RSS

பாசம் பரவலானது செயல் விசாலமானது

14 Jan

206165_386213298139614_1819654291_nநடக்குமென்று நினைத்தது நடக்கவில்லை
முடியுமென்று நினைத்தது முடியவில்லை
நம்பிக்கை வைத்து செயல்படவில்ல
நம்பிக்கை என்மீதுமில்லை
நம்பிக்கை இறைவன் மீதுமில்லை

நடக்காமல் போனதும் நன்மையானது
நடக்காததற்கு நானே காரணம் என மனம் சொன்னது
இறைவன் மீது நம்பிக்கையை வைக்காமல் போனது
இறைவன் மீது வைத்த நம்பிக்கை உந்துதல் சக்தியை தந்தது

நடந்தாலும் நல்லது ,நடக்காவிட்டாலும் நல்லது
நடப்பது நடக்காது அனைத்தையும் இறைவன் நன்மையாக்கினான்
பாசம் பரவலானது செயல் விசாலமானது
செய்வது அனைத்தும் இறைவனுக்கானது

  • எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் – அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
    -திருக்குர்ஆன்: 3:188

    பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பியவர்க்ளைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்… திருக்குர்ஆன்: 8:47

    “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).-திருக்குர்ஆன்: 28:77.

    “ஒளிபுகு என்பது தனது செயல்களை காண்பிக்கச் செய்யும் ஒருவரின் மேல் அங்கி,
    தன் மீது அதனை அவர் சுற்றி போர்த்திக் கொண்டாலும், அவர் நிர்வாணமாகவே இருக்கிறார்.”
    63617_147997138686959_1446831757_n

     
  • Tags: , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: