RSS

விருப்ப சேனல்கள், தரமான சிக்னல் இல்லை! அரசு கேபிள் டிவி புறக்கணிப்பு

07 Sep
சென்னை: மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் மக்கள் விரும்பும் சேனல்கள் இல்லாததால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறிப்பாக பெண்கள் கொந்தளித்து போயுள்ளனர். இதனால், கேபிள் ஆபரேட்டர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்து வருகின்றனர்.
அரசு கேபிள் டிவி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் ஒளிபரப்பில் மக்கள் விரும்பி பார்த்து வந்த கட்டண சேனல்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் கடிதம், ஃபேக்ஸ் மூலமும் நேரிலும் மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டு வருகின்றனர்.  மேலும் ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நீண்டகாலமாக விரும்பி பார்த்து வந்த சன், ராஜ், விஜய் டிவி போன்ற சேனல்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டதால் தங்கள் அபிமான சீரியல்களை பார்த்து ரசிக்க முடியாத பெண்கள் கூட்டம் கூட்டமாக ஆபரேட்டர்களை அணுகி மாற்று ஏற்பாடு செய்யுங்கள்; அல்லது பழைய முறைக்கு மாறுங்கள் என்று கேட்க்கிறார்கள். கோவை மாநகர கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் லோகநாதன் மற்றும் சங்கத்தை சேர்ந்த 100க்கு மேற்பட்டவர்கள் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
முதல்வர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்போம். அதே வேளையில் அரசு கேபிள் டிவியில் சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி உள்ளிட்ட முக்கிய தமிழ் சேனல்கள் இல்லாதது, சீரியல் பார்க்கும் தாய்மார்களிடம் பெரும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வீடுகளில் பெண்களுக்கு அடுத்தபடியாக அதிகம் டிவி பார்ப்பது குழந்தைகளே. அவர்கள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன், டிஸ்னி எக்ஸ்டி, போகோ, சுட்டி டிவி, ஹங்கமா, டிஸ்கவரி, சித்திரம் போன்ற சேனல்களும் அரசு கேபிள் டிவியில் இல்லாதது பொதுமக்களிடம் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு கட்டண சேனல்கள் ஏஎக்ஸ்என், ஸ்டார் மூவீஸ், எச்பிஓ, மூவீஸ் நவ், விளையாட்டு கட்டண சேனல்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈஎஸ்பிஎன், டென் ஸ்போர்ட்ஸ், சோனி மேக்ஸ், மாற்று மொழி கட்டண சேனல்கள் ஜீ டிவி, சோனி, ஸ்டார் பிளஸ், வர்த்தக கட்டண சேனல்கள் சிஎன்பிசி, என்டிடிவி, ஹெட்லைன்ஸ் டுடே, பிபிசி உள்ளிட்ட எந்த சேனல்களும் இல்லாமல் தொடர்ந்து அரசு கேபிளை ஒளிபரப்பினால் பெரும்பான்மையான மக்கள் இந்த சேவையை துண்டித்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கேபிள் ஆபரேட்டர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உண்மை நிலையையும், அதனால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் அரசுக்கு எடுத்துச் சொல்லி விரைவில் உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் நல சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் குப்பன், ரவி, சுரேஷ், ராமு உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.வளர்மதியை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்தனர்.  கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட டி.ஆர்.ஓ. வளர்மதி, இந்த பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், விருப்பமில்லாத இலவச சேனல்களை பார்க்க மறுக்கும் மக்கள், கேபிள் இணைப்புகளை துண்டித்துவிட்டு டிடிஎச் சேவைக்கு மாறி வருகின்றனர். பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். அரசு கேபிள் ஒளிபரப்பு மையத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை. தெளிவான சிக்னல் இல்லை. படம் தெளிவாக தெரியவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக கட்டண சேனல்களை அரசு கேபிள் டிவியில் ஒளிபரப்ப வேண்டும். என்று வெங்கடேசன் தெரிவித்தார்.

Source :http://www.inneram.com

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: