RSS

படிக்காமலேயே இப்படி பேசுகின்றாயே! படித்தால் எப்படி பேசுவாயோ!

22 Dec

226756_165904036802114_100001475564387_406452_6900096_nஇங்கு வந்து பாருங்க! உங்க மகள் அதிகமா பேசுவதை !

நான் என்ன தப்பா பேசுறேன்!

ஆமாம் படிக்காமலேயே இப்படி பேசுகின்றாயே! படித்தால் எப்படி பேசுவாயோ!

மேல் படிப்பை படிக்காமே என் படிப்பை கெடுத்து இதுலே வேரே குத்திக் காட்டுவதில் இன்னும் உனக்கு பெருமையோ!

அதிகமா படிச்சா கெட்டு அலைய வேண்டியதுதான். வீட்டு வேலையே தெரியாது அப்புறம் வேலைக்கு போரேன்னு பிடிவாதம் பிடிப்பே! உன்னைவிட அதிகம் படிச்ச மாப்பிள்ளை வேனும்பே!

நீ படிசிருந்தாதானே உனக்கு படிப்பின் அருமை தெரியும்.

ஒன்டே நான் பேச முடியாது இப்ப. எனக்கு நிறைய வேலை இருக்கு.

தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் விவாதம் இறுதியில் படிப்பை பற்றி திரும்புகின்றது
ஆண்கள் படிச்சு வேலைக்கு போனும் பெண்கள் படித்து என்ன அவ போவுது?

பெண்கள் படித்தால் இன்னும் திறமையாக வருவார்கள் .நிச்சயமாக ஆண்களைப் போல் படிப்பில் கவனம் செலுத்தாமல் அலைய மாட்டார்கள் !

காலம் கெட்டுப் போச்சு அதனால்தான் நீ இப்படி பேசுறே !

காலத்தை ஆண்கள் கெடுக்காமல் இருந்தால் உலகம் நன்றாகிவிடும் . ஆண்கள் வீட்டில் அடைந்து கிடக்கட்டும் ! படித்த பெண்கள் அருமையாக காலத்தை உருவாகுகின்றோம் .

ஒன்டே நான் பேச முடியாது இப்ப. எனக்கு நிறைய வேலை இருக்கு

 • அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு !
  பெண்களுக்கு படிப்பு தேவைதான்
  பெண்கள் எதுவரை படிக்கலாம் !
  படிப்பென்றால் ‘ஆணென்ன பெண்ணென்ன’

  படிக்கும் பெண்கள் கெடுவதற்கு வாய்ப்புண்டு ஒரே காரணம் சொல்வார்கள்!
  படிக்காத பெண்கள் கெடுவதில்லையா?
  பெண்கள் மட்டுமா கெட்டுப் போகிறார்கள் ?
  ஆண்களால்தானே பெண்கள் கெடுக்கப் படுகிறார்கள் !
  மறுமலர்ச்சி காலத்தில் வாழும்போது சில தவறு நடந்தால் பொதுப்படையாக பேசக் கூடாது . இது புரட்சி வருவதற்கு வழி வகுத்துவிடும் . பேசுவதை முறையாக ,நேர்மையாக இறைவனுக்கு பயந்து பேசுங்கள். இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக சொல்லி பெண்களை மடமையாக்கி விடாதீர்கள்
  சரியான பராமரிப்புடன் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களது முதன்மையான கடமையாக உள்ளது. அதற்கு பெண்கள் அவசியம் படித்தாக வேண்டும் . தாயே சிறந்த வழிகாட்டி

  “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
  “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
  அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்”

  “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
  பேணி வளர்த்திடும் ஈசன்;
  மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல
  மாதர றிவைக் கெடுத்தார்.
  கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்
  காட்சி கெடுத்திடலாமோ?
  பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
  பேதமை யற்றிடுங் காணீர்”.
  பாரதியார் பாடிய மறக்க முடியா வரிகள்

  ” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:

  Advertisements
   
 • Tags: ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: