RSS

Monthly Archives: September 2012

இப்படியும் ஒரு மனிதனா?

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. காரணம் எனக்கு எந்த அரசியல்வாதியின் மீதும் நல்ல நம்பிக்கை இருந்தது கிடையாது.

“Politics is the last refuge of the scoundrels”

என்றான் சாமுவல் ஜான்சன். அதாவது “அரசியலானது அயோக்கிய சிகாமணிகளின் கடைசிப் புகலிடம்” என்பது அவனது சித்தாந்தம் நான் கேட்டிருந்த, படித்திருந்த, பார்த்திருந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.

நேற்று முந்தைய தினம் என் மனைவியின் குடும்பத்தில் சொல்லவொணா சோகம் ஒன்று நிகழ்ந்தது. மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு. எதிரிக்குக் கூட இப்படிப்பட்ட ஒரு சோகம் கனவிலும் நிகழக்கூடாது.

என் மனைவியின் சொந்த தாய்மாமன் மகள் ஷாயிரா பானு காரில் சென்னைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே கோரவிபத்தில் பலியானார். உடன் சென்ற அவர் கணவர் செய்யத் ஜாஃபர், மற்றும் இளைய மகன் அப்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

 • கார் சென்று மோதியதோ காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில். கார் நேராக லாரியின் டீசல் டாங்கியில் சென்று மோதியதால், டீசல் முழுதும் தரையில் சிந்தியுள்ளது. ஒரு சிறு தீப்பொறி அதில் விழுந்தாலும் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் வெடித்துவிடும் அபாயம். பொதுமக்களுக்கு கிட்ட நெருங்க பயம்.

  இதற்கிடையில் மூத்த பையன் ஆஷிக் (14 வயது) ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி மண்டையில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களேத் தவிர, அவனைக் காப்பாற்றுவதற்கு யாருமே முன்வரவில்லை. ‘போலீஸ்’, ‘கேஸ்’ என்று அலைய வேண்டுமே, ஏன் நமக்கு இந்த வேண்டாத வேளை என்று நினைத்தார்களோ என்னவோ.

  என்ன ஒரு மனிதாபிமானமற்ற சமூகம்? அவ்வழியே கடந்து சென்ற கார்களும், பஸ்களும் கண்டும் காணததும் போலவே சென்றுக் கொண்டிருந்தன.

  சம்பவம் நடந்து சிலமணித்துளிகளில் அரசியல் பிரமுகர் ஒருவரின் கார் அவ்வழியே சென்றுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டு பதறிப்போன அவர் வண்டியை உடனே நிறுத்தி கீழே இறங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஆஷிக்கிடம் “உன் வீட்டுத் தொலை பேசி எண்ணைக் கூறு” என்று கேட்டிருக்கிறார். தொலைபேசி எண்ணை அவரிடம் கூறிவிட்டு உடனே மூர்ச்சையாகி போனான் அவன்.

  உடனே அப்பையனின் சிறிய பாட்டனாருக்கு, அவரே போன் செய்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, நான்தான் இன்னார் பேசுகிறேன், இப்படி ஒரு விபத்து இங்கு ஏற்பட்டு விட்டது என்று தகவல் சொல்லியிருக்கிறார்.

  அதுமட்டுமன்றி, சிறுவன் ஆஷிக்கை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கிறார். மண்டையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால் சென்னைக்கு எடுத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தால்தான் சிறுவன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அந்த அரசியல் பிரமுகரிடம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

  உடனே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி. எல்லா வேலைகளையும் துரிதமாக நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். சிறுவனைக் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளும் அனைத்தும் அசுர வேகத்தில் மளமளவென்று நடந்திருக்கிறது. மூளையில் ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டு கோமா நிலைக்கு போகவிருந்த அவனை மருத்துவர்கள் ஒன்றுகூடி காப்பாற்றி இருக்கிறார்கள். இன்று வந்த தகவலின்படி அந்தச் சிறுவன் ஆபத்துக் கட்டத்தை தாண்டி விரைவில் ICU வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படவிருக்கிறான் என்ற செய்தி மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது

  நான் முன்பு சொன்னதுபோல் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. அந்த பிரமுகரை நான் இதுவரை நேரில் சந்தித்ததுகூட கிடையாது. அவர் வேறு மதம். நாங்கள் வேறு மதம். அவர் வேறு ஜாதி. நாங்கள் வேறு ஜாதி.

  அந்தப் பிரமுகருக்கு ஆயிரம் அலுவல்கள் இருந்திருக்கக் கூடும். அவர் மனதில் புதைந்திருக்கும் மனிதாபிமானம்தான் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய அவரைத் தூண்டியிருக்க வேண்டும்.

  சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் வெட்டுண்டு கிடந்தபோது, அவ்வழியே கண்டும் காணாதது போல் சென்ற இரு அமைச்சர்களைப்போல் இவரும் காற்றாக பறந்திருக்கலாம்.

  காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது

  என்றார் வள்ளுவப் பெருந்தகை.

  மனிதநேயம் இவ்வுலகத்தில் அறவே அற்றுப் போய் விடவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு.

  மனிதநேயமிக்க அந்த நல்ல உள்ளம் வேறு யாருமல்ல. வைகோ என்று அழைக்கப்படும் வை.கோபால்சாமிதான் அந்த மாண்பு நிறைந்த மனிதன்.

  நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

  என்கிறது மூதுரை.

  இன்று நம் நாட்டில் மழை பொழிகின்றதென்றால் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் நம்மிடைய உலவுவதினால்தான் போலும்.

  இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்து, அந்தச் சிறுவன் உயிர் காப்பாற்றப்படுவதற்கு திரு,வைகோ என்ற மனிதருள் மாணிக்கம்தான் காரணமாக இருந்தார் என்ற செய்தி வந்தபோது எதிர்பாராத விதமாக திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் இங்கு பஹ்ரைனுக்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்காக வருகை புரிந்திருந்தார். நிகழ்வுப்பொருத்தம் (Coincidence) என்கிறார்களே, அது இதுதான் போலும்.

  அவரிடம் இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னேன், இது முதல்முறையல்ல இதுபோன்று எத்தனையோ முறை அவர் இதுபோன்ற உதவிகள் புரிந்திருக்கிறார் என்றறிந்து நெகிழ்ந்துப் போனேன்.

  நேற்றைய தினம் (28.09.12) மறுபடியும் அவர் தன் சகாக்களுடன் அப்போலோ மருத்துவமனைக்குச் நேரடியாகச் சென்று அவனை நலம் விசாரித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஆகுமான உதவிகள் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.

  எனக்கு புரியாத புதிர் என்னவென்றால் எப்படி இந்த மனிதனால், இத்தனை முக்கிய அலுவல்களுக்கிடையிலும், போராட்டங்களுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி இப்படிப்பட்ட மனிதநேயமிக்க செயல்களை செய்ய முடிகின்றது? என்றுதான். எந்த ஒரு பிரதி உபகாரமும் எதிர்பாராமல் இப்படிப் பட்ட சமூகநலக் காரியங்களை செய்யும் அம்மனிதனைப் புகழ்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. சாமுவல் ஜான்சனின் கூற்றை பொய்யாக்கிவிட்ட மனிதனிவன்.

  வைகோ அவர்களுக்கு என் மனைவியின் குடும்பத்தாரின் சார்பில் நன்றி கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று (29.09.12) அவரது உதவியாளர்கள் அரியமங்கலம் அடைக்கலம், ருத்ரன். முத்து போன்றவர்களைத் தொடர்பு கொண்டு “உங்கள் தலைவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும்” என்றேன். அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகக் கூறினார்கள். விஷயத்தை எடுத்துக்கூறி என்னுடைய பஹ்ரைன் கைப்பேசி எண்ணை அவர்களிடம் கொடுத்தேன்.

  அடுத்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு போன்கால் வந்தது. “நான்தான் வைகோ பேசுகிறேன்” என்றது அந்தக் குரல். தொலைக்காட்சி செய்திகளில் நான் அடிக்கடி கேட்கும் அதே குரல்.

  “இதுக்கு எதுக்காக நன்றி சொல்லுறீங்க? மனுசனுக்கு மனுசன் இதுகூட செய்யலேன்ன என்ன இருக்கு?” என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. இத்தனை சோகத்துக்கிடையிலும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த குரல் எனக்குள்ளே அவரை வாழ்த்தியது.

  வியந்து போனேன் நான். இப்படியும் ஒரு மனிதனா? என்று.

  (பி.கு: இங்கு அரபு நாடுகளில் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்கள் ஒரு சிறந்த பழக்கத்தை கையாள்கிறார்கள். ரோந்து சுற்றும் எல்லா போலீஸ்வண்டிகளிலும் கைவசம் ரெடியாக வெள்ளைத் துணிகள் இருக்கும். சாலைகளில் உயிர்பலி ஏற்பட்டால் முதற் காரியமாக அந்த வெள்ளைத் துணியால் சடலத்தை மூடி விடுவார்கள். இறந்துபோன மனிதர்களுக்கு கொடுக்கப்படும் கெளரவமான கடைசி மரியாதை அது. ஏன் நம் நாட்டில் இதுபோன்ற பழக்கம் கையாளப் படுவதில்லை? ஏதோ நாதியற்று கிடக்கும் பிணம்போல் மணிக்கணிக்கில் சாலையில் கிடத்தி அவர்களை காட்சிப் பொருளாக ஆக்கி விடுகிறார்கள். அரசு அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?)
  Source : http://nagoori.wordpress.com/

  Advertisements
   
 • Tags: , , , , , ,

  தூக்கம் பெண்களை அழகாக்குகிறது

  நிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது

  [ உண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து.

  ”பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன்? தூக்கம் வர மாட்டேங்குதே?” என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

  தூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

  தூக்கம் என்பதை எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் பெண்கள் தான் அழகாக தூங்குகிறார்கள் என்று புதிதாக ஒரு ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து இருக்கிறார்கள். மென்மையான அணுகுமுறை தான் இதற்கு காரணம் என்றும் தீர்வு சொல்லி இருக்கிறார்கள்.

  இரவில் நிம்மதியான தூக்கமிருந்தால் பகலில் இந்த நிலை ஏற்பட்டிருக்காதே!

  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

  ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும்.

  சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

  உண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து. பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன்? தூக்கம் வர மாட்டேங்குதே? என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

  ஒரு மனிதன் தன் பரிபூரணமான வாழ்நாளில் சுமார் 23 ஆண்டுகளை தூக்கத்திலேயே செலவிடுகிறான். உடலும், மூளையும் வளர்வதற்கு, புதுப்பித்துக் கொள்வதற்கு அவகாசம் தருவது இந்த தூக்கம் தான். பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தூங்குகிறது. 35 வயது வரையிலான குழந்தை 11 மணி நேரம் தூங்குகிறது. போகப்போக தூங்கும் நேரம் குறை கிறது. காரணம், மூளையானது தேவை இல்லாத விஷயங்களையும் இழுத்துப் போட்டு யோசிப்பது தான். சிலர் பணம்ஸ பணம்ஸ என்று அலைந்தே தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள்.

  நாளடைவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற சராசரி அளவை எட்டுகிறார்கள். சிலர் உழைப்பின் மீதுள்ள அதீத காதலால் 6, 7 மணி நேரம் தான் தூங்குகிறார்கள். இந்த தூக்கம் கூட வராமல் தவிப்பவர்களும் உண்டு. தூக்கத்தை இரு வகையாக பிரிக்கிறார்கள். ரெம் மற்றும் நொன் ரெம் தான் அவை. இதில், ரெம் வகை தூக்கத்தின்போது வரும் கனவுகள் தான் பளிச்சென்று ஞாபகத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

  மேலும், ரெம் தூக்கத்தின்போது தான் அதிகம் கனவுகள் தோன்றுகின்றனவாம். அப்போது, விழிப்புடன் இருக்கும் மூளை, தன்னிடம் இருந்து செல்லும் எல்லா தகவல் வழித்தடங் களும் சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்து கொள்கிறதாம். எதிலும் ஆக்டிவ் ஆக உள்ளவர்களுக்கு தான் இந்த ரெம் வகை தூக்கம் அதிக நேரம் நீடிக்குமாம். கனவுகளும் அதிகம் வருமாம். மந்தபுத்தி உள்ளவர் என்றால் இவ்வகை தூக்கம் குறைவு தானாம். அதனால் கனவுகளும் குறைவாகத் தான் வருமாம்.

  தூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

  தூக்கம் என்பதை எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் பெண்கள் தான் அழகாக தூங்குகிறார்கள் என்று புதிதாக ஒரு ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து இருக்கிறார்கள். மென்மையான அணுகுமுறை தான் இதற்கு காரணம் என்றும் தீர்வு சொல்லி இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள். மென்மையாக நடந்து கொள்ளாமல் கொஞ்சம் அதிகமாக ஆண் தன்மையுடன் நடந்து கொள்ளும் பெண்களுக்கு இந்த அழகான தூக்கம் கிடைப்பது இல்லையாம். ஆண்களிலும் சொப்ட் கேரக்டர் உள்ளவர்கள் தான் அழகாக தூங்குகிறார்கள். எக்குத ப்பாக அலைபாயும் மனம் கொண்டவர்கள், எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டிரு ப்பவர்கள். என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே கண்டபடி உருண்டு புரண்டு தூங்குகிறார்களாம்.

  அதனால் அழகான தூக்கம் பெண்களுக்கு மாத்திரமே என்று சர்டிபிகேட் கொடுக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.
  http://www.nidur.info/

   
  Leave a comment

  Posted by on September 28, 2012 in Uncategorized

   

  Tags: , , ,

  நபி பெருமானாரின் நகல்கள் நாங்கள்

  எந்த ஒரு கெட்ட செயலில் இருந்தும் ஓர் நல்லதைச் செய்துவிடமுடியும் என்பார்கள் ஞானிகள்.

  நாசமாய்ப் போனவர்கள், ஓர் அரிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தார்கள். முகம்மது நபி அவர்களைத் தகாத முறையில் கற்பனை செய்து காட்டி மஞ்சள் படமாக எடுத்து சமூக தளங்கள் வழியே வெளியிட்டார்கள்.

  முஸ்லிம்கள் அந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இழந்துவிட்டார்கள்!

  இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உலகத்தின் பெரும்பான்மை மக்களை நம்ப வைத்திருந்தார்கள் உலக அரசியல் பொல்லாத கில்லாடிகள்.

  நபி பெருமானாரின் அளவற்ற சகிப்புத் தன்மையை முன் நிறுத்தி, இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த அவப்பெயரை அப்படியே துடைத்து எறிந்திருக்கலாம்.

  நாங்களெல்லாம் நபி பெருமானாரின் நகல்கள் என்று நிரூபித்திருக்கலாம்.

  உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஒன்றுகூடி பேசி இருந்தால், சிறந்த அறிஞர்களைக் கொண்டு திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், அந்த அறிஞர்களின் குரல்களுக்கு உலக முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுமைகளை விட்டொழித்து உடன்பட்டிருந்தால், நாம் இதைச் சாதித்திருக்க முடியும்.

  இப்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை! இணையலாம்.

  இப்போதும் காலம் முடிந்து போய்விடவில்லை. ஒற்றைக் குரலாய் உயரலாம்.

  இப்போதும் காலம் கடந்து போய்விடவில்லை, நான் உசத்தி நீ உசத்தி என்பதை விட்டு அற்புதமான நபிகளின் ஈமான் வழியில் அப்படியே அவப்பெயரை சுத்தமாய் மாற்றி எடுக்கலாம்.

  உலக இஸ்லாமியத் தலைவர்கள் முன் வரவேண்டும்.

  உலக இஸ்லாமியகள் ஒன்றுபட வேண்டும்.

  இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இஸ்லாமிய அறிஞர்கள் ஒருங்கிணைய வேண்டும்.

  உலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதையே விரும்புவதாக உலகத்துக்கே அழுத்தமாக அறிவிக்க வேண்டும்

  ஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் முன்னேற்ற வாழ்வில் இணைவதற்கு ஒன்றுபடாவிட்டாலும், நபி பெருமானாரின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக போராடுவதற்காகவாவது ஸுன்னா, ஷியா மட்டுமின்றி அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர்.

  எந்த ஒரு கெட்டதிலும் ஓர் நல்லது நிகழும்தான், உண்மை!

  இதையே பயன்படுத்திக் கொண்டு ஒற்றுமையை உறுதிசெய்ய முன் வருவார்களா தலைவர்கள்? இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் உயர்த்திப் பிடிப்பார்களா?
  Source : http://anbudanislam2012.blogspot.ca/

   

  Tags: , ,

  பாரதிதாசனும் நாகூர் மக்களும்

  நாகூர் மண்வாசனை

  பாரதிதாசன்

  புதுச்சேரியின் எல்லையில் நாகூர் இருப்பதினாலோ என்னவோ அந்த புதுவைக்காற்று நாகூர் மக்களை வெகுவாகவே கவர்ந்திழுத்தது போலும்.

  நாகூர் கவிஞர் காதர் ஒலியின் “வைரத்தூறல்” கவிதைத் தொகுப்பை புரட்டிக் கொண்டிருந்தபோது அவரது “புதுவைப் புயல்” என்ற கவிதை, சீரான சிந்தனை ஊற்றுகளை பெருக்கெடுக்க வைத்தது. புரட்சிக் கவிஞர் பாரதி தாசனைப் பற்றிய கவிதை அது:

  மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு
  நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி
  காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி
  பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன்

  புதுவையில் உதித்த புதியதோர் விடியல்
  பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல்
  எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல்
  ஏழ்மையில் திகந்த தூய்மையின் திங்கள்

  சித்திரை மாதத்தில் ஊறும் கனலூற்று
  செந்தமிழ் சொல்லாய் சீறும் அனல்காற்று
  முத்திரைப் பதித்த கதிரின் ஒளிக்கீற்று
  முற்போக்கு சிந்தையில் வேதியல் வீச்சு

  வாத்தியார் பணியில் வாழ்வேணி ஏறியவன்
  ஆத்திகனாய் முப்பதாண்டு ஆற்றலுடன் வாழ்ந்தவன்
  நாத்திகம் பேசியே நாத்தமும் பேறியவன்; சமூக
  நாற்றங்களை நடுத்தெருவில் நிற்கவைத்து சாடியவன்

  வாழ்ந்ததோ எழுபத்தி மூன்று ஆண்டுகள்
  வரைந்ததோ எழுபத்தி இரண்டு நூல்கள்
  வாழ்க்கையில் விளைத்தது அளப்பரியச் சான்றுகள்; தமிழர்
  வாழ்வுக்கு வையத்தில் அவனும் ஓர் ஊன்றுகோல்

  பாவேந்தர் பாரதிதாசனின் அருமை பெருமைகளை அழகுத்தமிழில் எடுத்துரைக்கும் கவிஞர் காதர் ஒலியின் கவிதைப் பாங்கினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

  பொதுவாகவே நாகூர்க்காரர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன்மீது அளப்பரிய அன்பு உண்டு. நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய இஸ்லாமியப் பாடல்களையும், கழகப் பாடல்களையும்தான் எல்லோரும் அறிந்து…

  View original post 642 more words

   
  Leave a comment

  Posted by on September 13, 2012 in Uncategorized

   

  தன்னம்பிக்கை உடையவரா நீங்கள்? ஒரு சுயபரிசோதனை

  மனிதன் வாழ்வில் பெறும் வெற்றியும் தோல்வியும் அவனுடைய தன்னம்பிக்கையை பொறுத்தே அமைகின்றது.
  ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தன்னம்பிக்கை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் யோசிக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை உள்ளதா? இல்லையா? என்று. நீங்களே உங்கள் தன்னம்பிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தன்னம்பிக்கை இல்லாதவருக்கான விஷயங்களை கவனித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் பெருமளவு நீங்கள் முரண்பட்டு நின்றால், நீங்கள் அதிக தன்னம்பிக்கை உள்ளவர் என்று அர்த்தம்.

 • எண்ணங்கள்:

  தன்னம்பிக்கை இல்லாதவரின் எண்ணங்கள் கீழ்கண்டவாறு இருக்கும்.
  * என்னால் முடியாது
  * இது மிகவும் கஷ்டம்
  * இது எப்படி என்று எனக்கு தெரியாது
  * இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை
  * இதை நான் செய்வதை விட இவர் செய்வது சிறப்பாக இருக்கும்.
  * என்ன செய்ய வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

  உணர்வுகள்:

  தன்னம்பிக்கை இல்லாதவரின் உணர்வுகள் கீழ்கண்டவாறு இருக்கும்.

  * சந்தேகம்
  * வரப்போவதை நினைத்து பயம்
  * எதிர்கொள்ளும் விஷயத்தைப் பற்றிய கவலை
  * தன்னைப்பற்றியே வெறுப்பு, கோபம்
  * புதிய சூழ்நிலையில் எதையோ நினைத்து பயம்
  * மனக்கசப்பு
  * குற்ற உணர்ச்சி மற்றும் ஊக்கமின்மை

  நடத்தைகள்:

  தன்னம்பிக்கை இல்லாதவரின் நடத்தைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.

  * எதையாவது செய்து மாட்டிக் கொள்வதைவிட பேசாமல் இருந்துவிடலாம் என்ற போக்கு
  * பரிந்துரைகள் சொல்வதில் இடர்பாடு
  * யாராவது செய்யட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிடல் அல்லது எதையும் முந்தி செய்யாமலிருத்தல்
  * புதிய விஷயங்களை தவிர்த்தல் அல்லது மாற்றம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்.
  * தெரிந்த விஷயத்தைப் பற்றிக்கூட தொடர்ந்து அடுத்தவரிடம் ஆலோசனை மற்றும் உறுதிப்படுத்துவதற்கு கேட்பது.
  * எல்லாவற்றுக்கும் தயங்குவது. தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.
  * கடைசி பெஞ்சில் அமர்வது
  * மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தல்

  உடல்ரீதியான அறிகுறிகள்:

  தன்னம்பிக்கை இல்லாதவரின் உடல் ரீதியான அறிகுறிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.

  * தலைகுனிந்து நிற்பது.
  * கண்களைப் பார்த்து பேசாதது
  * அமைதியின்றி அங்கும் இங்கும் அலைவது
  * பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப்படுவது
  * சோம்பலாகவும் அக்கறையின்றியும் காணப்படுவது.
  இவ்விஷயங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. இதில் எது உங்கள் குணத்துடன் பொருந்திப் போகிறது என்பதை அறிந்து, அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேற்கூறியவை அனைத்தும் தகர்த்து உங்களை வெற்றியாளராக மாறுங்கள்.

  நீடூரிக்காக
  தொகுப்பு

  – கோவை பஷீர், நைஜீரியாவிலிருந்து
  Source : http://niduri.com/?p=803

   
 • Tags: , ,

  இதயத்தின் எடை தராசில் நிறுக்கப்படுகின்றது

  இதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் . இதனை அனுபிஸ் Anubis (நறுமணமூட்டி பாதுகாத்து ஒரு குள்ளநரி-தலை கடவுள்) மற்றும் தோத் Thoth (எழுத்து ஐபிஸ்-தலை கடவுள்) பதிவின் முடிவுகளை பார்பதாகவும் அவர்களது கொள்கையாக இருந்தது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையாவார் மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .

  விவேகிகளுடைய வார்த்தைகளோ தராசில் நிறுக்கப்படுகின்றன என்று
  பழைய ஏற்பாடு – சீராக் ஆகமம் சொல்கின்றது

   

  Tags:

  பட்டாசு ஆலை விபத்து –மருத்துவ உதவி வழங்கிய மம்முட்டி

  சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத சிகிச்சை வழங்குகிறார். நடிகர் மம்முட்டி.

  சிவகாசி அருகே முதலிப்பட்டியில் பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில், 38 பேர் பலியாகினர்; 44 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சைக்கு நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

  கொச்சியில், அவரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பதஞ்சலி ஹெர்பல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், காமடைந்தவர்களுக்கு, அக்னி ஜித்து எனும் மருத்துவச் சிகிச்சையை இலவசமாக வழங்குகிறார். இந்தச் சிகிச்சைக்கு, ரூபய் 25 லட்சம் செலவாகும். சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிவகாசிக்கு வந்து சேர்ந்தன.
  http://www.inneram.com/news/india-news/2012-09-08-05-16-59-5669.html

   

  Tags: , ,