RSS

Monthly Archives: August 2011

கீற்றில் உங்களது படைப்பை நீங்களே வலையேற்றலாம்

கீற்று இணையதளத்தில் உங்களது படைப்புகளை நீங்களே வலையேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீற்றில் உங்களைப் பற்றிய விவரங்களை பின்வரும் பக்கத்தில் (http://www.keetru.com/index.php?option=com_user&view=register) பதிவு செய்ய வேண்டும்.

கீற்றில் படைப்பாளியாக பதிவது..

‘பெயர்’ என்ற கட்டத்தில் எந்தப் பெயரில் உங்களது படைப்புகள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்தப் பெயரை தமிழில் இடவும்.

‘பயனர் பெயர்’, ‘கடவுச்சொல்’ என்ற இரு கட்டங்களில் Username, Password விபரங்களை உள்ளீடு செய்யவும். இவற்றின் மூலம்தான் நீங்கள் கீற்று கணக்கிற்குள் புக முடியும்.

‘Country code’ என்ற கட்டத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டின் ISD code-யும், ‘தொடர்பு எண்’ என்ற கட்டத்தில் உங்களது கைப்பேசி எண்ணையும் அளிக்கவும். (இந்த எண்கள் கீற்று குழுவினரால் சரிபார்க்கப்படும்.)

இதர கட்டங்களிலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்யவும்.

பக்கத்தின் இறுதியில் தெரியும் நான்கு இலக்க எண்களை, கடைசியாக இருக்கும் கட்டத்தில் இடவும். (நான்கு இலக்க எண்கள் சரியாகத் தெரியவில்லையென்றால், ‘Letters not clear? Click to renew captcha’ என்பதை சொடுக்கவும்.)

‘பதிவு செய்க’ என்பதை பொத்தானை அழுத்தினால், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் வரும். அதில் இருக்கும் இணைப்பை சொடுக்கினால், உங்களது பதிதல் நிறைவு பெறும். கீற்றில் பதிவாகியுள்ள உங்களைப் பற்றிய‌ தகவல்கள் யாரிடமும் பகிரப்படாது என்று உறுதி கூறுகிறோம்.

கீற்றில் பதிந்துள்ளவர்களுக்கு மட்டுமே படைப்புகளை சமர்பிக்கவோ, பின்னூட்டங்களை இடவோ அனுமதி கிடைக்கும். Read the rest of this entry »

Advertisements
 

Tags: ,

‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு…!! அமெரிக்காவின் பேரழிவு….!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!!

V V IMPORTANT ECHONOMIC ARTICLE

o அடி மேல் அடி

 

o அமெரிக்கா பொருளாதார எத்தர்கள்

o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?

o அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் சைக்கிள் ஏமாற்று

o அமெரிக்க-சீன ‘பரஸ்பர ஒட்டுண்ணி’ உறவு

o சதாம் ஹுசைன் கொடுத்த முதலடியும் அமெரிக்காவின் பதிலடியும்

 

o கடங்கார அமெரிக்கவும் ஈட்டிக்கார சீனாவும்

o ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் விளாசிய விளாசல்

o அரசியல் பிழைத்தாருக்கு பொருளாதாரமே கூற்றாகும்!!!

o அமெரிக்க-ஐரோப்பிய பின்னடைவும் அயோக்கிய தலைவர்களும்!!

o அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் அதனால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும்.

o தற்காக்கும் இந்திய தந்திரங்கள்

o எப்படி சரியும் இந்திய சந்தை?

o இந்தியாவில் சரியக்கூடிய முக்கிய துறைகள்

o என்ன செய்தால் பித்தம் தெளியும்?

 

‘வட்டி அழிகிறது’! ஐரோப்பாவின் சீரழிவு…!! அமெரிக்காவின் பேரழிவு….!!! தப்பிப் பிழைக்குமா இந்தியா?!!! 

 

நியூயார்க் நகரம்: உலகின் ‘வட்டி’ அடிப்படையிலான ‘ஒட்டுண்ணி சந்தை பொருளாதாரத்தை’ (நன்றி: திரு. விளாதிமிர் புடின், பிரதமர், ரஷியா) தூக்கி நிறுத்தும் அமெரிக்காவின் பொருளாதார தலைநகரம்.

 

பத்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் பெற்ற அதிர்ச்சியை விட அதிக அதிர்ச்சியை சமீபத்திய ‘பங்கு சந்தை’ வீழ்ச்சியில் பெற்று உறைந்து போயுள்ளது.

கொடூர கனத்துடன் வட்டி பொருளாதாரம் செய்யும் சவாரியின் அழுத்தம் தாளாது உலகின் தொழில் மற்றும் வியாபார குதிரைகளான பங்கு சந்தைகள் உட்காரத் தொடங்கியுள்ள நிலையில், உலகெங்கும் ‘வட்டி அழிகிறது’. Read the rest of this entry »

 

Tags:

ஜன் லோக்பால் மசோதா

அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைதாம் உண்மையில் புரட்சிகரமானதெனக் கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ‘ஜன் லோக்பால் மசோதா’ பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்தக் கேள்விக்குக் கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சரியென அவர்கள் ‘டிக்’ செய்திருப்பார்கள்
(அ) வந்தே மாதரம்!
(ஆ) பாரத அன்னைக்கு ஜே!
(இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா!
(ஈ) இந்தியாவுக்கு ஜே!
முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது).

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது “சாகும் வரை உண்ணாவிரதத்தை” சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் “அன்னா அணி” என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்புச் சட்ட வரைவுக் கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக இருந்தது.
Read the rest of this entry »

 

Tags: ,

பாலைவனத் தொழிலாளியின் வேலை கூறும் பாடம்

1)
சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி
அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு
துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம்
வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?
2)
இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே
கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார்
விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி
தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?
3)
பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க
பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய்
காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு
ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்
4)
இளமைக் கருக்க இரத்தம் சுருங்க
வளமைப் பெருக்க வடிக்கு முழைப்பை
களவாய்ச் செலவு; கடும்விலை ஏற்றம்
உளமே வெடிக்க உறிஞ்சிக் குடிக்கும்
ஓலை = காசோலை (cheque)
களவாய்ச் செலவு = களவாகுதற்போல் வீண் செலவு
யாப்பிலக்கணம்:
பாடல் 1 & 2 = இயற்றரவு கொச்சகக் கலிப்பா
பாடல் 3 & 4 = வெண்டளையால் வந்த கலிவிருத்தம்
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

Source : http://www.kalaamkathir.blogspot.com/

 

Tags: ,

ராகுல் முன்னிலையில் காங். இணைந்தார் சிரஞ்சீவி

 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். இருமாதங்களுக்கு முன் தனது கட்சியான  பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து அறிக்கை வெளியிட்டார்.

ஹைதராபாத்தில் நடந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, முழு மனதுடன் சிரஞ்சீவியைக் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வரவேற்பதாகவும், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்க்ச் சிரஞ்சீவி முழு அளவில் பணியாற்றுவார் என நம்புவதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, “காங்கிரஸ் கட்சியில் சேர்வது, தனக்கு கெளரவமான விஷயம்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியால் பிளவுபட்டு இருக்கும் ஆந்திர காங்கிரஸில், சிரஞ்சீவியின் வருகை, புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : http://www.inneram.com/

 

Tags:

சரவணா ஸ்டோர்ஸில் கோடிக் கணக்கில் தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் பறிமுதல்!

தியாகராய நகர் மற்றும் புரசை வாக்கத்தில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில்  வியாழக் கிழமைக் காலை முதல் 500 க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் கோடிக் கணக்கிலான மதிப்புடைய கணக்கில் வராத தங்கக் கட்டிகள், பணம் மற்றும் ஆவணங்கள் வருமானவரித் துறையினர் கைப் பற்றியுள்ளனர். இருப்பினும் கைப் பற்றப் பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் தங்கக் கட்டிகளின் மதிப்பை தெரிவிக்க வருமானவரித் துறையினர் மறுத்து விட்டனர்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்கள் தாக்கல் செய்த கடந்த 6 வருட வருமானவரி கணக்கை வருமானவரி துறையினர் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  சரவணா ஸ்டோர்ஸில் நடைபெற்ற சோதனை காரணமாக இரு நாட்கள் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மூடப் பட்டு வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப் பட வில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் மேல் தளத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்து மரணமடைந்ததும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

Source : http://www.inneram.com

 

Tags: ,

புதிய சட்டமன்றத்தை மருத்தவமனையாக மாற்றுவதில் எனக்கு அதிருப்தி இல்லை: கருணாநிதி

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தை மருத்துமனையாக மாற்றுவதில் எனக்கு அதிருப்தி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் தி.மு.க. இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில், சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:

புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்கள். நான் கூட என்ன செய்யப்போகிறார்களோ என்று நினைத்தேன். அதற்கு பதில் கிடைத்தது. மக்களுக்கு பயன்படுவதற்காக மருத்துவமனையாக ஆக்கப்போகிறார்கள்.

மருத்துவமனையாக ஒரு வீட்டை, ஒரு கட்டிடத்தை ஆக்குவதில் தவறில்லை. நானே இதற்கு வழிக்காட்டியிருக்கிறேன். எனது கோபாலபுர இல்லத்தை எனக்கு பிறகு மருத்துவமனையாக மாற்ற எழுதி கொடுத்துள்ளேன்.

அதனால் புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதில் அதிருப்தி எதுவும் இல்லை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Source : http://www.inneram.com/

 

Tags: