RSS

திரை அரங்கிற்கு சென்று படம் பார்த்து ரசித்த காலங்கள்!

15 Mar

இளவயதில் திரை அரங்கிற்கு சென்று படம் பார்த்து ரசித்த காலங்கள் அதிகம் . அது சின்ன திரை வந்த பின்பு குறைந்து விட்டது. உடல் நலம் குன்றிய சில நேரங்களில் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் சென்றேன் .அவர் எனது நண்பர் அவர் சொன்னார் “உன் உடம்பில் ஒரு நோயும் இல்லை ஆனால் மனக் குழப்பமாக உடல் நலம் குன்றியுள்ளதாக நீயே கற்பனை செய்துக் கொள்கின்றாய்” என்று சொல்லி விட்டு “தியேட்டரில் சென்று படம் பார்” என்றார். உடனே “நான் வீட்டில் பட கேசட் போட்டு பார்த்துக் கொள்கின்றேன்” என்று பதில் சொன்னேன். “நீ தனியாக படம் பார்த்தால் உன்னை நீ மறக்க மாட்டாய் அதனால் மக்களோடு மக்களாய் சிரித்து பார்த்து ரசித்து வா அதன் அருமை உனக்கு அறிய வரும்” என்று சொல்லிவிட்டு நடந்த கதையும் ஒன்றையும் சொல்லிக் காட்டினார் .
ஒருவர் என்னிடன் நீண்ட நாட்களாக வைத்தியம் பார்த்தார் ஆனால் எந்த பயனும் தெரியவில்லை. அவரிடம் நான் உங்களுக்கு நாட்கள் நெருங்கிவிட்டது .இறைவனிடம் பிரார்த்திக் கொள்ளுங்கள் அத்துடன் செய்ய வேண்டிய கடமைகள் இருந்தால் முடித்து விடுங்கள் என்றும் சொல்லி அனுப்பினேன். அந்த முதியவர் பல நாட்கள் என்னிடம் வந்தார் அவர் உடலில் நல்ல மாற்றமும் ஆரோக்கியமும் கண்டு வியப்புடன் எந்த மருந்து சாப்பிட்டு உடலைத் தேற்றினீர்கள் எந்த மருத்துவரிடம் காண்பித்தீர்கள்” எனக் கேட்டேன் என்று அவர் நடந்த நிகழ்வினை விளக்கமாகச் சொன்னார்.

 • “நான் உங்களைப் பார்த்துவிட்டு கவலையோடு வீட்டிற்கு சென்ற போது வீட்டிலுள்ள அனைவரும் படம் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு மகிழ்வாக இருந்தார்கள். என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர்கள் மீது எனக்கு கோபம் வரச் செய்தது. நானும் அப்படியே அந்த படத்தை பார்க்க என்னிலை மறந்து அவர்களோடு அப்படத்தைப் பார்த்தேன். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த படம் லாரல் ஹார்டி நடித்த படம்.நானும் அதனைப் பார்க்க மனதிற்கு சிறிது தெம்பு வந்ததுபோல் உணர்ந்தேன் . அதன் பிறகு திரை அரங்கிற்கு சென்று பல ஹாஸ்ய படம் பார்ப்பதில் ஈடுபடுத்திக் கொண்டு மக்களோடு மக்களாய் மகிழ்வில் மூழ்கினேன். அதுவே எனது உடல் நலத்திற்கு முக்கிய காரணமாய் அமைத்து விட்டது என்றார்”
  அதனையே நீயும் செய்து வா என்று அறிவுரைக் கூறினார்.

  எந்த நிலையிலும் மனதில் கவலை வராமல் பார்த்துக் கொள்வதும் மகிழ்வுடன் வாழ்வதனையும் பழகிக் கொள்ளவேண்டும்.

  தன்பிள்ளைகளை நேசிக்கும் எல்லாப் பெற்றோருக்கும் இப்படம் நன்றாக உள்ளது திரை அரங்கிற்கு சென்று அந்தப் படம் பார்த்து வா என்று சொல்வது இளைஞர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு இப்படியெல்லாம் சொல்வது நாமே அவர்களை படுகுழியில் விழக் காரணமாகி விடுவோமோ! என்ற பயமும் உண்டாகின்றது.

  Advertisements
   
 • Tags: , ,

  One response to “திரை அரங்கிற்கு சென்று படம் பார்த்து ரசித்த காலங்கள்!

  1. vanjoor

   March 15, 2012 at 2:22 pm

   சோர்வு ஏற்படும்பொழுதெல்லாம் youtube.comல் mr.beans, carolburnetteshow, gomerpyle, jackbennyshow வடிவேலு , விவேக் , கவுண்டமணி செந்தில் காமெடிகளுடன் youtube.com ல் சிறுவயது முதல் எனக்கு பிடித்தமான‌ heckle&jeckle , bugsbunny, pinkpanther, woodywoodpecker, daffyduck, sylvester&tweety, andycapp, mutt&jeff, tom&jerry etc.etc. கார்ட்டூன்களை கண்டு வயிறு குலுங்க சிரித்து மகிழ்வடைவேன்.

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: