RSS

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம்; கலாம் ஆக முடியாது: விஜயகாந்த்

13 Aug
சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம்; கலாம் ஆக முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நகர்ப்புறங்களில் வசதிகள் அதிகமுள்ள பள்ளிகளில் படித்த பிள்ளைகள் நாங்கள் 4ஆம் வகுப்பில் படித்ததுதான் தற்போது 8ஆம் வகுப்பு பாடத்தில் உள்ளது என்றும் இதில் புதிதாக என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம் என்றும் கேட்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கிராமப்புற மாணவர்களுக்கு 8ஆம் வகுப்பு பாடப்புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டதின்படி தேர்வு வைத்தால் நகர்ப்புற மாணவர்கள் எளிதில் தேர்வாகி மேல் படிப்புக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களால் அது முடியாது.

தற்போதுள்ள பாடத்திட்டத்தை படித்தால் கிளர்க்குகளை உருவாக்கலாம். ஆனால் அப்துல்கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது. உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டுமானால் முதலில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

கடந்த ஆட்சியில் திமுகவினர் சட்ட விரோதமான முறையில் மக்களை பயமுறுத்தி மக்களின் சொத்துக்களை பறித்தனர். இப்போது இத்தகைய சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு தர முன் வந்து இருப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்வேற்கப்படுகிறது.

தமிழக அரசு ஒரு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு உதவிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டும் வகையில் சிறந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source : http://www.inneram.com

 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: