RSS

உள்ளத்தால் நேசியுங்கள்

14 Jan

Smile is Charity நேசியுங்கள் வார்த்தைகளால் அல்ல உள்ளத்தால் .அகத்தின் அழகு முகத்தில். .உள்ளத்தில் இருந்து நேசம் வெளிப்பட்டால் அதனை கொடுப்பவருக்கும் பெருபவருக்கும் மகிழ்வு மலரும். மகிழ்ச்சி என்பது ஒரு செயல் அல்ல! செயலின் விளைவுதான். தோல்வி வெற்றிக்கு வழி காட்டி. நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில், செயல்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. .உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட முடியும் . வாழ்வு ஒரு முறைதான் அதனை சோகமாக்கிக் கொள்ளாதீர்கள். மகிழ்வு விலை கொடுத்து வாங்குவதல்ல. அது மனதினைச் சார்ந்தது .

பணம் பெற்றவர்கள் எல்லாம் மகிழ்வில் மூழ்கி உள்ளார்கள் என்பது தவறான கற்பனை . பணம் வாழ்வின் வசதிகளை ஏற்படுத்தி தரலாம் அதனால் மகிழ்வினை தந்துவிட முடியாது .நேசம், அன்பு, பாசம் அறியாதவற்கு குடும்பம் ஒரு பாரமாகும். உதட்டின் விளிம்பில் ஒரு புன்னகை இருந்து கொண்டு இருக்கும்பொழுது உங்கள் உள்ளத்தில் உற்சாகம் பிறந்து வாழ்வில் மகிழ்வு தானே வரும் .

  • உன்னுடையதை எதை இழந்தாய்?
    எதற்காக நீ அழுகிறாய்.
    எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு.
    எதை நீ படைத்தாய்? அது வீணாவதற்கு.
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது!
    எதை கொடுத்தாயோ அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ,
    அது நாளை மற்றொருவருடையதாகிறது.
    மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதி.
    இதை நீ உணர்ந்தாய் என்றால்
    இந்த வருடம் மட்டுமல்ல
    எந்நாளும் உனக்கும் இனிய நாள்
    Say Something Nice.

     
  • Tags: , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: