RSS

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும்

20 Dec

broad43பணத்திற்காக மனிதனை கொல்கிறான்
பணத்திற்காக பொய் சொல்கிறான்
பணத்திற்காக உறவை இழக்கின்றான்
பணம் மனிதனை கொல்கின்றது
பணம் பணக்காரனின் ஆயூதம்
பணத்தை வைத்து நாடே ஓடுகின்றது
பணம் வந்த வழியைப் பற்றி ஆய்வு செய்ய வந்தவன்
பணம் பறித்து செல்கின்றான் தனக்காக

பணம் கிடைக்க பாடாத பாடு படுகின்றான்
பணம் கிடைத்த பின் மற்றவர்களை படாத பாடு படுத்தி வைக்கின்றான்
பணம் சேர்க்க எந்த வழியையும் கையாள்வான்
பணம் தவறாக வந்த வழியின் பாவத்தைப் போக்க தர்மம் செய்வான்
பணத்தை கட்டு கட்டாக உண்டியில் போடுவான் தன் மேல் விழுந்த கரையைப் போக்க
பணமே அவனைக் கொள்ளும்
பணமே அவனுக்கு பாவத்தை சேர்க்கும்

அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். குர்ஆன் -2:112
.

  • உமர்(ரலி) இறைவழியில் ஒரு குதிரையை தர்மம் செய்தார். பின்பு அது விற்கப்படுவதைக் கண்டு அதைத் தாமே பணம் கொடுத்து வாங்கிட நினைத்தார். உடனே நபி(ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டார். அப்போது ‘நீர் தர்மம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    இப்னு உமர்(ரலி) தான தர்மம் செய்த பொருளை விலைக்கு வாங்கி விட்டிருந்தால் அதை மீண்டும் தர்மம் செய்யாமல் விட மாட்டார்கள்” என்று சாலிம்(ரஹ்) கூறினார்.
    ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 1489. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

    இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

    தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

    உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

    அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

    ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

    உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

    பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)
    ————————————————–
    எங்கே தேடுவேன்
    எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
    பணத்தை எங்கே தேடுவேன்?
    உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
    உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
    அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
    எங்கே தேடுவேன்?
    அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
    எங்கே தேடுவேன்?

    கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
    கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
    கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
    கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
    கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
    கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
    அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
    எங்கே தேடுவேன் பணத்தை
    எங்கே தேடுவேன்?

    பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
    பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
    பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
    பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
    சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
    சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
    சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?

    எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

    திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
    திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
    திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
    திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
    இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
    இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
    இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
    எங்கே தேடுவேன் பணத்தை

    தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
    தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
    தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
    தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
    சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
    சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
    சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?

    எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
    பணத்தை எங்கே தேடுவேன்?
    உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே

    பாடல் – எங்கே தேடுவேன் – – திரைப்படம்: பணம்
    பாடியவர்: என்.எஸ். கிருஷ்ணன்
    இயற்றியவர்: என்.எஸ். கிருஷ்ணன்

    Advertisements
     
  • Tags: , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: