RSS

அவள் சொன்னது என் காதில் விழவில்லை!

03 Jan

tears1ஏதோ சிந்தனை மனதில் ஓட அமைதியாக அமர்ந்திருந்தேன்
‘ஏங்க’ என்று ஏதோ மனைவி சொல்கிறாள்…
மனது வேறு இடத்தில இருந்ததால் அவள் சொன்னது என் காதில் விழவில்லை
‘என்னாங்க நான் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே இருக்கேன் நீங்க பேசாமே இருக்கீங்க’
என்ன சொல்றே பாட்டு பாட போறியா!
ஆமா அதுக்கு ஒன்னும் குறைச்சலில்லே
பின்னே என்னதான் உனக்கு குறைச்ச!
இது என்ன விளையாட்டு நேரமா?
அப்படி நான் ஒன்னும் சொல்லலியே!
பின்னே என்னதான் சொன்னே?
‘இம்’ ‘சோத்துக்கு உப்பிலேன்னு சொன்னேன்’
அதுக்கு ஏண்டே ஏன் வந்து சொல்றே! நீயே பார்த்து போட்டுக்கோ!
‘உங்ககிட்டே பேசாமே இருக்கலாம்’ மனைவியின் வார்த்தையில் கடுமை
நான் ஒன்னும் ஒன்டே பேச சொல்லுலியே!
உங்களுக்கு குடும்ப அக்கறை ஒன்னு இருந்தாதானே
இப்ப என்ன! என்னதான் பண்ண சொல்றே?
அதான் முதல்லேயே சொனனேனே
என்ன முதல்லே சொன்னே ?

இப்படி எங்கள் பேச்சு போய் கொண்டிருக்கும் போதே யாரோ வந்து கதவு தட்ட
‘இவங்களுக்கு வேற வேலை இல்லே’ என முனங்கிக் கொண்டே கதவைத் திறக்க போகிறாள் .
அங்கு அவள் அண்ணன் வர ‘வாங்க அண்ணே எப்ப வந்தீங்க’ என்று ஆசையாய் வர வேற்கிறாள்
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே என் காதோட ‘ நான் சொன்னதை சொல்லுங்க அண்ணனிடம் சொல்லுங்க’ என்றாள் பணிவோடு
‘திரும்பவும் நான் அப்பவே சொன்னேனே நீ சொன்னது எனக்கு விளங்கிளேன்னு’

 • அவள் அண்ணனைப் பார்த்து ‘அண்ணன் முகத்தை கழுவிட்டு வாங்க ரொம்ப களைப்பா இருப்பீங்க’ என்று சொல்ல
  அவர் நகர்ந்தவுடன் காதோடு சொல்ல வந்ததை சொல்கிறாள்
  ‘மகளுக்கு வயதாகிக் கொண்டே இருக்கு இன்னும் ஏங்க படிக்கணும். கல்யாண முயற்சி எடுக்காமே இருக்கீங்களே’
  என்று வருத்தமோடு மனைவி சொல்கிறாள்

  எனது அண்ணன் மகன் டாக்டராகி நிறைய சம்பாதிக்கிறான் அவனுக்குதானே நாம் படிக்க பணம் கொடுத்தோம் ‘அவனை நம்ம பெண்ணை கல்யாணம் செய்து வைகிலாமேன்னு தானே செய்தோம்’ என்றாள்
  .’ நான் பணம் விரும்பி கொடுக்க விரும்பிலே நீ தான் என்னிடமிருந்து பிடிங்கி கொடுத்தே தெரிஞ்சிக்கோ!’ .
  ‘சரி அப்படியே வச்சுக்கோன்ங்கோ’ . இப்ப அண்ணன்கிட்டே கல்யாண விசயமா பேசுங்க’ என்றாள் .
  நான் சொன்னேன் ‘அதை நீயே சொல்லு’

  அதற்குள் அவள் அண்ணன் முகம் கழுவி விட்டு திரும்பி வருகிறார்
  ‘அண்ணன் இருந்து சாப்பிட்டு போங்க’ என்றாள்
  ‘இல்லேம்மா எனக்கு முக்கியமா வேலை இருக்கு பையனும் வந்திருக்கான். அவன் அமெரிக்க எம்பசீலே நின்றுக் கொண்டிருக்கான் அங்கே நான் போகணும்’
  ‘ஏன்னே அங்கே நிற்கிறாரு’
  ‘அவன் மேற் படிப்புக்கு அமெரிக்கா படிக்க போறனான்’
  ‘என்னது அப்ப கல்யாணம்!’
  இப்ப கல்யாணம் வேண்டாம் என்கிறான், அமெரிக்காவிலே இரண்டு வருஷம் படித்து முடித்து விட்டு வந்து தான் அதைப் பற்றி யோசிப்பானாம்’ என்று சொல்லி விட்டு அவசரமா கிளம்புகிறார்.

  தலையில் இடிவிழுந்தது போலாகி மனமுடைந்து அந்த கோபத்தை என்னிடம் திருப்புகிறாள்
  பணத்தை வாரி வாரி கொடுத்தீங்க அவன் டாக்டர் படிக்க. இப்ப நாசம் பண்ணிட்டானே! எத்தனையோ வரம் வந்திச்சே அவனுக்குத்தானே இவளையும் அதிகமா படிக்க வைத்தேன் இப்படி நாசம் செஞ்சிட்டானே’ என்று புலம்பிக் கொண்டே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.
  நான் பேசினால் அவளுக்கு இன்னும் கோபம் வருமென்று ‘அமைதியாக இரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்’ என அவளை அமைதி படுத்த முயன்றேன். பெற்ற வயிறு துடித்தது.

  அதுக்குதான் யாரையும் முதலிலேயே நாம் முடிவு செய்யக் கூடாது.படிப்பது திருமணமாவதற்கு மட்டும் குறியாக இருக்கக் கூடாது காலம் வரும்போது அதனை இருவர் மனதையும் புரிந்து செயல்பட வேண்டுமென்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

  இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் :

  முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி(எண் 5090மேற்கொண்டு அதன் முக்கியத்தை அறிய இந்த காணொளி காணுங்கள்
  எழுதியவர்- ‘நீடூர்அலி’

  Advertisements
   
 • Leave a comment

  Posted by on January 3, 2013 in Uncategorized

   

  Tags: , , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: