RSS

Monthly Archives: June 2012

நடுத்தர மக்களின் நிலை ஒரு திண்டாட்டம்!

சந்தைக்கு பொருள் அதிகம் வந்தால் பொருட்களின் விலை குறையும்
தேவை அதிகரித்து பொருள் கிடைப்பது தட்டுப்பாடானால் விலை ஏறும் – இது நியதி

சந்தைக்கு பொருள் அதிகம் வந்தால் பொருட்களின் விலை குறையும்.

இப்பொழுது நிலையில் அந்த நியதியில் மாற்றம் காணப்படுகின்றது. உற்பத்தி நிலையின் அதிநவீன மாறுபாடடின் காரணத்தினால் பல பொருட்கள் சந்தையில் பொருட்கள் நிறைந்து கிடைக்கின்றன (அந்நிய கம்பனிகளால் தயாரிக்கப் படும் பொருட்கள்–செல்போன்,கார் மற்றும் பல ) ஆனால் விலை அதிமாகிக்கொண்டே வருகின்றது . சந்தைக்கு பொருள் அதிகம் வந்தாலும் பொருட்களின் விலை குறையவில்லை. இது ஒரு நிலை.

தேவை அதிகரித்து பொருள் கிடைப்பது தட்டுப்பாட்டினால் விலை ஏறும்.

பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு காரணமாக விலை ஏற்றம். நடுத்தர மக்கள் நிலை திண்டாட்டம்
டாலர் வீழ்ச்சியாலும் பொது மக்கள் நிலை தடுமாற்றம் அந்நிய நாட்டு முதல் போடும் கம்பனிகளால் உள்நாட்டு சிறு தொழில்கள் அழியும் நிலை .(காளிமாக் போய் கோகோ கோலா)
அதற்கு காரணம் அவர்கள் வேலை செய்பவர்களுக்கு உயர்ந்த ஊதியம் தருகின்றனர் மற்றும் அதிக லாபம் வைத்து விற்கின்றனர். வேலை செய்ய வருபவர்கள் அதிக ஊதியம் எதிர்பார்பதால் வேலைக்கும் ஆள் கிடைபதில்லை. பலர் அயல் நாடு சென்று வேலை தேடிக்கொண்டனர்.
இங்குள்ளோருக்கு இனாம் பொருட்கள் மற்றும் இனாம் பணங்கள் கிடைக்க வாய்புள்ளது அதனால் வேலை தேடுவதும் குறைத்து விட்டது . ஆனால் மாநிலம் விட்டு மாநிலம் போய் அதிக சம்பளத்தில் வேலை செய்கின்றனர் .தமிழ்நாட்டு மக்கள் கேரளாவுக்கும் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கும் இப்படி ஒரு மாற்றம்.

ஓர் இந்தியா அனைவரும் இந்திய குடிமக்கள் என்ற கொள்கையில் சிலர் மாறுபாடான வகையில் செயல்படுகின்றனர். குஜராத் மற்றும் மும்பை மாநிலத்தில் உள்ளோர் சிலர் பீகார் மக்கள் இங்கு வந்து வேலை செய்யக் கூடாது என தடை போடுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரு கட்சி வந்தால் ஒரு திட்டம் போடுகின்றது. அடுத்த ஆட்சி வேறு கட்சி வசம் வந்து விட்டால் முந்தைய ஆட்சியின் திட்டங்களும் நடைபெற்று வந்த கட்டுமான வேலைகளும் தொடரப்படாமல் விடப்படுகின்றன.
யார் ஆட்சி செய்தால் நமக்கு என்ன! நாம் அதனால் பயன் பெட்றோமா! என்ற அலட்சியப் போக்கும் சுயநல மனநிலையும் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. .

Advertisements
 

Tags: , ,

பெட்ரோலை போட்டு தாகத்தை தனியுங்க !

போடுங்க பெட்ரோலை… தனியுங்கள் உங்கள் தாகத்தை – இலவசம்…!

“யேய்.. யேய்… வண்டியை மேல ஏத்திராதப்பா..ஏத்திராதப்பா..? அட நிப்பாட்டுப்பா..”

அப்புடி என்னத்த தலைப்புல தப்பா சொல்லிபுட்டேன்! உண்மையதானே சொன்னேன்.. ”

இந்தா முதல்ல தண்ணீரையோ, குளிர்பானத்தையோ குடி. இல்லாட்டி கோபத்துல வேர்த்து விறுவிறுத்து போகிருக்கின்ற முகத்தை டிஸ்ஸுல துடச்சிக்கோ”.

எதுவா இருந்தாலும் கீழே உள்ள படத்தை பார்த்துபுட்டு பேசு.. அப்புறம் தெரியும் நீ யார் மேல கோபப்படனும்னு.

10 ரியாலுக்கு எரிபொருள் எண்ணெய் (Petrol/Diesel) போட்டால் 1 லிட்டர் தண்ணீர் புட்டியோ (பாட்டில்), குளிர்பானமோ அல்லது டிஸ்ஸு பெட்டியோ இலவசம் என்று சாலையோரமா ஒரு பலகை பல்லை இளித்துக்கொண்டு சாய்ந்து நின்றது.அதை அந்த எரிபொருள் எண்ணெய் உரிமையாளருக்கு தெரியாம கப்சுப்னு புகைப்படம் எடுத்தாச்சு..


 • அதாவது இந்திய நாணய மதிப்புப்படி 2 லிட்டர் (150 ருபாய்) அளவு எரிபொருள் எண்ணெய் போட்டால் 1 1/2 லிட்டர் தண்ணீர் இலவசமாம்.

  இதைவைத்து இங்கு தண்ணீர் மலிவுன்னு நினைத்துவிடாதீர்கள்…
  1/2 லிட்டர் தண்ணீர் – 1 ரியால்
  1 லிட்டர் எரிபொருள் எண்ணெய் – 1/2 ரியால்
  போடுங்க பெட்ரோலை… தனியுங்கள் உங்கள் தாகத்தை – இலவசம்…!

  “யேய்.. யேய்… வண்டியை மேல ஏத்திராதப்பா..ஏத்திராதப்பா..? அட நிப்பாட்டுப்பா..”

  அப்புடி என்னத்த தலைப்புல தப்பா சொல்லிபுட்டேன்! உண்மையதானே சொன்னேன்.. ”

  இந்தா முதல்ல தண்ணீரையோ, குளிர்பானத்தையோ குடி. இல்லாட்டி கோபத்துல வேர்த்து விறுவிறுத்து போகிருக்கின்ற முகத்தை டிஸ்ஸுல துடச்சிக்கோ”.

  எதுவா இருந்தாலும் கீழே உள்ள படத்தை பார்த்துபுட்டு பேசு.. அப்புறம் தெரியும் நீ யார் மேல கோபப்படனும்னு.

  10 ரியாலுக்கு எரிபொருள் எண்ணெய் (Petrol/Diesel) போட்டால் 1 லிட்டர் தண்ணீர் புட்டியோ (பாட்டில்), குளிர்பானமோ அல்லது டிஸ்ஸு பெட்டியோ இலவசம் என்று சாலையோரமா ஒரு பலகை பல்லை இளித்துக்கொண்டு சாய்ந்து நின்றது.அதை அந்த எரிபொருள் எண்ணெய் உரிமையாளருக்கு தெரியாம கப்சுப்னு புகைப்படம் எடுத்தாச்சு..

  அதாவது இந்திய நாணய மதிப்புப்படி 2 லிட்டர் (150 ருபாய்) அளவு எரிபொருள் எண்ணெய் போட்டால் 1 1/2 லிட்டர் தண்ணீர் இலவசமாம்.

  இதைவைத்து இங்கு தண்ணீர் மலிவுன்னு நினைத்துவிடாதீர்கள்…
  1/2 லிட்டர் தண்ணீர் – 1 ரியால்
  1 லிட்டர் எரிபொருள் எண்ணெய் – 1/2 ரியால்

  இந்தியா எரிபொருள் எண்ணெய்யின் (மூன்றாம் தரம்) விலை = 75.40 ரூபாய் / லிட்டர்.
  சவூதியில் எரிபொருள் எண்ணெய்யின் (இரண்டாம் தரம்) விலை = 7.00ரூபாய் / லிட்டர் .

  சவூதி அரேபியா, ஈரான் போன்ற எரிபொருள் எண்ணெய் வளமிக்க நாடுகளிடமெல்லாம் கொஞ்சம் கொஞ்சிப்பேசாமல், அறிவாளி ஆட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு சென்றுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம் இருக்கும்வரை பெட்ரோலிய விலையில் சதம்காணாமல் விடப்போவதில்லை என்று வருங்காலம் பிரகாசமாய் தெரிகின்றது.. மொத்தத்தில் இந்தியா அரசுக்கு தன் நாட்டு மனிதவளத்தையும் சரிவர உபயோகிப்பதில்லை, பிற நாடுகளையும் சரிவர உபயோகித்துக் கொள்வதில்லை.

  இங்கு மின்சாரமும் மலிவுங்கிற தெனாவெட்டுல தினமும் கல்யாணக்காரவீட்டு தோரணம் மாதிரி எண்ணெய் நிறுவனத்தை சோடிச்சி வச்சிருக்கானுங்க பாருங்களேன்.

  ஹும்ம்..இதை சொன்னா நம்மள போடா வெண்ணைன்னு சொல்றாங்க..

  பின் குறிப்பு:
  ஜம் ஜம் தண்ணீர் 5 லிட்டரு இலவசமா சில விமானத்துல ஏற்ற அனுமதிக்கின்றதுபோல் பெட்ரோலை விடமாட்டார்கலாவென்று சிலபேர் ரூம்போட்டு யோசித்துக் கொண்டும் ஆசையாய் இருக்கத்தான் செய்கிறார்கள் நம் ஆசிய பெருமக்கள்.ஹ்ம்ம்..

  அன்புடன்,
  மீராஷாஹ் ரஃபியா
  http://www.meerashah.in
  http://adirainirubar.blogspot.in/2012/06/blog-post_22.html

   
 • Tags: , ,

  கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள்

  எழுதியவர் மௌலவி – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

  கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள்

  ஒரு ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் நீண்டகாலமாகக் கற்று வந்தார். ஒரு நாள் அந்த ஆசிரியர் தனது மாணவரிடம் எவ்வளவு காலமாக நீ என்னுடன் நெருக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மாணவர் 33 வருடங்கள் என்று கூறினார். தொடந்து அந்த,

  ஆசிரியர் : என்னிடமிருந்து நீ இந்தக் காலப் பகுதியில் எதைக் கற்றாய்?

  மாணவன் : எட்டு விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

  (இது கேட்ட ஆசிரியர் அதிர்ந்து போனார். திறமையான மாணவன். ஆனால் இவ்வளவு காலமாக எட்டே எட்டு விடயங்களைத்தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றானே! என ஆச்சரியப்பட்டார்.)

  ஆசிரியர் : என் வாழ்நாள் எல்லாம் உன்னோடு கழிந்துவிட்டது. ஆனால் நீ எட்டே எட்டு விடயங்களைத்தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றாயே!

  மாணவன் : உண்மைதான் ஆசிரியரே! எட்டே எட்டு விடயங்களைத்தான் நான் கற்றுக் கொண்டேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை.

  ஆசிரியர் : சரி, நீ கற்றுக் கொண்ட பாடங்கள் என்னவென்று கூறு பார்க்கலாம்

 • மாணவன் :

  முதலாவது பாடம்: இந்த உலகில் ஒவ்வொருவரும் மற்றவரை நேசிப்பதைக் கண்டேன். ஆனால் மரணித்து மண்ணறைக்குச் சென்றுவிட்டால் அந்த நேசர்கள் பிரிந்து விடுவதையும் கண்டேன். எனவே, நல்லறங்களையே என் நேசத்துக்குரியவைகளாக நான் எடுத்துக் கொண்டேன். ஏனெனில், நான் கப்றுக்குச் சென்ற பின்னரும் அவை என்னை விட்டும் பிரிந்து விடாமல் என்னுடன் கப்றுக்கும் வரும்.

  (ஆசிரியர் உஷாரானார். தனது மாணவன் வித்தியாசமான கோணத்தில்தான் விடை கூறுகின்றான் என்று தொடர்ந்து கேட்க ஆசைப்பட்டார்.)

  இரண்டாவது பாடம்: நான் ‘யார் தனது இரட்சகன் முன் நிற்பதை அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னைத் தடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக சுவர்க்கம் (அவரது) ஒதுங்குமிடமாகும். ‘ (79:40-41) என்ற குர்ஆன் வசனத்தைப் பார்த்தேன். எனவே, நான் முழுமையாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்படும் அளவுக்கு என் ‘ஹவா’ மனோ இச்சையைக் கட்டுப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டேன்.

  மூன்றாவது பாடம்: உலகத்தில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒன்றைப் பெறுமதியாகக் கருதி அதைப் பாதுகாக்கக் கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டேன். பின்னர் ‘உங்களிடம் உள்ளவை முடிந்து விடக்கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையானவையாகும். மேலும், பொறுமையுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.’ (16:96) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, என்னிடம் கிடைக்கும் பெறுமதிவாய்ந்த எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பாக இருப்பதற்காக அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன்.

  நான்காவது பாடம்: உலகத்தில் ஒவ்வொருவரும் தமது பணம், குடும்பப் பாரம்பரியம், பட்டம் பதவி மூலம் கண்ணியத்தையும் சிறப்பையும் பெற போட்டி போடுவதைக் கண்ணுற்றேன். பின்னர் ‘உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர்.’ (49:13;) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, அல்லாஹ்விடம் கண்ணியத்தைப் பெறும் முகமாக தக்வாவுடன் செயல்பட்டேன்.

  ஐந்தாவது பாடம்: மக்களில் சிலர் சிலரைக் குறை கூறுகின்றனர். மற்றும் சிலர் சிலரை சபிக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று தேடினேன். பொறாமைதான் அதற்கு அடிப்படை என்று அறிந்து கொண்டேன். பின்னர் ‘(நபியே!) அவர்கள் உமது இரட்சகனின் அருளைப் பங்கிட்டுக் கொள்கின்றனரா? இவ்வுலக வாழ்க்கையில், அவர்களது வாழ்க்கைத் தேவைகளை அவர்களுக்கிடையில் நாமே பங்கிடுகின்றோம். அவர்களில் சிலர் மற்றும் சிலரைப் பணிக்கமர்த்திக் கொள்வதற்காக, அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அந்தஸ்துக்களால் நாம் உயர்த்தியிருக்கின்றோம். அவர்கள் ஒன்றுதிரட்டியிருப்பதை விட உமது இரட்சகனின் அருள் மிகச்சிறந்ததாகும்.’ (43:32) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, நான் பொறாமையைக் கைவிட்டேன். மக்களை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன். எனவே, பொறாமைப்படுவதை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்.

  ஆறாவது பாடம்: மக்களில் சிலர் சிலரைக் கோபித்துக் கொள்வதையும், எதிரியாக எடுத்துக் கொள்வதையும், தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும் கண்டேன். பின்னர் ‘நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாவான். எனவே, அவனை நீங்கள் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தாரை, நரகவாசிகளில் அவர்கள் ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே அழைக்கின்றான்.’ (35:6) என்ற வசனத்தைப் பார்த்தேன். அல்லாஹ் ஷைத்தானை எதிரியாக எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பதனால் படைப்பினங்கள் மீதான எதிர்ப்புணர்வை விட்டு விட்டு ஷைத்தானை மட்டும் எதிர்ப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்கு நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேன்.

  ஏழாவது பாடம்: படைப்பினங்களில் அனைவரும் தனக்குரிய வாழ்வாதாரத்தைத் தேடுவதற்காகப் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்வதைக் கண்டேன். சிலர் தடுக்கப்பட்ட வழிமுறைகள் மூலமாகவாவது தமக்குரிய ரிஸ்கைத் தேட முயற்சிப்பதைக் கண்டேன். இதற்காகவே தமது வாழ்வின் பெரும் பகுதியை கழிப்பதைக் கண்டேன். பின்னர் ‘பூமியில் உள்ள எந்த உயிரினமாயினும் அதற்கு உணவளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது. அதன் வாழ்விடத்தையும், அதன் சென்றடையும் இடத்தையும் அவன் நன்கறிவான். (இவை) அனைத்தும் தெளிவான பதிவேட்டில் இருக்கின்றன.’ (11:6) என்ற வசனத்தைப் பற்றி சிந்தித்தேன். அல்லாஹ் உணவளிக்கப் பொறுப்பெடுத்துக் கொண்ட உயிரினங்களில் நானும் ஒருவன் என்பதை அறிந்து கொண்டேன். அல்லாஹ் எனக்காகப் பொறுப்பெடுத்துக் கொண்ட ரிஸ்கைத் தேடுவதில் மூழ்குவதை விட்டு விட்டு அவனுக்காக நான் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாடு காட்டலானேன்.

  எட்டாவது பாடம்: உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுவதைக் கண்டேன். சிலர் தமது பணத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் தமது பதவியில் சிலர் தமது கட்சியில், சிலர் தமது தொண்டரில், சிலர் தமது தலைமையில்…. என பொறுப்புச்சாட்ட, நம்பிக்கை வைக்க என்று வேறு படைப்பை நாடுவதைக் கண்டேன். பின்னர் ‘நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்ததே இதற்குக் காரணமாகும். எனவே, அவர்களது உள்ளங்கள் மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.’ (63:3) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, படைக்கப்பட்டவற்றின் மீது நம்பிக்கை வைப்பதை விட்டுவிட்டு படைத்தவனான அல்லாஹ்வின் மீதே நானும் தவக்குல் வைக்கலானேன்.

  மாணவனின் பதில் கேட்ட ஆசிரியர் பெரிதும் மகிழ்ந்தார். தமது மாணவனுக்காக துஆச் செய்து இன்னும் உற்சாகமூட்டினார். மாணவன் பற்றிய தனது நல்லெண்ணம் வீண் போகவில்லை என்பதை அறிந்து கொண்டார்.

  இது உண்மையில் நடந்த நிகழ்ச்சியா அல்லது கற்பனைச் சித்திரமா என்பதைப் பற்றிய அலசல் அவசியமல்ல. கூறப்பட்ட எட்டுப் பாடங்களும் எமக்கு அவசியமான வழிகாட்டல்கள் என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.

  Source :http://www.islamkalvi.com/portal/?p=6809

   
 • Tags: ,

  இந்திய ரூபாய் மதிப்பு வீழ்வது ! – எழுவதற்கா? அழுவதற்கா?

  அண்மையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அந்நிய செலாவணி சந்தையில் இந்தியா ரூபாயின் நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் பல வினாக்களை பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைப்பற்றிய ஒரு சிறு விளக்கக் குறிப்பைத்தரவே இந்தப் பதிவு அவசியமாகிறது.

  தொடங்கும் முன்பு ஒரு வார்த்தை – குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஊதியம் ஈட்டுவோருக்கும் – NRI என்ற பட்டம் பெற்றோருக்கும் கூறிட விரும்புகிறேன். அமெரிக்க டாலரின் விலை ஏற்றத்தின் விளைவாக நாம் அயல்நாடுகளில் சம்பாதிக்கும் தொகைக்கு இந்தியப் பணத்தில் அதிக அளவு கிடைப்பதாக எண்ணி நாம் ஒரேயடியாக மகிழ முடியாது. காரணம் நம்முடைய பண வருமானத்தின் அளவு கூடி இருக்கலாம். ஆனால் உண்மை வருமானத்தின் அளவு கூடவில்லை. பொருளாதார கலைச் சொற்களில் பண வருமானத்துக்கும் , ( DIFFERENCE BETWEEN MONEY INCOME AND REAL INCOME ) உண்மை வருமானத்துக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. அதாவது நம்முடைய ஊதிய வருமானத்தில் செலவு போக நம் கையில் சேமிப்பாக மிஞ்சுவதன் அளவுதான் உண்மை வருமானமாகும். அதைவிட்டு அதிக பண அளவிலான வருமானம் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கிடைத்தாலும் நமது வழக்கமான செலவுபோக கையில் மிஞ்சாமல் பற்றாக்குறைதான் நிலைமை என்றால் அது நமக்கு பண வருமானமேயன்றி நமது உண்மை வருமானமல்ல. நமது நாட்டின் பணத்தின் மதிப்பு குறைகிறது என்றால் நாம் உபயோகப்படுத்தும் அல்லது நுகரும் பொருள்களின் விலையும் கூடுகிறது அலது கூடும் என்று பொருள். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

  அதே நேரம் நாம் அயல்நாட்டில் ஈட்டும் சம்பளத்தைக்கொண்டு , இப்போதைய செலாவணி விகிதத்தில் ஊருக்கு பணம் அனுப்பி நாம் ஏற்கனவே வாங்கி இருந்த கழுத்தை நெறிக்கும் கடன்கள் இருந்தால் அவைகளை உடனே தீர்க்க முயற்சிக்கலாம். பேசிமுடித்து முன் பணம் மட்டும் கொடுத்து வந்திருக்கும் சொத்துக்களை இப்போது கூடுதலாக பணம் அனுப்பி பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயல்கள் ஓரளவுக்கு நமக்கு பயன்தரும் என்பதை சொல்லிக்கொண்டு இதைப்பற்றி சில குறிப்புகளை அலசலாம்.

  கடந்த ஓராண்டாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல விழுந்துகொண்டிருந்தது; ஊசலாட்டம் ஆடிக்கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து சற்றேறக்குறைய இப்போதைய வீழ்ச்சிவரை ரூபாயின் மதிப்பு 22% சரிந்து வந்திருக்கிறது. பொருளாதார வல்லுனர்கள் இந்த சரிவு இன்னும் தொடரும் என்றுதான் கணக்கிடுகிறார்கள். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ. 60 ௦ வரை வரக்கூடும் என்று ஜோசியம் சொல்கிறார்கள்.

  இதற்கு நச் என்று ஒரு தலையாய காரணம் சொல்லவேண்டுமானால் அமெரிக்க டாலருக்கான நமது நாட்டின் தேவைகள் அதிகரித்துவிட்டன என்று சொல்லலாம். பொதுவாக பொருளாதார கோட்பாடுகளின் அரிச்சுவடி, எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் தேவை அதிகரித்து அதற்குத் தகுந்தபடி வரத்து இல்லையோ அந்தப்பொருள் அல்லது சேவைகளின் விலை உயரும் என்பதாகும். தக்காளி முதல் தங்கம் வரை இதே கோட்பாடுதான். அதன்படி பல்வேறு காரணங்களுக்காக நமது நாட்டின் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இருக்கும் தேவைக்கு சம்பந்தமே இல்லாமல் அமெரிக்க டாலரின் வரத்து குறைந்துகொண்டே போகிறது. இது முக்கிய காரணம்.

  இப்படி தேவைகள் அதிகரித்து இருப்பதும் வரத்து குறைவாக இருப்பதும் அரசுக்கு தெரியாமல் திடீரென்று நடந்ததல்ல. இப்படி நடக்கும் என்று பல பொருளாதார மேதைகள் எச்சரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஆறு பொருளாதார நிபுணர்களைக்கொண்ட நமது அரசின் அமைச்சர் பெருமக்களுக்கு அயல்நாட்டு சுற்றுப்பயணம் பெருகியது மட்டுமல்ல அதற்கான செலவுகளையும் அரசே கொடுத்ததால் அந்த வலி தெரியவில்லை.

 • இப்படி நமது நாட்டுக்கு அமெரிக்க டாலரின் பற்றாக்குறை ஏற்பட மூன்று முக்கியமான காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.

  முதலாவதாக அந்நிய முதலீடுகளின் வெளியேற்றமும், குறைவான ஏற்றுமதிகளும். நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் இரு வழிகள் நமது நாட்டில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளும், நாம் செய்யும் ஏற்றுமதி மூலம் வரும் பட்டியல் தொகைகளுமே ஆகும். 2000 – ஆம் ஆண்டு நம்மை நோக்கி அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வரத்தொடங்கின. இவைகள் பெரும்பாலும் அந்நிய நாட்டினர் நம் நாட்டில் செய்த முதலீடுகள் மட்டுமல்லாமல் நமது அரசியல்வாதிகள் செய்த மாயஜாலங்களின் மூலமும் கருப்பை வெள்ளையாக்கும் அகடம் பகடம் மூலமும் வந்தவை. ( படிக்க: எனது முந்தைய பதிவு அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும் என்ற தலைப்பில் ) ஆனால் எப்படியானாலும் அவை அமெரிக்க டாலர்களாக வந்தன. ஆனால் சமீக காலத்தில் இந்த முதலீடுகளும் அதன் மூலமாக கிடைத்த இலாபங்களும்( REPATRIATION) வெளியேறத்தொடங்கியுள்ளன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை நமது நாட்டிலிருந்து அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் வாபஸ் பெறப்படவில்லை. ஆனால்

  2009 ல் 3.1 பில்லியன் டாலரும்

  2011 ல் 10.7 பில்லியன் டாலரும் நமது நாட்டின் அந்நிய மூலதனத்திலிருந்து வெளியேறிவிட்டன.

  2012 ல் 19 பில்லியன் பிளஸ் டாலர்வரை வெளியேறும் என்று கணக்கிட்டு இருககிறார்கள்.

  (கிளிக்கு ரெக்கை முளைச்சுடிச்சு. ஆத்தைவிட்டு பறந்து போயிடுச்சு.) இப்படி அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு செய்த பணத்தை உருவிக்கொண்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடுவதற்குக் காரணங்கள்? ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி யார் இறைப்பார்கள்? நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, கூட்டணி அரசின் நிலையற்ற கொள்கைகள், வணிக கோட்பாடுகளுக்குட்படாத திட்டமிடமுடியாத செலவினங்கள் என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. வணிக கோட்பாடுகளுக்குட்படாத செலவினங்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு காரியம் நடத்திகொள்வதற்காகக் கொடுக்கப்படும் இலஞ்சம் ஆகும். இவைகளுக்கு பயந்து அந்நிய முதலீடுகள் வாபஸ் பெறப்படுகின்றன.

  இரண்டாவதாக கச்சா எண்ணெய் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கூடுவது ஒருபுறம் அதற்காக அமெரிக்க டாலரில் செலுத்தவேண்டிய பணம் கைவசம் இல்லாவிட்டால் சந்தையில் அதிக விலை கொடுத்தேனும் டாலரை வாங்கி செலுத்தவேண்டிய கட்டாயம். இதனால் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவை, சந்தையில் டாலருக்கான விலையை ஏற்றிவிடுகிறது.

  மூன்றாவதாக யூரோவுக்கு வந்துள்ள சோதனை. உலகின் அந்நிய செலாவணி சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக கருதப்படுவது யூரோ எனப்படும் ஐரோப்பிய யூனியனின் செலாவணியாகும். இந்த யூரோ ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொது செல்வாணியாகும். ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் கிரீஸ் – கிரேக்கம்- நாடு ஒரு அங்கமாகும். கிரீஸ் நாட்டில் பலவித காரணங்களால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஒரு அங்கத்தினர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்ற அங்கத்தினர் நாடுகளை பாதிக்கும் என்று அஞ்சும் நாடுகள் கிரீஸை ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒதுங்கிவிடும்படி வற்புறுத்துகின்றன. அப்படி கிரீஸ் வெளியேறும் சூழ்நிலையில் யூரோவின்மேல் உள்ள அழுத்தம் அதிகமாகி மதிப்புகுறையும். இதைக் கண்ட உலகின் மற்ற நாடுகள் யூரோவை வைத்து முதலீடு செய்வதை தவிர்த்து அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் தொடங்கி இருககிறார்கள். இதனாலும் உலக அளவில் அமெரிக்க டாலரின் விலை உயர்ந்து வருகிறது. குற்றாலத்தில் இடி இடித்து கோயம்புத்தூரில் மழை பெய்வதுபோல்தான் இந்தக் கதை . இதற்குக் காரணம் உலகமயமாக்கல் என்ற பொருளாதரத்தில் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் அசுரனும் அவனை ஊட்டி வளர்க்கும் வல்லரசுகளுமாகும். இந்நிலை இல்லாவிட்டால் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட அரிப்புக்கு இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் சொரிந்து கொள்ள வேண்டியதிருக்காது.

  இந்த மாற்றங்களினால் நாம் எழுவோமா? அழுவோமா? பதில் என்ன வென்றால் நாம் இப்போது அழலாம் ஆனால் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் நம்மால் எழவும் முடியும் . இப்போது எப்படியெல்லாம் நாம் அழவேண்டி இருக்கும்?

  1. பெட்ரோலுக்கு இன்னும் அதிக விலை கொடுக்க நேரிடும். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு தரும் மானியம் அதிகரிக்கப்படவேண்டிவரும். அரசுமானியம் என்பது மன்மோகன்சிங் அல்லது மண்டேசிங் அலுவாலியா வீட்டுப் பத்தாயத்தில் உள்ள கோதுமையை விற்று வருவதல்ல. அரசின் மானியம் கூடினால் வரிச்சுமை கூடும் இதனால் விலைவாசி உயரும்.

  2. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். ஒரு விவசாய நாட்டில் இன்றும் நிறைய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கேவலமான நிலைமையில் இருக்கிறோம்.

  3. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை மட்டும் பெரிதாக பேசுகிறோம். . வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் நமது மாணவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும். விமானப் பயணத்தின் கட்டணங்கள் விமானம் பறக்கும் உயரத்துக்கு எகிறி விடும்.

  4. விலை உயர்வால் நடுத்தரவர்க்கத்தின் நுகர்வு குறைவால் உற்பத்தியான பொருள்கள் தேக்கமடையும். உற்பத்திப் பொருள்களின் தேக்கத்தால் உற்பத்தி குறையும். முதலீடு செய்வோருக்கு முனைப்பு வராது. இலாபம் குறைவதால் சேமிப்பும் அதன்மூலம் வரும் முதலீடுகளும் குறையும். பொருளாதார மந்த நிலை ஏற்படும்.

  எப்படி எல்லாம் செய்தால் நாம் எழலாம்?

  1. ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் அமெரிக்க டாலரை வங்கிகளுக்கு திறந்த சந்தையில் விற்று பற்றாகுறையை சற்று சரிக்கட்ட உதவலாம். இது ஒரு தற்காலிக முதலுதவியாகும். நீண்ட நாட்களுக்கு குணமாக்கும் மருந்தை அரசுதான் தரவேண்டும்.

  2. தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதலீடுமட்டுமல்ல தொழில் வளர்ச்சிக்கான நீண்டகால கடன்களும் அமெரிக்க டாலரில் வாங்கிக்கொள்வதற்கு வகை செய்யலாம்.

  3. எண்ணை நிறுவனங்களுக்கும், இன்றியமையாத பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிர்ணய விலையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவு அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யலாம். சந்தை நிலவரத்தில் வாங்கும் டாலரின் விலையில் உள்ள ஸ்திரமற்ற நிலையும் விலையும் இதனால் தவிர்க்கப்படலாம்.

  4. கூட்டணிக்கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் போக்கை மத்திய அரசு கைவிடலாம். ஒரு நிலையான அந்நிய முதலீடு மற்றும் அந்நிய செலவாணி கொள்கைகளை அறிவித்து பின்பற்றலாம்.

  5. நாட்டின் மூல கனிம வளங்களை தனியாருக்கு குறைந்த விலையில் தாரைவார்ப்பதை நிறுத்தலாம். முக்கிய வருமானம் வரும் சுரங்க கனிமங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டியலில் குறைத்து விலைபோட்டு – வித்தியாசங்களை சுவிஸ் வங்கியில் சேர்க்கும் சில அரசியல்வாதிகளின் ஊழல வெளிப்பட்டுள்ளதை தீவிர குற்றமாக கருதி அப்படி ஒதுக்கப்பட்ட மூல வளங்களை பறிமுதல் செய்யலாம்.

  6. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் டெபாசிட்கள் 100 பில்லியன் வரை இருந்து இப்போது 50 பில்லியனாக ஆகிவிட்டது. ஊக்கப்படுத்தி அதிக டெபாசிட்டுகளை கவரலாம்.

  7. உலகிலேயே அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு விதித்து கணவன்மார்களது கண்ணீரைத் துடைக்கலாம். வரதட்சணையாக தங்க நகை போடுவதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கலாம். ( யார் யார் அடிக்க வரப்போகிறார்களோ?).

  8. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்கிறேன் என்று சில குருவிக் கூட்டங்கள் அமெரிக்க டாலரை சலுகைவிலையில் வாங்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் விற்கும் நிலைகளைக் கட்டுப்படுத்தலாம்.

