RSS

படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை – மனித வளத்தின் உற்பத்திக்கூடம்!

25 Jul


படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை – மனித வளத்தின் உற்பத்திக்கூடம்!

[ இறையில்லத்தில் இருப்பதுபோன்ற மன அமைதியும், பாதுகாப்பு உணர்வும், தம்பதியர்க்கு அங்கே ஏற்பட வேண்டும். தூய்மையும், ஆரோக்கியமும், ஒழுங்கும் அங்கே நிலவ வேண்டும். அப்போதுதான் அது உண்மையான படுக்கையறையாக பரிமளிக்க முடியும். இனிய இல்லறம் உருவாக முடியும்.]

இல்லத்திலே இனிமையான சூழலுள்ள படுக்கையறை அமைந்து விடுமேயானால் இல்லறத்திற்கு அதுவே மிகப்பெரும் ப்ளஸ் பாயின்ட். இல்லறத்திற்கு எதிரான எந்தப் பிரச்சனையானாலும் சரி, அதைப் படுக்கையறையில் வைத்தே தீர்த்துக்கொள்ளலாம்.

 • டிஸ்சார்ஜ் ஆன பேட்டரிகளை சார்ஜிங் ஸ்டேஷனில் ரீ-சார்ஜ் செய்வதுபோல், அன்றாட வாழ்க்கையில் அடிபட்டு அலைந்து களைந்து, களைத்து வரும் தம்பதியர் தம்மைத் தாமே ரீ சார்ஜ் செய்து கொள்ள வேண்டிய இடம் படுக்கையறைதான்.

  இங்குதான் அவர்கள் பகல் பொழுதில் தாம் தொலைத்த உடல் சக்தியையும், உள்ள பலத்தையும் மீண்டும் உற்பத்தி செய்துகொண்டு அடுத்த நாளுக்காகத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

  எனவே, படுக்கையறை என்பது வெறும் உறங்குமிடமட்டுமல்ல. அது ஓர் உயர்நிலை ஸ்தானம். மனித சக்தியின் பொக்கிஷ அறை – மனித வளத்தின் உற்பத்திக்கூடம்.

  மகிழ்சிகரமான படுக்கையறை எப்படி இருக்க வேண்டும் என்றால், எவ்விதமான இடைஞ்சலுமின்றி, எவ்விதமான பயமுமின்றி எவ்வகையான தயக்கமுமின்றி, சுதந்திரமாக – பரிபூரணமாக தம்பதியர் இளைப்பாறக் கூடியதாக படுக்கையறை இருக்க வேண்டும்.

  இறையில்லத்தில் இருப்பதுபோன்ற மன அமைதியும், பாதுகாப்பு உணர்வும், தம்பதியர்க்கு அங்கே ஏற்பட வேண்டும். தூய்மையும், ஆரோக்கியமும், ஒழுங்கும் அங்கே நிலவ வேண்டும். அப்போதுதான் அது உண்மையான் படுக்கையறையாக பரிமளிக்க முடியும். இனிய இல்லறம் உருவாக முடியும்.

  முதலில், படுக்கையறையில் ரம்மியமான சூழ்நிலை நிலவுமாறு செய்யுங்கள். நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் படுக்கையறைக்கு கட்டாயம் தேவை. மேலும், கன்னா பின்னா சாமான்களை அடைத்து வைக்கும் இடமாக, மட்டி வாசனை வீசும் இடமாக படுக்கையறை இருக்கவே கூடாது. உங்கள் படுக்கையறையிலேயே கரப்பான் பூச்சியும், எலியும், கொசுவும் சல்லாபித்து பல்கிப்பெருக அனுமதிக்காதீர்கள்.

  அழுக்கும், வியாதிக்கிருமிகளும் நிறைந்த படுக்கை என்பது நம்மில் பலரது அடையாளமாக இருக்கிறது. ஆனால், இது எந்த அளவுக்கு ஆரோக்கியக் கேடு என்பதைப்பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.. கல்யாணத்துக்குத் தந்த தலையணையோடேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடியவர்களும் உண்டு.

  நல்ல வேளையில் இருப்பான். நன்கு சம்பாதிப்பான். அவன் மனைவி ஆயிரம் ரூபாய்க்கு சேலை உடுத்தியிருப்பாள். அவன் குழந்தை நானூறு ரூபாய்க்கு கவுன் போட்டிருக்கும். ஆனால், அவன் வீட்டுத்தலையணையோ நாற்பது ரூபாய் உறையின்றி அழுக்கேறி நாறிக் கொண்டிருக்கும்.. இதுதான் பலரின் யதார்த்தமான வாழ்க்கை. வெட்கக்கேடு என்றே சொல்ல வேண்டும்.

  படுக்கையறை சுவரிலே கன்னாபின்னாவென்று படங்களை மாட்டாதீர்கள். அற்புதமானதோர் இயற்கைக்காட்சிகள் நிறைந்த மனதை வருடிச்செல்லும் படம் ஒன்றே போதும். வேறு எந்த அலங்காரமும் தேவையில்லை. ஏனெனில் படுக்கையறையில் நீங்கள்தான் உங்கள் மனைவிக்கு அலங்காரம்; உங்களுக்கு உங்கள் மனைவிதான் அலங்காரம்.

  வீட்டு வேலையை ஒருவழியாக முடித்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றால் அங்கே அப்பொழுதுதான் கம்யூட்டரில் ஆபிஸ் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார் உங்களவர். உடனே மூடு அப்செட் ஆகி உட்கார்ந்து படுத்து விட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். என்ன செய்தால் உங்களவரை உங்கள் வழிக்குக் கொண்டு வரமுடியும்.

  ஆபிஸ்ல இன்னைக்கு வேலை ஜாஸ்தியா இருந்திச்சா என்று கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் அலுவலக டென்சனை நீக்குங்கள். உடலை, கை கால்களை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலிக்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும். உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி கலகலப்பாக பேசுங்கள். உங்களவர் உங்களுக்கு ஏற்றவராக மாறிவிடுவார்.

  மறுபடியும் நினைவுபடுத்துகிறோம்… இறையில்லத்தில் இருப்பதுபோன்ற மன அமைதியும், பாதுகாப்பு உணர்வும், தம்பதியர்க்கு அங்கே ஏற்பட வேண்டும். தூய்மையும், ஆரோக்கியமும், ஒழுங்கும் அங்கே நிலவ வேண்டும். அப்போதுதான் அது உண்மையான் படுக்கையறையாக பரிமளிக்க முடியும். இனிய இல்லறம் உருவாக முடியும்.

  மொத்தத்தில் படுக்கையில் படுத்தபடி நீங்கள் பார்வையை சுற்றி ஓட விட்டீர்களெனில் அங்கே இதமான, சுகமான, சுதந்திரமான சூழ்நிலை தெரிய வேண்டும்.
  Source : http://www.nidur.info/

  Advertisements
   
 • Leave a comment

  Posted by on July 25, 2012 in Uncategorized

   

  Tags:

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: