RSS

Monthly Archives: October 2011

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனங்களுக்கு சீல்!

சென்னையில் விதிமுறைகளை மீறிக் கட்டிடங்களைக் கட்டியதாக அனுப்பப் பட்ட எச்சரிக்கை நோட்டீஸ்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்த காரணத்தால் சென்னை தியாகராய  நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ்,சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் பல அடுக்கு மாடிகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. விதிகளை மீறிக் பல அடுக்கு மாடிகளைக் கட்டியதாக இந்த வணிக நிறுவனங்களுக்கு பல முறை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நோட்டீஸ் அனுப்ப பட்டும் வணிக நிறுவனங்களின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை.

இதன் காரணமாக இன்று காலை காவல்துறையினர் துணையுடன் இங்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப் பட்டதை அடுத்து தி.நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

Advertisements
 

கேர்ணல் முஅம்மர் கடாஃபி : ஒரு சகாப்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

‘ஒரு மனிதனின் வாழ் நாள் சாதனையின் அளவை, அவனது இறுதி ஊர்வலத்தின் நீளத்தைக் கொண்டு அளவிடலாம்’ என்பது ஒரு சீனப் பழமொழி.

அப்படியானால் லிபிய முன்னாள் அதிபர் கேர்ணல் முஅம்மர் கடாஃபி தமது வாழ்நாளில் எதையுமே சாதிக்கவில்லையா? என நீங்கள் கேட்கலாம். அதற்கான விடையைத் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

உலகம் தனக்கென ஒரு வரலாற்று ஒழுங்கையும் நியதியையும் கொண்டிருக்கிறது. அதனை இறைவனைத் தவிர வேறு எந்தப் படைப்புகளாலும் மாற்றியமைக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.


அந்த யதார்த்தத்துக்கு விதிவிலக்காக இருக்க விரும்பும் எவரும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளேயே வீசப்படுவார்கள் என்பதற்கு, சமகால அரபுலகின் மக்கள் புரட்சிகளே மகத்தான சான்றுகளாகும்.

டியூனீசியாவின் பென் அலியோ, எகிப்தின் ஹுஸ்னி முபாரக்கோ, லிபியாவின் கடாஃபியோ, யெமனின் அலி அப்துல்லாஹ் சாலிஹோ, சிரியாவின் பஷர் அல் அஸதோ அல்லது வேறு எந்தவொரு நாட்டினதும் ஆட்சியாளர்களோ, அதிகாரம் படைத்தவர்களோ இந்த உலக நியதிக்கு ஒருபோதும் விதிவிலக்காக இருக்க முடியாது.

அரபுலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமையைப் பெற்றிருந்த கடாஃபிக்கு அந்தப் பெருமையே ஈற்றில் உலையாக அமைந்துவிட்டமை கவலைக்குரியது.

1969ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் தமது 27ஆவது வயதிலேயே லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றியபோது கடாஃபியின் வீரத்தையும் தூரநோக்கையும் உலகமே ஒருகணம் திரும்பிப் பார்த்தது. ஆனால் அதே கடாஃபி இன்று தன் மக்களாலேயே இரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்டபோது அதே உலகம் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டது.

இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளுக்கிடையிலும் கடாஃபி ஒரு சகாப்தத்தையே படைத்திருக்கிறார் என்றால் அது மிகையாது.

கடாஃபிக்கு முன்னர் லிபியாவை ஆட்சி செய்த மன்னர் இத்ரீஸ் தமது நாட்டின் வளங்களை மேற்குலகுக்குத் தாரைவார்ப்பதில் முன்னின்று செயற்பட்டார். ஆனால் கடாஃபியோ இத்ரீஸின் கொள்கைகளுக்கு முற்றிலும் நேர்முரணானவர்.

கடாஃபி ஏகாதிபத்தியத்தின் பரம விரோதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அமெரிக்காவை எதிர்ப்பது என்பது அவருக்கு ‘அல்வா’ சாப்பிடுவது போல என்றுகூட வர்ணிக்கலாம்.

அரபு தேசத்தின் குபேரர்கள் எல்லாம் அமெரிக்காவினதும் மேற்குலகினதும் காலடியில் மண்டியிட்டுக் கிடக்க, கடாஃபியோ அந்த நாடுகளைத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றார். லிபியாவின் மீது பொருளாதாரத் தடைகளையும் வேறு பல நெருக்கடிகளையும் மேற்குலகு ஏற்படுத்திய போதிலும் கடாஃபி மசிந்து கொடுக்கவில்லை. Read the rest of this entry »

 

Tags:

ஹைக்கூ கவிஞர் இரா .இரவியின் பல்சுவை விருந்து !

ஹைக்கூ      கவிஞர் இரா .இரவி

மெய்ப்பித்தனர்
பேராசைப் பெருநஷ்டம்
அரசியல்வாதிகள்

கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்

அசைவம் அணியலாமா ?
சைவம் என்றாயே
பட்டுச்சேலை

பட்டுச்சேலையைவிட
பருத்திச்சேலையே
அவளுக்கு அழகு

காந்தியடிகளுக்கு அவமரியாதை
இன்றும் தொடர்கின்றது
கிராமங்களில் தீண்டாமை

கணினி யுகத்தில் களங்கம்
கிராமங்களில்
தீண்டாமை

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Source : http://eraeravi.wordpress.com Read the rest of this entry »

 

Tags:

தீபாவளி வாழ்த்துக்கள்! + தீபாவளி சிறப்பு பட்டி மன்றம்

தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்த்தி வழங்கி  கவலைகள் மறந்து மனகிழ்ந்து உற்சாகமாக உறவினர், நண்பர் மற்றும்  அனைத்து மக்களும் நல்வாழ்வு வாழ வாழ்த்துவோம்

 

Tags:

தீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை! (மயிலாடுதுறையில் தீ விபத்து)

நேற்று (19.10.11)மாலை 6.30 மணியளவில் மயிலாடுதுறை பெரிய கடைத்தெருவில் சம்பவித்த பெரும் தீ விபத்தில்  செருப்புக்கடை ஒன்றும்  சில துணிக்கடைகளும் எரிந்து சேதமடைந்தன. இந்த வருத்தத்துடன் புறமெங்கும் வெப்பமும் அனலும் வாட்டி எடுத்த போதிலும்  மயிலாடுதுறை அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒன்று சேர்ந்து உதவி செய்தது மக்கள் மனங்களைக் குளிர வைத்தது.

சுற்றிலும் அநேக கிராமங்களைக் கொண்டிருக்கும் மயிலாடுதுறை எப்போதும் வியாபாரம் களைகட்டும் வணிக நகரமாகும். தீபாவளிப் பண்டிகை, உள்ளாட்சி தேர்தல் என்று ‘கொண்டாட்டக் காலமாய்’ போய்விட இப்போது இன்னும் மும்முரம். உள்ளாட்சித் தேர்தலுக்காக விடுமுறையும் விடப்பட்டிருந்ததால், மினி ரங்கநாதன் தெருவைப் போலவே பெரிய கடைத் தெரு ‘காட்சி’யளித்துக் கொண்டிருந்த போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

மூன்றடுக்கு செருப்புக் கடையான “ஜனதா சப்பல்ஸில்” ‘எப்படியோ’ தீ பிடித்துவிட, அந்தத் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. தீபாவளி நேரம் என்பதால் பட்டாசுக் கடைகள் வேறு உள்ளுக்குள் ‘பயமாய் பயமுறுத்திக் கொண்டிருந்தன.  ஆனாலும், தீ மேலும் பரவாமல் அணைப்பதில் மயிலாடுதுறை அரசியல்வாதிகள் காட்டிய அக்கறையும் ஒற்றுமையும் மெச்சத் தகுந்த விதத்தில் இருந்தன என்றால், இந்த ‘ஆர்வக்கோளாறு’  பொதுமக்கள் தான்  தீயணைப்பு வண்டிகளின் நடமாட்டத்திற்குத் தடையாக அமைந்திருந்தனர்.  வேதனை நேரத்திலும் வேடிக்கை மட்டுமே  பார்க்கவும் சிலர் இருக்கிறார்களே! Read the rest of this entry »

 

Tags:

வாய்ப்புண் (Mouth Ulcer)

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி… அவதிதான். தெரியாதவர்கள் “இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!” என்றால் “வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!” என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?

வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?

வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?

  1. மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.
  2. பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.
  3. ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.
  4. உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.
  5. காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.
  6. பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
  7. இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
  8. உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.
  9. பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
  10. மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

Read the rest of this entry »

 

Tags:

மத்திய கிழக்கின் ”டாப் 10” செல்வாக்கான இந்தியர்கள் – அமீரகம், கேரளா, தமிழகத்தின் ஆதிக்கம்!

துபாய் : துபாயிலிருந்து வெளிவரும் பிரபல வணிக இதழ் வளைகுடாவின் செல்வாக்கான மனிதர்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் வளைகுடாவின் பணக்கார இந்தியர்கள் குறித்த கட்டுரையை இந்நேரம் வாசகர்களோடு பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டதைப் போல் வளைகுடாவின் டாப் 10 செல்வாக்கான மனிதர்களை குறித்த தகவல்களை நம் இந்நேரம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.

செல்வாக்கான இந்தியர்கள் என்பது அவர்களின் செல்வத்தைப் பொறுத்தது மட்டுமல்ல; அவர்களின் தொழிலின் தன்மை, தொழிலாளர் எண்ணிக்கை, அவர்களின் தயாரிப்புகள் சந்தையைப் பாதிக்கும் அளவு, அவர்களின் தனிப்பட்ட சமூக செல்வாக்குப் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இப்பட்டியலில் அமீரகத்தைச் சார்ந்தவர்கள் 6 நபர்கள் உள்ளனர். அது போல் கேரளாவைச் சார்ந்தவர்கள் நால்வரும் தமிழகத்தைச் சார்ந்ச்ர் மூவரும் உள்ளனர். இதோ அப்பட்டியல்:

1.    யூசுப் அலி :

செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மிக்கி ஜக்தியானியைப்     பின்னுக்கு தள்ளி விட்டு செல்வாக்கான இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள கேரளாவைச் சார்ந்த யூசுப் அலி இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர்.

EMKE குழுமத்தின் நிர்வாக இயக்குநராக வெற்றிகரமாக நடத்தி செல்கிறார். வலிமையான போட்டிகள் நிறைந்த சிறு வர்த்தக பிரிவில் வெற்றிகரமாக விளங்கும் லூலூ சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் இவரின் எம்கே குழுமத்தைச் சார்ந்தவையே.

அபுதாபியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இவரின் குழுமத்தில் 22,000 இந்தியர்கள் உள்ளிட்ட 27,000 நபர்கள் பணி புரிவதோடு 3.75 பில்லியன் டாலர் ஆண்டுதோறும் வர்த்தகம் நடக்கிறது. 2005ல் அபுதாபி சேம்பர் ஆஃப் காமர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2.    மிக்கி ஜக்தியானி :

லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான மிக்கி ஜக்தியானி தான் வளைகுடாவின் பணக்கார இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சார்ந்த மிக்கி ஜக்தியானி 1973ல் முதல் ஸ்டோரை பஹ்ரைனில் தொடங்கினார். இன்றோ, துபாயை தலைமையிடமாக கொண்டு சிறுவர் பேஷன், காஸ்மெட்டிக்ஸ் என்றும் நியூ லுக், மேக்ஸ், செண்டர் பாயிண்ட், பேபி ஷாப், ஹோம் செண்டர் என்று பல பிராண்டுகளுடனும் பரந்து விரிந்து உள்ளது இவரின் வர்த்தக சாம்ராஜ்யம்.

3.    சன்னி வர்கீஸ் :

கேரளாவை சார்ந்த சன்னி வர்கீஸால் 1980ல் ஒற்றை பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட    Our Own High School இன்று உலகின் மிக பெரிய கல்வி குழுமங்களில் ஒன்றாக திகழ்கிறது. 11 நாடுகளில் 100 பள்ளிகளில் சுமார் 1 இலட்சம் மாணவர்கள் கிண்டர் கார்டனில் இருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.

தற்போது வளைகுடாவையும் தாண்டி ஆப்பிரிக்காவிலும் ஒரு பள்ளிகூடத்தை ஆரம்பித்துள்ளது வர்கீஸின் ஜெம்ஸ் குழுமம்.

4.    சங்கர்

கடந்த மே 2010ல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியகிழக்கின் தலைமை நிர்வாகியாக சங்கரை ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கி நியமித்தது. மத்தியகிழக்கின் அவ்வங்கியின் மிகப்பெரும் பொறுப்பில் உள்ள சங்கர் இவ்வங்கியில் 2001 ல் சேர்வதற்கு முன் பேங்க் ஆப் அமெரிக்காவில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழகத்தைச் சார்ந்த சங்கர் புகழ் பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூரில் எம்.பி.ஏவும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் இளநிலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read the rest of this entry »

 

Tags: ,