RSS

தமிழகம் என்ன சவுதி அரேபியாவா? வி.ஹி.பரிஷத் ஆவேசம்!

06 Nov

முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் நாளில் மாடு, ஒட்டகம் பலியிடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் என்ன சவுதி அரேபியாவா?” என மதுரை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கேள்வி எழுப்பியுள்ளது.

நாளை நவம்பர் 7 ஆம் தேதி முஸ்லிம்களின் பண்டிகை நாள். இந்நாளில் மிருகங்களை அறுத்து ஏழைகளுக்குத் தானம் வழங்குவது அவர்கள் வழக்கம். இந்நிலையில், மதுரை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாடு, ஒட்டகங்களைப் பலியிடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, மதுரை மாவட்ட வி.ஹி.பரிஷத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“கோவில் நகர் மதுரையில் பண்டிகையின் பெயரால் ஆடுகளைக் கண்ட இடத்தில் வெட்டத் தடை உள்ளது. 16 வயதுக்குட்பட்ட மாடுகளை எங்குமே வெட்டக்கூடாது என்கிறது பிராணிவதைத் தடைச் சட்டம். ஆடுகளை வெட்டுவதற்கும் கோழிகளை அறுப்பதற்கும்கூட மாநகராட்சி அனுமதி பெற்ற ஆடுவதைக் கூடம் உள்ளது.

யானைகளையும் ஒட்டகங்களையும் வெட்டுவதற்கு மதுரையில் எங்கேயும் மிருக வதைக்கூடம் உள்ளதா? இந்து ஆலயங்களில் இறைவனின் பரிவார மிருகங்களாக பராமரிக்கப்படும் யானை, ஒட்டகம் போன்றவற்றை, நகருக்குள் வெட்டி ரத்த ஆறு ஓடவிட்டு மலைபோல் குவியும் மிருகத்தின் தேவையற்ற பாகங்களை வைகை ஆற்றில் கொட்டி வைகையை மாசுபடுத்தும் சட்ட விரோதமான செயல் மதத்தில் பெயரால் நடக்க இருக்கிறது.

வரும் 07-11.2011 அன்று பக்ரீத். பக்ரீத் முஸ்லீம்களின் புனிதநாள் என்பதை நாமும் ஒத்துக்கொண்டு இஸ்லாமியர்களை வாழ்த்துவோம். ஆனால் மதத்தில் பெயரால் நடக்க இருக்கும் இந்த சட்ட விரோதப் பிராணி வதையை கோவில் நகரில் தடுத்து நிறுத்தா விட்டால் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை தேவையற்றதாகிவிடும்.

பிராணிவதைத் தடைச்சட்டம், புளூகிராஸ், ரெட்கிராஸ், மாவட்ட நிர்வாகம் ஆகியவை என்ன செய்யப்போகிறது. கோவில் நகரின் புனிதத்தை மேம்படுத்த பாடுபடப்போவதாகக் கூறும் புதிய மேயர் நடவடிக்கை எடுத்து இந்த மாபெரும் மிருக வதையைத் தடைசெய்து கோவில் மாநகரின் மாண்பினைக் காக்க வேண்டும்.

அரபுநாடுகளில் ஆடுகள் போன்ற மிருகங்களுக்குப் பஞ்சம் என்பதால் அங்கு கிடைக்கும் மிருகமாகிய ஒட்டகங்கள் வெட்டப்படுகின்றன. தமிழகம் என்ன சவுதி அரேபியாவா? தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சலுகைகளியும் சுதந்திரத்தையும் எதையும் செய்யும் லைசென்ஸாகப் பயன்படுத்த அனுமதித்தால் பயங்கரவாத உணர்வுகள்தான் மேலோங்கும். தானாக முன்வந்து வழக்குத் தொடரும் நீதிபதிகள், நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன.”

இவ்வாறு விஷ்வ ஹிந்து பரிசத் மதுரை மாவட்ட தலைவர் சின்மயா சோமசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source : http://www.inneram.com/

————————————————————————————————————————–

 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: