RSS

“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி உள்ளது”

24 Dec

broad43“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி உள்ளது” வானத்தை நோக்கி வீசிய கல் திரும்ப வரும்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முடிவு உண்டு. ஊக்கமிருந்து செயலற்ற தன்மை விரயம். திறமை தானே வருவதில்லை.உந்துதல் சக்தி நம் உள்ளத்தில் வர அதனை செயலில் ஈடுபடுத்த வேண்டும்.சாதனை செய்தோர் அனைவரும் தமது தொடர் உழைப்பிலேயே அதன் பலனைப் பெற்றனர்.

வாழ்நாள் சிறிது ! வளர்கலை பெரிது!! ‘தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறையாக தரப்படுகிறது’.கிடைத்த வாழ்வை பயனுள்ளதாய் செலவிடவேண்டும் . நம்மால் சாதனை செய்யமுடியவில்லை என்ற எண்ணம் மனதில் தோன்றும்பொழுது மற்றவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கும் நம் மனதில் நம்மை அறியாமலேயே ஒரு ஆர்வம் நம்மை தூண்டிவிடும். உலகத்தினை முடிந்தவரை உங்களால் முடிந்தால் பார்க்க முயலுங்கள். அது வேடிகைக்காவும் கேளிக்கைக்காகவும் இருந்துவிடாமல் நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் இருப்பது மிகவும் அவசியம்

  • சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.

    செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.துன்பம் தாக்க துவள்வதும்
    மகிழ்ச்சி வர துள்ளுவதும் இறை நேசர்களின் இயல்பாகாது. துன்பம் வருவதை ஒருவரும் விரும்புவதில்லை.
    துன்பம் வருவது வாழ்வின் அடிப்படை உண்மையை நமக்கு உணர்த்தும். இரு நிலைகளிலும் சமநிலை வேண்டும். நம்பிக்கை செயலின் தொடக்கம். நம்பிக்கை செயலின் ஊக்கம். நம்பிக்கை தான் வாழ்க்கை.இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கையாகும்

    ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. அதனால் நம் எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்.

    செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத்(துறத்தல்) எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.நபிமொழி

    அவசியம்.மகிழ்வான வாழ்வு ஆரோகியத்தின் அடித்தளம். அப்படி நாம் பெற்ற அறிவினை மகிழ்வினை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்பொழுது நமக்குள் ஓர் மகிழ்வு வருவதனை நாம் அறிவோம்.

     
  • Tags: , , ,

    One response to ““ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி உள்ளது”

    1. சேக்கனா M. நிஜாம்

      December 25, 2012 at 2:47 am

      // அவசியம்.மகிழ்வான வாழ்வு ஆரோகியத்தின் அடித்தளம். அப்படி நாம் பெற்ற அறிவினை மகிழ்வினை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்பொழுது நமக்குள் ஓர் மகிழ்வு வருவதனை நாம் அறிவோம்.//

      மிகச்சரியாகத் சொன்னீர்கள்

       

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: