RSS

இரவு ஓர் அனாதை

06 Jan

baby 2இரவு ஓர் அனாதை
அது தனக்குத் துணையாக
என்னை எடுத்துக்கொண்டது
மௌனமாய் தன் பாரங்களை
எனக்குள் அது இறக்கி வைக்கிறது

யுகம்யுகமாய் அதனிடம்
சேர்ந்த சாபங்கள்தாம்
இந்தத் தாபங்கள்

இரவின் கண்ணீர் கறுப்பு

தன் பௌர்ணமியால்
அதன் கண்ணீர் துடைக்க
வெளிச்சக் கரம் நீட்டுகிறது நிலா

தன் உச்சிப் பகலால்
இரவின் கவலைகளையெல்லாம்
தின்னப் பார்க்கிறது சூரியன்

  • தன் மீது கிடத்தித்
    தாலாட்டுப் பாடி
    தூங்க வைக்கப் பார்க்கிறது பூமி

    சின்னச் சின்ன நட்சத்திரங்களெல்லாம்
    இரவின் கண்ணீர் துடைக்கும்
    விளையாட்டுக் குருவிகள்

    எல்லோருக்கும்
    இரவின் மீது அனுதாபம்
    ஆனாலும் இரவு
    அழுதுகொண்டேதான் இருக்கிறது

    இரவின் துயரம் அதை ஓர்
    கருணைக் கடல் ஆக்கிவிட்டது
    அது தன் அதீத கருணையால்
    உயிர்களை ஆரத் தழுவி
    அமைதியாய் உறங்க
    இருட்டு இழைகளால் ஊஞ்சலாட்டுகிறது

    இரவு சொல்லித்தரும் பாடம்
    ஒன்றே ஒன்றுதான்

    உயிரே
    இரவைப் போல் நீயும் தனித்திருக்காதே
    துணையற்ற நீ இரவின் மடி கிடந்தால்
    மேலும் துயரப்படுவாய்
    நீ உன் துணையைத் தேடு

    பெற்றது ஒரு தாய்தான் என்றாலும்
    பாசம் பொழியும் அன்புள்ளம்
    அனைத்தும் உனக்குத் தாய்தான்

    தேடி வரும் எவரையும் தூர நிறுத்தாதே
    எட்டியோடும் உறவுகளைத்
    தேடி ஓடாதே

    அனாதை என்று
    இங்கே எவரும் இல்லை
    இந்த இரவு மட்டுமே அனாதை

    அதற்கு நீ அன்னையாய் இருக்க விருப்பமா
    உனக்கொரு பிள்ளையைத் தேடிக்கொள்
    அதற்கு நீ பிள்ளையாய் இருக்க விருப்பமா
    உனக்கொரு அன்னையைத் தேடிக்கொள்

    பிறகெல்லாம் இரவு உனக்கு
    அமைதியைத் தரும்

    இரவு
    மிகவும் இனிமையானது
    Anbuden buhari
    அன்புடன் புகாரி
    http://anbudanbuhari.blogspot.in/2008/02/blog-post_3243.html

     
  • Tags: , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: