RSS

பழசு பழசுதான் பழைய பொருள் உயர்வுதான்!

19 Dec

அன்பது அறுபது மற்றும் எழுபது தாண்டினபின் கடத்துபவர்கள் விரும்புவதில்லை
கடத்தினாலும் முதலில் விடுபவர்கள் இவர்களைத்தான்
யாரும் ஓடி பொருள் வாங்கி வரச் சொல்வதில்லை
காலை ஒன்பது மணி வரை தூங்கலாம் இரவு ஒன்பது மணிக்கே தூங்க போகலாம்
யாரும் அதனால் குறை சொல்வதில்லை ஆனால் தூங்கம் வராது
மனவாட்டம் கொண்டவராகவோ வேடம் போடுபவராக யாரும் பார்ப்பதில்லை
கடினமாக உழைப்பும் இனி தேவையில்லை அதைக் கடந்து வந்துவிட்டதனால்
வாங்கும் ஆடைகள் இனி அதிகமாக் கிழியாது
காலம் கடந்த இரவு இல்லை.இரண்டு இட்லியுடன் முடிந்துவிடும் அதனால் கேஸ் விரயமில்லை
இச்சை இல்லை இன்பம் நாடும் எண்ணமில்லை
பார்வை குறைவு செய்தித்தாள் வாங்கும் செலவு மிச்சம்
வேகமில்லை அதனால் வேகத்தடை பற்றி கவலை இல்லை
தனியே ஒரு பாட்டு முனுமுனுப்பாக தானே வரும்
கடந்த கால இனிய நினைவுகள் தானே வரும் நிகழ்கால நினைவுகள் மறந்து போகும் அதனால் நிம்மதி
சேமித்து வைத்ததை தம் மக்கள் எடுத்துக் கொண்டதால் இனி திருடர்கள் நம்மிடம் வர மாட்டார்கள்
ஓய்வூதியம், வெகுமதி உடன் கிடைக்காததால் அங்கு போய் வர நடைப் பயிற்சியும் அதை வாங்க விவாத பயிற்சியும் கிடைக்கும்

முழுமையாக கிடைத்தால் உன்னை நீ மறப்பாய்.
முதுமை கிடைத்தாலும் முழுமை கிடைக்காது

இறப்பில்தான் முழுமை உண்டு அது பிறப்பிலும் இல்லை.
இறைவனின் ஆற்றலை நம்பு உண்மை விளங்கும்.
இயன்றதைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு
இறைவனை நேசி இன்பம் காண்பாய்.

பழசு பழசுதான் பழைய பொருள் உயர்வுதான்
புதுசு அழகுதான் ஆனால் உழைப்பும் நீடிக்காது காலமும் நீடிக்காது

Advertisements
 
Leave a comment

Posted by on December 19, 2012 in Uncategorized

 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: