RSS

கீற்றில் உங்களது படைப்பை நீங்களே வலையேற்றலாம்

30 Aug

கீற்று இணையதளத்தில் உங்களது படைப்புகளை நீங்களே வலையேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீற்றில் உங்களைப் பற்றிய விவரங்களை பின்வரும் பக்கத்தில் (http://www.keetru.com/index.php?option=com_user&view=register) பதிவு செய்ய வேண்டும்.

கீற்றில் படைப்பாளியாக பதிவது..

‘பெயர்’ என்ற கட்டத்தில் எந்தப் பெயரில் உங்களது படைப்புகள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்தப் பெயரை தமிழில் இடவும்.

‘பயனர் பெயர்’, ‘கடவுச்சொல்’ என்ற இரு கட்டங்களில் Username, Password விபரங்களை உள்ளீடு செய்யவும். இவற்றின் மூலம்தான் நீங்கள் கீற்று கணக்கிற்குள் புக முடியும்.

‘Country code’ என்ற கட்டத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டின் ISD code-யும், ‘தொடர்பு எண்’ என்ற கட்டத்தில் உங்களது கைப்பேசி எண்ணையும் அளிக்கவும். (இந்த எண்கள் கீற்று குழுவினரால் சரிபார்க்கப்படும்.)

இதர கட்டங்களிலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்யவும்.

பக்கத்தின் இறுதியில் தெரியும் நான்கு இலக்க எண்களை, கடைசியாக இருக்கும் கட்டத்தில் இடவும். (நான்கு இலக்க எண்கள் சரியாகத் தெரியவில்லையென்றால், ‘Letters not clear? Click to renew captcha’ என்பதை சொடுக்கவும்.)

‘பதிவு செய்க’ என்பதை பொத்தானை அழுத்தினால், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் வரும். அதில் இருக்கும் இணைப்பை சொடுக்கினால், உங்களது பதிதல் நிறைவு பெறும். கீற்றில் பதிவாகியுள்ள உங்களைப் பற்றிய‌ தகவல்கள் யாரிடமும் பகிரப்படாது என்று உறுதி கூறுகிறோம்.

கீற்றில் பதிந்துள்ளவர்களுக்கு மட்டுமே படைப்புகளை சமர்பிக்கவோ, பின்னூட்டங்களை இடவோ அனுமதி கிடைக்கும்.

படைப்புகளை சமர்ப்பிக்கும் முறை

இப்போது உங்களது பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை ‘நுழைவாயில்’ பகுதியில் இட்டு, கீற்று கணக்கிற்குள் நுழைந்தால் கீற்றின் இடப்பக்கத்தில் ‘படைப்புகளை சமர்பிக்க’ இணைப்பு செயலுக்கு வரும். அதை அழுத்தவும்.

‘படைப்புகளை சமர்பிக்க’ பக்கத்தில் உள்ள ‘தலைப்பு’ என்ற இடத்தில் உங்களது படைப்பின் தலைப்பை இடவும். அதற்குக் கீழே உள்ள பெரிய கட்டத்தில் படைப்பினை உள்ளீடு செய்யவும்.

பின்பு அவற்றை மொத்தமாக தேர்வு செய்து ‘align full’ என்ற குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும் (உங்களது படைப்பு கவிதை என்றால், இந்தச் செயல் தேவையில்லை)

கீழே ‘பகுதி’ என்ற இடத்தில் உங்களது படைப்புக்குப் பொருத்தமான பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். (உங்களது படைப்பு கவிதை, சிறுகதையாக இருந்தால், ‘சமூகம்-இலக்கியம்’ என்பதையும் அறிவியல் படைப்பாக இருந்தால் ‘அறிவியல் ஆயிரம்’ என்பதையும் தேர்வு செய்யவும்.)

அதற்குக் கீழே ‘வகை’ என்ற கட்டத்தில் சரியான வகை ஒன்றைத் தேர்வு செய்யவும். (உதாரணத்திற்கு நீங்கள் எழுதியுள்ள படைப்பு ‘விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்கள்’ என்றால், முந்தைய ‘பகுதி’யில் அறிவியல் ஆயிரம் என்பதைத் தேர்வு செய்திருப்பீர்கள். இப்போது ‘வகை’யில் ‘விண்வெளி’ என்பதைத் தேர்வு செய்யவும்.)

‘படைப்பாளி பெயர்’ என்ற இடத்தில் உங்களது பெயர் இருக்கும். இந்தப் பெயரை மாற்ற விரும்பினால், ‘உங்களது தகவல்கள்’ பக்கத்திற்குச் செல்லவும். கீற்றில் உங்களது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரே ஒரு பெயரை பயன்படுத்தவும். அப்போதுதான் ‘ஆசிரியரின் படைப்புகள்’ என்ற பக்கத்தில் அனைத்துப் படைப்புகளும் இடம்பெறும். ஒரு படைப்பிற்கான உங்களது பெயரில் சிறு புள்ளியோ, காலியிடமோ வித்தியாசமாக இருந்தாலும், கீற்று செயலி வேறொரு படைப்பாளியாகவே கருதி, அந்தப் படைப்பை ‘ஆசிரியரின் படைப்புகள்’ பக்கத்தில் இடம்பெற அனுமதிக்காது.

விவரணம் கட்டத்தில் படைப்பு குறித்த ஒருவரிக் குறிப்பை இடவும் அல்லது படைப்பின் தலைப்பையே இங்கும் இடலாம்.

குறிச்சொற்கள் பகுதியில் படைப்பில் இருக்கும் முக்கிய குறிச்சொற்களை இடவும். எடுத்துக்காட்டாக, ‘இடஒதுக்கீடுக்கான போராட்டங்களும், மத்திய அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதோர் நிலையும்’ என்ற கட்டுரைக்கு, பின்வரும் குறிச்சொற்களை எழுதலாம். “இடஒதுக்கீடு, மத்திய அரசுப் பணிகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மண்டல் குழு பரிந்துரை”. சரியான குறிச்சொற்கள் இருந்தால் மட்டுமே, இடஒதுக்கீடு தொடர்பான படைப்புகளின் பக்கத்தில் உங்களது படைப்பும் இடம்பெறும்.

இறுதியாக ‘சேமிக்க’ பொத்தானை அழுத்தவும். இப்போது உங்களது படைப்பு கீற்றின் database-ல் சேர்க்கப்பட்டிருக்கும். ஆசிரியர் குழுவின் மட்டுறுத்தலுக்குப்பின் தளத்தில் பார்வைக்கு வரும்.

படைப்புகள் வெளியான பின்பு அவற்றில் தவறுகள் இருந்தால் சரிசெய்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அதற்கு குறிப்பிட்ட அந்தப் படைப்பிற்குச் சென்று, edit குறியை அழுத்தவும்.

விதிமுறைகள்:

1. நீங்கள் அளித்த தகவல்கள் சரியானதாகவும், உங்களது படைப்புகள் கீற்றின் நோக்கத்திற்கு ஒத்திசைவாக இருப்பதாகவும் கீற்று ஆசிரியர் குழு கருதும் நிலையில், ‘Autopublish’ வசதி தங்களுக்குத் தரப்படும். அதன்பின் மட்டுறுத்தல் இல்லாமலேயே உங்களது படைப்புகள் கீற்றில் வெளியாகும்.

2. நாளொன்றுக்கு ஒரு பகுதியில் ஒரு படைப்பு மட்டுமே வெளியிட முடியும்.

3. வேறு இணையதளங்களில் வெளியான படைப்புகளை கீற்றில் வெளியிட வேண்டாம். வலைப்பதிவர்கள் கீற்றில் அவர்களது படைப்பு வெளியான பின்பு, ஒரு நாள் தாமதமாக அவர்களது வலைப்பக்கத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

4. ப‌டைப்புக‌ளை த‌மிழ் ஒருங்குறியில் (Tamil unicode) அனுப்பவும். ஒருங்குறியில் த‌ட்ட‌ச்சு செய்ய‌: http://www.higopi.com/ucedit/Tamil.html. ஒருங்குறிக்கு மாற்ற: http://suratha.com/reader.htm

5. கீற்றின் கொள்கைகளுக்கு விரோதமான படைப்புகள் வெளியானது குறித்து தெரியவந்தால், அந்த படைப்புகளை தளத்திலிருந்து சரிசெய்யவோ, நீக்கவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு. அந்த படைப்பாளிக்கு ‘Autopublish’ தரப்பட்டிருந்தால், அதுவும் நீக்கப்படும்.

6. தொடர்ந்து தவறான படைப்புகளை ஒருவர் அனுப்புவாரேயானால், அவரது கணக்கு (account) கீற்றிலிருந்து நீக்கப்படும்.

மாற்று இயக்கத்தினர் அனைவருக்குமான தளம் என்று கீற்று மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவே கீற்றின் வாசலை உங்கள் அனைவருக்குமாகத் திறந்து விட்டிருக்கிறோம். தமிழ் இணைய உலகிற்கு வளமான படைப்புகளை வழங்க இது உதவுமேயானால் நிச்சயம் நாங்கள் மகிழ்வோம்.

என்றும் அன்புடன்

கீற்று நந்தன் ( editor@keetru.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் , கைப்பேசி எண்: 99400 97994)

கீற்று ஆசிரியர் குழு சார்பாக…

Source : http://www.keetru.com

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: