RSS

கிழவியானாலும் மனைவியை நேசி! (நற்றிணை! பாடல் & உரை)

19 Nov

திருமணம் முடித்து இல்லறம் நடத்தச் செல்லும் பெண்களுக்கு வாழ்வியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. வாழும் வீட்டில் வறுமை. தனிக்குடித்தனத்தால் வரும்படி போதாமை. பொருளீட்டாத கணவன். மாமியார், நாத்தனார் தேவைக்கான பிடுங்கல். பலவகைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பணம் காய்க்கும் மரமாக பெண்ணின் பெற்றோர் மாறவேண்டிய நிர்ப்பந்தம். மதம், சாதி பிரித்துப்பார்க்கவியலா நிலையிருக்கிறது. எல்லோரது வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் காரணீகள். சங்ககாலப் பெண் இதனை எவ்வாறு எதிர்கொண்டாள்? 2,000ம் வருடம் முந்திய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.
“கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தாதை கொழுஞ் சோறுள்ளாள்’’.
நமது உரை : திருமணம் முடித்துத் தரப்பட்டு கணவன் வீடு செல்லும் பெண். வாழ்விடத்தில் வறுமையைக் காண்கிறாள். தந்தை வீட்டு செழிப்பு அவள் நினைவுக்கு வரவில்லை. மகளின் துன்பத்தை அறியும் தந்தை உதவ முன்வரும்போது உதவியைப் பெற மறுக்கிறாள். சங்கப் பெண்ணின் சீரிய பண்பு நலன் பாடலில் தெரிகிறது.
(கொண்ட கொழுநன் & கட்டிய கணவன். குடிவறன் & வாழ்விடத்தில் வறுமை. உற்றெனக் கொடுத்த தாதை & துன்பம் எனத் தந்த தந்தை. கொழு & செழிப்புறுதல். உள்ளாள் & நினையாள்)
வாழ்க்கை ஓட்டத்தில் ஆண்கள் மரம்விட்டு மரம் தாவும் வண்டாக மாறுகின்றனர். கட்டிய மனைவியைக் கைவிடுதல். அவளது பொருளாதாரத் தேவை, இன்பம், துன்பம், உணர்ச்சிகள் மீது அக்கறை செலுத்தாமையால் ஜடத்தை போல் வாழும் நிலை ஏற்படுகிறது. 30 வருட அரபுலக வாழ்க்கையில் கண்ட சிகப்புத் தோல் பெண்கள். சிறிய, பெரிய திரைக் காட்சிகளில் தோன்றக்கூடியவர்களின் தோற்றம் ஆண்களின் வாழ்க்கைக் கனவாக வளர்கிறது. இல்வாழ்க்கைப் போக்கை சிதைக்கிறது. மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் நற்றிணைப் பாடல் உரைக்கிறது. (புலவர் பெயர் தெரியாமல் சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற பாடல்)
‘‘அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி & பூக்கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஞர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே’’
நமது உரை : கட்டான உடல் தளர்ந்து, குழந்தை அமுதருந்தும் அங்கம் சரிந்தாலும், நல்லொழுக்கமுள்ள சிறந்த உடலில் குறைகள் ஏற்படிணும், அவள் அள்ளிமுடியும் கூந்தல் நரைத்தாலும் கணவனான நீ அவளிடம் பிரியம் காட்டு. மதித்து பாதுகாப்புக் கொடு. அது உன் மனத்தில் ஈரமிருப்பதற்கான அடையாளம். அருவருப்பு கொண்டு வஞ்சிக்காதே. வாழ்க்கை வண்டி நீடித்து ஓட, இருக்கும் அவள் வனப்பு, கோலத்தை ஏற்புடையதாக ஆக்கு. சோழர், சேரர் அரசர் நெற்களஞ்சியத் தொண்டு போன்றும். ‘யானைப் போஞர்’ ஊருக்குரியவரான முன்னோரின் கூரிய தன்மையுடனும் ஆராய்ந்து குற்றமில்லாமல் உன் செயலை அமைத்துக் கொள்.
சொற்பொருள் : தளரினும் & சாய்ந்தாலும். நேர் & நல்லொழுக்கம். நெடுங்கூந்தல் நரையடு முடிப்பினும் & அள்ளி முடியும் நீண்ட கூந்தலில் நரை இருப்பினும். நீத்தல் & பிரிதல். ஓம்புமதி & மதித்து பாதுகாப்பு செய். பூக்கேழ் & அழகு ஏற்புடையது. ஊர & ஈரம். கடு & அருவருப்பு. கள் & வஞ்சித்தல். இழை & வனப்பு. அணி & கோலம். கொற்ற & அரசர். கொங்கர் & சேரர். பணி & தொண்டு. வெண்கோட்டு & வெள்ளை நெற்களஞ்சியம். கிழவோர் & உரியவர். பழையர் & முன்னோர். வேல் & கூரிய. வாய்த்தன்ன & அமைந்தன.

& சதாம்
நன்றி : நவம்பர் முஸ்லிம் முரசு 2011

Source : http://jahangeer.in/?p=554

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: