காது. திமுகவுடன் கூட்டணி தேவையில்லை என்றும் உள்ளாட்சித் தேர்தலிலாவது தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் தொண்டர்கள் விரும்புகின்றனர்.

திமுகவுக்கு சில பேர் ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பதைப்போன்று என்னால் ஜால்ரா அடித்து கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து மத்திய அமைச்சர் வாசனிடம் பேசியுள்ளேன். தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்துவேன். காங்கிரசிலுள்ள முக்கியப் புள்ளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம். அனைவருக்கும் ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று நமது செல்வாக்கை மக்களிடம் நிரூபிப்போம்.

4 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் தோற்றது. காரணம் கூடாத நட்பு தான்.

ராதாபுரம் பஸ்நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதையாவது செய்தார்களா? எதுவும் இல்லை. அது போல யாரும் தமிழகத்தில் காமராஜருக்கு மரியாதை செலுத்தாமல் ஆட்சி செய்து விட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும் ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஊழல் நடந்துள்ளது என்று தெரிந்தால் காங்கிரஸ் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். கல்மாடி மீது நடவடிக்கை எடுக்கவில்லையா? சவான் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?

நான் எந்த ஒரு கட்டத்திலும் காங்கிரசிலிருந்து வெளியே போகமாட்டேன். நான் ஒட்டு மொத்த கட்சியின் குரலாக ஒலிப்பேன். நான் சோர்வடையும் போதெல்லாம் நெல்லை, தூத்துக்குடிக்கு வருவேன். இங்குள்ள தேசிய முகங்களை பார்க்கும் போதெல்லாம் செல்போன் ரீசார்ஜ் செய்யப்பட்டபின் ஏற்படுவதுபோல் சந்தோஷம் அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source : http://www.inneram.com

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: