RSS

Monthly Archives: July 2012

பதிவுலகில் ஸாதிகா


சகோதரர் சீமான்கனி அவர்கள் அழைத்த தொடர் பதிவு.அழைப்புக்கு நன்றி சீமான்கனி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஸாதிகா என் அம்மா அப்பா ஆசை ஆசையாக வைத்த அருந்தவப்பெயர். அடுத்து வருவது என் குடும்பப்பெயர்.இறுதியில் வருவது என் இறுதிகாலம் வரை மட்டுமல்லாமல் அதற்கப்புறமும் எனக்கே என்னவராக என்றென்றும் இருக்கவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்யும் என் பெட்டர் ஹாஃபின் பெயர்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இதிலென்ன சந்தேகம்.ஸாதிகாவேதான்.ஆனாக்க ஏன் புனைப்பெயரில் வந்து இருக்கக்கூடாது என்று இப்ப ஃபீல் பண்ணுவதுதாங்க உண்மை.(இன்னும் சுதந்திரமாக எழுதலாமே)

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

காலடி இல்லேங்க.கையடி என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.ஏன்னா கையாலேதானே டைப் பண்றோம்.பொதுவாக எழுதுவதில் ஆர்வம் உள்ள எனக்கு பிளாக் உலகம் என்று இருப்பது பார்த்ததுமே முன்னே பின்னே யோசிக்காமல் வசமா மாட்டிக்கொண்டேன்.பிளாக்ன்னா என்ன என்று சரியாக கூட புரிந்து கொள்ளாமல் ஆரம்பிக்கப்பட்டதுதான் என் பிளாக்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் அடைந்து விட்டதா?இல்லேங்க!என்னுடைய டார்கெட் 1000 ஃபாலோவர்ஸ்.ஒரு இடுகைக்கு குறைந்தது ஒரு சதத்திற்கும் மேல் பின்னூட்டம்.அதற்குத்தான் யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்.இன்னும் பெரிசா ஒன்றும் செயல் படுத்தலேங்க.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

 • நிறைய பகிர்ந்து கொண்டதுண்டு.விளைவுகள் இனிமையான பின்னூட்டங்கள் தவிர வேறொன்றும் இல்லை.

  6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

  பொழுது போக்காகத்தான் ஆரம்பித்தேன்.இப்பொழுது வேறெதிலும் பொழுதை செலுத்த மனமில்லாமல் இருப்பதுதான் என்னுடைய நிலை.இதில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால்..ஐயோ வேண்டவே வேண்டாம்.எனக்கும் பிள்ளைகுட்டிங்க இருக்கு.அதுகளை நன்றாக படிக்க வைத்து அவங்க நல்ல படி சம்பாதித்து உயர்வடைந்தால் போதும்.முக்கியமான விஷயம்.வலைப்பூவால் இனிய நட்புகள்,உடன் பிறவா பிறப்புகளின் அன்பை நிறைய சம்பாதித்து இருக்கின்றேன்.சம்பாதித்துக்கொண்டிருக்கின்றேன்.அது போதும் எனக்கு.

  7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

  மொத்தம் இரண்டு இது அனைவரும் அறிந்தது.அறியாதது ஒன்று.ஆனால் பதிவிடுவதில்லை.வேறொரு பெயரில் உள்ளது.(கண்டு பிடித்து சொன்னால் 10 பித்தளைக்காசுகள் பரிசாக வேண்டுமானல் வழங்குகின்றேன்.)நான் பதிவெழுதுவதைப்பார்த்து என் மகன்களுக்கும் ஆர்வமாகி அவர்களும் பிளாக் ஆரம்பித்து விட்டார்கள்.இது பெரியவரது பிளாக்.இது சிறியவரது பிளாக்.நான் தான் நன்றாக படிக்கின்ற வேலையை பாருங்கள் என்று பிளாக்குக்கு தடா போட்டு விட்டேன்.இருந்தாலும் நான் அசந்த சமயம் பெரியவர் பதிவிட்டு விடுவார்.(அவர் எழுதிய கதைகள் கத்தை கத்தையாக கப்போர்ட் லாஃப்டில் தூங்குகின்றது.)

  8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

  இது இரண்டும் வந்ததில்லை.சிலரது இடுகைகளைப்பார்க்கும் பொழுது வருத்தம் ஏற்படும்.அவர்களது வலைப்பூ பக்கம் நான் எட்டிப்பார்ப்பதுடன் சரி.பின்னூட்டம் இடமாட்டேன்.

  9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

  முதன் முதல் பிளாக் ஆரம்பித்து என் மகனிடம் காட்டினேன்.அவரது பின்னூட்டம்தான் முதல் பின்னூட்டம்.அது எனக்கு கிடைத்த நோபல் பரிசு.இந்த நிமிடம் வரை தினம் ஒரு முறையாவது என் பிளாக் பற்றி விசாரிக்கமட்டுமல்லாமல் மற்றவர்களுடைய பிளாக் பற்றியும் விசாரித்துக்கொள்வார்.
  hamid kaashif said…

  Mummy, I salute your wonderful work.
  I thank God for you giving birth to me.
  You’re great.


  Hamid காஷிப்
  இதுதான் எனக்கு முதன் முதல் வந்த பின்னூட்டம்.எனக்கு கிடைத்த நோபல் பரிசு.

  10) கடைசியாக—-விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்…

  என்னைப்பற்றி சொல்றதுக்கு பெரிசா ஒன்றுமே இல்லையே!

  அனைவரது வலைப்பூவிலும் இந்த தொடர் அழைப்பு ஏனைய வலைப்பூதாரர்களால் அழைப்பிடப்பட்டுள்ளதால் நான யாரை அழைக்கட்டும்???

  தங்கை மேனகா எனக்கு இந்த விருதினை மட்டுமல்லாமல் மேலும் ஆறு விருதுகளை அள்ளித்தந்து இருக்கின்றார்.விருதுகளை கை கொள்ளாமல் பெற்று மனம் நிறைய மகிழ்ச்சியுடன் மேனகாவுக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன்.

  இது தங்கை பாயிஷா தந்த விருது.இவ்வளவு நாட்களாக லாக்கரில் பத்திரமாக பூட்டி பாதுகாத்து விட்டு இப்பொழுது உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.நன்றி பாயிஷா.

  Jazaaka Allah khair! Source :http://shadiqah.blogspot.in/2010/08/blog-post.html

  Advertisements
   
 • Leave a comment

  Posted by on July 27, 2012 in Uncategorized

   

  Tags: ,

  படிக்கட்டுகள்.. ஏற்றம் – 17

  வாழ்வியல் முன்னேற்றத்தைப் பற்றி எழுதும்போது உறவுகளின் முக்கியத்துவம் ஏன் என சிலர் நினைக்கலாம். காரணம் இருக்கிறது, நம் வட்டாரம் சார்ந்த ஆண்கள் முன்னேர நினைத்து ஏறக்குறைய ஒரு ஓட்டப்பந்தய ட்ராக்கில் நிற்பதுபோல் வாழ்க்கையை தொடங்க நினைக்கும்போது அந்த ஆண்மகனின் எண்ணம் எல்லாம் தான் அடையப்போகும் அல்லது தொடப்போகும் வெற்றியில்தான் இருக்கும், அதற்கிடையில் தனது பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும் அந்த சம்பாதிக்கும் ஆண்மகனை ஓட விடாமல் ஆளுக்கு ஒரு தாம்புக் கயிற்றை அவன் இடுப்பில் கட்டி தன் வசம் இழுத்தால் எப்படித்தான் அந்த பாவப்பட்ட ஜென்மம் ஓடி ஜெயிக்க முடியும். இதை நான் எழுதக் காரணம் நம் சமுதாயங்களில் புரையோடிப் போயிருக்கும் ‘ ஆண்மகன் தான் தன் சகோதரியின் பொருளாதாரத்துக்கு பொறுப்பு, ஆண்மகன் தான் தன் சகோதரியின் பிள்ளைகளின் கல்யாணம் முடிந்தால் தனது பேரப் பிள்ளைகளின் தேவைக்கும் பொறுப்பு என்ற எழுதப்படாத சட்டம் நம் பகுதி ஆண்களின் தலையில் எழுதப்பட்டிருப்பதுதான். பெண்களை படிக்க வைத்து தனது சொந்த படிப்பையும் திறமையும் நம்ப விடாமல் அவர்களை தொடர்ந்து ஆண்களை சார்ந்து இருக்க வைக்கும் பழக்கம். தொடர்ந்து ஆண்களை சம்பாதிக்கும் எந்திரமாக்கியிருக்கிறது.

  பெண்கள் அதிகம் படித்தால் எங்கு நம்மை அதிகம் கேள்வி கேட்டுவிடுவார்களோ என்று நினைக்கும் ” ஆப்கானிஸ்தான் தனமான புத்தி” நம் பகுதியில் பல ஆண்களிடம் இருக்கிறது.

  ஆக ஆண்களின் முன்னேற்றத்தில் மனைவியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை முன்னால் அத்தியாயத்தில் பார்த்தாலும் அடுத்த வெகு அருகில் இருக்கும் உறவான பிள்ளைகளின் பங்கு இதில் மிக முக்கியம். இன்றைய தேதியில் நம் ஊர் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வாழ்வியல் மாற்றம் ஏதோ மேஜிக் ஷோவில் நடந்தது மாதிரி வந்ததல்ல.


  நம் ஊர் பகுதிகளில் முன்பு இருக்கும் வீடுகள் இன்றைய பிள்ளைகள் மறந்து இருக்கலாம் அல்லது அவர்களுக்கு தெரியாமலேயே போயிருக்கலாம். இரண்டு ரூம்கள் குனிந்து நுழைந்து படுத்து குனிந்து வெளியே வருகிற மாதிரி ஒன்னுக்கும் உதவாத டிசைனில் , ஒரு குழந்தை பிறந்தால் தாய் / குழந்தை /தகப்பன் மூன்று பேரும் படுக்க முடியாத அளவுக்கு ‘ நாயர் ஸ்டைல்” வீடுகள் கட்டியிருப்பார்கள். இதில் நான் சொன்ன 2 வது ரூம் பெரும்பாலும் ஸ்டோர் ரூமாகவும் , மழைக்காலங்களில் சமையல் கட்டாகவும் பயன்படும். [சமையல் அறை எனும் ‘பெரிய்ய்ய்ய வார்த்தை ‘ இதற்கு பொருந்தாது]. இப்படி அடிப்படை வாழ்க்கையை மாற்றி அமைத்து ஒரு நல்ல வீடு கட்டி வாழவே நம் இனம் குறைந்தது 30 வருட உழைப்பை கொட்டி உருவாக்கியிருக்கிறது. கடந்து போன 30 வருடமும் திருப்பி வரலாம். வாழ்க்கை திரும்பி கிடைக்குமா?

 • இன்றைக்கு 35 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்கள் வெளிநாடு போய் இந்த அடிப்படை வாழ்க்கையை குறைந்த பட்சம் அடையத்தான் தனது இளமையை, தனது கனவுகளை, தனது சுதந்திரத்தை எல்லாவற்றையும் பணயம் வைத்து, தனது பிள்ளைகள் நன்றாக படித்து பொறுப்புள்ளவர்களாக ஆகிவிட்டால் என் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை என்று மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் பணயம். அவர்களை பிள்ளைகள் காதல் என்ற பெயரிலும், வசதியான வாழ்க்கை வாழ வேண்டி அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவதிலும் பெற்றோர்களை நோகடிப்பது எந்த வகையில் ஞாயம்?. இந்த பாவப்பட்ட பெற்றோர்கள் செய்த குற்றம்தான் என்ன…? பிள்ளைகளை நம்பியது தவறா?. பிள்ளைகளை நம்பாமல் வேறு யாரைத்தான் நம்புவது?.

  இன்றைக்கு துபாயிலும், சவூதியிலும், அமெரிக்கா, யூ,கே, ஆஸ்திரேலியா, ஜப்பான் என்று பிழைக்க போன யாருக்கும் விசாவும், ஏர்லைன்ஸ் டிக்கட்டும் ஏதோ ஒரு காலை நேரத்தில் நரசுஸ் காப்பி குடித்துக் கொண்டு, காலை பேப்பரை புரட்டிக் கொண்டிருக்கும்போது வாசல் வந்து கதவைத் தட்டி யாரும் கொடுத்து விட்டு போனதல்ல. முதன் முதலில் ஸ்டேம்ப் ஆகும் விசாவையும், முதன் முதலில் கிடைத்த ஏர்டிக்கட்டையும் பார்க்க இன்றைய தகப்பன்கள் எத்தனை நாள் பட்டினியாக இருந்திருப்பார்கள். எத்தனை நாள் பம்பாயில் கழிவறைக்கு கூட க்யூவில் வெகுநேரம் நின்றிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். எத்தனை இன்டர்வியூ, எத்தனை ஏமாற்றங்கள்.. அத்தனையும் சுமந்துதான் நிமிர்ந்திருக்கிறார்கள்.


  இத்தனை வருடத்து தியாகத்தையும் சில சமயங்களில் பிள்ளைகள் எப்படி ஒரே வார்த்தையில் பெற்றோர்களின் முதுகெழும்பை உடைக்க பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்னும் விளங்காத வித்தை.

  எதுவும் வாழ்க்கையில் அந்தந்த வயதும் பொறுப்பும் வந்தவுடன் நிகழ்ந்தால் அதற்கு மரியாதை.. அதை மீறி செயல் படும்போது… வாழ்க்கையின் சவால்கள் மீறியவர்களுக்கு எதிர்ப்பாகவே போய்விடுகிறது.

  30 வயது தம்பதியினர் பிள்ளை பெறாதபோது ‘இன்னுமா பிள்ளை இல்லை…என்று கேட்கும் சமுதாயம் , 60 வயது தம்பதியினர் பெற்றுக்கொண்டால் “இப்போது ஏன்” என்று கேட்க தவறுவதில்லை என்பதிலேயே… அது அது சரியான வயதில் நிகழ வேண்டும் என்ற உண்மை இளைய சமுதாயத்திற்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதை சொல்கிறது.


  எப்போதும் புத்திசாலிகள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை தனது நிலையை உயர்த்திக் கொள்ளாமல் எடுப்பதில்லை. திருமணப்பந்தலில் நிற்கும் ஒரு மணமகனின் கால் குறைந்த பட்சம் அடுத்த நாளே உழைத்து சம்பாதிக்கும் உறுதியை தன்னை நம்பி வந்தவளுக்கு தர வேண்டும். கல்யாணத்திற்கு பிறகு மனைவிக்கு தைக்கும் ஜாக்கெட்தையல் கூலியை கூட பெற்றோர்களிடம் கேட்கும் சூழ்நிலையை வைத்துக் கொண்டு ‘’சுதந்திரம்” ‘யூத்’ என்று பேத்திக் கொண்டிருப்பது தவிர்க்க.

  இன்றைய இளைய சமுதாயம் தனது நண்பர்களை தெரிவு செய்வதிலும் கவனம் தேவை Talking Companion க்கும் Friends வித்தியாசம் தெரியவேண்டும்.

  உங்களோடு ஊர்சுத்த , படம் பார்க்க, ப்ரவுசிங் சென்டருக்கு கூட வர, ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட, மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கதைத்து கொண்டுவர வருபவர்கள் எல்லாம் தனது குடும்பம், தனது தேவை என்று வந்தவுடன் கூட வருவார்கள் என்று ஒரு மாயையில் சுற்றும்போது நிதானித்து யோசிக்கவும்.

  உங்களின் நட்பு உண்மையாக இருந்தால் அது காலத்தை வென்று தொடரும். அது உங்களின் வார்த்தைகளுக்குள் வசப்படாது. உங்களின் விளக்கத்தை விளங்காது. விதியின் துரத்தலிலும் விலகாத விதியை தன் வசப்படுத்தியிருக்கும்.

  நல்ல நட்பு கிடைக்காதவன் வறுமைக்குள் தள்ளப்பட்டவனுக்கு சமம். ஆனால் இளமையின் துள்ளலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நட்பு உங்களுக்கு நஞ்சாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் திறமை உங்களுக்குள் இருக்க வேண்டும்.

  சரி இதை இந்த அத்தியாயத்தில் சொல்ல காரணம் ஏன்? .. ஒரு சம்பாதிக்கும் குடும்ப தலைவனின் மொத்த எதிர்பார்ப்பே தனது பிள்ளைகள் நல்லபடியாக வர வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் இருக்கும். எந்த தகப்பனும் தன் பிள்ளை கெட்டுப்போக வேண்டும் என்று எப்போதும் நினைக்க மாட்டான். பிறந்த நிமிடத்திலிருந்து தனது பிள்ளைக்கு எது தேவைப்படும் என்று தேட ஆரம்பித்து தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாய் செய்த தகப்பன் தன் பிள்ளைகளுக்கு வாழ்க்கையை மட்டும் தேர்ந்தெடுக்க தெரியாது என்று பிள்ளைகள் சொல்லும்போது குடும்பத்தை காக்க எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தியாகத்தையும் பூஜ்யமாக்கும் சூழ்நிலையை , வார்த்தையை எப்படி தாங்க முடியும்.?

  பிள்ளைகள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளின் சிசி, பயன்படுத்தும் ஐ போனின் ஸ்பெக்ஸ் (specification) தெரியாத தகப்பன் இருக்கலாம் ஆனால் அதை வாங்கித் தந்தது அந்த தகப்பன் தான் என்று பிள்ளைகள் உணர்ந்தால் சரி.

  பிள்ளைகளை வளர்ப்பதில் தகப்பனின் கடமையும் முக்கியம், பிள்ளைகளுக்கு “ YES, YES” என்று எல்லாம் கொடுத்து வளர்க்கும்போது “NO” என்பதின் அர்த்ததை புரிய வைக்க தெரிந்திருக்க வேண்டும். சில விசயங்களில் நமக்கு வாங்கி கொடுக்க வசதியிருந்தும் “NO’ என்று சொல்ல தெரிய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பிள்ளைகள் தன் வாழ்க்கையில் ஏற்படும் Rejectionஐ சமாளிக்க தெரியாமல் பாதிக்கப்பட்டு விடக்கூடும்.

  பிள்ளையை வளர்க்கும் தாய்மார்களும் [அது எந்த வயது பிள்ளைகளாக இருந்தாலும் சரி] சில விசயஙகளில் கவனம் தேவை. அன்பாக வளர்க்கிரேன் என்று பிள்ளைகளை அருகதையற்றவர்களாக்கி விடவேண்டாம்.

  நாம் வாங்கித்தரும் ஐ போன் , கேட்ஜெட்டுகளால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பள்ளம் விழுந்துவிடாது. ஆனால் அதை பிள்ளைகள் தனது தகுதிக்கு மீறி கேட்டு நச்சரிக்கும் அட்டிட்யூடில் இது கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப பொருளாதாரத்தில் குழி தோண்டும்.

  பிள்ளைகள் மீது அன்பு செலுத்துவதற்கும் பரிவு காட்டுவதற்கும் யாரும் தடை சொல்ல மாட்டார்கள். அதே போல் பிள்ளைகளும் நான் என் பெற்றோரை மதிக்கிறேன் என்று வார்த்தை அளவில் மட்டும் சொல்லக்கூடாது. அது ‘ஆக்சன்’ எனும் செயல்பாட்டு வடிவிலும் இருக்க வேண்டும்.

  இது இளைய சமுதாயத்துக்கு மட்டும்.


  உங்கள் குடும்ப கெளரவம், பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ரிலே ரேஸ் மாதிரி, உங்கள் தகப்பன் ஏற்கனவே ட்ராக்கில் சரியாக ஒடி வந்து உங்களிடம் அந்த ரிலே பட்டனை தர வருகிறார்.. நீங்கள் இன்னும் தயாராகாமல் நீங்கள் ஒட வேண்டிய தூரத்தையும் அவரையே ஒட சொல்வது எந்த வகையில் ஞாயம்.?

  இன்றைய இரவு உணவுக்காக நீங்கள் அமர்ந்திருக்க பசியுடன் தான் நீங்கள் தூங்கப்போக வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்காமல் உங்கள் சாப்பாட்டு தட்டையில் உணவை பரிமார ஒருநாளும் தவராமல் உழைக்கும் ஜீவனை நீங்கள் எப்படி மதிக்க வேண்டும்.?

  ZAKIR HUSSAIN
  Source :http://adirainirubar.blogspot.in/2012/07/17.html

   
 • Tags: , ,

  படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை – மனித வளத்தின் உற்பத்திக்கூடம்!


  படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை – மனித வளத்தின் உற்பத்திக்கூடம்!

  [ இறையில்லத்தில் இருப்பதுபோன்ற மன அமைதியும், பாதுகாப்பு உணர்வும், தம்பதியர்க்கு அங்கே ஏற்பட வேண்டும். தூய்மையும், ஆரோக்கியமும், ஒழுங்கும் அங்கே நிலவ வேண்டும். அப்போதுதான் அது உண்மையான படுக்கையறையாக பரிமளிக்க முடியும். இனிய இல்லறம் உருவாக முடியும்.]

  இல்லத்திலே இனிமையான சூழலுள்ள படுக்கையறை அமைந்து விடுமேயானால் இல்லறத்திற்கு அதுவே மிகப்பெரும் ப்ளஸ் பாயின்ட். இல்லறத்திற்கு எதிரான எந்தப் பிரச்சனையானாலும் சரி, அதைப் படுக்கையறையில் வைத்தே தீர்த்துக்கொள்ளலாம்.

 • டிஸ்சார்ஜ் ஆன பேட்டரிகளை சார்ஜிங் ஸ்டேஷனில் ரீ-சார்ஜ் செய்வதுபோல், அன்றாட வாழ்க்கையில் அடிபட்டு அலைந்து களைந்து, களைத்து வரும் தம்பதியர் தம்மைத் தாமே ரீ சார்ஜ் செய்து கொள்ள வேண்டிய இடம் படுக்கையறைதான்.

  இங்குதான் அவர்கள் பகல் பொழுதில் தாம் தொலைத்த உடல் சக்தியையும், உள்ள பலத்தையும் மீண்டும் உற்பத்தி செய்துகொண்டு அடுத்த நாளுக்காகத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

  எனவே, படுக்கையறை என்பது வெறும் உறங்குமிடமட்டுமல்ல. அது ஓர் உயர்நிலை ஸ்தானம். மனித சக்தியின் பொக்கிஷ அறை – மனித வளத்தின் உற்பத்திக்கூடம்.

  மகிழ்சிகரமான படுக்கையறை எப்படி இருக்க வேண்டும் என்றால், எவ்விதமான இடைஞ்சலுமின்றி, எவ்விதமான பயமுமின்றி எவ்வகையான தயக்கமுமின்றி, சுதந்திரமாக – பரிபூரணமாக தம்பதியர் இளைப்பாறக் கூடியதாக படுக்கையறை இருக்க வேண்டும்.

  இறையில்லத்தில் இருப்பதுபோன்ற மன அமைதியும், பாதுகாப்பு உணர்வும், தம்பதியர்க்கு அங்கே ஏற்பட வேண்டும். தூய்மையும், ஆரோக்கியமும், ஒழுங்கும் அங்கே நிலவ வேண்டும். அப்போதுதான் அது உண்மையான் படுக்கையறையாக பரிமளிக்க முடியும். இனிய இல்லறம் உருவாக முடியும்.

  முதலில், படுக்கையறையில் ரம்மியமான சூழ்நிலை நிலவுமாறு செய்யுங்கள். நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் படுக்கையறைக்கு கட்டாயம் தேவை. மேலும், கன்னா பின்னா சாமான்களை அடைத்து வைக்கும் இடமாக, மட்டி வாசனை வீசும் இடமாக படுக்கையறை இருக்கவே கூடாது. உங்கள் படுக்கையறையிலேயே கரப்பான் பூச்சியும், எலியும், கொசுவும் சல்லாபித்து பல்கிப்பெருக அனுமதிக்காதீர்கள்.

  அழுக்கும், வியாதிக்கிருமிகளும் நிறைந்த படுக்கை என்பது நம்மில் பலரது அடையாளமாக இருக்கிறது. ஆனால், இது எந்த அளவுக்கு ஆரோக்கியக் கேடு என்பதைப்பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.. கல்யாணத்துக்குத் தந்த தலையணையோடேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடியவர்களும் உண்டு.

  நல்ல வேளையில் இருப்பான். நன்கு சம்பாதிப்பான். அவன் மனைவி ஆயிரம் ரூபாய்க்கு சேலை உடுத்தியிருப்பாள். அவன் குழந்தை நானூறு ரூபாய்க்கு கவுன் போட்டிருக்கும். ஆனால், அவன் வீட்டுத்தலையணையோ நாற்பது ரூபாய் உறையின்றி அழுக்கேறி நாறிக் கொண்டிருக்கும்.. இதுதான் பலரின் யதார்த்தமான வாழ்க்கை. வெட்கக்கேடு என்றே சொல்ல வேண்டும்.

  படுக்கையறை சுவரிலே கன்னாபின்னாவென்று படங்களை மாட்டாதீர்கள். அற்புதமானதோர் இயற்கைக்காட்சிகள் நிறைந்த மனதை வருடிச்செல்லும் படம் ஒன்றே போதும். வேறு எந்த அலங்காரமும் தேவையில்லை. ஏனெனில் படுக்கையறையில் நீங்கள்தான் உங்கள் மனைவிக்கு அலங்காரம்; உங்களுக்கு உங்கள் மனைவிதான் அலங்காரம்.

  வீட்டு வேலையை ஒருவழியாக முடித்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றால் அங்கே அப்பொழுதுதான் கம்யூட்டரில் ஆபிஸ் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார் உங்களவர். உடனே மூடு அப்செட் ஆகி உட்கார்ந்து படுத்து விட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். என்ன செய்தால் உங்களவரை உங்கள் வழிக்குக் கொண்டு வரமுடியும்.

  ஆபிஸ்ல இன்னைக்கு வேலை ஜாஸ்தியா இருந்திச்சா என்று கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் அலுவலக டென்சனை நீக்குங்கள். உடலை, கை கால்களை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலிக்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும். உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி கலகலப்பாக பேசுங்கள். உங்களவர் உங்களுக்கு ஏற்றவராக மாறிவிடுவார்.

  மறுபடியும் நினைவுபடுத்துகிறோம்… இறையில்லத்தில் இருப்பதுபோன்ற மன அமைதியும், பாதுகாப்பு உணர்வும், தம்பதியர்க்கு அங்கே ஏற்பட வேண்டும். தூய்மையும், ஆரோக்கியமும், ஒழுங்கும் அங்கே நிலவ வேண்டும். அப்போதுதான் அது உண்மையான் படுக்கையறையாக பரிமளிக்க முடியும். இனிய இல்லறம் உருவாக முடியும்.

  மொத்தத்தில் படுக்கையில் படுத்தபடி நீங்கள் பார்வையை சுற்றி ஓட விட்டீர்களெனில் அங்கே இதமான, சுகமான, சுதந்திரமான சூழ்நிலை தெரிய வேண்டும்.
  Source : http://www.nidur.info/

   
 • Leave a comment

  Posted by on July 25, 2012 in Uncategorized

   

  Tags:

  எத்தனை முகம் பெண்களுக்கு

  மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய ஆர்டிகிள்.அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்.

  தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது என்பது மாநபி மொழி.மாதவராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா,பெண்கள் நாட்டின்கண்கள் என்று பெரியோர் கூறினார்கள்.அத்தனை புகழ்களுக்கும் உரித்தான பெண்களுக்கே உரித்தான பெண்கள் தினம் அன்று பெண்ணாகிய நான் பெருமித்ததுடன் இவ்விடுகையை பதிவிடுகின்றேன்.

  முதிர்ச்சியான அறிவுத்திறன்,பக்குவமான கவனிப்புத்திறன்,ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பத்திறன்,பொறுமையாக முடிவெடுக்கும் திறன்,கம்பீரமான நிர்வாகத்திறன் கொண்டோர்தான் பெண்கள்.இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.குடும்பத்தை,உறவுகளை,பொருளாதாரத்தை,சமையலை,விருந்தோம்பலை,நட்பை,அக்கம் பக்கத்தினரை,வேலையாட்களை இன்னும் தன்னைச்சுற்றி இருக்கும் அனைத்துசெயல்களையும் மிகவும் அழகாக திறமையாக நிர்வாகம் செய்து பண்முக ஆளுமையில்(multi faceted personality) முதன்மையானவர்கள் என்றால் மிகை ஆகாது.

 • 1.பினான்சியல் மேனேஜ்மெண்ட்:
  கணவரின் சம்பளத்துக்கேற்ற வாறு வாழ்க்கைத்தரத்தை சிக்கனமாக அமைத்துக்கொண்டு,கூடவே ஏலச்சீட்டுகள்,நகை சீட்டு,பாத்திரச்சீட்டு என்று சேமித்து கணவர் பணகஷ்டத்தில் இருக்கும் பொழுது பொருளாதாரரீதியாக உதவுவதில் கில்லாடிகள்.

  2.சிச்சுவேஷன் மேனேஜ்மெண்ட்:
  குடும்பத்தினருக்கு நோய் வாய்ப்படும் பொழுது அதிர்ந்து நிற்கும் ரங்க்ஸ்களுக்கு ஊக்கவார்த்தைகளை அளித்து விட்டு நோய் வாய்ப்பட்டவர்களுக்கு தகுந்த முதலுதவி செய்வதிலாகட்டும்,தர்மசங்கடமான சூழ்நிலையில் வீட்டில் விருந்தினர்கள் ஆஜர் ஆகிவிட்டால் சங்கடங்களை காட்டிக்கொள்ளாமல் வரவேற்று உபசரித்து விருந்தோம்பல் செய்வதில் ஆகட்டும் இப்படி எப்பேர்பட சூழ்நிலையையும் சமர்த்தாய் சமாளிப்பதில் வல்லவர்கள்.

  3.மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்:
  மாமியாருக்கு பிரஷருக்கேற்ற உப்பு குறைந்த உணவாகட்டும்,மாமனாருக்கு சர்க்கரை கம்மி செய்த உணவாகட்டும்,கணவருக்கு பிடித்த பொரியல் வகைகள் ஆகட்டும்,பிள்ளைகளுக்கு பிடித்த பாஸ்ட் புட் வகைகள்,பெரியவனுக்கு முகத்தில் பரு வந்தால் எண்ணெய் குறைவான சமையலும்,கணக்கில் மதிப்பெண்கள் கம்மியாக வாங்கும் மகளுக்கு தினம் வல்லாரையில் டிஷ் செய்து கொடுப்பதில் ஆகட்டும் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரின் தேவையையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சமைத்து பறிமாறி அக்கரை காட்டுவதில் புலிகள்.

  4.பியூட்டி மேனேஜ்மெண்ட்:
  அத்தனை வேளைகளுக்கு இடையே கடலைமாவை கரைத்துக்கொண்டு முகத்தில் அப்பிக்கொள்வதில் இருந்து,மூல்தானி மட்டியை பூசிக்கொள்வது,பொரியலுக்கு கேரட் நறுக்கும் பொழுது சிறிய துண்டும்,சாலட்டுக்கு வெள்ளரிக்காய் நறுக்கும் பொழுது ஒரு துண்டும் எடுத்து அரைத்து பூசிக்கொள்வது என்று பாய்ந்து பாய்ந்து தன்னை அலங்கரித்துக்கொள்வதில் சிறுத்தைகள்.

  5.எஜுகேஷன்மேனேஜ்மெண்ட்:
  எல் கே ஜி படிக்கும் சின்னமகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொடுப்பதிலாகட்டும்,பெரிய மகனுக்கு ரெகார்ட் நோட்டில்படம் வரைந்து கொடுப்பதில் ஆகட்டும்,கணவர் எழுதப்போகும் பேங்க் எக்‌ஷாம் சரியாக பண்ண வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வதிலாகட்டும்,அத்தனை வேலைகளுக்கிடையிலும் தனது இரண்டு அரியர்ஸ் பேப்பரை கிளியர் செய்யும் நிமித்தம் நின்று கொண்டும்,நடந்து கொண்டும்,சமைத்துக்கொண்டும் பாடங்களை உரு போட்டுக்கொண்டு இருப்பதில் மேதாவிகள்.

  6.ஹியூமன் ரிசொஸ் மேனேஜ்மெண்ட்:
  பிறந்த வீட்டினர் வந்தால் அவர்களை கவரும் விதமாகவும்,புகுந்த வீட்டினர் வந்தால் அவர்களையும் கவரும் விதமாகவும்,லீவு போடும் வேலைக்காரியை தட்டிக்கொடுத்து லீவுபோடாமல் வருவதற்கு உள்ள பேச்சுத் திறமையும்,பிஸினஸுக்கு பணம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்கும் கொழுந்தனார் முதல்,தீபாவளிக்கு வைர மோதிரம் கேட்கும் நாத்தனார்வரை சமாளித்து யாவரின் மனமும் கோணாமல் சமாளித்து வருவதில் மேதாவிகள்.

  7.டெக்னிகல் மேனேஜ்மெண்ட்:
  வீட்டில் குக்கர் பர்னர் பிலண்டர் போன்ற சிறு எலக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் ஆனால் முடிந்தவரை தன்கையாலே ரிப்பேர் பார்த்தல் ”ரிப்பேர்ன்னு போனால் கடங்காரன் நூறு நூறா பிடிங்கிடுறானே”என்று புலம்பியப்படி தானே ஸ்க்ரூ டிரைவரும் கையுமாக ஒரு வழியாக பொருட்களை உயிர்பித்து தேற்றி காசு மிச்சம்பிடிப்பதில் வீராங்கனைகள்.

  8.டைம் மேனேஜ்மெண்ட்:
  காலங்கார்த்தாலே அரக்கபறக்க எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு,டிகிரிகாப்பியை டபராக்களில் நிரப்பி ஒவ்வொருவராக கொடுத்து,டிபன் செய்து டிபன் பாக்ஸில் கட்டி,காய் நறுக்கி பகல் சமையலையும் முடித்து,அனைவருக்கும் சாப்பாடு போட்டு,பாத்திரம் ஒழித்து தானும் வேலைக்கு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். குளித்து விட்டு அள்ளி முடிந்த கூந்தலை திருத்தி,டிரஸ் செய்து இத்தனை வேலைகளுக்கும் இடையே “விஜி,நேற்று ஆஃபீஸில் இருந்து சிகப்புக்கலர் பென்டிரைவை கொண்டு வந்தேனே பார்த்தியா”என்று கூவும் கணவருக்கும் தேடி கொடுத்து,”என்னோட மேத்ஸ் நோட்ஸைக்காணோம்”என்று அலறும் பெண்ணின் அலறலை நிறுத்தி சரியான நேரத்திற்கு அனைவரையும் அனுப்பி விட்டு தானும் கிளம்புவதில் சூரர்கள்.

  9.கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்:
  பெரிய தொகையை ஏலச்சீட்டு போட்டு முடியும் தருவாயில் சீட்டுகம்பெனியே எஸ்கேப் ஆகிவிட தலையில் கைவைத்து இடிந்து போய் நிற்கும் கணவரை தேற்றுவதில் ஆகட்டும்.திடுமென வந்த நெஞ்சுவலியால் மாமனாரை மருத்துவமனையில் சேர்த்து பைபாஸ் செய்ய மருத்துவர் பரிந்துரை செய்யும் பொழுது கணவர் கைகளை பிசைந்து கொண்டு இருக்கும் பொழுது யோசிக்காமல் கழுத்தில் கிடக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்து ஆபத்பாந்தவனாக நிற்பதில் சிங்கங்கள்.

  10.பிளாகிங் மேனேஜ் மெண்ட்:
  அத்தனை வேலைகள்,பொறுப்புகளுக்கிடையிலும் பிளாக் எழுதி,வெறுமனே எழுதாமல் சமையலாகட்டும்,மற்ற படைப்புகளாகட்டும் பொறுமையாக கேமராவால் படம் எடுத்து அப்லோட் செய்து அழகாக போஸ்ட் செய்வது மட்டுமின்றி,வலையுலகம் தன் வலைப்பூவை மறந்து போய்விடக்கூடாது என்று வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவுகளாவது போஸ்ட் செய்து,வரும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் சொல்வது மட்டுமின்றி,மற்ற வலைப்பூக்களுக்கும் சென்று அவர்களை ஊக்கம் கொடுக்கும் வகையில் பின்னூட்டம் கொடுத்து மறவாமல் ஒட்டும் போடுவதில் சாதனை சிகரங்கள்.

  தோழி தேனம்மை,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் மேமுக்கும் நன்றி.
  ஸாதிகா
  Source : http://shadiqah.blogspot.in/2011/03/blog-post_08.html

   
 • Tags: ,

  Masjid Negara – A Beautiful, Serene Mosque in Kuala Lumpur

  a global affair

  By Lakshmi:

  Who?  Anyone visiting Kuala Lumpur, Malaysia and has an hour or more to spare.

  What? Masjid Negara also known as the National Mosque was built in 1965 and is a fully functioning mosque in the heart of the city.

  How? The mosque is located across the street from the old Kuala Lumpur railway station at

  Jalan Lembbah Perdana  50480 Kuala Lumpur, Malaysia
  03-2693-7905

  Entrance is free.  As this is a place of worship, please ensure that you are modestly attired and have a head scarf and clothing that covers your arms and legs.  Additionally, you need to remove your shoes before entering.  Please check with your hotel on prayer times and go in when you are likely to find the mosque to yourself.

  Why? The Masjid Negara is a jewel in the heart of Kuala Lumpur.  The mosque is located on a site with 13 acres of beautifully…

  View original post 196 more words

   
  Leave a comment

  Posted by on July 22, 2012 in Uncategorized

   

  Becoming a Vegetable Locavore

   
  Leave a comment

  Posted by on July 22, 2012 in Uncategorized

   

  ஊருக்குச் சேவை

  குடும்பத்துக்கு சேவை செய்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் உலகுக்குச் சேவை செய்பவன் பொதுஜனக்காரன்.உலகுக்கு சேவை செய்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் குடும்பத்துக்குச் சேவை செய்பவன் மகாத்மா. குடும்பத்தையே துறந்து உலகுக்கு சேவை செய்பவன் துறவி.

  நான் மாற்றுக்கருத்து உடையவன்.

  ஊருக்குச் சேவை செய்து வீட்டைச் சாகடித்தால் அவன் சேவை போலியானது. ஏனெனில், அவனுக்குத் தேவை வெறும் புகழ் மட்டுமே. வீட்டில் உள்ளவர்களும் உயிர்கள்தான் அவர்கள் அவனை நம்பி வந்தவர்கள். தன்னை நம்பியவர்களையே காப்பாற்றாதவன் ஊரைக் காப்பாற்றினான் என்பது நகைப்புக்குரியது.

 • ஊரையும் குழும்பத்தையும் ஒன்றாகப் பார்ப்பவன்தான் உண்மையான சேவைக்காரன். பாரபட்சமாக தொண்டு செய்பவன் தொண்டுசெய்பவனல்ல சூது செய்பவன். தன் சுயநலம் ஒன்றே பெரிதெனக் கொண்டவன். அவன் சுயநலம் என்பது தான் சரித்திர புருசனாய் ஆவது என்பது.

  குடும்பத்தையே துறந்து உலகைக் காப்பாற்றப்போகிறேன் என்பவன் தன் பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள காரணம் தேடுபவன். பொறுப்பற்றவன் புகழ் வேண்டும் என்பதற்காக சொல்லும் பொய்தான் உலகைக் காப்பாற்றப்போகிறேன் என்பது.

  பாரதி காலத்தில் எழுத்தாளர்களுக்கு வேறு வருமானம் இல்லை. எனவே வழி இல்லை

  உண்மை. ஆனால் அவருக்குக் கிடைத்த வேலைகளில் அவர் தங்கவில்லை. தங்கி இருந்தால், குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கவிதைகளையும் எழுதி இருக்கலாம்.

  அதோடு பெரும்பொழுதுகளை நண்பர்களோடு பேசியே கழித்தார். உடல் வலிமை கொண்ட பாரதி, பொருளீட்டுவதிலும் புத்திசாலியாய் இருந்திருக்க வேண்டும்.

  கம்பன்போல் வள்ளுவன்போல் என்று அவர்களைப் புகழ்ந்துவிட்டு, வள்ளுவன் சொன்ன, ”பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்பதை உள்ளேற்றிக்கொள்ளவில்லை!

  இதை நான் பாரதியின்மீதுள்ள அக்கறையில்தான் சொல்கிறேன். பாரதியின் மனைவி செல்லாமளின் வானொலி உரையைக் கேளுங்கள், அவர் இறந்த பல காலம் ஆகியும் செல்லம்மாவால் அந்தத் துயரத்தை மறக்க முடியவில்லை.
  Source : http://anbudanbuhari.blogspot.in/2009/08/blog-post_5330.html

   
 • Tags: , , ,