  பொருளாதாரத்தில் பண மதிபபு குறைவது என்பது உலக அரங்கில் ஒரு நாட்டின் மரியாதைக்குரிய பிரச்னை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம், நிலக்கரிச் சுரங்க வயல்களைக் குறைந்த விலைக்குக் குத்தகை விட்டது, கனிமச் சுரங்கங்களில் அரசியல்வாதிகளை விருப்பம்போலச் சம்பாதிக்க அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் செல்வம் குறிப்பிட்ட சிலரால் சூறையாடப்பட்டுவிட்டது. 2ஜிஅலைக்கற்றை, நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் போன்ற அரசுக்கு வருவாய் பெற்றுத் தரும் தேசச் சொத்துகளைச் சரியான முறையில் விலை நிர்ணயம் செய்திருந்தாலே போதும். இந்திய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். இப்படி நாட்டின் செல்வத்தின் மூலமான வருமானம் இடைக்கொள்ளை இன்றி வகைப்படுத்தப்பட்டு இருந்தால் திடீரென்று உலகைத்தாக்கும் பொருளாதார வீழ்ச்சி சுனாமிகளில் இருந்து தப்பித்துக்கொண்டு விழுந்த பொருளாதாரம் எழுந்த பொருளாதாரமாக நிற்கவே முடியும். அரபு தேசங்கள் அப்படித்தான் ஆடாமல் நிற்கின்றன.

  -இபுராஹீம் அன்சாரி

  Source : http://adirainirubar.blogspot.in/2012/06/blog-post_19.html

   
 • Tags:

  மொழி அறியும் தேனி

  மொழி அறியும் தேனி
  [ ஒரு கண்டத்திலுள்ள தேனீக்கள் பிற கண்டத்திலுள்ள தேனீக்களின் சிறப்பியல்புமிக்க நடன அசைவுகளை புரிந்து கொள்கின்றனவா என்பதை ஆராய சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அறிவியலாளர்கள் முயன்று, வெற்றியும் பெற்றுள்ளனர்.

  உணர்வுகளை பிறருக்கு வெளிப்படுத்த மொழி இருப்பதுபோல் தேனீக்களுக்கு நடனங்கள் உள்ளன. தேனீக்களின் மொழி அவைகளின் நடனமே. அதன் மூலம் தங்களிடையில் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன.

  தாங்கள் வாழும் இடத்திலிருந்து தேன் உணவு கிடைக்கின்ற இடத்திற்கான தொலைவை வேவ்வேறான நடனங்கள் மூலம் அவை வெளிப்படுத்துகின்றன.

  இந்நிலையில் தேனீக்களின் சமூக அறிவு பற்றியும் ஆழமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.]

  ஒண்ணாயிருக்க கத்துக்கனும் – இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்த பாருங்க – அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். உணவை கண்டவுடன் காகாவென குரலெழுப்பி தனது இனத்தை அழைத்து இணைந்து உண்பது காகத்தின் பழக்கம். அதன் ஒற்றுமையை எடுத்துக்காட்டி பலரும் அறிவுரை கூறுவண்டு. ஆனால், அவை குரல் கொடுப்பது பகிர்ந்து உண்பதற்கு என நினைக்கிறீர்களா? சிதறிக்கிடக்கும் உணவு நல்லதா அல்லது நச்சு வைத்துள்ளனரா? என அறியாமல், தன்னோடு பலரையும் அழைத்து, இறந்தால் அனைத்து காக்கைகளும் இறந்து விடவே அவ்வாறு செய்கின்றன என்று குதர்க்கமாக விவாதிப்பவர்களும் உண்டு. காகம், குருவி, கோழி போன்ற பலவித பறவை வகைகளும், சிங்கம், யானை, புலி, பூனை, ஆடு, மாடு போன்ற விலங்கினங்களும் தங்களுடைய தனித்தன்மை கொண்ட ஒலிகளால் மொழி பரிமாற்றங்களை மேற்கொள்கின்றன என்று பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம்.

  தேனீக்கள், கடின உழைப்பு, சுறுசுறுப்பு மற்றும் சேமிப்பு ஆகியவற்றிற்கு புகழ்பெற்றவை. ஓடி, தேடி திரிந்து தேனை சேமித்துவிட்டு, அவை செயல்பட முடியாமல் போகும் குளிர் காலங்களில் அதனை தங்கள் உணவாக பயன்படுத்தும் புத்திசாலிகள். இனிமையான தேனை சேமித்து நமக்கு மருந்தாக அளிக்கும் மருத்துவர்கள், தேனீக்கள். தேன் கிடைக்கக்கூடிய இடங்களை அறிந்து, அதனை எப்படி பிற தேனீக்களுக்கு அறிவிக்கின்றன என்பது வியப்பான செய்தி. தேனீக்களிடம் மொழியோ, பேச்சு வழக்குகளோ இருக்கின்றனவா என்பது இதுவரை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் அவை சிறப்பியல்புமிக்க ஒருவகை நடனங்களை மொழியாக பயன்படுத்தி தகவல்களை பறிமாறிக்கொள்கின்றன என்று தெரிகின்றது. நமது உணர்வுகளை பிறருக்கு வெளிப்படுத்த மொழி இருப்பதுபோல் தேனீக்களுக்கு நடனங்கள் உள்ளன. தேனீக்கள் மற்றும் அவற்றின் நடன மொழி பற்றி ஆய்வு செய்த ஆஸ்திரேலிய நிபுணர் Karal Von Frich 1973 யில் நோபல் பரிசு பெற்றார்.

  நம்மிடம் பல்வேறு மொழிகள் உள்ளன. அதுபோன்று வேவ்வேறு நாடுகளிலான தேனீக்களின் நடன மொழி வெளிப்பாடுகளில் மாற்றங்கள் இருக்கின்றனவா என்ற ஐயம் எழுவது இயல்பு. அது தான் உண்மையும் கூட. பிற கண்டங்களை சேர்ந்த தேனீக்கள் தங்கள் நடன அசைவுகளில் வேறுபாடுகளை கொண்டுள்ளன.

  ஆசியாவிலுள்ள தேனீக்களின் நடனமும் ஐரோப்பாவிலுள்ள தேனீக்களின் நடனமும் ஒன்றா என்றால், இல்லை. ஏறக்குறைய ஒரேவகையாக இருக்கின்றன என்றாலும் அசைவுகளில் மாற்றங்கள் உள்ளனவாம். நம்மிடம் பல மொழிகள் உள்ளதால் ஒருவரையெருவரை புரிந்து அறிந்து கொள்ள, நாம் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, உருது, சீனம், பிரெஞ்சு, ஜெர்மன் என பிறமொழிகளை கற்க வேண்டியுள்ளது. அப்படி கற்கும்போது பல்வேறு தாய்மொழி அடிப்படையிலான பாதிப்புக்களால் சிக்கல்கள் எழுவதுண்டு. அதுபோல தேனீக்களுக்கு பிற கண்டங்களிலான நடன மொழியை புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் இருக்கும் என எண்ணுகிறீர்கள் தானே!

  ஒரு கண்டத்திலுள்ள தேனீக்கள் பிற கண்டத்திலுள்ள தேனீக்களின் சிறப்பியல்புமிக்க நடன அசைவுகளை புரிந்து கொள்கின்றனவா என்பதை ஆராய சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அறிவியலாளர்கள் முயன்று, வெற்றியும் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் Shaowu Zhang, Zhejiang பல்கலைக்கழகத்தின் Shendlu chen மற்றும் ஜெர்மனி Wuerzburg பல்கலைக்கழக Juergen Tautz முதலியோர் இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். Zhejiang பல்கலைக்கழகத்தின் விலங்கியல் கல்லூரியின் மருத்துவர் Songkun Su ஆய்வை வழிநடத்தினார்.

  ஆய்வுகளில், தேனீக்கள் பிற கண்டத்திலுள்ள தேனீக்களின் நடன மொழிகளை புரிந்து கொள்கின்றன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆசியக் கண்டத்தை சேர்ந்த தேனீக்கள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த தேனீக்களின் நடன மொழியை புரிந்து கொண்டு, தங்கள் உணவான தேன் கிடைக்குமிடத்தை அறிந்து கொள்கின்றன என்பதை ஆய்வுகள் மூலம் உணர்த்தியுள்ளனர். ஆசிய கண்டத்திலுள்ள தேனீக்கள், உணவு கிடைக்கின்ற இடங்களை தெரிவிக்கின்ற தனித்தன்மையான ஜரோப்பிய தேனீக்களின் நடனத்தை விரைவாக புரிந்துகொள்கின்றன என்பதையும் நிரூபித்துள்ளனர்.

  தேனீக்களின் மொழி அவைகளின் நடனமே. அதன் மூலம் தங்களிடையில் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. தாங்கள் வாழும் இடத்திலிருந்து தேன் உணவு கிடைக்கின்ற இடத்திற்கான தொலைவை வேவ்வேறான நடனங்கள் மூலம் அவை வெளிப்படுத்துகின்றன என்பதை முந்தைய ஆய்வுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. சாதராண வட்ட வடிவில் நடனமாடினால் தேன் உணவு மிக அருகில் உள்ளதை குறிக்கும். அரைவட்ட வடிவிலான நடனம் சற்று தொலைவில் உணவு கிடைப்பதை உணர்த்தும். இருபுறமும் அங்குமிங்குமாக அசைந்தாடும் நடனம் உணவு மிக தொலைவில் தான் கிடைக்கும் என்று அறிவிக்கிறது. இருபுறமும் அசைந்தாடும் நடனம் உணவு கிடைக்கும் திசையையும், தொலைவையும் காட்டுகிறதாம்.

  இதற்கான ஆய்வுகள் பல்வேறு இடங்களில் பல்வித சூழல்களில் மேற்கொள்ளப்பட்டன. Fujian மாநிலம் Zhangzhou வேளான் கல்லூரியின் அருகிலுள்ள Da-mei கால்வாய் ஓரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆசிய தேனீக்கள் ஐரோப்பிய தேனீக்களைவிட இருபுறமும் அசைந்தாடும் நடனத்தை அடிக்கடி அதிக நேரம் செங்குத்தான திசையில் ஆடி வெளிப்படுத்தின. தேனீக்கள் ஒன்று மற்றதன் நடனத்தை புரிந்து கொள்கிறதா என்பதை அவை ஒன்றாக இருந்தபோது ஆய்வு செய்தனர். ஆசிய தேனீக்கள் ஐரோப்பிய தேனீக்களின் தனித்தன்மையான இருபுறமும் அசைந்தாடும் நடனத்தை எளிதாக புரிந்துகொண்டு அதன் மூலம் தெரிவிக்கப்பட்ட உணவு கிடைக்கும் இடம் பற்றிய தகவலை புரிந்து கொண்டு செயல்பட்டன. ஆனால், ஐரோப்பிய தேனீக்களை புரிந்து கொண்டாலும், ஆசிய தேனீக்கள் அவற்றை போல நடனமாட தொடங்கிவிடவில்லை. தங்களுடைய நடனத்தையே தொடர்ந்து ஆடின. அதேவேளை ஐரோப்பிய தேனீக்கள் ஆசிய தேனீக்களின் நடனத்தை கற்றுக்கொள்ளும் திறன் குறைவான பெற்றிருந்தன என்று ஆய்வில் தெரியவந்தது.

  பிற கண்டங்களை சேர்ந்த தேனீக்களை ஒரே கூட்டில் வாழ விட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அறிய முற்பபட்டனர். ஒரே கூட்டில் வெவ்வேறான இடங்களை சேர்ந்த தேனீக்களை வைத்ததோடு, அவற்றுக்கு தேவையான மிக முக்கிய அம்சங்களான, மாறும் தட்பவெப்ப நிலை, ஈரப்பதம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். ஒரே கூட்டில் விடப்பட்ட பிற கண்டங்களை சேர்ந்த தேனீக்கள் ஒன்றாக இருப்பதை விரும்பவில்லை என்பதை ஆய்வுக்காட்டியது.

  கண்டங்களின் வேறுபாடுகளின்படி வித்தியாசமான நறுமணங்களை கொண்டுள்ளதால் அவை இந்த வேறுபாட்டை உணர்ந்து ஒன்றையென்று கொன்றுவிடுகின்றன. பலவகை தேனீக்கள் ஒரே குடியிருப்பில் இருப்பதை விரும்பவில்லை என்பதை இது தெளிவுப்படுத்தியது. பணிபுரிகின்ற ஐரோப்பிய உழைப்பாளி தேனீக்களையும், ஆசிய இராணித் தேனீ மற்றும் உழைப்பாளி தேனீக்களை ஒரே கூட்டில் வைத்து 50 நாட்கள் எந்த சிக்கலும் இல்லாமல் இணக்கமாக பாதுகாத்தனர். அதற்காவே சுட்டித்தனம் மிகுந்த தேனீக்களை அகற்றியதோடு, பிற தேனீக்களின் மேல் தேன் நீர் தெளித்து அமைதியடைய செய்தனர். ஆனால் ஆசிய உழைப்பாளித் தேனீக்களை ஐரோப்பிய இராணித் தேனீ மற்றம் உழைப்பாளி தேனீக்களுடன் சேர்த்து வைத்தபோது, இந்த இணக்கம் வெற்றிபெறவில்லை. அவை ஒன்றையொன்று கொன்று மாய்ந்தன.

  இந்நிலையில் தேனீக்களின் சமூக அறிவு பற்றி ஆழமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆசிய தேனீக்கள் ஐரோப்பிய தேனீக்களின் நடன மொழியை அறிந்துகொள்ள அதிக திறன் கொண்டவையா? ஆம் என்றால் பிற தேனீ வகைகளில் தரவுகளை எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றல் வேறுபடுகிறதா? என்பதெல்லாம் விவாதிக்கப்படுகின்றன. 100 மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு பின்னரும், தேனீக்களின் நடத்தை மனித சமூகத்திற்கு மதிப்புக்குரிய குறிப்பாகும். உயிரினங்கள் அனைத்தும் தத்தமது முறைகளில் உணர்வு பரிமாற்றங்களை மேற்கொள்வதை தேனீக்களின் நடன மொழி உணர்த்துகிறது. அவற்றை சரியாக புரிந்து கொள்ளாதது தான் நமது நிலை.
  Source : http://www.nidur.info/

   

  அழகிய கண்ணே!

  vayal

  அழகிய கண்ணே!
  பெண்களின் அழகில் முக்கிய இடம் வகிப்பது காந்தமாக இழுக்கும் அவர்கள் கண்கள்தான். கண்களைப் பாடாத கவிகளும் உண்டோ? கண்கள் பளபளப்பாக மின்னினால் ‘என்ன சந்தோஷமா இருக்கே போலிருக்கு’ என்போம். அதுவே சோர்ந்து கிடந்தால் ‘உடம்புக்கு சரியில்லையா?’ என்போம். இப்படி உடலின் ஆரோக்கியத்தை படம் பிடித்துக் காட்டும் பிரதான கண்ணாடியாகவும் நம் கண்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதைப் பற்றி பார்க்கலாம்.
  கண்களுக்கு அதிக சோர்வு கொடுப்பது, கண்ணைக் கூசுச்செய்யும் ஒளியை நேரடியாகப் பார்ப்பது, பறந்து வரும் தூ தும்புகள் மற்றும் அதிகப்படியான புகை ஆகியவை அழகான கண்களுக்கு எதிரிகளாகும்.
  எழுவது, படிப்பது, தைப்பது போன்ற கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் வேலைகளைச் செய்யும் முன் எதிரே இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கும் அளவுக்கு ஒளி இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். அப்படியிருந்தால் மட்டுமே வேலையைத் தொடங்குகள்.

 • வெயில் காலத்தின் சுட்டெரிக்கும் ஒளிக்கீற்றுகள் கண்களுக்கு மிகுந்த பாதிப்பு கொடுக்கும். அந்த சமயத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துவிடுங்கள். அல்லது நல்ல தரமான கறுப்பு கண்ணாடி அணிந்து செல்லுங்கள்.
  கண் சோர்வு மற்றும் எரிச்சலைப் போக்க கண்களை மூடி அமைதியாக ஓய்வெடுப்பதைவிட சிறந்த மருந்து கிடையாது.
  சோர்வைப் போக்க மற்றும் ஒரு எளிய வழி உண்டு. முழங்கைகளை மேஜையில் ஊன்றி வாட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை குழிவாக கப் வடிவில் செய்து இரண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். தலையின் மொத்த எடையும் கைகளில் விழும்படியாக தலையை குனிந்து முன்னுக்கு கொண்டு வாருங்கள். இப்படி செய்வதால் கழுத்துத் தசைகளுக்கும் ஓய்வு கிடைக்கும். குறைந்தது பத்து நிமிடங்களுக்கு இதே நிலையில் இருங்கள். தினசரி இதுபோல பலமுறை செய்யலாம்.
  கீழ்ப்பாதி உள்ளக்க்ளையில் கண்களை லேசாக அழுத்த வேண்டும். முழுமையான இருட்டு வரும் வரை இதுபோல தொடர்ந்து செய்ய வேண்டும். சோர்வைப் போக்க இது இன்னொரு வழி.
  தூக்கம் இல்லாத கண்கள் செந்நிறமாக இருப்பதோடு சோர்வாகவும் காட்சியளிக்கும். நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்கி கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். வயதாகி விட்டதை முதலில் உணர்த்துவத கண்கள் தான். உடலில் உண்டாகும் கோளாறுகளை படம் பிடித்துக் காட்டும் முக்கியக் கருவியும் கண்கள்தான். அதனால் கண்களைச் சுற்றி கருவட்டம், சுருக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
  கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையங்கள் தற்காலிகமானவைதான். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் சாப்பிட்டு சரியாக ஓய்வெடுத்தால் வந்த வழியே மறைந்து போய்விடும்.
  நம் உடலிலேயே கண்களின் கீழ் இருகும் மிருதுவான தோல் பகுதியில் மட்டும்தான் வியர்வை சுரப்பிகள் கிடையாது.
  சில பெண்கள் இரவு படுக்கும்போது கனமான க்ரிமோ, மாயிஸ்சரைசரோ தடவிக்கொண்டு படுப்பது வழக்கம். அப்படி செய்பவர்கள் கண்களைச் சுற்றியிருக்கும் மிருதுவான தோல் பகுதியில் க்ரீம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற க்ரீம்களில் இருக்கும் எண்ணெய்¢த் தன்மை அந்த மிருதுவான தோல் பகுதிகளில் பட்டு அதை விரிவடையச் செய்யும். காலையில் எழும்போது கண்களின் கீழ் வீங்கியது போல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
  கரும்புள்ளிகளையும், பருக்களையும் போக்கும் ஆய்ன்ட்மெண்டுகள், ஃபேஸ் பேக் போன்ற எந்தப் பொருளும் இந்த மிருது பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் இருக்கும் உலர் தன்மை அந்தப் பகுதியிலிருக்கும் தோல் பகுதியை அதிகமக சுருங்கச் செய்து வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிடும்.
  ஊட்டங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கமே கண்களின் ஆரோக்கியத்துக்கான மூலப் பொருளாகும். வைட்டமின் ஏ கண்ணுக்கான பிரத்யேக வைட்டமின், கேரட், பசலைக்கீரை, வெண்ணெய், ஆட்டு ஈரல், மீன், மீன் எண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் இது அதிகமுள்ளது.
  தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடித்து வந்தால் கண்களின் பளபளப்புத் தன்மை குறையாமல் இருக்கும்.

  கண்களை மின்னல் போல் மின்னச் செய்ய இதோ சில எளிய வீட்டு ட்ரீட்மெண்டுகள்:
  1. சிறிய துண்டு வெள்ளரிக்காயைத் துருவிக் கொள்ளுங்கள். அதிலிருக்கும் ஜூஸைப் பிழிந்தெடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துவிடுங்கள். இரண்டு பெரிய துண்டு பஞ்சை வெள்ளரி ஜூஸிலோ, பன்னீரிலோ நனைத்து லேசாகப் பிழிந்து மூடிய கண்கள் மேல் வைத்து விடுங்கள். எந்த விஷயம் பற்றியும் சிந்திக்காமல் குறைந்து பத்து நிமிடம் படுத்துக் கொள்ளுங்கள். நாளொன்றுக்கு இதுபோல இரண்டு முறை செய்யலாம். இது கண்களின் சோர்வைப் போக்குவதோடு கண்களைச் சுற்றிய கரும் பகுதிகளை நாளடைவில் மறையச் செய்யும்.
  2. கறுப்பு டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அது குளிர்ந்ததும் அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வையுங்கள்.
  3. புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை சுற்றிய கருவளையங்கள் நாளாடைவில் மறையும்.
  Source : http://senthilvayal.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/page/203/

   
 • Tags: