RSS

Monthly Archives: September 2011

கனிமொழிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று செய்தி போடாதவரை மகிழ்ச்சி – கருணாநிதி!

கனிமொழிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியிடாதவரை மகிழ்ச்சியே என்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கனிமொழி மீது தற்போது சி.பி.ஐ. சாற்றியிருக்கின்ற குற்றச்சாட்டு, பத்தாண்டுகள் தண்டனைக்குரியது என்று இன்று மாலைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்களே? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு
”மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். அவர்கள் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுபோடவில்லை. அதுவரை மகிழ்ச்சி.” என்று பதில் அளித்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகளுக்குப் பதிலாக பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக மாறி தீர்ப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
Source : http://www.inneram.com/

Advertisements
 
Tags:

ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி?

நம்முடைய பதிவுகளில் சில நேரங்களில் ஆடியோ, வீடியோ, பிடிஎஃப், பவர்பாய்ன்ட் போன்ற ஃபைல்களை இணைக்க விரும்புவோம். ப்ளாக்கரில் Default-ஆக அந்த வசதி இல்லை. அவற்றை நம் பதிவுகளில் இணைப்பது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

Read the rest of this entry »

பின் தங்கிய சிறுமியிடமிருந்து …..by ஃபஹீமாஜஹான்

மேசைமீது உருண்டோடும் பென்சிலை
“ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்

வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்

எனது குறைபாடுகளை நீங்கள்
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில்
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
புறந்தள்ளிவிட்டு
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்

Read the rest of this entry »

Tags:

பத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள் – இலவமாகப் பதிவிறக்கம்

பத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள்

இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறுவட்டு – 4

3. பட்டினப்பாலை

இந்த இணைப்பினைச் சொடுக்கவும். http://ta.cict.in/node/51

Tags:

காதல் வேண்டும்….

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ..

மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய் ஆஆஆஆஆ
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ..
Read the rest of this entry »

Tags:

விருப்ப சேனல்கள், தரமான சிக்னல் இல்லை! அரசு கேபிள் டிவி புறக்கணிப்பு

சென்னை: மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் மக்கள் விரும்பும் சேனல்கள் இல்லாததால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறிப்பாக பெண்கள் கொந்தளித்து போயுள்ளனர். இதனால், கேபிள் ஆபரேட்டர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்து வருகின்றனர்.
அரசு கேபிள் டிவி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் ஒளிபரப்பில் மக்கள் விரும்பி பார்த்து வந்த கட்டண சேனல்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் கடிதம், ஃபேக்ஸ் மூலமும் நேரிலும் மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டு வருகின்றனர்.  மேலும் ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். Read the rest of this entry »