RSS

அழகிய கண்ணே!

01 Jun

vayal

அழகிய கண்ணே!
பெண்களின் அழகில் முக்கிய இடம் வகிப்பது காந்தமாக இழுக்கும் அவர்கள் கண்கள்தான். கண்களைப் பாடாத கவிகளும் உண்டோ? கண்கள் பளபளப்பாக மின்னினால் ‘என்ன சந்தோஷமா இருக்கே போலிருக்கு’ என்போம். அதுவே சோர்ந்து கிடந்தால் ‘உடம்புக்கு சரியில்லையா?’ என்போம். இப்படி உடலின் ஆரோக்கியத்தை படம் பிடித்துக் காட்டும் பிரதான கண்ணாடியாகவும் நம் கண்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதைப் பற்றி பார்க்கலாம்.
கண்களுக்கு அதிக சோர்வு கொடுப்பது, கண்ணைக் கூசுச்செய்யும் ஒளியை நேரடியாகப் பார்ப்பது, பறந்து வரும் தூ தும்புகள் மற்றும் அதிகப்படியான புகை ஆகியவை அழகான கண்களுக்கு எதிரிகளாகும்.
எழுவது, படிப்பது, தைப்பது போன்ற கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் வேலைகளைச் செய்யும் முன் எதிரே இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கும் அளவுக்கு ஒளி இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். அப்படியிருந்தால் மட்டுமே வேலையைத் தொடங்குகள்.

 • வெயில் காலத்தின் சுட்டெரிக்கும் ஒளிக்கீற்றுகள் கண்களுக்கு மிகுந்த பாதிப்பு கொடுக்கும். அந்த சமயத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துவிடுங்கள். அல்லது நல்ல தரமான கறுப்பு கண்ணாடி அணிந்து செல்லுங்கள்.
  கண் சோர்வு மற்றும் எரிச்சலைப் போக்க கண்களை மூடி அமைதியாக ஓய்வெடுப்பதைவிட சிறந்த மருந்து கிடையாது.
  சோர்வைப் போக்க மற்றும் ஒரு எளிய வழி உண்டு. முழங்கைகளை மேஜையில் ஊன்றி வாட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை குழிவாக கப் வடிவில் செய்து இரண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். தலையின் மொத்த எடையும் கைகளில் விழும்படியாக தலையை குனிந்து முன்னுக்கு கொண்டு வாருங்கள். இப்படி செய்வதால் கழுத்துத் தசைகளுக்கும் ஓய்வு கிடைக்கும். குறைந்தது பத்து நிமிடங்களுக்கு இதே நிலையில் இருங்கள். தினசரி இதுபோல பலமுறை செய்யலாம்.
  கீழ்ப்பாதி உள்ளக்க்ளையில் கண்களை லேசாக அழுத்த வேண்டும். முழுமையான இருட்டு வரும் வரை இதுபோல தொடர்ந்து செய்ய வேண்டும். சோர்வைப் போக்க இது இன்னொரு வழி.
  தூக்கம் இல்லாத கண்கள் செந்நிறமாக இருப்பதோடு சோர்வாகவும் காட்சியளிக்கும். நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்கி கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். வயதாகி விட்டதை முதலில் உணர்த்துவத கண்கள் தான். உடலில் உண்டாகும் கோளாறுகளை படம் பிடித்துக் காட்டும் முக்கியக் கருவியும் கண்கள்தான். அதனால் கண்களைச் சுற்றி கருவட்டம், சுருக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
  கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையங்கள் தற்காலிகமானவைதான். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் சாப்பிட்டு சரியாக ஓய்வெடுத்தால் வந்த வழியே மறைந்து போய்விடும்.
  நம் உடலிலேயே கண்களின் கீழ் இருகும் மிருதுவான தோல் பகுதியில் மட்டும்தான் வியர்வை சுரப்பிகள் கிடையாது.
  சில பெண்கள் இரவு படுக்கும்போது கனமான க்ரிமோ, மாயிஸ்சரைசரோ தடவிக்கொண்டு படுப்பது வழக்கம். அப்படி செய்பவர்கள் கண்களைச் சுற்றியிருக்கும் மிருதுவான தோல் பகுதியில் க்ரீம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற க்ரீம்களில் இருக்கும் எண்ணெய்¢த் தன்மை அந்த மிருதுவான தோல் பகுதிகளில் பட்டு அதை விரிவடையச் செய்யும். காலையில் எழும்போது கண்களின் கீழ் வீங்கியது போல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
  கரும்புள்ளிகளையும், பருக்களையும் போக்கும் ஆய்ன்ட்மெண்டுகள், ஃபேஸ் பேக் போன்ற எந்தப் பொருளும் இந்த மிருது பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் இருக்கும் உலர் தன்மை அந்தப் பகுதியிலிருக்கும் தோல் பகுதியை அதிகமக சுருங்கச் செய்து வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிடும்.
  ஊட்டங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கமே கண்களின் ஆரோக்கியத்துக்கான மூலப் பொருளாகும். வைட்டமின் ஏ கண்ணுக்கான பிரத்யேக வைட்டமின், கேரட், பசலைக்கீரை, வெண்ணெய், ஆட்டு ஈரல், மீன், மீன் எண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் இது அதிகமுள்ளது.
  தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடித்து வந்தால் கண்களின் பளபளப்புத் தன்மை குறையாமல் இருக்கும்.

  கண்களை மின்னல் போல் மின்னச் செய்ய இதோ சில எளிய வீட்டு ட்ரீட்மெண்டுகள்:
  1. சிறிய துண்டு வெள்ளரிக்காயைத் துருவிக் கொள்ளுங்கள். அதிலிருக்கும் ஜூஸைப் பிழிந்தெடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துவிடுங்கள். இரண்டு பெரிய துண்டு பஞ்சை வெள்ளரி ஜூஸிலோ, பன்னீரிலோ நனைத்து லேசாகப் பிழிந்து மூடிய கண்கள் மேல் வைத்து விடுங்கள். எந்த விஷயம் பற்றியும் சிந்திக்காமல் குறைந்து பத்து நிமிடம் படுத்துக் கொள்ளுங்கள். நாளொன்றுக்கு இதுபோல இரண்டு முறை செய்யலாம். இது கண்களின் சோர்வைப் போக்குவதோடு கண்களைச் சுற்றிய கரும் பகுதிகளை நாளடைவில் மறையச் செய்யும்.
  2. கறுப்பு டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அது குளிர்ந்ததும் அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வையுங்கள்.
  3. புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை சுற்றிய கருவளையங்கள் நாளாடைவில் மறையும்.
  Source : http://senthilvayal.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/page/203/

  Advertisements
   
 • Tags:

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: