RSS

நடுவுலே திடீர்னு ஜட்டியைக் காணோம்

09 Dec

jatti“கொடியிலே காய வெச்சிருந்தது எங்கப் போச்சி? இதைப் போயி காக்காவா தூக்கிட்டுப் போயிருக்கும்?”

“ஒழுங்கா தேடுங்க. கருமம். தலைதீபாவளிக்கு வந்த மாப்புள்ளை மோதிரம் காணோம், செயினைக் காணோம்னு சொன்னாலாவது கெத்தா வெளியே சொல்லிக்கலாம்”

“ஏண்டி. எது காணோமோ அதை தானேடி காணோம்னு சொல்ல முடியும். இதுக்காக செயினையும், மோதிரத்தையும் தொலைச்சிட்டு, காணாம போனது என்னோட ஜட்டி இல்லே.. செயினும் மோதிரமும்னு சொல்ல சொல்றீயா?”

“எதுக்கு இப்போ நாய் மாதிரி கத்தறீங்க. தொலைஞ்சது தம்மாத்தூண்டு ஜட்டிதானே? அதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு?”

“அதென்னடி நாய் மாதிரி.. நாய்னு டைரக்டாவே சொல்லிட்டு போவவேண்டியது தானே?”

 • “அய்யோ.. அய்யோ.. விடுங்க வேற ஜட்டியை எடுத்து போட்டுட்டு நீட்டா வெளிய வாங்க. யாரு காதுலேயாவது விழுந்ததுன்னா ஆயுசுக்கும் கேலி, கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க!”

  “ஹேய்.. அது காஸ்ட்லி ஜட்டிடீ. தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வர்றமே, கொஞ்சம் கவுரவமா இருக்கட்டும்னு காஸ்ட்லியா வாங்கனேன். இதுவரைக்கும் இவ்வளவு விலை கொடுத்து வாங்குனதே இல்லை!”

  “என்ன சத்தம்.. என்ன சத்தம்? என்ன மாப்புள்ளே. எம்பொண்ணு பஜாரி மாதிரி கத்துறாளா?”

  “இல்லை மாமா.. அதெல்லாம் ஒண்ணுமில்லே!”

  “இல்லையே ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சத்தம் போடுறா மாதிரி கேட்டுதே?”

  “அப்பா. அவரோட ஜட்டியை காணோமாம். நேத்து காலைலே குளிச்சிட்டு மாடியிலே இருந்த கொடியிலே காயப்போட்டு வெச்சிருந்தது”

  “பச்சை கலரு ஜட்டியா?”

  ஆர்வத்தோடு “ஆமாம் மாமா. நீங்க பார்த்தீங்களா?”

  “அடடே அதே மாதிரி என்கிட்டேயும் ஒண்ணு இருக்கறதாலே என்னோடதுன்னு நெனைச்சி காலையிலே எடுத்து போட்டுக்கிட்டேன். கொஞ்சம் டைட்டா இருக்கறப்பவே டவுட் வந்தது..”

  “கருமம்.. என்ன மாமா இது? ஒரு ஜட்டி கூட உங்களோடதா உங்களோடது இல்லையான்னு உங்களுக்கு தெரியாது?”

  “மாப்ளே.. ஓவரா பேசாதீங்க. வேணும்னா இப்பவே நான் கயட்டி துவைச்சி கொடுத்துடறேன். சும்மா சத்தம் போடுற வேலையெல்லாம் வெச்சிக்காதீங்க!”

  பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம். சகிக்க முடியாத இந்த துயரச் சம்பவத்தைச் சந்தித்த மாப்பிள்ளை என்னுடைய அண்ணன். சம்பந்தப்பட்ட மாமனார் வெற்றிகரமாக பொண்ணு கொடுத்து மொகலாயப் படையெடுப்பு மாதிரி எங்கள் குடும்பத்தின் மீது படையெடுத்து தவிர்க்க முடியாத சக்தியாக இப்போது விளங்கிக் கொண்டிருக்கிறார். எங்கள் குடும்பத்தின் நல்லது கெட்டது எதுவுமே இவரின்றி இன்று அணுவும் அசையாது. ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ ஜனகராஜ் மாதிரி லவ்வபிள் மாமனார். எழுபத்தாறு வயதாகிறது. இன்னமும் ஸ்பீடாக சைக்கிளில் டபுள்ஸ் மிதிக்கிறார். வாராவாரம் ஞாயிறுக்கிழமை காலையிலேயே சைக்கிளோடு வந்துவிடுவார். முன்பெல்லாம் ஷெட் கிணறுகளில் குளிக்கப் போகும்போது, எங்களோடு வந்து டைவ் அடிப்பார்.

  அண்ணனின் சோக வரலாறு இந்த தம்பிக்கும் தொடர்கிறது. அந்த துயரச்சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழித்து, மாமனார் அவருடைய தம்பிமகளை பிடித்துதான் எனக்கும் கட்டிவைத்தார்.
  எழுதியவர் யுவ கிருஷ்ணா
  yuvakrishna
  Source : http://www.luckylookonline.com/2012/12/blog-post_3.html

  Advertisements
   
 • Tags: , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: