RSS

சிந்தித்தல் செயலின் அடித்தளம்.

18 Dec

inspiration_quotes_graphics_b3சிந்திப்போர் மனம் சிந்தித்துக் கொண்டே இருக்கும்.சிந்தித்தல் செயலின் அடித்தளம்.அடித்தளம் சரியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் சரிவதுபோல் சிந்தனையற்ற செயல்பாடு சிறக்காது. சிந்தனை செயலின் தொடக்கம். நம்மை இந்த உலகில் இறைவன் படைத்தானே அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பதோடு அதனை முழுமை படுத்தும் முயற்சியில் சிந்தனை இறைவன் பெயர் சொல்லிக்கொண்டே தொடரும் வயதின்… முதிர்ச்சியே வாழ்வின் தொடக்கம்.சிலர் நினைகின்றார்கள் ‘முதுமை வந்தது ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்று.முதுமை வயதில் வரலாம் மனதில் முதுமை வரக் கூடாது. நம் வாழ்வின் மகிழ்வு நம் எண்ணத்தில் உருவாகின்றது.

நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம்!
முழுமையாக நம்பி முற்றிலும் ஏமாற்றமோ!
முழுமையாக நேசம் கொண்டு பாசம் போனதோ!
முழுமையாக கிடைக்க எத்தனித்து இருந்ததும் போனதோ!
முழுமை கிடைக்க முதுமை வந்துவிடுமோ!
எதிலும் முழுமை இல்லை.
முழுமையாக கிடைத்தால் உன்னை நீ மறப்பாய்.
முதுமை கிடைத்தாலும் முழுமை கிடைக்காது

  • மகிழ்வான நோக்கமும், எண்ணங்களும் இதய நோய் வராமல் பாதுகாக்கின்றன. இதற்கு எதிர்மறையான கவலையான சிந்தனைகளும், நோக்கமும்,எண்ணங்களும் தாழ்வு மனப்பான்மையும் இதய நோய் வருவதற்கு வழி வகுக்கின்றன. 10 ஆண்டுகளின் மிகப்பெரிய எதிர்கால ஆய்வில் நெஞ்சாய்வியல் வல்லுனர்கள் தெரிவிப்பது மன அழுத்த அறிகுறிகள் குறைப்பதன் மூலம் நமது இதயம் பாதுகாக்கப் படுகின்றது என்பதாகும்.இதனால் இதய நோய் பாதிப்புகள் குறைவாக உள்ளன என்பதாகும் . ஆபத்தை குறைவாக்க தாழ்வு மனப்பான்மை வேண்டாம் இது நமது இரத்த அணுக்களையும் பாதித்து எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடும்.
    (“immune system is a system of biological structures and processes within an organism that protects against disease”) மன மகிழ்வாக பல்லாண்டு வாழ கவலையை விட்டொழிப்போம்.
    கவலை மறைந்து விடும் இறைவன் பக்கம் நம் சிந்தனையை திருப்பினால்.
    நாம் சிந்தித்து செயல்படுவதையே இறைவன் பெரிதும் விரும்புகிறான்.
    சிந்தனை நமக்கும் நல்வழி காட்டுவதோடு மற்றவருக்கும் பயன்படத்தக்கதாக இருக்க வேண்டும்.
    சிந்தனையில் உயர்வு நல்ல நோக்கம் உடையதாக இருத்தல் வேண்டும்
    398288_326730907395266_100001750774089_754463_1168952370_n
    ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். ஸஹீஹ் புகாரி ஹதீஸ்
    நினைத்துப் பார் உன்னையே !

     
  • Tags: , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: