RSS

Monthly Archives: December 2011

மறுமை பயம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது. A.R.ரஹ்மான்

திலிப் குமாராக இருந்த ஓர் இளைஞன் இஸ்லாத்தை தழுவி ஏ.ஆர். ரஹ்மானாக மாறி உலக புகழ் பெற்றது குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தும் மனம் திறந்து அளித்த பேட்டி.

இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.

1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.

அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.

 • முட்டுக்கட்டை

  எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை
  போட்டார்கள்.

  அப்போது என் மனம் உடைந்து போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள். சுங்க

  இலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக நடத்தினாங்க.

  அந்த நேரத்தில் தினம் விமான நிலையத்துக்கும் வீட்டுக்கு மாக அலைந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி தவித்தேன். நல்லவேளை எங்க அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.

  அத்தனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு இசை சாதனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம். இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால் எவரால் தடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.

  சொன்னது பலித்தது

  மகன் இரவில் தூங்காமல் இசைக் கருவிகளைக் கொண்டு பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா கஸ்தூரி – கோவில், தேவாலயம், மஸ்ஜித் என்று சென்று தன் மகனுக் காகவும், குடும்பத்திற்காகவும் பி

  ரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தார்.

  அந்த நேரத்தில் எதிர்பாராத நிலையில் ஒருநாள் கரீமுல்லாஹ் ஷா என்ற பெரியவரை கஸ்தூரி குடும்பம் சந்திக்க நேர்ந்தது.

  ரகுமானுக்கு 21 வயதான போது 1987-ல் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் கிடைத்தன. இதற்கு அடிப்படை பெரியவரின் அறிவுரை அதுவே ரகுமானை யும், அவரது தாயாரையும் இஸ்லாத்

  தை தழுவ வைத்தது. அவருடைய இளைய சகோதரிகளும் இஸ்லாத்தில் இணைந்தனர். மூத்த சகோதரி காஞ்சனா மட்டும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்தார்.

  இஸ்லாம் அனுபவம்

  இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வைப் பற்றி ரகுமான் நினைவு கூர்கிறார்.

  அது ஒரு கனவில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் அப்போது மலேசியாவில் இருந்தேன். ஒரு பெரியவர் என் கனவில் வந்து இஸ்லாத்தில் இணைந்து விடு என்று கட்டளை யிட்டார். இது பற்றி ஆரம்பத்தில் நான் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி எனக்கு அந்த கனவு வந்தது.

  ஒருநாள் என் அம்மாவிடம் இது பற்றிப் பேசினேன். இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொள் என்று எனது தாயாரும் எனக்கு ஊக்கம் அளித்தார். ஒரே இரவில் நான் இஸ்லாத்தைத் தழுவவில்லை.இஸ்லாத்தின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டுன். இதற்காக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் அரபி மொழி கற்றேன்.

  1988-ல் என் சகோதரி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது எத்தனையோ பெரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவர் குணமாக வில்லை. இறுதியில் ஒரு மார்க்கப் பெரியவரின் வழி காட்ட லால் நாங்கள் ’அல்லாஹ்’ விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தோம். என்ன ஆச்சரியம் என் சகோதரி கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்தார். இப்படித்தான் நான் திலீப்குமாரில் இருந்து ஏ.ஆர் ரகுமானாக பயணம் தொடங்கினேன் என்றார்.

  ஹஜ் பயணம்

  ஒவ்வொரு இஸ்லாமியரின் உன்னத கடமை ’ஹஜ் பயணம்’ ரகுமான் தனது முதல் ’ஹஜ் ஜை 2004-ல் நிறை வேற்றினார். அடுத்து 2006-ல் தாயாருடன் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்.

  அது பற்றி ரகுமான் சொன்னது.

  இந்த புனித யாத்திரை – வாழ்க்கையைப் பற்றிய எனது மதிப்பீடுகளையும், பார்வையையும் அடியோடு மாற்றி விட்டது.

  அன்பு, சமாதானம், இணக்கமான சகவாழ்வு, சகிப்புத் தன்மை, நவீன காலத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவைகளைக் கொண்டதாக இஸ்லாம் திகழ்கிறது. ஆனால் சிலர் செய்யும் செயல்களால் இந்த மார்க்கம் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாம் பற்றிய அறியாமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

  நபி (ஸல்) அவர்களின் பெருமை

  முஸ்லிம்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அண்டை வீட்டாருடன் நட்போடு பழகுவது, அவர்களை நேசிப்பது, மற்றவர்களைச் சந்திக்கும்போது புன்முறுவல் செய்வது, இறைவனை வணங்குவது, தர்மம் செய்வது ஆகியவைகளைப் பேணி வர வேண்டும். மனிதச் சமுதாயத்துக்கு முழுமையான முறையில் சேவை செய்ய வேண்டும்.

  மாற்று சமய நண்பர்களை விரோதிகளாகப் பார்க்கக்கூடாது அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்க்கவோ, விமர் சிக்கவோ கூடாது. தங்கள் நடவடிக்கைகளால் உலகுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பரப்ப வாளை எடுக்கவில்லை. பதிலாக தனது முன் மாதிரியான வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவை மூலமே இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

  பரிசு

  2006 ஜனவரி 6-ம் நாள் என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பரிசை இறைவனால் வழங்கப் பெற்றேன். மதீனாவில் தொழுவதற்கு ‘அல்லாஹ்’ எனக்கு வாய்ப்பைத் தந்தான். நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்தேன். அந்த அனுபவத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. அது என் பிறந்த நாள் பரிசு.

  நான் ஒரு கலைஞன். எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் தொழுகையை மட்டும் கைவிடுவதில்லை. தொழுகை எனது மன அழுத்தத்தை வெளியேற்றி வேலையில் முழு நம்பிக்கையையும், உறுதியையும், ஈடு பாட்டையும் தருகிறது. இறைவன் எப்போதும் எனது அருகிலேயே இருக்கிறான் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது. மேலும் ‘மறுமையில் விசாரிக்கப்படுவேன்’ என்ற அச்சத்தை எனக்குள் கொண்டு வருகிறது. இந்த ஹஜ் பயணத்தின் மூலம் நான் எனது இறைவனால் சுத்தப்படுத்தப் படுகிறேன்’ என்கிறார் ரகுமான்.

  நன்றி – ராணி வார இதழ் / மணிச்சுடர் நாளிதழ் / mynewwayislam blog

  Source :<a href="https://udayanadu.wordpress.com/

  Advertisements
   
 • Tags: , ,

  புதுமண தம்பதிகளுக்கு எதிலும் அவசரம்…!

  புதுமண தம்பதிகளுக்கு எதிலும் அவசரம்…!
  [ திருமணம் எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்து கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10, 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும். இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போது தான் அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் இருப்பதை உணரமுடியும்.

  சில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர படுவதாலும், பெண்களில் சிலர் நிதானமாக நடந்து கொள்ளாமல் இருப்பதாலும் தான் ஆரம்பமே அலங்கோலமாகி விடுகிறது. இன்னும் பல காலம் சேர்ந்து தான் இருக்க போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்…..?!

  குழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது, வேலை தேடுவது என்று எதிலும் அவசரம். உணவிலும் கூட ஃபாஸ்ட் ஃபுட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்….??!

  ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன் – மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மிக அவசியமாகிறது. “உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்” என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.]

  இன்றைய திருமண முறை

  முதல் நாள் இரவில் புதுமண தம்பதியினர் எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும். நம்முடைய இந்த திருமண முறை இன்னும் எவ்வளவு காலம் நடைமுறை வழக்கத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஒரு பெண் எதிர்பார்க்கும் உடல், மனம், அறிவு சார்ந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்குரிய ஆண் அவளுக்கு திருமணத்தின் மூலம் தேவைபடுகிறது. ஆனால் இப்படி பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்க கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்குமா என்பது சந்தேகமே. அந்த காலத்தில் ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. பெற்றோர் விரும்பிய துணையுடன் மணம் புரிந்தார்கள், உடல் கலந்தார்கள், மனம் ஒருமித்து வாழ முயற்சித்தார்கள். ஆனால் இப்போது அதே சமூக எண்ணம் தான் இருக்கிறது, ஆனால் தலைமுறையினர் மாறிவிட்டனர்.

 • தெரிந்த உறவினரின் மகனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு தான் வெகு விமரிசையாக நடந்தேறியது. திருமணமும் 10 நாளில் பெண் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் கல்யாணம் என்று குறுகிய காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள். நல்ல வேலையிலும் இருப்பவர்கள். இருவரின் முழு சம்மதத்தின் படி தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

  ஒரே மகன் என்பதால் திருமணம் தொடர்பான பத்திரிகை அடிப்பது, உறவினர்களுக்கு கொடுப்பது, மண்டபம் பேசி முடித்தது உள்பட அனைத்து வேலைகளையும் மணமகன் தான் இழுத்து போட்டு பார்த்தார். திருமணம் முடிந்த அன்று மறுவீடு சடங்கு எல்லாம் முடிந்து மணமக்கள் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது. பின்னர் இருவரும் தனியறைக்கு அனுப்பப்பட்டனர்.

  ஆனால் காலையில் மணப்பெண் கோபமாக அறையில் இருந்து வெளியில் வந்தாள், பலரும் காரணம் கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல்,’எனக்கு பையனை பிடிக்கவில்லை. அவன் ஆம்பளையே இல்லை’ என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அவளது பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், ‘உங்களுக்கு ஒன்றும் தெரியாது என் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி ஆக வேண்டியதை பாருங்கள்’ என்று ஒரே போடாய் போட்டு விட்டாள்.

  முந்தினநாள் இரவு அப்படி என்னதான் நடந்தது என்றால், ஏற்கனவே மணமகன் கல்யாண வேலையாலும், பிரயாண களைப்பினாலும் சோர்ந்து இருந்திருக்கிறார். நேரமும் அதிகமாகி விட்டதால், பெண்ணிடம் தனக்கு களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும் என்று கூறி விட்டு இவள் பதிலுக்கும் கூட காத்து இருக்காமல் தூங்கிவிட்டார். ஆவலுடன் அந்த இரவை எதிர்பார்த்து இருந்த மணமகள் வெறுத்து போய் இருக்கிறாள். இதுதான் நடந்தது

  இப்போது நாலு மாதம் ஆகிறது விஷயம் கோர்ட்டு படி ஏறி….!

  (இந்த விஷயத்திற்கு குறை சொல்ல பெண்தான் கிடைத்தாளா என்று நினைக்காதீர்கள். பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய பெண்களே இப்படி புரிந்துகொள்ளாமல் நடக்கிறார்கள் என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை)
  எதிலும் அவசரம்! எங்குதான் போய் முடியும்?!

  குழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது, வேலை தேடுவது என்று எதிலும் அவசரம். உணவிலும் கூட ஃபாஸ்ட் ஃபுட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்….??!

  சீக்கிரமே அனைத்திலும் தம் பிள்ளைகள் வல்லவர்களாக மாறிவிட வேண்டும் என்கிற பெற்றோர்களின் ஆவலுடன் இணைந்த அவசரம்….!! எதிர்பார்ப்புகள் விரைவாக நிறைவேறனும் என்ற இன்றைய தலைமுறையினரின் கட்டுக்கடங்காத வேகம் கடைசியில் ‘ஆயிரம் காலத்து பயிர்’ என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வந்த கல்யாணமும் விரைவாகவே முற்றும் போட கூடிய அளவில் வந்து நின்றுவிட்டது.

  நான் சொன்ன இந்த உதாரணம் போல் பல இருக்கலாம். ஆனால் அவற்றில் பல இன்னும் செய்திதாள்கள், பத்திரிகைகள் வரை வரவில்லை, விரைவில் வரக்கூடிய அளவில் தான் விஷயத்தின் தீவிரம் இருக்கிறது.

  ஒரே நாளில் எப்படித்தான் ஒரு முடிவுக்கு சுலபமாக வரமுடிகிறது என்றே புரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து மட்டும் பார்த்தோம் என்றால் அந்த காலம் மாதிரி இருட்டு அறையில் நடப்பதை முதலில் கவனிப்போம், அப்புறம் மெதுவாக ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்றே முடிவுக்கு வரலாம் என்பது போல் இருக்கிறது அல்லவா..??

  பெண்களில் சிலர் இந்த மாதிரி நிதானமாக நடந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர படுவதாலும் தான் ஆரம்பமே அலங்கோலமாகி விடுகிறது. இன்னும் பல காலம் சேர்ந்து தான் இருக்க போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்…..?!

  திருமணம் எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்து கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10, 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும். இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போது தான் அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் இருப்பதை உணரமுடியும்.

  தாம்பத்தியத்தின் ஆயுட்காலம்

  ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை உறவு நீடிக்கிறது என்று கேட்டால் 70 வயது வரை என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. அந்த காலத்தில் தாம்பத்திய உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதர்க்கான ஒரே வழி என்று இருந்தது. அவர்களை பொருத்தவரைக்கும் இது ‘இருட்டறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வு’ மட்டுமே.

  ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மிக அவசியமாகிறது. “உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்” என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.

  “வேலை பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் எதையும் தங்களது அறைக்குள் நுழையவிடாமல் வாழ்க்கை துணையை அன்பாக நடத்தியும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்திற்குள் காரணமான ‘கார்டிசால்’ என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரக்கிறது. இந்த கெட்ட ஹார்மோன் சுரப்பதை கட்டுபடுத்துவது ‘ஆக்சிடோசின்’ என்ற ஹார்மோன் தான். இந்த ஆக்சிடோசின் கணவன், மனைவி உடல் உறவின் போதே அதிக அளவில் சுரக்கிறது என்பது அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  மேலும் ‘மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்த்ததாகவும்’ ஆய்வுகள் கூறுகின்றன.

  இந்த மாதிரியான விஷயத்தில் ஒரு சிலர் காட்டும் அலட்சியம், குடும்பத்தை எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை எண்ணும்போது தான் இந்த உறவின் அவசியத்தை தம்பதியினருக்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது.

  www.nidur.info

   
 • Tags:

  தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி!

  தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம்.

  போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

  இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

  போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

  போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
  Source : http://www.inneram.com/announcements/events/tamil-wiki-media-contest-1211.html

   

  Tags:

  மடிக்கணினியின் மடலாய்…..


  மடித்து வைப்பதலோ
  மடியின் மீது வைப்பதாலோ
  ”மடிக்கணினி” என்றானேன்

  குடிசைக்குள்ளும்
  குடிபுகுந்தேன்
  படிக்கும் மாணாக்கர்
  பள்ளி”நோட்புக்” ஆனதால்

  விலையில்லா பண்டமான
  நிலையில் என்னை
  அறிமுகம் ஆனதால்
  பறிபோனது முந்தைய ஆட்சி!

  இனிவரும் காலங்களில்
  இன்னமும் “இலவசம்”;
  கனியாய் வெற்றியைக்
  கணிப்பவன் மடிக்கணினி

  முன்னே பிறந்த
  என்னுடைய அண்ணன்
  கைப்பேசி உலகைக்
  கைக்குள் அடக்கினான்
  கைக்கெடிகாரம், கணிதப்பொறி
  வணிகத்தை முடக்கினான்;நானோ
  அவனையும் என்னுள் அடக்கினேன்;
  அவன் வழியில் அனைத்தையும்
  மடக்கினேன்;முடக்கினேன்!!!

  என்னைத் திறந்தவர்
  எல்லாம் மறந்திடுவர்
  மூளையால் உலகின்
  மூலையெலாம் பறந்திடுவர்

  எண்ணிலாத் தளங்கள்
  என்னிடம் உள;
  விண்ணின் வழியே
  விண்மீன்களாய் வலைப்பூக்கள்;
  இதயதளங்களை இணைக்கும்
  இணையதளங்கள்; இதனால்
  வணிகவளங்கள்

  அறிமுகம் ஆகியே
  நட்புமுகம் கூட்டும்
  முகநூல் பக்கம்;
  முழுநேரம் மக்கள்
  விழுகின்றனர் அதன் பக்கம்!!

  தன்மக்களை
  தன் தோளில் சும்ந்திடாத்
  தந்தையர் பலர்
  என்னை மட்டும்
  தன்னோடு சுமக்கின்றனரே?!

  ஆலோசனைக் கூட்டம்
  ஆரம்பமே என்னை
  “ஆன்” செய்வது கொண்டே

  ”நோட்புக்” ஆகிய நான் ஈன்ற
  ”மாத்திரை”க் குழந்தைகள் (டேப்லெட்ஸ்)
  சிலேட்டுகளாய் வலம்

  நோட்புக் என்றால் நான் தான்;
  சிலேட் என்றால் டேப்லெட்
  கல்லுக்குச்சி என்றால் பென்ஸ்டிக்

  ஒன்னாங்கிளாஸ் பிள்ளைகளாய்
  ஒழுங்காய்ப் போய்க் கடைகளில்
  நோட்புக், சிலேட்,கல்லுக்குச்சி
  வாங்கினாத்தான் வளம்பெறலாம்

  “கவியன்பன்” கலாம்

  ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
  அபுதபி(இருப்பிடம்)

  எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

   

  Tags:

  பணம் உன்னுடையது, ஆனால் உணவு – பொதுச்சொத்து!


  A LESSON FOR EVERY CITIZEN OF THE WORLD

  பணம் உன்னுடையது, ஆனால் உணவு – பொதுச்சொத்து!

  உலகின் வளர்ந்த நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது ஜெர்மனி! பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உலகப் புகழ்பெற்ற கார்கள் இங்குதான் தயாராகின்றன. ஸீமன்ஸ் போன்ற கம்பெனிகள் உலகப் புகழ் பெற்றவை. அணு ரியாக்டருக்கு வேண்டிய பம்புகள் இங்குள்ள ஒரு சின்ன ஊரில் தயாராகின்றன. இப்படிப் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ள நாட்டில் மக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைப்போம்? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், ஒரு சின்ன டூர் என்னை அந்த நாட்டிற்கு இட்டுச் செல்லும் வரையில்!

  நான் ஹாம்பர்க் சென்றபோது அங்கு ஹாம்பர்க்கில் வேலை செய்யும் சக ஊழியர்கள் எனக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது நிறைய மேஜைகள் காலியாக இருந்தன. ஒரு மேஜையில் ஓர் இளம் ஜோடி. அவர்களுக்கெதிரில் ஒன்றிரண்டே உணவு ஐட்டங்கள். இரண்டு கிளாஸ் கூல் ட்ரிங்க்ஸ். இவ்வளவு சிம்பிள் சூழ்நிலையில் ரொமாண்டிக் ஆக இருக்க முடியுமா? இந்தப் பெண் இந்தக் கஞ்ச பிரபுவை கத்திரிக்கோல் போட்டு விடுவாளா என்றெல்லாம் யோசித்தேன்.

  இன்னொரு மேஜையில் சில வயதான பெண்மணிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை சர்வரைக் கொண்டு பரிமாறச் செய்தனர். உணவைப் பகிர்ந்து கொண்டு துளியும் மிச்சம் வைக்காமல் உண்டனர். நாங்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை. எங்களுக்கு நல்ல பசி. அதனால் நிறைய உணவு ஆர்டர் செய்திருந்தோம். அவற்றை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

  கூட்டம் அதிகம் இல்லாததால் உணவு சீக்கிரமே கொண்டு வரப்பட்டது. எங்களுக்கு இன்னும் நிறை வேலைகள் இருந்ததால் விரைவாகச் சாப்பிட்டு முடித்தோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உணவு மீந்து போயிருந்தது. நாங்கள் ரெஸ்டாரெண்டை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கையில் எங்களை யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது. மூதாட்டிகள் ஹோட்டல் முதலாளியிடம் புகார் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் அத்தனை உணவை வீணாக்கியதை அவர்கள் கண்டித்துக் கொண்டிருந்தனர் என்று முதலாளி ஆங்கிலத்தில் சொன்னபோது தெரிந்தது.

  எங்களுக்கு அவர்கள் தலையீடு அதிகப் பிரசங்கித்தனமாகப் பட்டது. நாங்கள் பணம் கொடுத்து வாங்கிய உணவை என்ன செய்கிறோம் என்பது எங்கள் விருப்பம். நீங்கள் தலையிட வேண்டாம் என்று என் கூட வந்த நண்பர் சொன்னார். மூதாட்டிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவர்களில் ஒருவர் தன் கைப்பேசியில் ஏதோ ஒரு எண்ணைச் சுழற்றினார்.

  சிறிய நேரத்தில் சீருடையணிந்த ஒரு ஆபிசர் – இவர் சோஷியல் செக்யூரிடி சர்வீஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் – வந்தார். விஷயம் என்னவென்று அறிந்ததும் என் நண்பருக்கு ஐம்பது மார்க் அபராதம் விதித்து, சீட்டு கொடுத்தார்.

  நாங்கள் அனைவரும் மவுனம் சாதித்தோம். நண்பர் 50 மார்க் நோட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கோரினார்.

  ஆபீசர் கடுமையான குரலில் சொன்னார். “உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவே ஆர்டர் செய்யுங்கள். பணம் உங்களுடையதுதான், சந்தேகமில்லை, ஆனால் இயற்கை வளங்கள் பொதுச் சொத்து. உலகில் நிறைய பேர் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர். உணவை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை.’ எங்கள் முகம் சிவந்துவிட்டது. அவர் சொல்வதன் நியாயம் எங்கள் மனதிற்குப் புரிந்தது. வளர்ந்த, பணக்கார நாட்டவரான அவர்களின் பொறுப்புணர்வுக்கு நாங்கள் வெட்கித் தலை குனிந்தோம்.

  நம் நாடு பணக்கார நாடல்ல, ஆயினும் நாம் விழாக்கள், விசேஷங்களில் மற்றவர்களை விருந்துக்கு அழைத்தால் அதிக அளவில் உணவு தயாரிக்கிறோம். இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தது. என் நண்பர் அபராதம் கட்டிய ரசீதை போட்டோ காப்பிகள் எடுத்து ஆளுக்கொரு பிரதி கொடுத்தார். நாங்கள் அனைவரும் அதை வீட்டுச் சுவரில் ஓட்டி வைத்துத் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி என்றும் எதையும் வீணாக்க மாட்டோம்.

  – திருந்தியவர்

  ”உண்ணுங்கள் பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன்)

  www.nidur.info

   

  Tags: ,